“ஐரோப்பா முழுவதிலும் இன்னும் கூடுதலாக 15 முதல் 25 மில்லியன் மக்கள் 2025 ஐ ஒட்டி வறுமையில் வாழும் எதிர்காலத்தை எதிர்நோக்கலாம்” என்று ஆக்ஸ்பாம் வளர்ச்சி அறக்கட்டளை கூறுகிறது. ஓர் அறிக்கையில், “ஒரு எச்சரிப்புக் கதை— ஐரோப்பாவில் சிக்கனம் மற்றும் சமத்துவமின்மை உடைய உண்மைச் செலவு” என்பதில் அறிக்கை அப்பட்டமாக “ஐரோப்பா இழந்துவிட்ட ஒரு தசாப்தத்தை எதிர்கொள்கிறது” எனக் கூறுகிறது.2008 ஆண்டு நிதிய நெருக்கடிக்குப் பின் ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகள் விளைந்துள்ளன; ஆளும் உயரடுக்கு, வங்கிகளை பிணை எடுத்ததின் செலவை தொழிலாளர்களை கொடுக்குமாறு செய்துள்ளதின் விளைவுதான் இது. இந்த அறிக்கையானது “ஐரோப்பிய நாடுகளில் சிக்கனத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலவற்றில் மிக அதிக செல்வம் படைத்தவர்கள் தங்களுடைய வருமானம் உயர்வதையும், மிக வறியவர்கள் தங்களுடைய வருமானங்கள் சரிவதையும் கண்டனர்” என்று குறிப்பிடுகிறது.
ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையில் செயற்படுத்தும் நடவடிக்கைகள் “இலத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் துணை சஹாரா ஆபிரிக்காவில் 1980 மற்றும் 1990களில் சுமத்தப்பட்ட அழிவு கொடுத்த கட்டமைப்பு சீரமைப்புக் கொள்கைகளுடன் பெரிதும் ஒத்துள்ளன. இக்கொள்கைகள் தோல்வி அடைந்தவை: நோயாளியை கொல்வதன் மூலம், நோயை குணப்படுத்த முயன்ற மருந்தைப் போன்றது. இவை மீண்டும் நடைபெற அனுமதிக்கப்படக்கூடாது.”
வெட்டுக்களின் அளவுகள் பற்றி அது உதாரணங்களைக் கொடுத்துள்ளது: “2010ல் இருந்து 2014 வரை மொத்த பொதுச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அயர்லாந்தில் 40% வெட்டப்பட்டிருக்கிறது, பால்டிக் நாடுகளில் 20%, ஸ்பெயினில் 12% மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் 11.5% வெட்டப்பட்டிருக்கிறது.” அறிக்கை ஐக்கிய இராச்சியத்தில் 2010ல் இருந்து 2018 க்குள் 1.1 மில்லியன் பொதுத்துறை ஊழியர்கள் அகற்றப்பட்டிருப்பார்கள் என்றும் கூறுகிறது.
சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன; அறிக்கை குறிப்பிடுகிறது: “2010ல் ஐரோப்பாவில் சுகாதாரத்திற்கு செலவு செய்யப்பட்டது பல தசாப்தங்களில் முதல் தடவையாக குறைந்ததாகப் பதிவாயிற்று. அயர்லாந்திலும், கிரேக்கத்திலும் செலவுகளில் வெட்டுக்கள் 6% ஐ கடந்துள்ளன, ஒரு தசாப்த வளர்ச்சியை திருப்பிவிடும் வகையில்.”
வேலையின்மை விகிதங்கள், நீண்ட கால வேலையின்மை, இளைஞர் வேலையின்மை ஆகியவை 2000 லிருந்து மிக அதிக அளவில் உள்ளன: “ஸ்பெயின், கிரேக்கத்தில், வேலையின்மை 24% என 2007 இல் இருந்து 2012 க்குள் மும்மடங்கு ஆயிற்று.... அயர்லாந்து, கிரேக்கம் மற்றும் ஸ்பெயினில் நீண்டகால வேலையின்மை விகிதம் 2008க்கும் 2012க்கும் இடையே 4 மடங்கு உயர்ந்துள்ளது. இது ஐரோப்பாவில் நீண்டகால வேலையில்லா மக்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாதவர் எண்ணிக்கையைப் போல் பாதி அதிகமாகும். இளைஞர் வேலையின்மை போர்த்துக்கல்லில் குறிப்பாக 42% அதிகமாகும். ஸ்பெயினில் 56% மற்றும் கிரேக்கத்தில் 59% -- இவைகள் 2008ல் பதிவு செய்யப்பட்டதை விட இரு மடங்கு அதிகமாகும்.” இத்தாலியில் இளைஞர் வேலையின்மை கிட்டத்தட்ட 40% ஆகும்.
இந்த நெருக்கடியில் மறைந்துள்ள சமூகச் செலவு குறைத்துமதிப்பிடப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது; உதாரணமாக பல தனிப் பெற்றோர்கள் “வீட்டை உஷ்ணமாக வைத்திருப்பதற்கும், குடும்பத்திற்கு சீரான உணவை அளிப்பதற்கும் இடையே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையை எதிர்கொள்கின்றனர்.” உணவு உதவி மற்றும் பொதுவான சமூக ஆதரவிற்கான கோரிக்கைகள் 2012ன் முதல் பகுதியில் இரு மடங்காகிவிட்டன.
“லிஸ்பனில் மருந்தகங்களில் கிட்டத்தட்ட 20% வாடிக்கையாளர்கள் (பெரும்பாலும் பெண்கள், வேலையற்றோர், வயதானவர்கள்) மருந்துப் பட்டியலில் உள்ள முழு மருந்தையும் செலவைக் கணக்கில் கொண்டு வாங்குவதில்லை. பலரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.”
சிக்கன நடவடிக்கைகளின் முக்கிய இலக்கு, பொது நலச் செலவுகளைக் குறைப்பதாகும். உதாரணமாக ஐக்கிய இராச்சியத்தில் செலவுக் குறைப்புக்களுக்கும் வரி அதிகரிப்புக்களுக்கும் இடையேயுள்ள விகிதம் 85:15 ஆகும். வரி விதிப்புகளில் பல, வறியவர்கள் மீது விகிதத்திற்கு அதிகமானவையாகும். மதிப்புக் கூட்டுவரி (VAT) பல ஐரோப்பிய நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒரு கட்டாயமான வரியாகும், ஏனெனில் தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்களுடைய வருமானத்தின் பெரும்பகுதியை மதிப்புக்கூட்டு வரிக்குச் செலவிடுகின்றனர். இதற்கு மாறாக, “ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றிற்கு 1 டிரில்லியன் யூரோக்களை வரித் தவிர்ப்பு, ஏய்ப்புக்களில் இழக்கின்றன. ஒப்பீட்டளவில் செல்வத்தின் மீது அதிக புதிய வரிகளும் இல்லை.”
ஆக்ஸ்பாம் அறிக்கையானது இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), உலகப் பணி அறிக்கையை தயாரிப்பு செய்ததையும் குறிப்பிடுகிறது. அதில் “அநேகமாக எல்லா இடங்களிலும், இளைஞர்கள்.... தங்கள் திறமைகளின் விழைவுகளுக்கு ஏற்றவாறு வேலை கிடைப்பதில் கடினத்தை உணர்கின்றனர்.... இது வரவிருக்கும் பல ஆண்டுகளில் முக்கிய உலகச் சவாலாக இருக்கும்.... சமூக அமைதியின்மை என்னும் இடர் பல பிராந்தியங்களில் உள்ளது” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு ஆக்ஸ்பாம் ஒப்புதல் கொடுத்து, உழைக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக விளக்கியுள்ளது. “ஐரோப்பாவில் இப்பொழுது 10 உழைக்கும் வீடுகளில் ஒன்று வறுமையில் உள்ளது... சைப்ரஸ், அயர்லாந்து, இத்தாலி ஒவ்வொன்றும் உழைக்கும் வறியோர் விகிதங்களை மிக அதிகமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கண்டுள்ளன. தொழிலாளர்கள் பெருகிய முறையில் தங்களுக்கு கிடைக்கும் வேலைகள் பாதுகாப்பற்றவை அல்லது அவர்களுடைய தேவைகளைவிட மிகவும் குறைந்தவை எனக் காண்கின்றனர்.”
கண்டம் முழுவதும் ஊதியங்கள் சரிகின்றன, “ஆக்கிரோஷ செலவுக் குறைப்புக்களை செயற்படுத்தும் நாடுகளில் மிக விரைவாக சரிகின்றன; இது மக்களை உயரும் விலையை சமாளிப்பதைக் கடினமாக்கிவிட்டது.” உண்மை ஊதியங்களின் வீழ்ச்சி இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளன, கிரேக்கத்தில் 10% க்கும் மேற்பட்ட சரிவு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலும் போர்த்துக்கல்லிலும் உண்மை ஊதியங்கள் 3% க்கும் மேலாகக் குறைந்துவிட்டன; ஐக்கிய இராச்சியத்தில் நிலைமை இப்பொழுது 2003 மட்டங்களைக் கொண்டுள்ளது.
சிக்கன நடவடிக்கைகள், ஐரோப்பாவிற்குள் சமத்துவமின்மை மட்டங்களுள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொடுத்துள்ளன. சமத்துவமின்மை அதிகம் என்பது 2008 நெருக்கடிக்கு முன்பே இருந்தது; போர்த்துக்கல் மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டும் OECD நாடுகளிலேயே மிக அதிக சமத்துவமற்ற நாடுகள் என அறிக்கை கூறுகிறது.
