புதுக்குளம் மகாவித்தியாலயம் அதிபர் மாணவனுக்கு அடித்து மாணவனின் காது கேட்காமல் போகும் அபாயம்.
வவனியா புதுக்குளம் மகா வித்தியாலயம் வவனியா வடக்கு கல்வி வலயத்தில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற பாடசாலை ஆகும். நேற்;று (20.03.2013) வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் இரு மாணவர்களுக்கு இடையில் சிறு சண்டை நடைபெற்றிருக்கின்றது. இதனையடுத்து அப் பாடசாலையின் அதிபர் திரு.அமிர்தலிங்கம் குறிப்பிட்ட மாணவனை கண்டிக்கும் முகமாக அவனுக்கு காதை பொத்தி அடித்துள்ளார். அம் மாணவன் இன்று மாலை வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த போது அதிபரின் இச் செயலை வைத்தியர் கண்டித்தள்ளார். நாளை அம் மாணவனுக்கு காதில் TEST செய்ய இருப்பதாக வைத்தியசாவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments
Write Down Your Responses