புலி ஆதரவு ஏஜென்டுகளுடன் இணைந்து ஐ.தே.கட்சியும் அதன் தலைவர் ரணிலும் செய்யும் சதி அம்பலமாம்! - ITN

பிரட்ரிக் நியூமன் மன்றமும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து நாட்டுக்கு எதிராக முன்னெடுக்கும் சூழ்ச்சிகள் தொடர்பான ஆதாரங்களுடன் பல்வேறு தகவல்கள் தொடர்ந்தும் அம்பலத்திற்கு வந்த வண்ணமுள்ளன என சுயாதீன தொலைக்காட்சி-ITN செய்தி வெளியிட்டுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப, புலி ஆதரவு ஏஜென்டுகளுடன் இணைந்து நாட்டை தாரைவார்க்கும் திட்டத்திற்காக மேற்கொள்ளும் சூழ்ச்சிகள் தொடர்பாக, நாம் முழு நாட்டுக்கும் அம்பலப்படுத்தி வருகின்றோம்.

ஜேர்மனியிலிருந்து செயற்ப்படும் பிரட்ரிக் நியூமன் மன்றத்தின் இலங்கை அலுவலகம், இலக்கம் 51, பான்ஸ் பிளேஸ், கொழும்பு 7 இல் அமைந்துள்ளது. இலங்கை பிரதிநிதியாக சாகரிகா தெல்கொட என்பவர், செயற்படுகின்றார். இங்கு மூன்று ஊழியர்கள் உள்ளனர். கணக்குகள், சாகரிகா தெல்கொடவின் சகோதரியின் பெயரில் காணப்படுகின்றன. அரச சார்ப்பற்ற அமைப்பாக செயற்படும் பிரட்ரிகா நியூமன் மன்றத்தின் நோக்கம், தற்போது தெளிவாகியுள்ளது. நாட்டுக்கும், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் சேவையாற்றுவது அன்றி, அவர்களது அடிப்படை நோக்கமாக இருப்பது, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து, எல்.ரி.ரி.ஈ புலம் பெயர் தமிழர்களின் நோக்கங்களுக்கு எற்ப, புலி ஆதரவாளர்களின் அரசாங்கமொன்றை இலங்கையில் உருவாக்குவதாகும்.

அவர்கள் இதற்கென, ஐக்கிய தேசியக் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். நாம், சான்றுகளுடனேயே இவ்விடயத்தை அம்பலப்படுத்துகின்றோம். இந்த நடவடிக்கையின் ஆரம்பத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. ஒருபோது சமூக, ஜனநாயக வாதியாக தன்னை அறிமுகப்படுத்திககொள்ளும் ரணில் விக்ரமசிங்க, மற்றொரு சந்தர்ப்பத்தில் தன்னை லிபரல் வாதியாகவும் அறிமுகப்படுத்தி, இரட்டை வேடம் தரித்த அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகின்றார்.

பிரட்ரிக் நியூமன் மன்றமும், ஜேர்மன் லிபரல் கட்சியும் நேரடி தொடர்பு வைத்திருக்கும் ஓர் அரச சார்ப்பற்ற அமைப்பாகும். சமூக ஜனநாயக வாதியாக கட்சிக்கொள்கைகளை மாற்றியமைப்பதாக கூறிக்கொள்ளும் ரணில் விக்ரமசிங்க, 2005ம் ஆண்டு அரசியல் மற்றும் தர்ம புத்தகத்தை, நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் முழு அச்சக செலவையும், பிரட்ரிக் நியூமன் மன்றமே ஏற்றுள்ளது. முதலாவது வெளியீட்டில் 27 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இது 60 ரூபாவிற்கு விற்கப்பட்டுள்ளது. இரண்டவாது வெளியீட்டின்போது பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இது 2009ம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. இரண்டு முறை அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளும் விற்பனையாகியுள்ளதாக, அறியக்கிடைக்கிறது. கிடைத்த பணம், யார் கையில் சென்றது என்பது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியாது. அதனை ரணில் விக்ரமசிங்க மட்டுமே அறிந்து வைத்துள்ளார். நியூமன் மன்றத்தினால் ரணில் விக்ரமசிங்கவிற்கு பல லட்சம் ரூபா பணம் கிடைத்து வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியினரே குற்றம் சாட்டியுள்ளனர்.

ரணில் அணியின் முக்கியஸ்தர்கள் பலர், பிரட்ரிக் நியூமன் மன்றத்தில் சாகரிகா தெல்கொடவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அவர்களுள் ரவி கருணாநாயக, மங்களம சமரவீர, எரான் விக்ரமரட்ன, ஹர்ஷ டி சில்வா, ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர், முக்கியத்துவம் பெறுகின்றனர். ரணில் விக்ரமசிங்கவின் பிரட்ரிக் நியுமன் மற்றும் பல அரச சார்ப்பற்ற அமைப்புகளின் பிரதிநிதியாக அவருக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரட்னாயக செயற்படுகின்றார். அரசாங்கத்தை கவிழ்த்து, மேற்கு நாடுகளின் கைபொம்மையாக செயற்படும் புலி ஆதரவு அரசாங்கமான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதே, இவர்களது அடிப்படை நோக்கமாகவுள்ளது. இதற்காக சாகரிகா தெல்கொட, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுப்புகளையும் நடாத்தியுள்ளார்.