எனினும் அறிக்கை குறிப்பிடுகிறது, “சிக்கன நடவடிக்கை, ஏற்கனவே சமத்துவமற்ற தன்மையின் அதிகரிப்பை விரைவுபடுத்தி, கடந்த 30 ஆண்டுகளாக OECD நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளின் வரலாற்றுரீதியான தாக்கம் சமத்துவமற்ற தன்மையில் இருப்பதை பிரதிபலிக்கிறது. போர்த்துக்கல், கிரேக்கம் மற்றும் இத்தாலி ஆகியவை தங்கள் நிகர வருமான சமத்துவமின்மை, 2010-11ல் கிட்டத்தட்ட 1% புள்ளி எனக் கண்டுள்ளன. இந்த அதிகரிப்புக்கள் பொருளாதார உயரடுக்குளின் ஆதாயங்களில் சிக்கன நடவடிக்கைகளின் நேரடி விளைவாகப் பிரதிபலிக்கின்றன... மிக அதிக செல்வம் படைத்தவர்கள் மொத்த வருமானத்தில் தங்களுடைய பங்கு அதிகரித்துள்ளதைக் காண்கின்றனர், வறியவர்கள் தங்களுடையது சரிந்துவிட்டதைக் காண்கின்றனர்.”
ஐரோப்பிய ஒன்றியத்தின் செல்வச் செழிப்பு அதிகமுடைய 10% மக்கள் அதனுடைய வருமானத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியைப் பெறுகின்றனர். வறிய 10 சதவிகிதத்தினர் 3% ஐத்தான் பெறுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் 10 செல்வச் செழிப்புடைய மக்கள், கிட்டத்தட்ட 220 பில்லியன் மொத்த வருமானம் கொண்டுள்ளனர்—இது 2008-2010ல் ஐரோப்பிய ஒன்றியம் “ஊக்க நடவடிக்கைகளுக்கு” செலவழித்த 200 பில்லியன் யூரோக்களைவிட அதிகமாகும்.
2011ல் 120 மில்லியனுக்கும் மேலானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர், வறுமை அல்லது சமூகத்திலிருந்து விலக்கப்படல் என்ற இடரில் இருந்தனர்; இந்த எண்ணிக்கை இன்று அதிகமாகித்தான் போயிருக்க முடியும்.
ஐரோப்பாவில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புச் சீரமைப்புத் திட்டங்களின் (Structural Adjustment Programmes - SAPs) பாதிப்பு சிக்கன நடவடிக்கைகள் இலத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, துணை சகாரா ஆபிரிக்காவில் இருந்தவற்றுடன் ஒப்பிடுகையில் எப்படி இருக்கும் என்பதையும் அறிக்கை கூறுகிறது. “சிக்கன நடவடிக்கைகளின் அழிக்கும் பாதிப்புத் திறன் பற்றிய ஒப்புமைகளையும் நாம் பற்றி எடுக்கலாம்.”
இலத்தீன் அமெரிக்காவில் 1980 மற்றும் 2000க்கும் இடைய கட்டமைப்புச் சீரமைப்பு திட்டங்களின் (SAP) விளைவுகள் பற்றிய விவரங்கள் எச்சரிக்கையை கொடுக்கின்றன: “பொதுச் செலவுகள் இல்லாமை, மற்றும் பல முக்கிய சமூக சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டதுடன் இணைந்து, முக்கிய சேவைகளுக்குக் கட்டணம் கொடுத்தல் என விளைந்துள்ளது; இது பலருடைய வசதிக்கு இயலாது எனப் போய்விட்டது.”
சிக்கன நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்கும் தாக்கங்களை கொண்டிருக்கும், 2025 இல் இன்னும் கூடுதலாக 15 முதல் 25 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வார்கள் என்று அறிக்கை கணிக்கிறது. “இந்நடவடிக்கைகள், அதிகாரத்தையும் செல்வத்தையும் சிலர் மட்டும் கொண்ட உயரடுக்கிற்குக் கொடுக்கும்; மில்லியன் கணக்கான இன்றைய இளைஞர்களிடமிருந்து திருடிவிடும்” என்று அது குறிப்பிடுகிறது.
ஆக்ஸ்பாம் அறிக்கையானது சிக்கன நடவடிக்கைகளின் தாக்கங்கள் குறித்த ஒரு பேரழிவு மதிப்பீடாகும். ஆனால் மாற்றீடு எதையும் முன்வைக்கவில்லை. அதன் அற்ப பரிந்துரைகளில் “ஜனநாயக வழிவகைகளில் கூடுதல் பங்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்றும் நிதியச் செயற்பாட்டின் மீது ஒரு வரி விதித்தலும் உள்ளன.
ஐக்கிய நாடுகள் அமையத்தின் முன்றலில் தீக்குளித்து இறந்த ஈழத் தமிழரான செந்தில் குமரன் இரத்தினசிங்கம் என்பவர் தமிழீழ விடுதலை போராட்டத்துக்கு ஆதரவாக தீக்குளித்தவரா? அல்லது தீபெத்திய போராட்டத்துக்கு ஆதரவளித்து தீக்குளித்தவரா? அல்லது குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்தவரா? என்பது இன்னும் கேள்விக் குறியாய் உள்ளது.தீக்குளித்து இறந்த செந்தில் குமரனின் மரணத்தையிட்டு பல விடயங்கள் மர்மமாகவுள்ளன… தீக்குளித்து இறந்த செந்தில்குமரனின் மரணச்செய்தியை … புலியாதரவு இணையத்தளங்கள் யாவும் ‘தமிழீழ விடுதலை போராட்டத்திற்காக’ தான் செந்தில்குமரன் தீக்குளித்து உயிர் நீத்ததாக பிரபல்யப்படுத்தி செய்தியை பிரசுரித்திருந்தன. பின்பு.., அதே இணையத்தளங்களிலிருந்த இச்செய்தி நீக்கப்பட்டு அல்லது செய்தி பின்தள்ளபட்டு அதாவது முக்கியத்துவம் கொடுக்காது விட்டதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இதிலிருந்து … செந்தில்குமரனின் மரணத்தில் எதோ மர்மம் இருப்பதை நாம் அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது.
இதில் முக்கியமான விடயம் என்னவெனில்…. இணையத்தளங்களில் காணப்படும் ‘மரண அறிவித்தல்’ பக்கத்தில் கூட இறந்த செந்தில்குமரன் இரத்தினசிங்கத்தின் மரணம் தொடர்பாக செய்தி எதுவும் இதுவரை பிரசுரிக்கப்படவில்லை என்பது தான் மிகவும் மர்மமாகவுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் எதுவும் புரிந்தோ, புரியாமலோ புலிகளின் சுவிஸ் கிளை இரங்கல் செய்தியை அவசரப்பட்டு அல்லது திட்டமிட்டு வெளியிட்டுள்ளது.செந்தில்குமரன் இரத்தினசிங்கம் ஐ.நா சபை முன்றலில் ஏன் தீக்குளித்தார், எப்படி தீக்குளித்தார் என்ற விடயங்கள் சம்பந்தமாக ஜெனிவா பொலிஸார் கூட இதுவரை எதுவுமே அறிந்து கொண்டிருக்காத நிலையில்…, புலியாதரவு இணையத்தளங்களோ செந்தில்குமரன் ‘தமிழீழ விடுதலை போராட்டத்திற்காக’ தான் தீக்குளித்து இறந்தார் என்றும், எப்படி தீக்குளித்து இறந்தார்? என்பது போன்ற விபரங்களுடன், அவர் இறந்த இடத்தில் தலைவர் பிரபாகரனின் படம் இருந்ததாகவும் ‘சத்தியம்’செய்யாத குறையாக புதினம் வெளியிட்டுள்ளார்கள்.
இறந்தவர் தன் கையில் பிரபாகரனின் படத்தை ‘பச்சை’ குத்தியிருந்தவர் என்றும் கூட செய்தியொன்றை பிரசுரித்திருந்தாலும் புலம் பெயர் தமிழ்சனம் நம்பத்தான் போகின்றது. அதனால் புலியாதரவு இணையங்கள் எப்படிப்பட்ட பொய்யையும் கக்கி செய்திகளாக வெளியிடலாம் என்பதை அறிந்தே வைத்துள்ளார்கள்.
சுவிஸிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் தீக்குளித்தவரின் பக்கத்தில் புலிசிப்பாய் ஒருவரின் படமும், அத்தோடு தீபெத்துக்காக தீக்குளித்தவர்களின் ஆவணங்களும் காணப்பட்டதாக தான் செய்தி வெளியிட்டுள்ளது.
(தீக்குளித்தவரின் பக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட ‘புலிசிப்பாயின் படம்’ பிரபாகரனின் படமென புலிப்பினாமி இணையதளங்களங்களில் செய்தி போட்டுள்ளார்கள். சிலநேரம் தீக்குளித்தவரின் பக்கத்தில் பிரபாகரனின் படத்தை கொண்டு போய் போட்டார்களோ தெரியவில்லை…??!!
(என்னதான்.., நீங்கள் தீக்குளித்தாலும் சரி, சுடுதண்ணியை அள்ளி குளித்தாலும் சரி இந்த புலிப் பயங்கரவாத போராட்டத்தை ஜ.நா. சபையினர்கள் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என ஐ.நா.மனிதவுரிமை ஆணையாளர் நவிநீதம்பிள்ளையே கூறியுள்ளார் என்பதை புலியாதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் ஈழத்தமிழர்களுக்காக யாராவது தங்கள் இன்னுயிர்களை காணிக்கையாக்கும் பொழுது.., புலியாதரவு சக்திகள் அவற்றுக்காக உரிமை கொண்டாடுவதென்பது ‘விழலுக்கு இறைத்த நீராக’ போகும் என்பதையும், இவ்வுயிர்களின் தியாகம் வீணடிக்கப்படும் என்பதையும் புலிசார்பு சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்)
மூன்று பிள்ளைக்காரன், 14 வயதில் சுவிஸ் வந்து, படித்து நல்ல நிலையில் இருந்த ஒருவரான செந்தில்குமரன் இரத்தின சிங்கம் தீக்குளித்து உயிரை மாய்பதற்கான காரணமென்ன? தலைவர் பிரபாகரன் இறந்ததிலிருந்து.. தலைவர் மீது அதீத பற்றுக்கொண்ட பலபேரின் மனோநிலை பாதிப்புக்குள்ளாகி, அவர்கள் சித்தப்பிரமை பிடித்து அலைவதாக நாம் அறிந்துள்ளோம். அந்தவகையில் செந்தில்குமரன் இரத்தினசிங்கமும் மனோநிலை பாதிப்புக்கு உள்ளாகியிருந்தவரா?
