கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர் விளக்கமறியலிருந்து தப்பியோட்டம்
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாள அணிவகுப்பிற்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்ட வேளையில் தப்பிச் சென்றுள்ளார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினரான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் தவராஜ் என்ற நபரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
கொள்ளை குற்றச்சாட்டுக்களின் பேரில் ஏறாவூர்ப் பொலிஸாரினால் கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் அடையாள அணிவகுப்பிற்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த வேளை தப்பியோடியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments
Write Down Your Responses