2வது பட்டாலியன் Royal Regiment of Fusiliers ஐ சேர்ந்த ட்ரம் வாசிப்பவரான லீ ரிக்பி, லண்டனின் வுல்விச் இராணுவப் பாசறைகளுக்கு அருகே புதன் அன்று கொலையுண்டது ஒரு கொடூரமான செயலாகும். ரிக்பி முதலில் காரில் இருந்து இருவரால் கீழே தள்ளப்பட்டார், அவர்கள் பின் ரிக்பியை கத்திகளாலும் ஒரு வெட்டுக் கத்தியாலும் தாக்கிக் கொன்றனர்.
கொலை செய்தவர்களில் ஒருவர் 28 வயது பிரித்தானியக் குடிமகன், நைஜீரியாவில் இருந்து வந்த Michael Adebolajo, என அடையாளம் காணப்பட்டார். மற்றவர் நைஜீரிய குடியுரிமை பெற்றவர் என்று மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இருவருமே பொலிசால் சுடப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர், ஒருவர் மோசமான நிலையில் உள்ளார்.
இன்னும் விளக்கப்படாத காரணங்களினால், பொலிஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு 20 நிமிடங்கள் ஆயின எனக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் Adebolajo பல அருகில் இருந்தவர்களிடம் பேசினான், தாக்குதல் ஆப்கானிஸ்தான், ஈராக் இன்னும் பிற இடங்களில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தியத்தின் நடவடிக்கைகளினால் ஏற்பட்ட சீற்றத்தால் உந்துதல் பெற்றது என்பதை உறுதிப்படுத்திய நீண்ட உரை ஒன்றும் வழிப்போக்கரால் வீடியோக்காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
“இந்த நபரை நாங்கள் இன்று கொன்றதற்கு ஒரே காரணம் முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் பிரித்தானிய சிப்பாய்களால் கொல்லப்படுவதால்தான்” என்றான். “தற்போதைக்கு ஒரு பிரித்தானிய சிப்பாய். இது, கண்ணுக்குக் கண், பல்லிற்குப் பல் என்பது போன்றது.”
“முஸ்லீம் நாடுகளில் ஷாரியாப்படி நாங்கள் வாழ்ந்தால் என்ன? அதன் பொருள் நீங்கள் எங்களைத் தொடர்ந்து, விரட்டியடித்து, தீவிரவாதிகள் என பெயர்சூட்டி கொல்ல வேண்டுமா? மாறாக நீங்கள்தான் தீவிரவாதிகள். நீங்கள்தான் ஒரு நபரைத் தாக்கும் என்றால் ஒரு குண்டை வீசுகிறீர்கள். அல்லது மாறாக உங்கள் குண்டு ஒரு குடும்பம் முழுவதையும் அழித்துவிடுகிறது?
Ingrid Loyau-Kennett, அடெபோலஜோவைச் சமாதானப்படுத்தி இன்னும் இறப்புக்களை தவிர்க்கும் முயற்சியில் அணுகியவர் கூறினார், “நாம் அவரிடம் ஐந்து நிமிடங்களுக்கும் மேல் பேசினேன். ஏன் இவ்வாறு செய்தார் என்று அவரைக் கேட்டேன். [பாதிக்கப்பட்டவர்] ஒரு பிரித்தானிய வீரர் என்பதால் கொன்றதாகவும், அவர் முஸ்லிம் பெண்களையும் குழந்தைகளையும் ஈராக், ஆப்கானிஸ்தானில் கொன்றவர் என்றும் அவர் கூறினார். அங்கு பிரித்தானிய இராணுவம் இருப்பது குறித்து அவர் கடும் கோபம் கொண்டுள்ளார்.”
ஒரு பக்தி நிறைந்த கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்த அடெபோலஜோ—தடைக்குட்பட்ட தீவிர இஸ்லாமியவாத அமைப்பு அல் முகஜிரோன் உடைய முன்னாள் தலைவர் அஞ்செம் சௌதரி கருத்துப்படி—2003ம் ஆண்டு இஸ்லாமிற்கு மதம் மாறினார்.