தீக்குளித்தவர் யார், அவர் எந்த நாட்டு பிரஜை, அவர் எந்த வதிவிடம், என்ன பெயர் என்பது போன்ற விபரங்கள் ஜெனிவா காவல்துறையினருக்கே தெரியாத நிலையில்…, தீக்குளித்தவர் சம்பந்தமான முழு விபரங்களும், படமும் புலிப்பினாமி (லங்காசிறி குழுமங்கள்) இணையத்தளங்களில் எப்படி வெளியாகின.? இந்த தீக்குளிப்பு சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா?
இச்சம்பவம் தொடர்பாக புலியாதரவு இணையத் தளங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் நாம் பார்க்கின்ற போது.., இது மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாக தான் தெரிகின்றது். புலிகள் அமைப்பை பற்றி கடுமையான தொனியில் விமர்சித்து ஜ.நா.சபை மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் கூறியதால் ஏற்பட்ட தாக்கத்தை திசைதிருப்பும் ஒரு நடவடிக்கைக்காக, புலிகள் திட்டமிட்டு செந்தில்குமரனை பலியாக்கினார்களா?
கடைசிக்கட்ட போர் நடைபெற்ற 2009 இல், இப்படித்தான் முருகதாசனையும் புலிகள் திட்டமிட்டு ஐநா முன்றலில் தீக்குளிக்க வைத்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது…
சரி விடயத்துக்கு வருவோம்.., தீக்குளித்தவர் உண்மையில் ஈழத் தமிழர்களின் போராட்டம் சார்பாக தீக்குளித்திருந்தால், இச்செய்திகளை பிரபல்யபடுத்தி பிரசுரித்த (லங்காசிறி) இணையத்தளங்கள், இச்செய்தியை தங்கள் இணையத் தளங்களிலிருந்து நீக்கியதன் அல்லது செய்தி பின்தள்ளபட்டு அதாவது முக்கியத்துவம் கொடுக்காது விட்டதன் பின்னணியென்ன?
பொலிஸாரின் விசாரணைகளுக்கு இவர்களும் உட்படுத்தப்பட்டுள்ளார்களா? (தீக்குளித்த செந்தில்குமரன் இரத்தின சிங்கம் சம்பந்தமாக செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்களிலிருந்து இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன என்பதை தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்)
தீக்குளித்த செந்தில்குமரன் இரத்தினசிங்கம் என்பவர் தமிழீழ விடுதலை போராட்டத்திற்காக தீக்குளித்தவர் என்றால், சாதரணமாக.. ஜ.நா.முன்றலில் ஒரு இரங்கல் கூட்டத்தையோ அல்லது அஞ்சலி கூட்டத்தையோ சுவிஸில் உள்ள புலிசார்பு அமைபப்புகள் நடத்தாமல் இதுவரை மௌனம் காப்பதேன்??:. எல்லாமே மர்மமாகவுள்ளது.. உண்மையில் என்ன நடந்தது என்பதை மிகவிரைவில் அறிந்து வாசகர்களுக்கு அறியத் தருவோம் என்பதை அறியத் தருகின்றோம்.
புலியாதரவு இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்ட செய்தியிது.. முதலில் இந்தச் செய்தியை வாசியுங்கள்.. பின்னர் செய்தியின் பின்னணியை பார்ப்போம்....
ஜெனிவாவில் சோகம். தமிழீழ விடுதலை போராட்ட நெருப்புக்கு தன் உடலைக் கொடுத்த செந்தில் குமரன்! நேரில் கண்ட சாட்சியம். ஜெனிவாவில் உள்ள தமிழர் கிருஷ்ணா வெளியிட்ட செய்தியில் கீழ் கண்டவாறு கூறப்பட்டிருந்தது.
சற்று முன் சில நண்பர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஐ. நா முன்றலில் அந்த தோழர் தீக்குளித்த இடத்தில் அவர் யார், இன்னார் என்ற அடையாளங்கள் ஏதும் அறியாமலே மலரஞ்சலி செலுத்தி விட்டு நின்றிருந்தோம். அருகே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரபு தேசத்து இளைஞர்கள் அதிகாலை நடந்த, தாங்கள் கண்ட, அந்த சம்பவத்தை எங்களிடம் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.
ஒரு மாநிறமான இளைஞன் இங்கே இரவு பன்னிரண்டு மணியில் இருந்து சுற்றிக் கொண்டு இருந்தான். சரியாக அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு பாட்டிலில் இருந்து அடர்த்தியான ஜெல்லி போன்ற திரவத்தை எடுத்து தன் மீது பூசிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கொளுத்தி கொண்டான்!
கொழுந்து விட்டு சுவாலையாக எரியும் போது எந்த சலனமும் இன்றி சில கோஷங்களை மட்டும் சொல்லிவிட்டு ஒரே இடத்தில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து முடித்து கீழே விழுந்தான். ஐநாவை சுற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் கமேண்டோக்கள் அவனை நெருங்கும் போது கீழே சாய்ந்து விட்டான்.
பின்னர் காவல் துறையினர் எங்களை விலக்கி விட்டு அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பையையும், காகிதங்களையும் எடுத்துகொண்டு எரிந்த அந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி சென்று விட்டார்கள். எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கி கொண்டு இருந்தார்கள்!
இதற்கு இடையில், சுவீஸ் காவல்துறை தீக்குளித்தவரின் உடலருகே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் இருந்தது உண்மைதான், ஆனால் இறந்தவர் திபெத்தியராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சில உள்ளூர் செய்தி ஏடுகளின் மூலம் எங்களை குழப்பிவிட்டு இருந்தது.
இவ்வாறு குழம்பிய நிலையில், அது யாராக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்க்கொடை செய்தவனுக்கு வீரவணக்கம் செய்வதில் தவறில்லை என்று மலரஞ்சலி செலுத்திவிட்டு அந்த இடத்தில் நின்றிருந்த போது, ஒரு தமிழ் இளைஞர் சற்று பதட்டத்துடன் காரில் வந்து இறங்கினார். அவருடன் அவர் மனைவி, மற்றும் ஒரு யுவதி மேலும் பிள்ளைகள் வந்திருந்தார்கள்! காரில் வந்து இறங்கிய இளைஞர் தன் மச்சினனை நேற்று இரவில் இருந்து காணவில்லை, காரில் இருக்கும் யுவதியின் கணவன்தான் அவன், வயது 34, அவன் தீவிர ஈழ உணர்வாளன். இங்கே ஒருவர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்து பக்கத்து மாகாணத்தில் இருந்து வருகிறோம். தீக்குளித்தவரை யாராவது பார்த்தீர்களா என்று எங்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் தன்னோடு கொண்டு வந்திருந்த அவருடைய மச்சினன் படத்தையும் நீட்டினார்!
நான் முன்பே இறந்த அந்த தோழரின் உடலை பார்த்து இருந்ததால், காரில் இருந்த இரு யுவதிகளின் தவிப்பையும் , குழந்தைகளின் ஏக்கத்தையும் பார்த்தவாரே, அவர் கொண்டு வந்திருந்த வீசா புகைப்படத்தை எட்டி பார்த்தேன், அதிர்ச்சி நெஞ்சில் இடியாய் இறங்கியது. அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கும் துணிவு என்னிடம் இருந்திருக்கவில்லை. ஆம், தமிழீழ விடுதலை போராட்ட தீக்கு தன்னுடலையும் தின்ன கொடுத்து விட்டான், செந்தில் குமரன்!!! —
சிவலோகநாதன் என்பவரால் திட்டமிட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு , ஒலிபரப்பிய பொய் கதைகளை கொஞ்சம் கேளுங்கள்.. (ஒலி வடிவம் இணைப்பு)
மேலே நீங்கள் வாசித்த, ஒலிப்பதிவில் கேட்ட செய்தியின் முக்கியமான விடயங்களை மட்டும் சற்று அலசி ஆராய்ந்து பார்ப்போம்…
// எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கி கொண்டு இருந்தார்கள்!// இப்படி… உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரபு தேசத்து இளைஞர்கள் ஜெனிவாவில் உள்ள தமிழர் கிருஷ்ணாவுக்கு சொன்னவர்களாம். அங்கு நின்ற அரபு தேசத்து இளைஞர்களுக்கு புலித்தலைவர்கள் யாரையாவது தெரியுமா? இதற்கு முதல் இராணுவ உடையில் தமிழ் தலைவர்கள் யாரையாவது பார்த்திருப்பார்கள் என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா? அல்லது புலிகள் அணியும் இராணுவ உடையின் நிறமாவது அவர்களுக்கு தெரிந்திருக்குமா? அரபு தேசத்து இளைஞர்கள் எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் ‘தமிழர்களின் தலைவர்’ ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று கிருஸ்ணாவுக்கு சொன்னதாக சொல்லுவது பச்சைப் பொய்யாகும்.//
//இதற்கு இடையில், சுவீஸ் காவல்துறை தீக்குளித்தவரின் உடலருகே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் இருந்தது உண்மைதான், ஆனால் இறந்தவர் திபெத்தியராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சில உள்ளூர் செய்தி ஏடுகளின் மூலம் எங்களை குழப்பிவிட்டு இருந்தது.// தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் தீக்குளித்தவரின் பக்கத்தில் இருந்ததாகவோ அல்லது இறந்தவர் தீபெத்தியர் என்றோ சுவிஸ் காவல்துறை எந்தவொரு ஊடகத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை என்பதோடு .., இறந்தவர் அடையாளம் தெரியாதவர் என்றே ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.. ( இதெல்லாம் இந்த புலிப்பினாமிகளின் கட்டுக்கதையாகும்.) இச்செய்திகளை பிரசுரித்த SWISS ஊடகங்களின் லிங்கை கீழே இணைத்துள்ளோம் நீங்களே அழுத்திப் பாருங்கள்…
http://www.24heures.ch/homme-s-immole-place-nations/story/12911413
இதைவிட பெரிய பகுடி இததான்.. இறந்த செந்தில்குமரன் தன் மனைவிக்கும் மச்சினனுக்கும் தெரியாமல் இரவில் எங்கோ காணாமல் போய் விட்டாராம்… அதனால.., காணமல் போனவரை பற்றி பொலிஸாரிடமும் கூட அறிவிக்காமல், அவர் எங்கு போனார்? என்று கூட தேடிப் பார்க்காமல், யாருக்காவது தெரிந்தவர்களுக்கு கூட ரெலிபோன் போட்டு விசாரிக்காமல்.., மனைவியும் மச்சினனும் விடியக்காலை எழும்பி பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு காரில் ஏறி நேராக ஜெனிவாவுக்கு வந்து.. ஐ.நா.சபைக்கு முன்னால் நின்ற கிருஸ்ணாவிடம் காணாமல் போனவரின் படத்தைக் காட்டி தீக்குளித்து இறந்தவர் எங்கட ஆளா? என்று பார்க்கும்படி கேட்டனராம்…
அவர் அந்தப் படத்தை பார்த்தவுடன் தீக்குளித்தவர் இவர் தான்.. இவர்தான்.. என அதிர்ச்சியுடன் சொன்னவராம். அப்படியானால்.., கணவர் தீக்குளிக்க ஜெனிவாவுக்கு போயுள்ளார் என்பது மனைவிக்கும், மச்சினனுக்கும் முன்பே தெரிந்திருக்கின்றது என்பது தான் இந்தக் கதையிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. அல்லது இப்படிபட்ட கதையொன்றை புலிப்பினாமிகள் புனைந்து தங்கள் சார்பு இணையங்களில் பிரசுரித்து புலிப்போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதற்கு முனைகின்றார்கள் என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
எது எப்படியாகினும் பொலிசாரின் விசாரணையில் எல்லா உண்மைகளும் மிகவிரைவில் வெளிவரும். அப்போது நடந்தவைகள் யாவை என்பன பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து கொள்ளலாம். அதுவரை பொறுத்திருங்கள்…
முக்கியமாக.. தீக்குளித்தவரின் மனைவி பிள்ளைகள், சகோதரங்கள், நன்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு இச்செய்தி துக்கத்தை தரலாம். ஆனால்.., இச்செய்தியானது இரு பகுதியினர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட செய்தியாக இருந்திருக்கும்.
