அன்று மாணவர்களுக்கு முழங்காலில் நிற்குமாறு ஆசிரியர்கள் சொன்னார்கள்! இன்று ஆசிரியர்கள் முழங்காலில் நிற்க வேண்டுமென்று பெற்றோர் சொல்கின்றனர்!!
‘அன்று மாணவர்களுக்கு முழங்காலில் நிற்குமாறு ஆசிரியர்கள் சொன்னார்கள். ஆயினும், இன்று ஆசிரியர்கள் முழங்காலில் நிற்க வேண்டும் என்று பிள்ளைகளின் பெற்றோர்கள் சொல்கிறார்கள். இது மிக இழிந்த செயலாகும். நாங்கள் இவ்வாறான இழிந்த செயல்களை மிக மிக வெறுக்கிறோம். அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.’ என தென்மாகாணமுதலமைச்சர் சான் விஜய லால் த சில்வா குறிப்பிட்டார்.
அம்பலங்கொட நகர சபையில் அம்பலங்கொட கல்விப் பிரிவிற்குட்பட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கொன்றின் போதே தென் மாகாண முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்:
‘ஆசிரியர் என்ற உத்தம புருஷரை நான் அன்று கண்டது போலவே இன்றும் காண்கின்றேன். அவர்களுக்கு அன்று கொடுத்த மரியாதையை இன்றும் நான் கொடுக்கின்றேன். ஆசிரியத் தொழிலுக்கு ஈடான எந்தவொரு தொழிலும் உலகில் இதுவரை தோன்றவில்லை. ஆசிரியர்களினால் தான் நாங்கள் இன்று உயர் பதவிகளில் நிற்கின்றோம். அவ்வாறான பெறுமதிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு யாரோ ஒரு தந்தை தண் டனை வழங்கப் போகின்றார். அவ்வாறு அவர் செய்ய முற்படுவது மிகவும் இழிவான செயலாகும். அவ்வாறு ஆசிரியர்களுக்குத் தண்டனை வழங்க எந்தப் பெற்றோராலும் முடியாது. அதிகாரமும் இல்லை’
(கலைமகன் பைரூஸ்)
0 comments
Write Down Your Responses