இலங்கை கடற்பகுதிக்குள்ளாக அத்துமீறி நுழைந்த 27 இந்திய மீனவர்கள் கைது
இலங்கைக் கடற்பகுதிக்குள்ளாக அத்துமீறி நுழைந்து கடலில் மீன்பிடித்த இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோஷல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்
கைதுசெய்யப்பட்ட இம்மீனவர்கள் இன்று திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


0 comments
Write Down Your Responses