முதலாவது பகுதி யார்: புலியாதரவு அமைப்புகள், புலியாதரவு ஊடகங்களுக்கு இப்படியான இழவுகள் ஒருவகையில் முக்கியமான நீயூஸ் தான். இப்படியான அவலமான இறப்புகளின் மூலம் கிடைக்கப் பெறும் ‘இரக்கத்தை’ மூலதனமாக முதலீடு செய்து தான் இனிவரும் காலங்களில் புலம்பெயர் புலிகளமைப்பினர்கள் புலியாதரவாளர்களின் ஆதரவை தேடிக் கொள்ளவும், தங்களின் பிழைப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொள்ள முடியும். அந்தவகையில் இப்படிப்பட்ட அவலமான இறப்புகளினால் பலனடைகின்றவர்கள் ஒரு சாரர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இரண்டாம் பகுதி யார்: யாராவது மரணமடைந்தால் சவப்பெட்டி கடைக்காரர்களுக்கு சந்தோசம் வருவதுபோல்…, ஈழத்தமிழர்களின் சார்பாக யார் தீக்குளித்து இறந்தாலும்.., அந்த அவல மரணத்தையிட்டு சந்தோசப்படக் கூடியவர், அந்த இறப்புக்கு உரிமை கோரக்கூடியவர், உடனடியாக இரங்கல் அறிக்கைவிட அல்லது வீரவணக்கம் தெரிவிக்க உரிமையுடையவர் ஒருவர் இருக்கின்றார்.
அவர் தான் எங்கட கோபால சாமியார்… நீங்கள் யாராவது தீக்குளித்து இறக்க விரும்புகிறீர்களா? உங்களின் மரணத்துக்கு கோபாலசாமியாரின் வாயால் ‘வீரவணக்கம் ’ தெரிவிக்கப்படும் என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கு அறியத் தருகின்றோம். கோபால சாமியார் உயிருடன் இருக்கும் வரைதான் இச்சலுகைகள் கிடைக்குமென்பதால்.., சலுகையை பெற்றுக் கொள்ள முந்துங்கள்.
கோபாலசாமியாரின் வாயால் ‘வீரவணக்கம் ’ பெறுவது என்ன சாதாரண விடயமா? தலைவரால் மாமனிதர் பட்டம் பெறுவதற்கு சமமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று சீமானின் திருமணவீடு நடக்கவிருக்கின்ற இந்நேரத்தில் இப்படியொரு, ஈழத்தமிழ் உணர்வாளன் ஒருவனின் அவலச்சாவு நடைபெற்றுள்ளதால், சீமான் தனது திருமணவீட்டு நிகழ்வை தள்ளி வைப்பார் என நாம் நம்புகின்றோம்.. (நடக்கின்ற கதையா??…)
(அப்படி நடந்தால்.., சீமான் உண்மையான தமிழ் உணர்வாளன், பற்றாளன் தான் என்பதை உலகத்தமிழினம் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் சீமான் தரப்பினர்களுக்கு அறியத் தருகின்றோம். தமிழீழத்துக்காக இங்கே ஈழத்தமிழன் ஒருவன் தன்னுயிரை ஈர்த்துள்ளான். இந் நேரத்தில் ஈழத்தமிழர்களின் மேல் அதீத பற்றுக்கொண்ட சீமான் தனது கல்யாண விழாவை கொண்டாடுவாரா அல்லது ஈழத்தமிழனின் இன்னுயிருக்கு மதிப்பளித்து தனது கல்யாண வீட்டை நிறுத்துவாரா என்பது இன்று தெரியும்.
கோபாலசாமியின் கண்ணீர் காணிக்கை… (அறிக்கை)
தமிழீழத்துக்கான நீதி கேட்டு ஜெனீவாவில் செந்தில்குமரன் தீக்குளித்தார் – வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஈழத் தமிழ் இளைஞன் செந்தில்குமரன், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உடலில் பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டு, தமிழீழத்துக்கான நீதி கேட்டு உயிர்த் தியாகம் செய்துள்ளார். பிரபாகரனின் திருவுருவப் படத்தை ஏந்தியவாறு சென்று முழக்கமிட்டு பின்னர் மரண நெருப்புக்குத் தன் உயிரைத் தந்துள்ளார்.
உலகிலேயே நாதியற்றுப் போன இனம் தமிழினம் தானா? இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் தான் பலியாவதோ? என்று தமிழகத்திலும், தரணியெங்கும் உள்ள தமிழர்கள், குறிப்பாக இளந்தலைமுறையினர் சிந்திக்க வேண்டுகிறேன்.
தமிழீழத்தில் பிறந்து எங்கோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஜெனீவாவிலே தன் உயிரைப் பலியிட்டுக் கொண்ட செந்தில்குமரனுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தீக்குளித்தவரின் மனைவிக்கே இச்செய்தி கிடைக்க முன்பு.., கோபால சாமிக்கு இச்செய்தி அனுப்பபட்டு, உடனடியாக அவரின் வீரவணக்க செய்தியும் பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இச்செய்தி சீமான், நெடுமாறன் போன்றோருக்கு அறிவிக்கப்படவில்லை போலும்… அதனால் அவர்கள் இச்செய்தி சம்பந்தமாக எந்தவித அறிக்கை எதையும் இதுவரை வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.
-கி.பாஸ்கரன் - சுவிஸ்

நரிக்குண்டடி,பாட்டா சுண்டிக்குழி,கட்டை ரவி போன்ற கொலைகாரர்களை தலைமைதாங்கி வழி நடாத்திய மண்டையன்; குழுச் செயலாளர் நாயகம் எனப்படும் அலுகோசு நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு பகிரங்க மடல்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஒரு உன்னத தலைவன் மாற்று அமைப்புக்களாலும் 'எஸ் கி தோழர்' என அன்போடு அழைக்கப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவருமான தோழர் பத்மனாபாவை பதவி மோகம் கொண்ட இந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மறந்திருக்கலாம். ஆனாலும் மக்களுக்கு நினைவூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமே!
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினூடாக பத்மனாபாவை இழந்த நிலையில் அவ் அமைப்பை தலைமை தாங்கிய நடாத்திய பிரபல மதுபானச் சலை வியாபாரியும், கோழிப்பண்ணை கபடதாரியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ் சுபாஷ் விடுதியில் தங்கியிருந்துகொண்டு யாழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை நினைவுகூர வேண்டிய மிக முக்கிய காலமிது.
பரியோவான் கல்லூரியின் ஒரு சிறந்த மாணவன் அகிலன்.
கல்வி - விளையாட்டு என்பதோடு மட்டுமல்லாமல் கவிதை கட்டுரைகளென்று எத்தனையோ திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த அப்பாவி அகிலன், ஆயுத விடுதலைப் போராட்டம் துளிர் விட்டெழுந்த காலத்தில் பரிதி என்கின்ற கையெழுத்து பத்திரிகையையும் தனியாகவே எழுதி சிறு வயதிலேயே போராட்டத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்குரியவன்.
விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமே தூக்காத அந்த அப்பாவியை கும்பிடக் கும்பிட சுட்டுத்தள்ள மண்டையன் குழுவின் கொடூர கொலைகாரன் பாட்டாவிற்கு உத்தரவிட்ட மண்டையன் குழு தலைவன் சுரேஷ் பிரேமச்சந்திரனாகிய உமக்கு யாழ் மக்களிடம் வாக்கு கேட்க எத்தகைய அருகதை உண்டு என்பதை கூறமுடியுமா?
