தமிழ்த்திரை உலகில் பழம்பெரும் பின்னணிப் பாடகரான பி.பி. ஸ்ரீனிவாஸ் நேற்று மாலை இயற்கையெய்தினார். தமிழ் புத்தாண்டான நேற்று பி.ப. 1 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், திடீரென மரணமடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
மறைந்த பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீவாஸ் அவர்களின் வீடு சென்னை தி. நகரில் உள்ள சி.ஐ.டி. பகுதியில் சென்னை மாநகர ஆளுநர் சைதை துரைசாமி வீட்டு அருகே உள்ளது. இவருக்கு ஜானகி (79) என்ற மனைவியும், ராஜசேகர், விஜி, பணிக்கர் உட்பட நான்கு மகன்மாரும் , லதா என்ற மகளும் உள்ளனர். 3 மகன்கள் ஹைதாராபத்திலும், மற்றொரு மகன் திருப்பதியிலும் உள்ளார்கள்.
பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆந்திர மாநிலம் காக்கி நாடாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கு பிராமணன் வகுப்பபை சேர்ந்தவர். பி.பி.ஸ்ரீனிவாஸ் ஜாதகம் என்ற திரைப்படத்தில்தான் தனது முதல் பாடலை பாடினார். அப்போது அவருக்கு வயது 20 மட்டுமே. இப்பபாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், உட்பட மூன்று மொழிகளில் வெளியானது. ‘காலங்களில் அவள் வசந்தம், ரோஜா மலரே ராஜகுமாரி, மயக்கமா கலக்கமா, மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.’ ஆகிய பாடல்கள் இவர் பாடிய நீங்கா புகழ் பெற்ற பாடல்களாகும்.
தென்னிந்திய மொழிகளில் இருபதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார் . பிரபல பின்னணி பாடகர்கள் ரி.எம். சௌந்தராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசிலா, எஸ். ஜானகி உள்ளிட்ட பின்னணிப் பாடகர்களுடனும், லதா மங்கேஷ்கர் போன்ற பிரபல இந்திப் பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளார். அவர் தமிழக அரசின் கலைமாமணி உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம் அரசுகளின் விருதுகள் மற்றும் நூற்றுக்கணக்கான பிற விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர்.
மறைந்த பிரபல பாடகர் பி.பி.ஸ்ரீவாஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியத்திலிருந்து அவரது உடலுக்கு ஆயிரக்கணகான ரசிகர்களும் திரையுலகத்தினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது மறைவு அறிந்ததும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து, செய்தி வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் செய்தித்துறை மற்றும் மக்கள் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி தமிழ்நாடு இயலிசை நாடகமன்ற தலைவர் தேவா மற்றும் கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பின்னணி பாடகிகள் பி.சுசிலா, எஸ்.ஜானகி, இசையமைப்பாளர் எஸ்.கணேஷ் உள்ளிட்ட பரபலங்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இவர் கடைசியாக இயக்குனர் செல்வராவன் ஆயிரத்தில் ஓருவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் பின்னணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்று மதியம் 3. மணிக்கு அவர்களது குல வழக்கப்படி தி.நகர் கன்னம்மாபேட்டையில் உள்ள கூடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. அரவது இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினரும் திரையுலகினரும் செய்து வருகிறார்கள்.
பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் மறைவு (படங்கள் இணைப்பு)
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results
0 comments
Write Down Your Responses