செனல் 4 அலைவரிசை மேற்கொண்ட மற்றுமொரு முயற்சி தோல்வியில்!

சர்வதேச ரீதியில் இலங்கை படையினரை அபகீர்த்திக்குள்ளாக்க செனல் 4 அலைவரிசை மேற்கொண்ட மற்றுமொரு முயற்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தோல்வியை தழுவியது. ஐரோப்பிய பாராளுமன்ற விசேட அமர்வில் செனல் 4 அலைவரிசையினால் தயாரிக்கப்பட்ட "நோ பயர் ஷோன் த கிளிங் பீல்ஸ்", ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதன் போது இதற்கு பதிலளித்த ஐரோப்பிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான இலங்கை தூதுவர் பி.எம். ஹம்சா இக்காணொளியின் நம்பகத்தன்மை பற்றி விளக்கமளித்தார்.

எம்னஸ்ட் இன்டர்நெஷனல், மனித உரிமை காப்பகம், இண்டர்நெஷனல் க்ரைஸிஸ் குருப் ஆகிய சர்வதேச அமைப்புக்கள் இணைந்து இவ்விசேட அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. இக்காணொளியில் தமிழில் சாட்சியமளித்துள்ள விடயங்கள் செனல் 4 அலைவரிசையின் தயாரிப்பாளர்களின் தேவைக்கேற்ப மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தமிழில் வழங்கிய வாக்குமூலங்கள் முழுமையாக திரிபுபடுத்தப்பட்டு செனல் 4 இன் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க இலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பி.எம். ஹம்சா சுட்டிக்காட்டினார்.

இவ் காணொளியில் தொடர்நதும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதாக சாட்சியொருவர் வழங்கிய தகவல் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த போதும், அவ்வாக்குமூலத்தை வழங்கிய நபர் "எட்டெக்" அல்லது அவர்கள் தாக்கினார்கள் என்றே தமிழில் தெரிவித்துள்ளதாக இலங்கை தூதுவர் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

தமிழை தாய் மொழியாக கொண்ட தமக்கு இக்காணொளியில் திரிபுபடுத்தப்பட்டுள்ள வாக்குமூலங்கள் தொடர்பில் பொறுப்புடன் காரணங்களை முன்வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இது போன்று காணொளி முழுதும் சாட்சிகள் வழங்கும் வாக்குமூலம் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னரும் செனல் 4 அலைவரிசையினால் தயாரிக்கப்பட்ட காணொளிகளும் இவ்வாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் ஹம்சா தெரிவித்துள்ளார். எல்.ரி.ரீ.ஈ அமைப்பின் தலைவரான பிரபாகரனின் 12 வயது புதல்வனின் கொலை தொடர்பாக செனல் 4 வெளியிட்ட மற்றுமொரு போலி பிரசாரங்களும் அனைவரின் அவதானத்தை பெற்றுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை தூதுவர் இக்கொலையை இலங்கை படைகளே செய்தன என்பதற்கான தடயங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இக்காணொளியில் நிர்க்கதியான தமிழ் பெண்கள் டிராக்டர் ஒன்றில் பயணம் செய்யும் 20 வினாடிகள் கொண்ட காட்சி ஒன்றும் காணப்படுவதுடன் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல்.ரி.ரீ.ஈ உறுப்பினர்கள் 12 ஆயிரம் தொடர்பில் செனல் 4 காணொளியில் எவ்வித பதிவுகளும் இல்லை எனவும் தூதுவர் ஹம்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இலங்கையில் எவ்வித பீதியுமினறி வாழும் எல்.ரி.ரீ.ஈ இன் முன்னாள் சிறுவர் போராளிகள் தொடர்பான எவ்வித பதிவுகளும் இல்லை. எல்.ரி.ரீ.ஈ இயக்கம். சர்வதேச யுத்த சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளை மீறும் வகையில் பலாத்காரமாக கடத்தி சென்ற 594 சிறுவர் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகவயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹம்சா ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் தெரிந்த அனைவருக்கும் செனல் 4 இன் மோசடிகளை தெளிவாக அறிந்து கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News