இந்திய - இலங்கை ஒப்பந்த காலத்தில் நீர் நடாத்தி முடித்த கொலை கொள்ளை,கற்பழிப்பு போன்றவற்றை பயத்தின் காரணமாகய் தட்டிக்கேட்க எமது மக்கள் கலங்கியிருந்த காலத்தில் காம வெறியோடு உமது அனுமதியுடன் அடாவடித்தனம் காட்டிய உமது அமைப்பினரை இறப்பது ஒரு முறைதான் என்ற துணிவோடு பழைய பூங்கா முகாமிற்கு என்னோடு இளம் வாலிபர் கிறிஸ்தவ சங்கத்தில் பூப்பந்து விளையாடும் இந்திய இராணுவ அதிகாரி பெர்னாண்டோவுடன் அம் முகாமில் இருந்த பிரிகேடியர் காலோனிடம் உமது அமைப்பின் அட்டகாசங்களை தெளிவுபடுத்தச் சென்றவேளை நீர் 'கோல்ட்லீப்' சிகரட் புகைத்தபடி உமது கொலை வெறியுடன் என்னைப் பார்த்து முறைத்து, 'உன்னைப் பார்த்துக் கொள்கின்றேன்' என்று சொன்ன கதை உம்மால் மறக்க முடியுமா?
அன்று நான் யாழ் மாநகர சபையில் உறுப்பினராக இருந்தபோது நீர் கொழும்பில் அரசாங்கத்தின் பூரண பாதுகாப்பில் இருந்த வேளையில் நானும் எனது நண்பனும் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினருமான அரவிந்தனும் உம்மைச் சந்திக்க உமது அலுவலகத்திற்கு வந்தபோது அதே 'கோல்ட்லீப்' சிகரட் புகைத்தபடி தமிழர் விடுதலைக் கூட்டணி புலிகளுக்கு சார்பானவர்கள், குறிப்பாக ஜோசப் பரராஜசிங்கம், பொன்.செல்வராசா, துரை ராசசிங்கம், சேனாதிராசா போன்றோரை போட்டுத் தள்ளும்வரை கூட்டணி உருப்படாது எண்று சொன்ன கதையை உம்மால் மறுக்கத்தான் முடியுமா?
சந்திரிகா அரசாங்கத்தில் அன்றைய கடற்றொழில் அமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ இருந்த காலத்தில் நீர் அந்த அமைச்சின் ஆலோசகராக இருந்துகொண்டு அரசாங்க ஊதியத்தையும் பெற்று சமிற் மாடிக் கட்டிடத்தில் உமக்கென அரச விடுதியையும் பெற்று சுகபோக வாழ்க்கையையும் அனுபவித்த சுவாரசியமான சம்பவத்தை உம்மால் மறுதலிக்க முடியுமா?
நீர் கொழும்பில் பூரண அரச பாதுகாப்புடன் சுகமாக வாழ்ந்த காலங்களில் உமது அமைப்பை யாழில் நிலை நிறுத்தி மக்களுடன் மக்களாக தன்னை அர்ப்பணித்து, இன்று நீர் உமது இருப்புக்காக வாய் கிழியப்போற்றும் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட றொபட்டை உமக்கு நினைவிருக்கின்றதா?
உமக்கு புலிகளின் ஆசீர்வாதத்துடன் முதுகெலும்பு முறுக்கேற்றப்படும்வரை உமக்கு வழிகாட்டியாய் இருந்த, வரலாற்றில் முதல் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாளையாவது எப்போவாவது எண்ணிப்பார்த்தீரா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் திரு. விக்னேஸ்வரன், சம்பந்தன் சுமந்திரன் போன்ற சந்தர்ப்பவாதிகளினால் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும் அவர் ஒரு சிறந்த கல்விமான், முன்னாள் நீதியரசர் என்கின்ற வகையில் முதலமைச்சர் வேட்பாளருக்கோ அல்லது முதலமைச்சர் பதவிக்கோ மிகவும் தகுதி வாய்ந்தவர் என்பது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்படியாப்பட்ட ஒரு மனிதனை வருகை விரிவுரையாளராக மட்டுமே தொழில் புரியும் உமது தம்பி சர்வேஸ்வரனுடன் ஒப்பிடுவதோ அல்லது அவரைவிட அதிக வாக்குகள் பெற வேண்டுமென்ற உமது கற்பனையோ எந்த விதத்தில் நியாயமாகுமென்பதையாவது சிந்தித்தீரா?
இப்போ விடயத்திற்கு வருகின்றேன்.........................
உமக்கு பாதுகாப்பளிப்பது யார்?
உமது குடும்பம் எங்கே?
உமது மட்டக்களப்பு மதுபான வியாபாரத்தை மறைக்கமுடியுமா?
உமக்கு எத்தனை சொகுசு வாகனங்கள் இந்தியாவில் உள்ளன?
உமது கட்டளையால் கொல்லப்பட்ட எமது இன மக்களுக்கு சொல்லப்போகும் பரிகாரமென்ன?
உமது தலைமையில் உமது உறுப்பினர்களால் கற்பழிக்கப்பட்ட யுவதிகளின் சோக வரலாற்றுக்கு என்ன சொல்லப்ப்போகிறீர்?
உமக்கே ஒரு தகுதி இல்லாத வேளையில் உமது தம்பியருக்கு வாக்கு கேட்க உமக்கு என்ன அருகதையிருக்கின்றது?
உமக்கு துணிவிருந்தால் சொல்லும் ஈ.பி.டி.பி தவராசா சொன்னதுபோல் நான் யாழ்ப்பாணம் வரத் தயார் என்று. ஒரு விவாதத்திற்கு நீர் தயாரா?
இறுதியாக கோழிப்பண்ணை அமைத்துக்கொடுக்க வாங்கிய பணமெங்கே? 'இலங்கைநெற்' உனது பிறாடு ஒன்றைத்தான் வெளியே கொண்டுவந்துள்ளது. இவ்வாறு எத்தனை பிறாடுகள் வெளிவர உள்ளது என்பது உமக்கு தெரியுமா?
எஸ்.எஸ்.கணேந்திரன்
அம்பலப்படுத்துகிறார் ஜேர்மனி இ. ஸ்ரீகுமரன்....!யாழ்ப்பாணம் வேலணையில் வசிக்கும் திரு பாலசந்திரன் என்ற இடுப்புக்குகீழ் இயங்கமுடியாத உறவுக்கு வாழ்வாதாரமாக கோழிப்பண்ணை அமைத்துகொடுப்பதாக கூறி பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் வானொலி புலம்பெயர் மக்களிடம் சேகரித்த ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த விடயம் அண்மையில்
அம்பலமாகியுள்ளது.
இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட வானொலி நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர்கள் வழக்கம் போல் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறிய கருத்துக்களை உங்களுக்கு அறியதர வேண்டும் என்பதற்காக நான் இலங்கைக்கு நேரடியாக சென்று தகவல்களை சேகரித்துள்ளேன். இங்கு நான் கண்ட காட்சிகள் என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த 2012/12/08 ஆம் திகதி ரி.ஆர்.ரி வானெலியின் நிகழ்ச்சியில் தெரிவித்த விடயம் யாதெனில்,
வேலனை பாலச்சந்திரன் என்ற உறவுக்கு வாழ்வாதாரமாக கோழிப்பண்ணை ஒன்றை அமைத்து கொடுத்துள்ளதாகவும் அக்காரியத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப் அணி) சுரேஸ் பிரேமச்சந்திரனின் மேற்பார்வையில் அவரது உதவியாளர் செய்து முடித்துவிட்டதாகவும் அதனால் பாலச்சந்திரன் என்ற உறவும், அவரது குடும்பத்தினரும் வாழ்க்கையை வளமாக கொண்டு செல்வதாகவும் கூறினார்கள். ஆனால் அங்கு நிலைமை தலை கீழாகவுள்ளது.
பாலச்சந்திரன் என்ற உறவை இது சம்பந்தமாக வேலனையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து விசாரித்தபோது அவர் எனக்கு மரியாதை கொடுத்து உபசரித்து விட்டு நான் தன்னை பார்க்க வந்தற்கான காரணத்தைக் கேட்டார்.
அதற்கு நான் ஜேர்மனியில் இருந்து வந்துள்ளேன் என்றும், இணையத்தளம் ஒன்றின் வாயிலாக பல உண்மைசம்பவங்களை உலகிற்கு தெரியவைப்பதற்காகவும் பல அப்பாவி மக்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஒரு குழுவினரது மோசடிகள் தெடர்பாக எழுதிவருகின்றேன் என்றும் கூறி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அதற்கு அவர் என்னிடம் ஏன் வந்தீர்கள் ஐயா? என்றார்.அதற்கு நான் கூறினேன்... இச் சம்பவங்களில் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள், அதனை உறுதிப்படுத்தித் தெரிந்துகொள்ளவே வந்துள்ளேன் என்றேன். அதற்கு அவர் ஒன்றும் புரியாதவராய் என்ன விடயம் என்று ஆவலாக விசாரித்தார். பின்னர் நான் நடந்தவற்றை விவரித்தேன்.
அவை வருமாறு:
பிரான்ஸ் நாட்டில் உள்ள ரிஆர்.ரி என்ற தமிழ் வானொலியானது புலம்பெயர் தமிழ்மக்களிடம் பாதிக்கப்பட்ட உங்களைப்போன்ற மக்களது துயரங்கள், இயலாமைகளைச் சொல்லி தமிழ்தேசியகூட்டமைப்பின் நற்பெயற்களைப் பயன்படுத்தி பல இலட்சம் ரூபாய்ப் பணத்தைச் சேகரித்து அவற்றினை உங்களுக்கு தருவதாகக் கூறி உங்களிடம் தொலைபேசி வழியாக பேட்டியெடுத்து அதனை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு போட்டுக்காட்டி அவர்களால் வழங்கப்படும் நிதியினை தாங்களும் தங்களுக்கு சம்பந்தப்பட்ட பா.உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதாக கணக்கு காட்டிவருகின்றனர். இதனை அறிந்த நான் அவர்களை தொடர்புகொண்டு கேட்டதற்கு....

