கண்ணீருடன் ஒரு கடிதம் . . . . (பாகம் 4)

நெஞ்சம் நிறைந்த இனிய உறவுகளே !

இக்கடிதத்தை வரையும் போது உள்ளம் குதூகலத்தால் நிரம்பி வழியவில்லை. மாறாக கண்களில் நீர் தேங்கியுள்ளது.

ஏன் என்கிறீர்களா ?

என் உடன் பிறந்த தாய்மண் உறவுகளுக்காக தொப்புள் கொடி உறவுகளாகிய நீங்கள் காட்டும் பரிவினைக் கடிந்து கொள்ளும் நிலை எனக்கு ஏற்பட்டுள்ளதே எனும் ஏக்கமே அதற்குக் காரணம்.

ஆனால் அநீதியைக் கண்டு மெளனித்திருப்பது அவ்வநீதிக்குத் துணை போவதற்குச் சமனாகும் எனும் ஒரே ஆதங்கம் தான் இக்கடிதத்தை எழுதுவதற்கு என்னைத் தூண்டும் உள்ளுணர்வாகும்.

கடந்த காலச் சரித்திரங்களைப் பேசிப் பேசி எதிர்காலத்து ஓவியத்தின் சிற்பத்தைச் சிதைக்கும் சிற்பிகளாவதை விட அழகான ஒரு சிற்பத்தை எதிர்காலத்திற்காக செதுக்குவோர்களுக்கு உளி எடுத்துக் கொடுக்கும் பணியாளனாக இருப்பதுவே மேலானதாகும்.

விடுதலைப் போராட்டத்தைத் திசைதிருப்பி நடத்திச் சென்றதன் மூலம் புலிகள் தம்மை மட்டும் அழித்து விடவில்லை ஒரு சந்ததியினரின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கி விட்டார்கள். அறிவிற் சிறந்தவர்கள், ஆக்கபூர்வமானவர்கள் என்று எமக்குள் நாமே கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஈழத் தமிழினத்தின் முன்னேற்றத்தை இரண்டு தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளி விட்டார்கள்.

இன்று ,

கீழே தடுக்கி விழுந்த ஒருவன் திரும்ப எழுந்து நடக்க முற்படும் வேளையில் மீண்டும் தள்ளி விழுத்திவிட முயற்சிப்பது போல புலம் பெயர் மண்ணிலே தமது வாழ்வைத் திடப்படுத்திக் கொண்டு ஈழத்து மண்ணிலே வாழத்துடிக்கும் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தைக் குலைக்கும் முயற்சிக்கு அன்பான உறவுகளாகிய உங்கள் அதீத உணர்வினைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழீழம் எனும் கொள்கையை முன்வைத்துப் போராடும் போது அது நிச்சயமாக கிடைக்கும் என்பதை விட அதன் மூலம் கிடைக்கும் அதி உயர்வான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தையே அனைவரும் மனதில் கொண்டிருந்தார்கள் என்பதுவே உண்மை.

இன்று யதார்த்தத்தின் அடிப்படையில் சிங்கள மக்களுடன் இணைந்த ஒரு ஜக்கிய இலங்கைக்குள் தம்மைத் தானே நிர்வாகிக்கக் கூடிய அதிஉயர் நிர்வாக சபையுடன் கூடிய அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவதே சாத்தியமானது.

வீரம் என்பது ஆயுதத்தைத் தூக்குவதில் மட்டுமே உள்ளதல்ல அதைக் கீழே வைத்து மக்களின் நன்மையை முன்னெடுப்பதிலேயே உண்மையான ஒரு தலைவனின் வீரம் அடங்கியுள்ளது.

அழகான பேச்சுக்களால் மக்களின் உணர்வுகளை தூண்டி விடுவதல்ல உண்மையான மக்களுக்கான் அரசியல் ஜனநாயகம். மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய கொ:ள்கை நாம் கொண்டிருந்த கொள்கைக்கு முரணாக இருப்பினும் அதை ஆரய்ந்து அதற்கு செயல் வடிவம் கொடுக்க முற்படுவதே உண்மையான மக்கள் நலனை முன்னெடுக்கும் அரசியல்.

மயான பூமியில் கொள்கைகளைத் தூக்கிப் பிடிப்பதால் யாருக்கு என்ன லாபம் ?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உண்மையான நலனில் அக்கறை கொண்டிருந்தால் சிறிலங்கா அரசுடன் பேசும் சந்தர்ப்பத்தை உருவாக்கி இப்பேச்சுக்களில் இந்தியாவின் பங்களிப்பை உறுதிப்படுத்திக் கொள்வது ஒன்றேயே முக்கியமாக் கொள்ள வேண்டும்.

இன்றைய ஈழத் தமிழ்ச் சிறார்களின் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் செழிப்புக்கு வழி வகுக்க வேண்டும்.

டக்களஸ் தேவனந்தா போன்றோரை "துரோகிகள்" என வர்ணிப்பதை விடுத்து அவர்களுடன் இணைந்து எமது மக்களின் நலனுக்காக உழைக்க முன்வரவேண்டும்.

யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல . ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் பல்வேறு காலநிலைகளில் பல்வேறு வகைகளில் இணைந்து கொண்டவர்கள் அனைவரும் நோக்கமும் ஈழத்தமிழர்களின் நிம்மதியான வாழ்க்கையே.

தமிழக தொப்புள் கொடி உறவுகளே !

அர்த்தமற்ற கோஷங்களை முன்வைத்து போராடுவதை விட தமிழ்த் தலைமைகளுக்கு அடையக்கூடிய தீர்வை பெறுவதற்கு அனைவரும் சேர்ந்து இந்தியாவின் பங்களிப்புடனான ஒரு இறுதியான தீர்விற்காக உழைப்பதன் அவசியத்தை எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் தொப்புள் கொடி உறவுகளின் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைச் சீராக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்.

அதுவே இன்று உங்களின் முன்னால் காலக்கடமையாக இருக்கின்றது.

(தொடரும்)

ஈழத்திலிருந்து நல்லையா குலத்துங்கன்

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News