இப்பொழுது இருவருமே பாதுகாப்புப் பிரிவுகளுக்கு தெரிந்தவர்கள் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது, 2007ல் ஒரு இஸ்லாமிய ஆர்ப்பாட்டதிதல் பங்கு பெற்ற அடெபொலஜோ, சௌதரிக்கு அருகே நிற்பது வீடியோ காட்சி ஒன்றில் தெரிவதாக பிபிசி கூறியுள்ளது. புதன் மாலை பிபிசியின் நியூஸ்நைட் நிருபர் ரிச்சார்ட் வில்சன் “பிரித்தானிய ஜிஹாத்திய நிலைமையை நன்கு அறிந்த ஆதாரத்தை” மேற்கோளிட்டு, “கடந்த ஆண்டு இந்த இளைஞர் மறிக்கப்பட்டார் அல்லது கைது செய்யப்பட்டார்.... சோமாலியாவில் அல் ஷபாப்பில் சேர அவர் சென்றிருக்கையில்” என்றார்.
நேற்று பிபிசி இந்த நிகழ்வை ஆதாரப்படுத்தி, இது “மூத்த Whitehall ஆதாரங்களால் கூறப்பட்டது, சந்தேகத்திற்குரியவர்களில் ஒருவர் நாட்டை விட்டு நீங்க இருக்கையில் பொலிசால் கடந்த ஆண்டு தடுக்கப்பட்டார்” என்றது.
வியாழன் அன்று ரிக்பி கொலையில் சந்தேகத்திற்குரியவர்கள், “உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு M15 க்கும் பொலிசுக்கும் எட்டு ஆண்டிற்கும மேல் நன்கு தெரியும், ஆனால் ஒதுங்கி இருப்பவர்கள் என மதிப்பிடப்பட்டு, முழு அளவு விசாரணை அவர்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை” என்று கார்டியன் தகவல் கொடுத்துள்ளது. உண்மையில், “அடெபோலஜோ.... உளவுத்துறை அமைப்பின் கவனத்திற்கு வந்தபின் M15 கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னைத் துன்புறுத்தி வந்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.”
இதைத்தவிர, M15 மற்றும் சிறப்புப்பிரிவு இரண்டும் இரு கொலைகாரர்களின் நண்பர்களை நன்கு அறிந்திருந்துள்ளன என்பதைக் காட்டும் வகையில் ஒரு 29வயது ஆணும் ஒரு 29 வயதுப் பெண்ணும், கொலை செய்ய சதி செய்ததாக, இரண்டு கைதுகள் நேற்று செய்யப்பட்டன.
லண்டனில் பட்டப்பகலில் ஒரு மனிதர் கொலையுண்டது, குருதி தெருவில் ஓடியது, தாக்குதலின் மிருகத்தனம், இவை அனைத்தும் மக்களிடையே உருவாக்கிய அதிர்ச்சி புரிந்துக் கொள்ளக்கூடியதுதான்.
ஆனால், அதே நேரத்தில், இச்செயல் வன்முறையானதாகவும் நோக்குநிலை தவறியதாகவும் இருந்தாலும், உலகத்தில் நடைபெறுவதுடனும், பிரித்தானிய அரசின் செயற்பாடுகளின் தன்மையுடனும் தொடர்பற்றது என எவரேனும் சந்தேகிக்க முடியுமா? ஒரு நபருக்கும் மேல் தொடர்பு கொண்டனர் என்னும் உண்மையே, இது ஒரு தனிப்பட்ட கிறுக்கனின் செயல் அல்ல என்ற உண்மையைக் காட்டுகிறது.
ஒரு செயலை விளக்குவது ஒன்றும் அதை நெறிப்படுத்துவது அல்ல, அதற்குச் சற்றும் அரசியல் ஆதரவைக்கொடுத்து விடுவதும் அல்ல. வுல்விச் கொலை பிற்போக்குத்தன பலாபலன்களைக் கொண்டது. இத்தகைய செயல்கள், மக்களை மழுங்க வைக்கும், மிக இழிந்த சக்திகளுடைய விளையாட்டு பொருட்களாக மாற்றும். அரசாங்கம் கொலையுண்ட நபர் குறித்த மக்கள் பரிவுணர்வை இன்னும் பயன்படுத்தி இராணுவம், பொலிஸ் இவற்றைக் கட்டமைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை ஆழப்படுத்தும்.