ஜேர்மனியில் லிபரல் வாத உரைகளையும் நிகழ்த்தியுள்ளார். 2010ம் ஆண்டு பாராளுமன்றம் பிரவேசித்த உறுப்பினர்களுக்கு, அவ்வாண்டு ஜூன் மாதம் 11ம் திகதியும், 12ம் திகதியும், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் வதிவிட செயற்பட்டறை யொன்றை, களுத்துறை காணி லங்கா ஹொட்டேலில் நடாத்தியுள்ளது. கடந்த 14ம், 15ம் திகதிகளில், இரண்டு செயற்பட்டறைகள் நடாத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், இது நடாத்தப்பட்டுள்ளது. நகர பிதா ஏ.ஜே.எம். முஸம்மில், இந்த செயற்பட்டறையை நடாத்த மறுத்த போதிலும், நகர பிதாவின் உத்தியோகபூர்வ இல்லம், அரசாங்க சொத்து என்பதை அறிந்து கொண்டே, விக்ரமசிங்க பலாத்காரமாக இந்த செயற்பட்டறையை, நகர பிதாவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடாத்தியுள்ளார்.

ஜேர்மனியின் லிபரல் வாத ஓரினச் சேர்க்கையாளர்களையும், இந்த உரைகளை நிகழ்த்துவதற்கு, இவ்வாண்டு முழுவதும் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக, தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரட்ரிக் நியுமன் மன்றத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி உறவுகளை நடாத்தி வரும் அதேவேளை, பாக்கியசோதி சரவணமுத்துவின் புலி ஆதரவான மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், நேரடி தொடர்புகளை வைத்துள்ளது. மேலும் நாட்டுக்கு எதிரான அரச சார்ப்பற்ற பல்வேறு அமைப்புகள், பிரட்ரிக் நியூமன் மன்றத்துடனும், சாகரிகா தெல்கொடவுடனும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடனும் தொடர்புகளை வைத்து, நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஸ்தாபனத்தின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையுடனும், பிரட்ரிகா நியூமன் மன்றம் தொடர்புகளை வைத்துள்ளதாக, தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டிலும், பிரட்ரிக் நியூமன் மன்றம், முக்கிய பணியாற்றியுள்ளதாக, குற்றம் சாட்டப்படுகின்றது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், வதந்திகள் முன்னணியின் ஸ்தாபகராக கருதப்படும் மங்கள சமரவீரவின், அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் எதிரான வதந்திகள் திட்டத்திற்கும், பிரட்ரிகா நியூமன் மன்றம், நிதி உதவி அளித்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வமைப்புடன் மேலும் பல அரச சார்ப்பற்ற அமைப்புகள், எல்.ரி.ரி.ஈ புலம் பெயர் தமிழர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு செயற்பட்டு வருவதாக, தெரியவந்துள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சியையும், இலட்சினையையும் விற்பனை செய்த ஷர்மிளா பெரேரா என்பவர், இங்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷர்மிளா பெரேரா, ஜனநாயகம் மற்றும் தலைமைத்துவத்திற்கான நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். அவர் ரவி கருணாநாயகவின் அரசியல் ஊழியராகவும் செயற்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, வெளிநாட்டு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பபையும், சாகரிகா தெல்கொட ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்காக இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பை கூடுதலாக பெற்றுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி அந்தரங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எல்.ரி.ரி.ஈ புலம் பெயர் தமிழர்களின் தேவைக்கும், நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்தியினதும் தேவைக்கு, மக்கள் மயமான அரசாங்கத்தை சூழ்ச்சிகாரமாக கவிழ்த்து, புலி ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை நாட்டில் உருவாக்குவதே, பிரட்ரிக் நியுமன் மன்றத்தின் அடிப்படை நோக்கமாகும். இதற்காக பிரட்ரிக் நியுமன் மன்றமும், ஐக்கிய தேசியக் கட்சியும், மேலும் அரச சார்ப்பற்ற அமைப்புகளும் முன்னெடுத்து செல்லும் நடவடிக்கைகளுக்கு எதிரகா உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயகத்தின் அலைவரிசை என்ற வகையில், தாயகத்திற்கு எதிராக செயற்படும் பிரட்ரிக் நியுமன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்ச்சிகளை நாம் தொடர்ந்தும் அம்பலத்திற்கு கொண்டு வருவோம். இதற்காக எமக்கு பல துறைகளிலிருந்து தகவல்கள் கிடைத்து வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், இதில் முன்னணி வகிக்கின்றனர் என்பதை நாம் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம். மரண அச்சுறுத்தல்கள் வந்த போதிலும், நாம் இந்த தாரை வார்ப்பை, உங்களுக்கு அம்பலப்படுத்துவோம். இது தாயகத்தின் மீது பற்றுவைத்துள்ள அனைவரது பொறுப்பாகுமென்பதை, கருத்திற்கொண்டு, நாம் இப்பணியை முன்னெடுப்போம் என சுயாதீன தொலைக்காட்சி தெரிவித்துள்ளது

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News