சிங்கள பௌத்தர்களின் அழிந்துவரும் உரிமைகளைக் காப்பதற்காக குரல்கொடுப்பதுதான் இனவாதமா? - ஞானஸார தேரர்

எந்தவொரு காரணத்திற்காகவும் எங்கள் பெண்பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது. அதற்காக நாங்கள் ஒரு திட்டத்தைக் கொணர வேண்டும். தூங்குகின்ற சிங்களவர்களை எழுப்ப வேண்டிய காலகட்டம் நெருங்கியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு கொடி தூக்கும் தன்மை இல்லாமலாக வேண்டும். வீரமிக்க, ஞானம்மிக்க பிள்ளைகள் எங்கள் தாய்நாட்டுக்குத் தேவை. கூடுதலாக போதைவஸ்துப் பாவிப்பவர்கள் எங்கள் சிங்களவர்கள். இந்நாட்டிலுள்ள போதைவஸ்து விற்பனையாளர்கள் பதினொரு பேரில் 9 பேர் முஸ்லிம்கள். மலையாள ‘கஞ்சா’ பாவிப்பதனால் வெறும் ஆறே மாதத்தில் உடம்பு தெம்பிளக்கிறது. எங்கள் இனத்தை பலமற்றவர்களாக மாற்றுவதற்கான சூட்சுமத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விருத்த சேதனம் செய்வது மற்றொன்று. எங்கள் இனத்திற்கெதிரான செயற்பாடுகள் இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது எம்மவர் பேசாமடந்தைகளாக வாய்பொத்திநிற்கின்றனர். எங்கள் இனத்தவரின் அழிந்துபோகும் அடையாளங்களை மீண்டும் வெளிக்கொணரக் குரல் கொடுப்பது தவறா? அதுதான் இனவாதமா? என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கலேவலவில் இடம்பெற்ற ‘சிங்களவர் நாம்’ எனும் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கூட்டமொன்றின்போதே ஞானஸாரர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஞானஸார தேரர் தொடர்ந்து உரையாற்றும்போது,

எங்கள் பிள்ளைகள் பாடசாலை விட்டு வந்ததும் பந்தையும், துடுப்பையும் எடுத்துக்கொண்டு விளையாடச் சென்றுவிடுகிறார்கள். முஸ்லிம் பிள்ளைகள் விளாம்பழம், கொய்யாப் பழம், தோடம் பழம் என்பவற்றை எடுத்துக்கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் இளங் காலத்திலேயே வாழ்க்கைச் செலவை ஓட்டுவதற்காகக் கற்றுக் கொள்கிறார்கள். எங்கள் பிள்ளைகளும் அதனைத்தான் செய்கிறார்கள். 17, 18 வயதானவுடனேயே எங்கள் இளைஞர்கள் யுவதியொருவருடன் இணைந்து சுற்றித் திரிகிறார்கள். கடைசி என்ன நடக்கிறது.... எங்கள் இனம் சிங்களவர்கள் உள்ள இடத்தில் கீழே வழுக்கி விழுகிறது. இன்று இந்நாட்டுக்குத் தேவையானவர்கள் வீரம்மிக்க ந ன்னோக்குள்ள பிள்ளைகள். எங்களுக்குச் சென்று வாழ்வதற்கு வேறு நாடுகள் இல்லை.... ஏனைய இனத்தினருக்கு எங்கேயும் செல்லலாம். அதை நாங்கள் உயிரைப் பனயம் வைத்தேனும் காப்பாற்ற வேண்டும். எனவே எங்களுக்குச் சரிவராத விடயங்களில் நாங்கள் மூக்கை நுழைக்காது இருப்பதே உசிதம்.

சிங்கள பௌத்த இனத்தைக் காக்க வேண்டும் என்றால் நாங்கள் யாரும் முஸ்லிம் கடைகளில் பெண்பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது. அவ்வாறு அனுப்பினால் எங்களுக்குரிய தன்மானம் இல்லாமலாகும்.

பாதைகள் அமைப்பதும், அபிவிருத்திப் பணிகள் செய்வது அரசியலாளர்களின் அம்மா, அப்பா கொடுத்த காசினால் அல்ல. இந்நாட்டு மக்களின் வரிப்பணத்தினால். வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க இடிபாடுகள் உள்ள கிழக்கு மாகாணத்தில் உள்ள கொரவக்கல், காவற்கல் என்பவற்றை முஸ்லிம்கள் கழிவறைகளாகப் பயன்படுத்துகின்றனர். இவற்றைக் கண்ணாறக் கண்டும் சிலபேர் பேசாமல் வாய்புதைத்து நிற்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் இதற்காக ஒருநாளைக்கு 2 மணி நேரத்தை உபயோகித்தால் போதும். நாடு உருப்படும்.

மகா சங்கங்களின் பிரதம தேரர்கள் திட்டமொன்றை முன்வைத்துள்ளனர். 74% உள்ள பௌத்தர்கள் உள்ள இந்நாட்டில் உள்ள 74% பௌத்தர்கள் உள்ளனர். ஆயினும் நாட்டில் அதனை வெற்றிகொள்ள முடியாமலுள்ளது. முஸ்லிம்களுக்காக காதி நீதிமன்றம் பல ஆண்டுகளாக செயற்படுகின்றது. நாங்கள் இனவாதிகள் அல்ல. எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் முன்னின்று பேசி அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க வேண்டுமென்பதே எங்களது எதிர்பார்ப்பு. சிலபேர் சரிஆச் சட்டத்தை இங்கு கொண்டுவந்து, இந்நாட்டை சரிஆ நாடாக மாற்ற முனைகிறார்கள்.

வரவுள்ள தேர்தலில் அரசியலாளர்கள் உங்களைச் சந்திக்க வந்தால், அவர்களிடம் சொல்லுங்கள் ‘ஹன்ஸார்’ட்’ அறிக்கையை எடுத்துவருமாறு சொல்லுங்கள். அந்த அறிக்கையில் சிங்களவர்கள் பற்றியும், பெளத்தர்கள் பற்றியும் ஏதேனும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்களா? எனப் பார்க்கச் சொல்லுங்கள்..அதற்குப் பிறகு உங்கள் கருத்துக்களை ஒப்புவியுங்கள்... அவ்வாறின்றி எங்கள் நாட்டையும், நாட்டு மக்களையும் ஒருபோதும் பாதுகாக்க வியலாது. எங்கள் இயக்கம் பெளத்த பிக்குமார், பிக்குனி, உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொண்டுள்ளது. தற்போது வாய்ப்பாடு மனனம் செய்தது போதும். பௌத்தர்களுக்குத் தேவையானவற்றை மாத்திரம் எடுத்துச்சொல்லி, எங்கள் நாட்டு மக்கள், எங்கள் மதம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கு எங்களால் முடியாது. என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிணைந்து வெற்றியை கரங்களுக்குள் கொணர்வோம்...

அமெரிக்காவின் நிவ்பார்ஸி விகாரையின் விகாராதிபதி கூன்கன்பொல சீலரத்ன, பொதுபல சேனா இயக்கத்தின் முழுநாட்டுக்குமான அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த, உடுதும்புர சந்திரரத்ன, உட்பட பலர் அங்கு உரையாற்றியுள்ளனர்.

(கேஎப்)

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News