அடெபோலஜோவின் அறிக்கை, சாட்சிகள் Loyau-Kennett இன் குறிப்புக்கள் மற்றும் பின்தொடர்ந்த நிகழ்வுகள் செய்தி ஊடகம் மற்றும் அரசியல் உயரடுக்கின் சில பிரிவுகள், கொலைக்கும் பிரித்தானிய வெளியுறவுக் கொள்கைக்கும் இடையே இருக்கும் வெளிப்படையான தொடர்பை மறுக்கும் முயற்சிகளை நிராகரிக்கின்றன.
தாக்குதல் பற்றிய செய்தியைக் கேட்டவுடன் பாரிசில் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுடன் பேச்சுக்களுக்குச் சென்றிருந்த பிரதம மந்திரி டேவிட் காமெரோன் திரும்பிப் பறந்து வந்து, அரசாங்கத்தின் நெருக்கடி COBRA குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பின் அவர் விடுத்த அறிக்கையில் ரிக்பியின் மரணம், பிரித்தானிய நடவடிக்கைகள் ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக நடப்பதுடன் தொடர்பற்றது எனத் தெரிவித்தார்.
இத்தாக்குதல்கள் “முற்றிலும், தூய அளவில்” தனிப்பட்ட தொடர்புடைய நபர்களின் பொறுப்பாகும். “பிரித்தானியா தன் சர்வதேசப் பங்காளிகளுடன் உழைக்கிறது, உலகம் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு; அது மற்ற மதத்தை சேர்ந்தவர்களைவிட அதிக முஸ்லிம்களை இப்பிராந்தியத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. வேறுமாதிரி நினைத்தால் அது உண்மையைத் திரிப்பது ஆகும்.”
லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் கூறினார்: “இக்கொலையை இஸ்லாம் மதத்தின் மீது சுமத்துவது முற்றிலும் தவறானதாகும்; ஆனால் இக்கொலைக்கும் பிரித்தானிய வெளியுறவுக் கொள்கைக்கும் அல்லது பிரித்தானியப் படைகளின் செயல்களுக்கும் இடையே பிணைப்பைக் காண்பதும் அதேவகையில் தவறாகும்; படையினர் தங்கள் உயிரைக் கொடுத்து சுதந்திரத்திற்காக பிற நாடுகளில் செயல்படுகின்றனர்.”
“இக்குற்றம் முற்றிலும், பிரத்தியேகமாக அதைச் செய்தவர்களுடைய மறைந்துள்ள, சிதைக்கப்பட்டுள்ள மனங்களில்தான் உள்ளது.”
“இத்தகைய அறிக்கைகள் எவரையும் நம்பவைக்கவில்லை. வுல்விச்சில் நடந்த கொடூர நிகழ்வுகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலான இராணுவச் செயல்களுக்கு ஒரு பதிலடி; நிகழ்வுகள் நூறாயிரக்கணக்கானவர்களை கொன்றுள்ளது, முழு நாடுகள் அழிக்கப்பட்டுள்ளன, தெற்கு லண்டனில் காணப்பட்டதைவிட குறைவற்ற மிருகத்தனச் செயல்களை அந்நாடுகள் கண்டுள்ளன.
இத்தகைய குற்றம் நிறைந்த வன்முறையுடன் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என அழைக்கப்படுவதின் ஒரு பகுதியாக, முறையான தவறுகள் உடைய ஒரு பகுதியாக குறிப்பாக முஸ்லிம்கள் இலக்கு கொள்ளப்படுகின்றனர்—இதில் கடத்தல்கள், விசாரணையின்றிக் காவலில் வைத்தல், பிரித்தானியா, அமெரிக்கா ஆகியவை நடத்தும் சித்திரவதை ஆகியவை அடங்கும்.
அடெபோலஜோ மற்றும் அவருடைய உடந்தையாளரின் செயல்கள் “பயங்கரவாதம்” என விவரிக்கப்படுகின்றன. ஆயினும்கூட சிரியாவில் இதே மாதிரியான சிந்தனைப்போக்கு, அரசியல் கருத்து உடைய சக்திகள் “சுதந்திரத்திற்காக போரிடுபவர்கள்” எனப் பாராட்டப்படுகின்றனர், குறுங்குழுவாத கொடுமைகளை இழைப்பதற்கு நிதியங்களும் ஆயுதங்களும் கொடுக்கப்படுகின்றனர்; இதையொட்டி ஏகாதிபத்திய சக்திகளின் கொள்ளைமுறை வடிவமைப்புக்கள் பெருகுகின்றன.
