இதுவரை ஊடகங்கள் எங்களுக்கு செய்ததென்ன?

எல்லாவற்றையும் தீர்மானிக்க வல்ல உலக பயங்கரவாத சக்தியாக வருணிக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கால கட்டத்திற்குள் நாமிருக்கிறோம். ஊடகங்கள் தரும் தகவல்களை விழுங்கி விழுங்கி அவர்கள் உருவாக்கும் அச்சுகளில் வார்த்தெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவ அமைப்பின் மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்பட்டவரான ஹென்ரி ஃபோர்ட், தனது கார்களுக்கான வியாபார விளம்பர தந்திரத்தில் இப்படிக் கூறியதாகச் சொல்லப்படுவதுண்டு. எந்த ஒரு வாடிக்கையாளரும் தான் வாங்குகிற கார் கறுப்பு நிறத்தில் இருக்கிற வரையில் அதை தான் விரும்புகிற எந்த ஒரு நிறத்திற்கும் மாற்றிக்கொள்ள முடியும். ஏனென்றால் அப்போது அவருடைய தொழிற்சாலையில் உருவான கார்கள் எல்லாமே கறுப்பு நிறத்தில் மட்டுமே இருந்தன.

நமது ஊடகங்களும் ஒரே வகையான சரக்கை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகவே ஆக்கப்பட்டிருக்கின்றன. செய்திகள், தகவல்கள் அனைத்தும் பொறுப்புணர்வற்ற, வெறும் உணர்ச்சி யூட்டி விற்பனையாக்கும் சரக்குகளாகி விட்டன. இந்தச் சரக்கு உற்பத்தியின் நோக்கம், மாற்றங்களை ஏற்படுத்துவதல்ல, பணரீதியாகவும் அரசியல் வாய்ப்பு ரீதியாகவும் தங்கள் இலாபத்தை அதிகரிப்பது மட்டுமே.

மக்களைத் தகவலறிவு உள்ளவர்களாக்குதல், கல்வியூட்டுதல், ஆட்சியும் அதிகாரப் பிரிவும் நீதியும் மக்களுக்குரியவையாகச் செயற்படுவதைக் கண்காணித்து வழிப்படுத்துதல், மக்களின் வாழ்வுக்குத் தீங்கானவற்றைக் கண்டு வெளிப்படுத்துதலும் சரியான திசை நோக்கிச் செல்ல வேண்டிய மக்களின் குரலாக ஒலித்தலும் ஊடகங்களின் கடமை.

நமது ஊடகங்கள் என்ன செய்கின்றன என்பதை அவற்றின் செய்திப் பொழிதல்களுக்கு அப்பால் நம் சிந்தனையைத்தப்பு வித்து வைத்துக்கொண்டு கொஞ்சம் ஆய்ந்து பார்க்க வேண்டியது அவசியம். முதலாவது கேள்வி, நாம் நம்பியிருந்தது அல்லது நம்ப வைக் கப்பட்டது நடக்காமல் போய் ஏமாந்திருக்கிறோம். சுமார் முப்பது வருடங்களாக பாடழிவு ஒன்றை நோக்கியே இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது பற்றிய எந்த எச்சரிக்கையுணர்வுகளும் மேலெழுந்து சமூகத்தின் குரலாக ஒலித்துவிடாதபடி மறைக்கப் பட்டிருக்கிறோம்.

தொடர்ச்சியாக இவ்வளவு அவலங்களைச் சுமந்து வருகி றோம். இதிலிருந்து மீள்வதற்குரிய சாத்தியமான மக்கள் நம்பக் கூடிய வழி ஏதும் இந்த ஊடகங்களால் இதுவரை எப்போதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? உணர்ச்சிகரமாக விடயங்களை அணுகும் முறை தவிர, புத்தி சாலித்தனமான, தமிழ் ராஜதந்திர நகர்வில் ஒரு சிறு வெற்றியை யேனும் எப்போதாவது பெற்றுக்கொள்ளும்படியான ஆலோசனைகளை இவை சொல்லியிருந்ததுண்டா?

எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளையோ ஆயுதப் போரா ளிகளையோ பழிசுமத்திவிட்டுத் தப்புவதைத் தவிர ஊடகங்களின் பொறுப்புணர்ச்சியை எப்போதாவது காண்பித்ததுண்டா? நடந்து முடிந்தவற்றுக்கும் நடக்கும் அவலங்களுக்கும் இந்த நான்காவது தூணின் பொறுப்பென்ன? இன்றைய தமிழ் அபிப்பிராயத்தைப் பெருமளவு வடிவமைத் துக் கொண்டிருப்பவை இந்த செல்வாக்குமிக்க ஊடகங்கள்தான். நமது மக்கள் அனுபவிக்கும் எந்தக் கஷ்டங்களையும் கடந்து செல்ல முடியாதவாறு இன்னும் நம் சிந்தனை இருந்துகொண்டிருப்பதற்கு வேறு யார் முதற் காரணமாக முடியும்?

ஊடகம் உண்மையைச் சொல்லவில்லை என்றால், மக்க ளின் உண்மை வாழ்க்கையைச் சொல்லவில்லை என்றால் அதன் நெருக்குதல்களிலிருந்து மீள்வதற்கு வேண்டிய யதார்த் தத்தை காட்டவில்லை என்றால், அது வெறும் உணர்ச்சிகளை விற்பனை செய்யும் பொழுதுபோக்காக, முதலாளிகள் லாபமீட்டும் விற்பனைப் பொருளாகவே நின்றுவிடும். மக்கள் விழிப்படையவும், இவற்றிடமிருந்து மீளும் வழி காணவும் வேண்டும்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News