நெஞ்சம் நிறைந்த தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்கு,
தமிழீழப் போராட்டத்தை தாமே குத்தகைக்கு எடுத்ததைப் போன்ற ஒரு நடவடிக்கையின் மூலம் ஈழத்தமிழ் மண்ணில் தமது இன்னுயிரைப் பயணம் வைத்துப் போராடிக் கொண்டிருந்த சக மாற்று இயக்கப் போராளிகளைச் சகோதரத்துவ மனப்பான்மையுடன் பார்க்காது மாற்றான் எனும் கண்ணோட்டத்தோடு பார்த்தது மட்டுமில்லால், தாம் அவர்களைத் தடை செய்கிறோம் என்று கூறி அனைவரையும் அடித்து விரட்டி எமது மக்களின் நியாயமான போராட்டக் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்த பாசிசக் கும்பலான புலிகளின் எச்சங்களின் வாழ்வைப் புலம்பெயர் நாடுகளில் தக்க வைத்துக் கொள்வதற்காக நீங்கள் பயன் படுத்தப்படுகிறீர்கள் என்று உணராமல் இன்று ஒட்டு மொத்தமாக அனைத்து தமிழ் நாட்டு மக்களையுமே உபயோகிக்கிறார்கள் என்று நீங்கள் அறியாதது என்னை வியப்பிலாழ்த்துகிறது.
ஈழத்தமிழ் மக்களின் குரல்வளையை இன்று நீங்கள் எதிரிகள் என்று கோஷமிடும் சிறிலங்கா அரசாங்கம் நெரித்த கோரத்தை விடப் புலிகள் நெரித்த கோரமே கொடூரமானது.
1987ம் அண்டு மறைந்த அமரர் ராஜிவ் காந்தி அவர்களின் முயற்சியினால் சமாதனாம் காக்க வந்த இந்திய சமாதானப் படைக்கு நடந்த நிலையை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
@வடக்கு, கிழக்கு@ இரண்டையுமே இணைத்து ஒரு தற்காலிக மாகாண நிர்வாக சபையில் 12 இடங்களில் ஏழு இடங்களை புலிகளுக்கு அளித்து அதன் தலைவர் "மேதகு வே. பிரபாகரன்" அவர்களுக்கு முதலமைச்சர் பதவியும் பெற்றுக் கொடுக்கும் தீர்வை முன்மொழிந்த அமரர் ராஜிவ் காந்தி அவர்களின் உடலைச் சல்லடையாக ஆக்கியதே மூர்க்கத்தனமான புலிகள் அவருக்குச் செலுத்திய நன்றிக் காணிக்கை.
அன்றைய சிறிலங்காப் பிரதமர் பிரேமதாசா அவர்களுடன் கைகோர்த்து இந்தியப் படைகளுக்கெதிராகப் போர்தொடுத்த மாபெரும் வீரர்களல்லவா வே.பிரபாகரன் அவர்களின் படை.
அது மட்டுமா ? பிரேமதாசா அவர்களின் கூட்டு முயற்ச்சியுடன் அவர்களது கெலிகாப்டரைப் பயன்படுத்தி முல்லைத்தீவில் முகாமைத்து இருந்த புளட் அமைப்புத் தோழர்களை சிறிலங்கா அரசு கொடுத்த ஆயுதங்களுடன் உதவி கொண்டு துடிதுடிக்க கொன்றொழுத்த வீரச்சாகசத்தின் சொந்தக்காரர்களின் பச்சைப்புளுகுகளுக்காக இன்று உங்கள் பெற்றோர் தமது வாழ்வைத்தியாகம் செய்து பெற்றுத்தந்த கல்வ்விச் செல்வத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறீர்களே !
தமிழகத்தின் அரசியல்வாதிகளே !
நீங்களும் இதற்குத் துணை போகிறீர்களா ?
