பௌத்தர்கள் வெசாக் பண்டிகை கொண்டாடும் வேளையில் பௌத்த பிக்கு தனக்கு தானே தீ வைத்த சம்பவம் கண்டியில்!
கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம்பெறும் மற்றும் பரிநிர்வாணம் அடைதலை குறிக்கும் வெசாக் பண்டிகை உலகெங்கிலுமுள்ள பௌத்தர்கள் இன்றைய தினம் கொண்டாடும் இவ்வேளையில் அருகில் பௌத்த பிக்கு ஒருவர் கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
மிருகவதை, மாடுகளை கொலைக செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பிக்கு தனக்கு தானே பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பௌத்த பிக்கு கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments
Write Down Your Responses