'எல்லாம் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்தாச்சு.... உமக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என என்னை மிரட்டினார் சம்பந்தபட்டவர் (பா.உ) வேண்டுமென்றால் தான் கூட்டிக்கொண்டுபோய் காட்டுகிறேன் வாரும் என்றார் நானும் சம்மதித்தேன். ஆனால், அவர் என்னை வந்தால் வந்த வேலைபை பார்த்துவிட்டு ஊருக்கு போகின்ற வழியைப்பாரும் தேவையில்லாதவேலையில் மூக்கை நுழைக்காதீர் என பயமுறுத்தினார். இதனை சவாலாக ஏற்ற நான் உங்களிடம் வந்துள்ளேன் என்றேன்.
இது பாலசந்திரன் என்ற நபர் சம்பந்தப்பட்ட விடயம். அவரது வாழ்க்கைக்காக ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கோழிப்பண்ணை அமைத்துக்கொடுக்கப்பட்டதாகவும், அவருக்கு எழுபத்திரண்டாயிரம் ரூபா அவரது மருத்துவச் செலவுக்காக கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தான் விடயம் என்றேன்.
இதற்காத்தான் உங்களை தேடிவந்துள்ளேன் எனறு கூறியதை கேட்ட பாலசந்திரனுக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது தன்னைப்பயன்படுத்தி இவ்வளவு பணம் சூறையாடப்பட்டுள்ளதா என்று கேபமடைந்தார். அவ்வாறு நான் பயனடைந்தால் உங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு எனக்கு என்ன தயக்கம்.....

என்று கேட்ட பாலசந்திரன் வாருங்கள் தனது வீட்டை சுற்றிக் காட்டுகின்றேன் என்று தனது சக்கர நாற்காலியில் இருந்தவாறு சொன்னார். அதன்படி அவர் தனது சக்கர நாற்காலியை நகர்த்தியபடி என்னை தனது வீட்டின் வளவினை சுற்றிக் காட்டினார். அங்கு நான் கண்ட காட்சிகள் என்னை கண் கலங்கவைத்தது என்றால் அது என் தாய்மேல் ஆணை! அவரது வீட்டில் ரி.ஆர்.ரி வானொலியில் விளம்பரப்படுத்தியது போல் ஏதும் நடைபெறவில்லை!! கோழிப்பண்ணை அல்ல ஒரு கோழியைக்கூட என் கண்ணால் காணமுடியவில்லை என்பது தான் சத்திய விடயம்! தான் முதற்றடவையாக முப்பதினாயிரமும் அடுத்த தடவை பத்தாயிரமும் தான் இதுவரையில்பெற்றுக்கொண்டேன் என்றார்.
அவரது இயலாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கூட்டத்தினர் பற்றி நான் என்ன சொல்வேன்? இவர்களும் தமிழர்கள் தானா? தமிழ் மக்களுக்கு இவர்கள் என்ன செய்வார்கள் ? வாய் கிழிய கதைத்து பாராளுமன்றத்திலும் பொதுமேடைகளிலும் உரத்துகூறி எமது மக்களை ஏமாற்றுகின்றனர். உதாரணமாக வன்னியில் சைக்கிள் மற்றும் உழவு இயந்திரம் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகள் பற்றி அரசாங்கத்தை தட்டிக்கேட்ட நீங்கள் இன்று என்ன செய்துள்ளீர்கள்?1.புலம்பெயர்தமிழ்மக்களால் நவம்பர் மாதம் 2012 அன்று வழங்கப்பட்ட ஒன்றரை இலட்சம் ரூபா போன இடம் எங்கே? சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களே!
2.தமிழ்.தே.கூட்டமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் உங்களது பதவியை இராஜினமா செய்வீர்களா?
3.ரி.ஆர்.ரி வானொலிக்கு அன்ரியம்மாவால் வழங்கப்பட்ட 32 ஆயிரம் ரூபா (200யூரோ) எங்கே?
இது சம்பந்தபட்ட தகவல்கள் எல்லாவற்றையும் சேகரித்த நான் பாலசந்திரனிடம் விடைபெற்றுக் கொண்டேன். அவரும் நன்றியுடன் என்னை வழியனுப்பிவைத்தார் தனக்கு உதவிகிடைக்காது விட்டாலும் மற்றவர்களுக்காவது கிடைக்கட்டுமே என்பதற்காகவும். துரோகிகளை உலகிற்கு காட்டுவதற்காகவும் தான் எப்போதும் துணைநிற்பதாக அவர் கூறினார்.
இது சம்மந்தப்பட்ட ரி.ஆர்.ரி வானொலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் விடுக்கும் பகிரங்க அறிவித்தல்! நான் யாரையும் மறைமுகமாக குறிப்பிடவில்லை நேரடியாகவே குறிப்பிட்டுள்ளேன். உண்மை இல்லை என்றால் யாராவது என்மேல் வழக்கு தொடரலாம்....
சுவாரசியமான விடயம் என்னவெனில் ரி.ஆர்.ரி வானொலியில் அண்மையில் 'நான் ஒருவரை காலை 7 மணியில் இருந்து மாலை 8 மணிவரையில் கடத்திச்சென்று மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டை கொடுத்துவிட்டு வீட்டில்கொண்டுபோய் விட்டதாகவும் குறிப்பிட்டார்கள்.
பாலசந்திரனின் வீட்டுக்கு 4 தடவைகள் சென்று துன்புறுத்தியதாகவும் கூறினார்கள். ஆனால் பாலசந்திரனிடம் ரி.ஆர்.ரி வானொலியினர் நான் வந்து விசாரித்தால் திரவியநாதனையும் தெரியாது ரி.ஆர்.ரி வானொலியையும் தெரியாது என்று செல்லும்படி கூறியுள்ளனர்.
இதிலிருந்து வானொலியினரது அறிவுகூர்மை பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம்.... கடத்தப்பட்டவரை எவ்வாறு காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லமுடியும்? என்று மக்கள் கேட்கமாட்டார்கள் என்று நினைத்தார்களா? ஏன் இவர்கள் பாலசந்திரனிடம் திரவியநாதனையும் தெரியாது ரி.ஆர்.ரி வானொலியையும் தெரியாது என்று செல்லும்படி செல்லச்சென்னார்கள்.
அப்படியானால் தாங்கள் ஏதோ தப்புசெய்கிறார்கள் என்று தானே அர்த்தம்! வானொலியே தன்னை தெரியாது என்று யாரிடமாவது கூறலாமா வேடிக்கையாகவுள்ளது இக்கருத்து. வானொலியை நான் திருட்டுதனமாக ஒலிப்பதிவு செய்வதாகவும் கூறும் நிலையில் உள்ளது வானொலியின் கல்வியறிவு. வானொலிநிலையம் என்ன இரகசிய செய்தியா வாசிக்கின்றது? பெட்டிக்கடை திறப்பதுபோல் அல்லவா வானொலிநிலையம் ஆரம்பித்துள்ளனர்.... அடிப்படை அறிவுகூட இல்லாமல் பாமரரைப்போல நடந்துகொள்கின்றனர். அவர்கள் தமிழை வளர்ப்பவர்கள் அல்லர்! தங்களை வளப்பவர்கள்.......

திசைமாறிய பிறை பிரச்சினையும்,அறியவேண்டிய உண்மைகளும்!
நடைபெற்று முடிந்த பெருநாள் பிறைச்சர்ச்சை பல கோணங்களிலும் நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இதுபற்றிய கருத்துப்பரிமாறல்கள் ஒருவரை குறிவைத்து செய்யப்படுவதாகவே அமைந்திருந்ததை பார்க்கக் கூடியதாக அமைந்திருந்தன. குறிப்பாக அ.இ.ஜ.உ தலைவர் அவர்களை நோக்கியே மிக மோசமான, பாரதூரமான ஒரு முஸ்லிமின் வாயிலிருந்து வரக்கூடாத வார்த்தைகளைக்கூட பல இணைய தளங்களில் எழுதப்பட்டிருந்தன.
ஆனால் பிறை பார்க்கும் விவகாரம் அல்லது அதன் உத்தியோகபூர்வ முடிவை அறிவிக்கும் விடயம் அ.இ.ஜ.உ வை மாத்திரம் சார்திருப்பதாக விமர்சகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா? அல்லது வேண்டுமென்றே றிஸ்வி மு.தி அவர்களையே குறிவைத்து விமர்சனங்கள் செய்கிறார்களா என சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் அ.இ.ஜ.உ வையும் தாண்டி றிஸ்வி முஃப்தி அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார் என்பதாகவே விமர்சனம் செய்த சகலரும் சித்தரித்திருக்கின்றனர். இது ஒரு தவறான கண்ணோட்டமாகும்.
அதாவது பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் பிறை மாநாட்டில் சரிசமமான பங்குதாரரர்களாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு,இலங்கை அரசாங்கத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் , அ.இ.ஜ.உ வுடன் மற்றும் பல முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் என்று பட்டியலிட்டுச்சொல்லலாம். விடயம் இவ்வாறு இருக்கும் போது ஏன் றிஸ்வி முஃதியை மாத்திரம் இலக்காகக்கொண்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்? குறிப்பிடப்பட்ட மூன்று தரத்தாரும் பதில் சொல்லவேண்டிய இடத்தில் ஏன் ஜம்இய்யா மாத்திரம் பதில் சொல்ல நேர்ந்தது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை அலசி ஆராய கடமைப்பட்டிருக்கிறோம்.
குறிப்பிட்ட விவகாரத்தில் தனிமனித விமர்சனங்களுக்கு பிரதான மூன்று காரணங்கள் இருக்கின்றன.
1. வானொலி நிகழ்ச்சி.
2. பொறாமை.
3. தப்பெண்ணம்.