அன்ரு களத்திலே மேதகு வே,பிரபாகரனின் உயிரைக் காக்க தனது உயிரைப் பயணம் வைத்துப் போராடிய கருணா அம்மானுக்கு தமது அதியுயர் பட்டமாகிய "துரோகி" பட்டத்தை அளித்து எதிரி என்று அவர்களால் வர்ணிக்கப்பட்டவர்களின் பாசறைக்குள் தள்ளிய பெருமையுள்ளவர்களுக்காகவா நீங்கள் இன்று உங்கள் கல்வியைத் தியாகம் செய்கிறீர்கள் ?
ஒன்ரு மட்டும் உண்மை இன்று உங்களால் உக்கிரமாக நடத்தப்படும் இப்போராட்டம் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தரப்போவதில்லை.
சரி அப்படியானால் இத்தகைய ஒரு போராட்டத்தின் விளைவு என்னவாக இருக்கும் ?
ஈழத்தமிழருக்கு தீர்வு எனப்படும் சாசனம் எழுதப்படும் வேளையிலே நீங்கள் காட்டியிருக்க வேண்டிய ஆஅத்ரவு இன்றைய இந்தக் கண்மூடித்தனமான போராட்டத்தினாலே வழுவிழந்து போகும் ஒரு செயலையே நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்களால் துரோகிகள் என வர்ணிக்கப்படும் மிகச் சிலர்தான் இன்று எம் மக்கள் மத்தியிலே நின்று ஏதோ தமக்குத் தெரிந்த வழிகளிலே அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடிய சலுகைகளைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தாமே ஈழத்தமிழர்களின் விடிவுக்கு வழிவகுக்க வந்த தலைவர்கள் என்று தலையறுபட்ட கோழியொன்று திசைதெரியாமல் அங்குமிங்கும் ஓடுவது போல ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நில்லை இன்னும் கேலிக்குரித்தானதாகிறது.
இக்கூட்டமைப்புக்கு வெளியே நின்று உண்மைகளை நடுநிலையாக எடுத்தொயம்பி வந்த ஜயா ஆனந்தசங்கரி அவர்களையும் இவர்கள் தமக்குள் உள்விழுங்கி இன்று அவரின் குரலையும் அடக்கி விட்டார்கள்.
இந்தத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் வாரிசுகள் புலம்பெயர் நாடுகளில் வசதியான வாழ்வினை மிகவும் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். ஆனால் எதுவுமற்ற ஏதிலிகளான ஈழத்தமிழர் இவர்களின் தலைமையால் இன்றும் புலிகளின் வறண்ட கனவுகளுக்கு தண்ணீர் ஊற்ற பயன்படுதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் போன்றவர்கள் நம்பியிருந்த ஒரு தெளிவான தலைவியாகிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களும் இன்று தமிழீழம் எனும் கோஷமெழுப்பும் அறிவிலிகளின் பக்கம் சாய்ந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயிரம் ஆயிரமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர் "தமிழீழம்" எனும் இந்த போலிக்கனவிற்காக அள்ளிக் கொடுத்த செல்வமெல்லாம் இன்று @தகுவின்@ அடிவருடிகளால் ஏப்பம் விடப்பட்டு தமது கையாடல்களை மறைத்து விட வேண்டும் என்னும் ஆதங்கத்திற்காக தமிழக தொப்புள் கொடி உறவுகளின் துணையோடு மீண்டும் ஈழத்தின் மண்ணைக் குதறி புழுதியைக் கிளப்பி விடத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தோ பாவம் நீங்களும் தமிழ் மீதும், உங்கள் தொப்புள் கொடி உறவுகளின் மீது கொண்ட அன்பினாலும் போலிக் கோஷங்களுக்குள் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் .
(தொடரும்)
ஈழத்திலிருந்து நல்லையா குலோத்துங்கன்
கண்ணீருடன் ஒரு கடிதம் . . . . . (பாகம் 3)
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results
0 comments
Write Down Your Responses