முற்போக்கு கலை இலக்கிய மன்ற ஏற்பாட்டில் ஆய்வரங்கு
எச். எப். ரிஸ்னாவின் `வைகறை' மற்றும் சுமதி குகதாசனின் `தளிர்களின் சுமைகள்' நூல்களின் ஆய்வரங்கு கொழும்பு, தர்மராம வீதியிலுள்ள பெண்கள் ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வி. கருணைநாதன் தலைமையில்நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் 'சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியான தியத்தலாவ ரிஸ்னாவின் வைகறை' என்ற தலைப்பில் பன்னூலாசிரியரும் கல்வியாளருமான திக்குவல்லை கமாலும், 'சுமதி குகதாசனின் தளிர்களின் சுமைகளை முன்னிறுத்தி நடைமுறை வாழ்வியலில் இடதுசாரிக் கருத்தியல் பிரயோகம் என்ற தலைப்பில் லெனின் மதிவானமும் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses