தேஜாஸ் இலகுரக விமானத்தின் சோதனைப்பரப்பு வெற்றி!
தேஜாஸ் இலகுரக விமானத்தின் சோதனை ஓட்டம், பெங்களூருவில் உள்ள, ஹெச்.ஏ.எல்., விமான தளத்திலிருந்து, 31.03.2013 வெற்றிகரமாக நடைபெற்றது.
இதுகுறித்து, இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் நிறுவனத்தின் (ஹெச்.ஏ.எல்.,) தலைவர் தியாகி குறிப்பிடுகையில், தேஜாஸ் விமானத்தின் சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நடை பெற்றுள்ளதால் விமான வடிவமைப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, இந்த விமானத்திற்கான அனுமதி விரைவில் கிடைக்கும், என்றார்.
விமானப்படை கெமாண்டரும், திட்ட இயக்குனருமான முத்தனா, கூறுகையில், விமானத் தின் செயற்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளது எனவே இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் எனக்குறிப்பிட்டார்.
0 comments
Write Down Your Responses