(1)வானொலி நிகழ்ச்சி:
குறிப்பிட்ட பிரச்சினைக்கு ஜம்இய்யத்துல் உலமா மாத்திரம் பதிலளிக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு,மு.ச.அ.ப திணைக்களம் உற்பட மற்ற ஏணைய உறுப்பினர்களும் சேர்ந்தே பதில் அளித்திருக்க வேண்டும். கூட்டாக முடிவெடுத்து விட்டு அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய அநியாயமாகும். இதை விட ஒரு முக்கிய விடயம் யாதெனில் இது வரை கூட்டாக சேர்ந்து முடிவெடுத்த ஏனைய அமைப்பினர்கள் எவரும் ஒரு வார்த்தையேனும் வாய் திறந்து பேசவில்லை என்பது இங்கு கவலையுடன் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
உண்மையில் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும் பெரும்பான்மையான மக்களுக்கு அது பிறை முடிவு பற்றிய சரியான விளக்கம் கிடைத்தது. ஆனாலும் அவ்விளக்கவுரை காலதாமதமானது கவலைக்குரியது என பலரும் என்னுடன் தொடர்பு கொண்டு கதைத்தனர். ஏனெனில் இந்த விளக்கம் ஸஹருக்கு முன்பு கொடுக்கப்பட்;டிருந்தால் பலருடைய நோன்பு கழாவாக ஆகியிருக்க மாட்டாது எனவும் மனவருத்தப்பட்டனர்.
இதுபற்றி தமது நிலைபாட்டை விளக்கிய இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் கௌரவ அமீர் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் குறிப்பிடும் போது:
பிறை விடயத்தில் இத்தகையதொரு தெளிவான விளக்கம் சமூகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குத் தான் சமூகத்திற்குப் பிறை தொடர்பான இத்தகையதொரு விளக்கம் கிடைக்கிறது முக்கால் நாள் சமூகம் விளக்கமின்றி குழப்பத்தில் சிக்கித்தவித்ததன் பின்னர்...விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் அதுவரை சமூகத்தை அதன் போக்கில் விட்டிருந்தார்களோ அல்லது சமூகம் விளக்கமின்றியே கட்டுப்படுமென்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. சமூகத்தை யார் யாரோ வழிநடாத்தி தீர்மானங்களை எடுத்து கருமமாற்றி முடிந்ததன் பிறகு... பெருநாள் கொண்டாடியவர்கள் பெருநாள் கொண்டாடியதன் பிறகு... நோன்பை விட்டவர்கள் நோன்பை விட்டதன் பிறகு... விமர்சனங்கள் செய்தவர்கள் முடிந்தமட்டும் விமர்சனம் செய்த பிறகு சமூகத்திற்கு விளக்கம் கிடைத்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது பிறைக்குழவின் முடிவு சரியாக இருந்தாலும் இதுபற்றிய சரியான விளக்கத்தை மக்களுக்கு சரியான நேரத்தில் வழங்கவில்லை என்பதே இவரின் குற்றச்சாட்டு. இதுவொரு ஆரோக்கியமான கருத்து என நானும் நினைக்கிறேன். அதாவது ஏன் பலரின் சாட்சிகளை மறுத்தார்கள்? பிறை பற்றிய அ.இ.ஜ.உ வின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி மக்களுக்கு சரியாக போய் சேரவில்லை. அன்று உரையில் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட போது தான் இதுபற்றி பலரும் அறிந்து கொண்டனர்.
மேலும் தலைவர் அவர்களின் உரையில்சில கடுமையான வார்த்தைகளும் வெளிப்பட்டன. இதுவும் சிலவேலை மக்களின் உள்ளங்களைப் பாதித்திருக்கும் என்பது உண்மை. இது அவரின் கவலையின் வெளிப்பாடாகவே இருந்திருக்குமே தவிர வேரில்லை. ஆனாலும் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.
(2) பொறாமை:
எல்லோரும் இல்லாவிட்டாலும் பலர் இவர்மீது பொறாமை கொண்டுள்ளனர் என்பது நான் இவர்களோடு மிக நெருக்கமாக இருப்பவன் என்ற வகையில் எனக்கு உறுதியாகக்கூற முடியும். அவருக்குரிய செல்வாக்கு, கௌரவம், மக்கள் ஆதரவு என்பவற்றையெல்லாம் வைத்தே இவ்வாறு இவர் மீது சிலர் சீரிப்பாய்கின்றனர். இதற்கு ஒரேயொரு நிகழ்வை மட்டும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது 2010 ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டின் ரோயல் இஸலாமிய தந்திரோப கற்கை நிலையம் (வுhந 500 ஆழளவ ஐகெடரநவெயைட ஆரளடiஅள)“உலக முஸ்லிம்களில் செல்வாக்குமிக்க முதல் 500 பேர்கள்” என்ற கருத்துக் கணிப்பீட்டில் உஸ்தாத் றிஸ்வி முஃப்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்ட செய்தி பல இணையங்களில் வெளியானது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் அவர் ஒரு தலைவர் என்றல்ல ஒரு சாதாரண இலங்கை முஸ்லிம் என்ற பிரஜை என்ற வகையில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். மாறாக இதுபற்றி எமது சகோதரர்களின் இணையதள அடிக்குறிப்புக்களும், கருத்துக்களும் மிக மோசமாகவே இருந்தன. “எமது நாட்டில் வேறு அறிஞர்கள் இல்லையா? இவர் மட்டும் தான் செல்வாக்குமிக்கவரா” என்றெல்லாம் எழுதி தமது பொறாமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். இதுவல்லாமல் இன்னும் பல மோசமான வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தனர். இவையெல்லாம் பொறாமையின் வெளிப்பாடு இல்லையா? நாம் எந்த இயக்கத்தைச் சார்ந்தாலும் அவரும் ஒரு முஸ்லிம் சகோதரர் என்றல்லவா நாம் எண்ணியிருக்க வேண்டும்.
(3) தப்பெண்ணம்:
முப்ஃதி பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் எல்லோரிடமும் இருக்கிறது. அதாவது“பெருமை பிடித்தவர்”“கண்டால் கதைக்க மாட்டார்”“எல்லோருடனும் சரிசமமாகப் பேசுவதில்லை”“செல்வந்தர்களோடு தான் அவருடைய நட்பு” என்பவையே அவைகளில் பிரதானமானவையாகும்.
உண்மையில் நான் எனது சிறுபிராயம் முதல் அவர்களுடன்; நெருங்கி இருக்கும் ஒருவன். ஓவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ{தஆலா இயற்கையாகவே சில குணாம்சங்களை வைத்துள்ளான். அதே வகைக் இயல்பு தான் இவரிடத்திலும் இருக்கிறது. வெளித்தோற்றத்தை பார்த்தால் மேற்படி எல்லாக் குணங்களும் அவரிடத்தில் இருப்பது போலவே தோன்றும். ஆனால் நெருங்கிப் பழுகும் போது தான் அவருடைய உள்ளத்தில் சமூகம் பற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.பலபோது ஒவ்வொரு ஆலிம்களதும், பொது மகன்களதும் வாழ்க்கை நிலை பற்றி விசாரிப்பார். உலமாக்களுக்கு மஸ்ஜித்களிலும், மத்ரஸாக்களிலும் இருக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவர்களது பொருளாதார நிலை பற்றியும் கவலைப்படுவார்.நாட்டு மக்களது பிரச்சினைகள், துன்பங்களின் போதும் பெரிதும் பங்குகொள்ள வேண்டுமென தம்மை ஈடுபடுத்திக்கொள்பவர்களில் முக்கியமானர். செல்வந்தர்களின் சகவாசம் இதுபோன்றவைகளுக்கே பயன்படுகின்றன தவிர சுய லாபங்களுக்காக அல்ல. இந்த சகவாசத்தின் மூலம் இவர் எந்தவொரு சுயலாபமும் பெற்றதும் கிடையாது. இதனை இவருடைய பிள்ளைகளின் திருமணத்தின் மூலமே முழு நாடும் அறிந்திருக்கும் என நினைக்கிறேன். தனது மகளினதும், மகனினதும் சம்மந்தத்தை உலக அடிப்டையில் சாதாரண ஒரு குடும்பத்தோடு தான் செய்துகொண்டார். பணக்காரர்கள் கைகட்டி வரிசையில் நின்றும் இவர் அதற்கு விரும்பவில்லை என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
தமது பதவியை வைத்து பெருமையடிப்பதையோ அல்லது பிரபல்யம் தேடுவதையோ இவர் மிகவும் வெறுப்பவர். குறைந்தது தாம் ஒரு போட்டோவுக்காவது போஸ் கொடுப்பதை வெறுப்பவர். தொலைக் காட்சி நிறுவனங்கள் பல பேட்டிகளுக்காகவோ அல்லது நிகழ்ச்சிகளுக்காகவோ அழைப்பு விடுத்தால் அதனையும் மறுத்து விடுவார். எந்த இடத்திலும் தமது பெயர் வரக்கூடாது எனச்சொல்லுவார். நான் ஜம்இய்யாவில் ஊடக உத்தியோகத்தராக பணியாற்றிய பொழுது இவைகளையெல்லாம் நேரடியாகக் கன்டவன். எப்பொழுது ஹலால் பிரச்சினை வந்ததோ அப்பொழுதே நிர்பந்தமாக மீடியாக்களில் காட்சியளித்தார்.
இவைகளைவிட ஒருபடி மேலாக (மறைந்திருந்திருக்கும்) ஒரு உண்மையை என்னால் கூறாமல் இருக்க முடியாது. சிலபோது இதனை அவர் படித்தால் என்னைக் கோபிக்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது. (என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்) இத்தருணத்தில் நான் இதனைச் சொல்லாவிட்டால் சில வேலை குற்றவாளியாகக் கூட ஆகிவிடலாம். அதாவது இவருடைய மேற்பர்வையில் இந்நாட்டில் மிகத்தேவையான இடங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் கட்டப்பட்டிருக்கின்றன. தேவையான இடங்களுக்கு ஆளனுப்பி தேவையை அறிந்து இவைகள் செய்யப்பட்டிருக்கின்றன. புகழ் விரும்பியாக இருந்தால் என்னவெல்லாம் செய்திருக்கலாம். எங்கேயாவது ஒரேயொரு “பெனரையோ” அல்லது பெயர்ப்பலகையோ காணமுடியுமா?
