கருக்கட்டாத முட்டையை கருக்கட்டும் குருத்துக்கலங்களாக மாற்றிய அமெரிக்க விஞ்ஞானிகள்!
மனித கரு முட்டையொன்றை "குளோனிங்" எனப்படும் உயிர் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு முன்னர் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் டோலி என்ற செமட்மறியாட்டை 1996 ஆம் ஆண்டு குளோனிங் முறைமூலம் உருவாக்கினர்.
மரபணு கூறுகள் அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயது முதிர்ந்த ஒருவரின் கலத்திலுள்ள பதார்த்தங்கள் மாற்றீடு செய்யப்பட்டதாக ஒரேகன் மாநில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் கருக்கட்டாத முட்டையை கருக்கட்டும் குருத்துக்கலங்களாக உருவாவதற்காக விஞ்ஞானிகள் மினசாரத்தின் உதவியை பெற்றுள்ளனர். சேதமடைந்த தசைகளை பழுதுபார்க்கவும் நோய்களை குணமாக்கவும் இக்கலங்கள் பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments
Write Down Your Responses