உலகெங்கிலும் மிருகத்தன அரச வன்முறை வாடிக்கையாகி விட்ட ஆண்டுகளில் இத்தகைய நபர்களின் பார்வை நச்சுப்பிடித்துக் கனிந்துள்ளன. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தன் குற்றங்களைக் குறைவின்றி தொடர்வதற்காக அவர்களுடைய செயல்கள் விளங்க முடியாதவை என்று அறிவிக்கப்படுகின்றன.
இந்த இலக்கை ஒட்டி செய்தி ஊடகம் கொலையை எதிர்கொள்கையில் நாடு இராணுவத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோருகிறது. சன் பத்திரிகை தலையங்கமாக, “நேற்று ஒரு இளைஞர் கொடூரமாக நாட்டிற்குப்பணி புரிந்ததற்காக கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று நாம் தீவிரவாதிகளை மீறி, நம் ஆயுதப்படையுடன் தோளோடு தோள் உராய்ந்து நிற்கவேண்டும்” என்று எழுதியுள்ளது.
தொழிற் கட்சியின் நிழல் பாதுகாப்பு மந்திரி ஜிம் மர்பி “முழு ஆதரவையும்” அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் உறுதியளித்து, ஆயுதப்படைகள் குறித்துக் கூறினார்: “அவர்கள் நம்மைக் காக்கிறார்கள், இன்று நாம் ஒவ்வொருவரும் உரத்த ஆதரவுத் தகவலை அளிக்க வேண்டும், நன்றியை அனைத்து படையினருக்கும், நம் சிறுநகரங்கள், நகரங்கள், உள்ளூர், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.”
சிப்பாய்கள் பொது இடங்களில் தங்கள் சீருடையை “எச்சரிக்கை கருதி” மறைவாக வைத்துக் கொள்ள வேண்டும் என கொலையை தொடர்ந்து உடனடியாக பாதுகாப்பு அமைச்சரகத்தால் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. COBRA கூட்டத்தில் காமெரோன் தானே அந்த முடிவைத் திரும்பப் பெற ஒப்புதல் கொடுத்து, சிப்பாய்கள் பொது இடங்களில் தங்கள் சீருடைகளை அணியலாம் என்று கூறினார்.
இதேபோல்தான் உடனடியாக, உறுதியாக, பயங்கரவாதத்திற்கு எதிராக என்ற பெயரில், நிறைய ஜனநாயக விரோத சட்டங்கள் வலுப்படுத்தப்படும். முன்னாள் தொழிற் கட்சி உள்துறை மந்திரி ரீட் பிரபு உடனடியாக தகவல் தொடர்பு சட்ட வரைவை இயற்ற வேண்டும் என்று கோரினார். இந்தச் சட்ட வரைவு, உள்நாட்டுத்துறை மந்திரிக்கு, ஒரு குடிமகன் பற்றிய எத்தகவலையும் குறிப்பிட்ட நோக்கம் இன்றி தக்கவைத்துக் கொள்ளும் அதிகாரத்தை கொடுக்கிறது. இந்த நடவடிக்கைகள் நீதித்துறையின் பரிசீலனைக்கு உட்படாது, அனைத்துவகை தொடர்பிற்கும் பொருந்தும், அனுப்பப்படும் தகவல்கள், ஆன்லைன் சமூகச் செய்தி ஊடகம், தொலைபேசி உரைகள் என. ரீட்டின் கோரிக்கை கார்லைல் பிரபு, லிபரல் டெமக்ராட்டாலும் எதிரொலிக்கப்பட்டது; அவர் முன்னாள் அரச பயங்கரவாத எதிர்ப்பு பரிசீலனையாளர் ஆவார்.
ஆப்கானிஸ்தான், ஈராக் போர்களுக்கு பதிலடியாக ஐக்கிய இராச்சியத்தின் இராணுவ சிப்பாய் லண்டனில் கொல்லப்பட்டார். By Robert Stevens
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results
0 comments
Write Down Your Responses