இறந்தகாலம் இனியதாக இல்லை அப்போ நிகழ்காலம்?

கரிகாற் பெருவளத்தான் காலம், ராஜராஜ சோழன் காலம், சங்கம் வைத்துக் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் காலம் போன்றவற்றையெல்லாம் தமிழரின் பொற்காலமாக திராவிட இயக்கத்தினர் விதந்தோதும் போது, வரலாற்றில் பொற்காலம் இருந்ததில்லைளூவர்க்கப் புரட்சியொன்றின் மூலம் இனிமேல்தான் பொற்காலம் உருவாக வேண்டும் என்று மார்க்சியர்கள் கூறுவதுண்டு.

மார்க்சியர்கள் சொல்வது இருக்கட்டும். நாமும் கொஞ்சம் கடந்த கால வரலாற்றைத் துழாவினால் நிலைமை தெரிந்துவிடும். இன்றைய நம் வாழ்வில் நமக்கு எவ்வளவு அதிருப்திகள் விமர்சனங்கள் இருந்தபோதும், வரலாற்றினடியில் பார்த்தால் மனிதர்களாகிய நாம் மனிதத்தன்மையிலும் நாகரிகத்திலும் முன்னேற்றமடைந்துதான் இருக்கிறோம். முன்பிருந்த மனிதர்களைவிட நாம் ஒப்பீட்டளவில் முற்போக்கானவர்கள் என்பதை மறுக்க முடியாது.

மன்னாதி மன்னர் சரித்திர காலத்திற்கெல்லாம் போகத்தேவையில்லை, நமக்கு இரண்டொரு தலைமுறைக்கு முந்தியவர்களின் வாழ்க்கை முறைகள் எப்படியிருந்தன என்று பார்த்தாலே நமது வளர்ச்சி எப்படி நடந்துவருகிறது என்று புரிந்துவிடும். உதாரணத்திற்கு, பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலில் குறிப்பிடப்படும் சில தகவல்களைப் பாருங்கள்: மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக்கூட அறிய இயலாத பாலகர்களுக்கு, திருமணம் செய்து வைத்தனர். இதனால், பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல. பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க, 10 வயது முடியும் முன், அவளுடன், அவள் கணவன், பாலுறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு வந்தது ஆங்கிலேய அரசாங்கம். இதுவே எவ்வளவு கொடுமை.

இந்தியாவின், முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1871ல் எடுக்கப்பட்டது. அப்பொழுது, கல்வி அறிவு பெற்ற பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர். அதாவது, நூற்றுக்கு ஒருவர் கூட இல்லை. 29 கோடி சனத்தொகையில் 14 கோடி பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடிப் பெண்கள் விதவைகள். குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட கொடுமை! (இதில் வயதான விதவைகளைச் சேர்க்கவில்லை.

1 வயது விதவை - 579 பேர்.
1-2 வயது விதவை - 492 பேர்.
2-3 வயது விதவை- 1257 பேர்.
3-4 வயது விதவை- 2827 பேர்.

— இப்படிப் போகிறது இந்தக் கணக்குளூ எவ்வளவு கேவலம்!
மேலும், கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன் அவளையும் உடன்கட்டை ஏற்றினர். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு கருத்தை, சமூகத்தில் இவர்கள் பரப்பி, அதன் மூலம் இதற்கு பெண்ணை நிர்ப்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்....
இப்படித்தான் இன்னும் பல பிற்போக்குத்தனங்களுடன் இருந்திருக்கிறது கடந்த காலம். நம்முடைய நாட்டுத் தமிழ் அரசியல் வரலாறும், மக்களுக்கு இன்னல்களைச் சுமத்தும் வெற்று உணர்ச்சிகரமான, விவேகமற்ற பிற்போக்குத்தனமான அரசியலாகத்தான் நாட்டின் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்தத் தமிழ்த் தலைமைகளால் நடத்தப்பட்டுவருகிறது.

இவர்களது அறுபது வருடத்திற்கு மேற்பட்ட அரசியலால் தமிழ்மக்களுக்கு ஒரு சிறு நன்மையான தீர்வையும் சாதிக்க முடிந்ததில்லை. மக்களை அழிவுகளை நோக்கித் தள்ளித் தள்ளிக்கொண்டு வந்தனரே தவிர, அவர்களைக் காப்பாற்றும் அரசியலை இவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இறந்தகாலத் தவறுகளைத் தெரிந்து, அதிலிருந்து வெளியே வந்துதான் நமக்கான ஒளிமிகு வாழ்வை அடையமுடியும்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News