இலங்கையின் எதிரியாக மாறும் புலம்பெயர் தமிழ் சமூகம்.
இலங்கையின் எதிரிகளாக புலம் பெயர் தமிழர் சமூகம் உருவெடுத்து வருவதாகவும் ஈழம் கொள்கைக்காக செயற்படும் சர்வதேச புலம்பெயர் தமிழர்களினால் இலங்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களவையின் தொலைக் காட்சிக்கு வழங்கிய செவ்வியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறானவர்களின் எண்ணங்கள் மாற்றமடைய வேண்டும் எனவும், நாட்டில் அனைவரும் சமத்துவமாக வாழும் முறைமையை எடுத்துக்காட்டாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதுடன் தற்போது நிலவும் பிரச்சினைகள், அபிவிருத்தி, இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தல் போன்ற அடிப்படை விடயங்களுக்கான தீர்வினைப் பெறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.
0 comments
Write Down Your Responses