ஈராக் போலீஸ் தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 7 பேர் பலி
ஈராக்கின் சர்வாதிகாரியாக விளங்கிய சதாம் உசைன் கொல்லப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சதாம் உசைனின் சொந்த நகரமான திக்ரித்தில் இன்று போலீஸ் தலைமையகம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி போலீஸ் தலைமையகம் மீது மோதினான். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்கள் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.
வரும் 20-ம் தேதி ஈராக்கில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதை சீர்குலைக்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 11 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses