யாழ்ப்பாணத்திலிருந்து ‘உதயன் ’ என்றொரு நாளிதழ் கடந்த பல வருடங்களாக வெளிவருகிறது. இதன்உரிமையாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஈ.சரசணபவன். (இவர் முன்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கிய‘சப்றா பினான்ஸ் ’ நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தவர். இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் வைப்பிலிட்ட கோடிக்கணக்கான பணத்தை அந்த நிறுவனம் திருப்பி வழங்காமல்கைவிரித்ததால், பலர் ஏமாற் றப்பட்டதுடன் சிலர் மனமுடைந்து தற்கொலையும் செய்து கொண்டனர் எ பது குறிப்பிடத்தக்கது)
உதயன் பத்திரிகையின் பிரதான பணிகண் மூடித்தனமான அரச எதிர்ப்பு என்பதை யாழ்மக்கள் நன்கு அறிவர். அதன் உரிமையாளர் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் மிகவும் நெருக்கமாகக் கூடிக் குலாவியவர். இப்பொழுதும்அந்த உறவு உண்டு. அந்த உறவு அவர் தமிழ் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு ஒரு தடையாக அமையவில்லை.அதற்குக் காரணம் கூட்டமைப் புத்தலைமையே ஜ.தே.கவுடன் தேன்நிலவு கொண்டாடுகையில், சரவணபவன் கூட்டமைப்புத் தலைமைக்கு ஒரு பொருட்டல்ல. இவர்கள் தமக்கு ஏதாவது தேவையென்றால் அரச தலைமையிடமும் குலாவத் தயங்கமாட்டார்கள்.
எனவே தமிழரசுக் கட்சியில் எத்தனையோ மூத்த உறுப்பினர்கள் இருக்க சரவணபவன் மிகச் சுலபமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார். அவரை தனது வேட்பாளராக நியமிப்பதற்கு முன்னர், பொதுமக்களை ஏமாற்றிய சப்றா பினான்ஸ் நிறுவனத்தில் அவரது பங்குபணி என்னவாக இருந்தது என்பது பற்றி கூட்டமைப்பு ஆராயவோ, அதைப்பற்றிக் கவலைப்படவோ இல்லை.
சரவணபவனின் உதயன் பத்திரிகை தினசரி அரச எதிர்ப்பு வாந்தி எடுப்பது ஒருபக்கம் இருக்க, அப் பத்திரிகை வெளிப் படையாகவே புலிகள் இருந்தகாலத்திலும் சரி, அவர்கள் அழிக்கப்பட்ட பின்னரும் சரி, அவர்களை ஆதரித்து எழுதி வருகிறது. அதற்குப் பல உதாரணங்கள் இருப்பினும் சமீபத்திய உதாரணம் ஒன்று.
2013 மார்ச் 14ஆம் திகதி உதயன் வெளியீட்டில் ‘இந்தியாவின் துரோகம் வெளிச்சத்துக்கு வந்தது’ என்றொருசெய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி அண்மையில் இந்தியப் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தைவைத்தே, இந்தியா துரோகம் இழைத்துவிட்டது என குறித்த செய்திக்கு உதயன் தலைப்பிட்டுள்ளது.
அந்தோனி தெரிவித்த தகவலில், 2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின் படி, தமிழ் நாட்டுக்கும் இலங்கையின் வட மேற்குக்கடல்பகுதிக்கும் ( வடபகுதி தீவுகளில் தொடங்கி நீர்கொழும்பு வரையிலான பகுதி) இடையில் இந்திய மீன்பிடிப் படகுகளை ஒரு குறிப்பிட்ட காலம் மீன் பிடிக்காமல் செய்ததின் மூலம், புலிகளின் கடல்வழி விநியோக மார்க்கத்தை முடக்கி, இலங்கை இராணுவத்துக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொடுத்ததாகக் கூறியிருந்தார்.
இதைத்தான் உதயன் பத்திரிகை இந்தியாவின் துரோகம் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் இந்தநடவடிக்கை யாருக்குத் துரோகம் இழைத்துள்ளது என உதயன் வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும், அது புலிகளுக்குத் துரோகம் இழைத்துள்ளது என்பதே உதயனின் குற்றச்சாட்டு என்பது வெளிப்படையான விடயம்.
1977இல் ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பின்பற்றிய இந்தியவிரோத, அமெரிக்க சார்புக் கொள்கையால், இந்தியாதவிர்க்க முடியாத சூழலில் இலங்கையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு சகல வழிகளிலும் ஒத்துழைத்து, இலங்கையை ஒரு பேரழிவுக்குள் தள்ளிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதன் பின்னர் வந்த இந்திய அரசுகள், ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிய’ புலிகள்
இயக்கத்தின் அபாயகரமான போக்கை எப்படியும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என் பதில் உறுதியாகச் செயல்பட்டன. உண்மையில் இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் புலிப் பயங்கரவாத பாசிச இயக்கத்தை அழித்திருக்கவே முடியாது. அதன் மூலம் இன்று இலங்கை மட்டுமின்றி, இந்தியாவும் புலிப் பயங்கரவாதத்திலிருந்து தப்பியுள்ளது. ஒரு ஜனநாயக நாடு தனது அயலிலுள்ள இன்னொரு ஜனநாயக நாட்டை பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுதலை பெறஉதவியதில் (தனது முன்னைய தவறைச் சரி செய்ததில் ) என்ன துரோகம் இருக்கிறது? புலிகள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி வந்து
இலங்கை அரசபடைகளுடன் யுத்தம் செய்யவும், பொதுமக்களைக் கொலை செய்யவும் இந்தியா வழி விட்டிருக்க வேண்டும் என உதயன் கருதுகின்றதா?
இந்த நடவடிக்கையை உதயன் இந்தியாவின் துரோகம் என வர்ணிக்குமாக இருந்தால், அது வெளிப் படையாக புலிப் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது என்றுதான் அர்த்தமாகும். இவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்ட உதயன் வெறுமனே ஒரு வியாபாரப் பத்திரிகை மட்டுமல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கொள்கை பிரச்சாரப் பத்திரிகையாகவும் இருப்பதால், அதில் வெளியான இந்தக் கருத்துக்கும் அந்த பாராளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவனுக்கும் தொடர்பு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.
எனவே இலங்கையில் உள்ள சட்டங்களின் படி, அரசாங்கத்துடன் 30 வருடப் போரில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாத இயக்கம் பற்றி ஒரு ஊடகம் இவ்வாறாக செய்தி வெளியிடுவது சரியா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்துவது அவசியம். அத்துடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவா இயக்கமொன்றுக்கு ஆதரவாகத் தனது ஊடகம் ஒன்றில் பிரச்சாரம் செய்வது சரியா என்பதை, ஜனநாயக வழியில் செயல்படுவதாகச் சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளக்குவதும் அவசியமாகும்.
வானவில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறாரா!
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results
0 comments
Write Down Your Responses