பெப்ரவரியில் மீண்டும் பரீட்சை!
இந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் காலநிலை சீற்றத்தால் தோற்ற முடியாது போன கணிதம் மற்றும் அழகியற்கலை பாடங்களுக்கான விசேட பரீட்சைகள் பெப்ரவரியில் நடாத்ததிட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இந்த விசேட பரீட்சை எதிர்வரும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டதுடன் பரீட்சைக்காலத்தில் நாட்டின் பல பாகங்களிலும் காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சிலமாணவர்களால் குறித்ததினத்தில் சில பரீட்சைகளுக்கு முகங் கொடுக்கவில்லை என்பதன் காரணமாகவே இவ் விசேட பரீட்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.



0 comments
Write Down Your Responses