இதைவிட இரகசியமாக அவர்கள் செய்த இன்னும் செய்துகொண்டிருக்கின்ற பல நல்லவைகளை இங்கு குறிப்பிட்டுக்காட்ட முடியாது.
பாதிப்புமுஃப்திக்கு அல்ல ஜம்இய்யாவுக்கே!
ஜம்இய்யத்துல் உலமா என்பது முஃப்தி அவர்களின் ஏகபோக சொத்தல்ல. அது இந்நாட்டு 6000 க்கும் மேற்பட்ட உலமாக்களினதும், பொது மக்களினதும் சொத்தாகும். இவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஒரு தனிமனிதன் என்ற வகையில் முஃப்தி அவர்கள் விமர்சிக்கப்பட்டாலும் அந்த விமர்சனங்களால் பாதிக்கப்படப்போவது நாம் எல்லோரும் கட்டிக்காக்க வேண்டிய ஜம்இய்யா தான்.யார் என்ன சொன்னபோதிலும் முஸ்லிம்களுக்கென இருக்கும் ஒரேயொரு தலைமை இப்போதைக்கு இது மாத்திரம் தான். இதனையும் நாம் இழக்க முற்படுவோமேயானால் எமது எதிர்காலம் என்னவாகும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆலிம்களை மதிக்கும் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வோம்!
பொதுவாக ஆலிம்களின் அந்தஸ்தை நாம் அறிய வேண்டும் என்பதற்காக இவைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். ஆலிம்கள் என்பவர்கள் நபிமார்களின் வாரிசுகள். அல்லாஹ{தஆலா இவர்களுக்கு நபிமார்களுக்கு அடுத்துள்ள அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறான் என்பதை நாம் எல்லோரும் மனதில் பதிய வைக்க வேண்டும். இணையதளங்களிலும், முகநூல் பதிவுகளிலும் எப்படியெல்லாம் உலமாக்களைத் திட்டி இருக்கிறார்கள். படுமோசமான வார்த்தைகளைக் கொண்டு ஜம்இய்யத்துல் உலமாவை விமர்சித்திருக்கிறார்கள். உலமாக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கூறவில்லை. ஆனாலும் எதிலும் எல்லை மீறாது நடந்துகொள்ள வேண்டும்.
ஆகவே கீழ்வரும் வார்த்தைகளை கவனத்திற் கொள்வோம்:
• உபாதத் பின் ஸாமித் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்:எவர்கள் பெரியவர்களை மதிக்கவில்லையோ, எமது சிறார்கள் மீது அன்பு காட்வில்லையோ மேலும் எமது உலமாக்களின் உரிமைகளை (அந்தஸ்தை) அறியவில்லையோ அவர்கள் எம்மைச்சார்தவர்கள் அல்லர் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் (அஹ்மத், திர்மிதி)
• அல்லாமா அல்-ஹாபிழ் இப்னு அஸாகிர் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எவர்கள் ஆலிம்களுடைய குறைகள் பற்றி கதைப்பார்களோ, அவர்களை அவர்கடைய மரணத்திற்கு முன்பு இதயத்தை மரணிக்கச் செவ்வது கொண்டு அல்லாஹ் சோதிப்பான். (அதாவது நல்லது கெட்டது அவருக்கு தெரியாமல் போய் விடும்) (அல்-தப்யீன்)
• மேலும் அவர்கள் கூறுகையில்: உலமாக்களுடைய மாமிசம் (அவர்கள் பற்றி குறை கூறுவது) நஞ்சாகும். எவர்கள் அதனை நுகர்வார்களோ நோயாளியாகி விடுவர், எவர்கள் அதனை சாப்பிட்டார்களோ அவர்கள் மரணித்து விடுவார்கள். (அல்-தப்யீன்)
• இமாம் அஹ்மத் பின் அல்-அத்ரயீ அவர்கள் கூறுகிறார்கள்: ஆலிம்கள் பற்றி குறை கூறுவது, குறிப்பாக அவர்களில் முதியவர்கள் பற்றிக் கதைப்பது பெரும் பாவங்களில் நின்றும் உள்ளதாகும். (அல்-ரத்துல் வாபிர்)
இவைகளை உவமைக்காகவே சுட்டிக்காட்டினேன். நாவிருக்கிறது என்பதற்காக நாம் பேசிவிடலாகாது. அத்துடன் இது முஃப்தி அவர்களுக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. எங்களுடைய மஸ்ஜித் இமாம் அது போன்று எம்மைச் சூழவுள்ள உலமாக்கள் எல்லோரையும் மதிக்கக் கற்றுக்கொள்வோம். அவர்கள் ஏதாவது தவறு செய்யுமிடத்து முறையாக அவர்களிடத்தில் அதனை அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு சுட்டிக்காட்டுவோம். எப்பொழுது நாம் உலமாக்களைப் பகைத்துக் கொள்வோமோ அப்பொழுது தான் நாம் பொது பல சேனாவின் திட்டங்களை நிறைவேற்றியவர்களாக ஆகிவிடுவோம். மட்டுமின்றி தாத்தாரிகளின் அழிவும் உலமாக்களை அவமதித்ததனாலேயே ஏற்பட்டது என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
இறுதியாக.... எனது கடமை என்ற வகையில் இவைகளை நான் தொட்டுக் காட்டினேன். பொதுமக்கள் அவைகளை அறிந்து செயற்பட வேண்டும்.இல்லையேல் நாம் செய்யும் நல்லமல்கள் வீணாகி விடும் என்பதில் ஐயமில்லை. நிச்சயம் இதனையும் விமர்சிப்பவர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வே போதுமானவன். “அல்லாஹ்வையேயன்றி வேறு எவரையும் நாம் தூய்மைப்படுத்த மாட்டோம்” அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
நடைபெற்று முடிந்த பெருநாள் பிறைச்சர்ச்சை பல கோணங்களிலும் நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இதுபற்றிய கருத்துப்பரிமாறல்கள் ஒருவரை குறிவைத்து செய்யப்படுவதாகவே அமைந்திருந்ததை பார்க்கக் கூடியதாக அமைந்திருந்தன. குறிப்பாக அ.இ.ஜ.உ தலைவர் அவர்களை நோக்கியே மிக மோசமான, பாரதூரமான ஒரு முஸ்லிமின் வாயிலிருந்து வரக்கூடாத வார்த்தைகளைக்கூட பல இணைய தளங்களில் எழுதப்பட்டிருந்தன.
ஆனால் பிறை பார்க்கும் விவகாரம் அல்லது அதன் உத்தியோகபூர்வ முடிவை அறிவிக்கும் விடயம் அ.இ.ஜ.உ வை மாத்திரம் சார்திருப்பதாக விமர்சகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா? அல்லது வேண்டுமென்றே றிஸ்வி மு.தி அவர்களையே குறிவைத்து விமர்சனங்கள் செய்கிறார்களா என சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் அ.இ.ஜ.உ வையும் தாண்டி றிஸ்வி முஃப்தி அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார் என்பதாகவே விமர்சனம் செய்த சகலரும் சித்தரித்திருக்கின்றனர். இது ஒரு தவறான கண்ணோட்டமாகும்.
அதாவது பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் பிறை மாநாட்டில் சரிசமமான பங்குதாரரர்களாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு,இலங்கை அரசாங்கத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் , அ.இ.ஜ.உ வுடன் மற்றும் பல முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் என்று பட்டியலிட்டுச்சொல்லலாம். விடயம் இவ்வாறு இருக்கும் போது ஏன் றிஸ்வி முஃதியை மாத்திரம் இலக்காகக்கொண்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்? குறிப்பிடப்பட்ட மூன்று தரத்தாரும் பதில் சொல்லவேண்டிய இடத்தில் ஏன் ஜம்இய்யா மாத்திரம் பதில் சொல்ல நேர்ந்தது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை அலசி ஆராய கடமைப்பட்டிருக்கிறோம்.
குறிப்பிட்ட விவகாரத்தில் தனிமனித விமர்சனங்களுக்கு பிரதான மூன்று காரணங்கள் இருக்கின்றன.
1. வானொலி நிகழ்ச்சி.
2. பொறாமை.
3. தப்பெண்ணம்.
(1)வானொலி நிகழ்ச்சி:
குறிப்பிட்ட பிரச்சினைக்கு ஜம்இய்யத்துல் உலமா மாத்திரம் பதிலளிக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு,மு.ச.அ.ப திணைக்களம் உற்பட மற்ற ஏணைய உறுப்பினர்களும் சேர்ந்தே பதில் அளித்திருக்க வேண்டும். கூட்டாக முடிவெடுத்து விட்டு அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய அநியாயமாகும். இதை விட ஒரு முக்கிய விடயம் யாதெனில் இது வரை கூட்டாக சேர்ந்து முடிவெடுத்த ஏனைய அமைப்பினர்கள் எவரும் ஒரு வார்த்தையேனும் வாய் திறந்து பேசவில்லை என்பது இங்கு கவலையுடன் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
உண்மையில் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும் பெரும்பான்மையான மக்களுக்கு அது பிறை முடிவு பற்றிய சரியான விளக்கம் கிடைத்தது. ஆனாலும் அவ்விளக்கவுரை காலதாமதமானது கவலைக்குரியது என பலரும் என்னுடன் தொடர்பு கொண்டு கதைத்தனர். ஏனெனில் இந்த விளக்கம் ஸஹருக்கு முன்பு கொடுக்கப்பட்;டிருந்தால் பலருடைய நோன்பு கழாவாக ஆகியிருக்க மாட்டாது எனவும் மனவருத்தப்பட்டனர்.
இதுபற்றி தமது நிலைபாட்டை விளக்கிய இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் கௌரவ அமீர் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் குறிப்பிடும் போது:
பிறை விடயத்தில் இத்தகையதொரு தெளிவான விளக்கம் சமூகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குத் தான் சமூகத்திற்குப் பிறை தொடர்பான இத்தகையதொரு விளக்கம் கிடைக்கிறது முக்கால் நாள் சமூகம் விளக்கமின்றி குழப்பத்தில் சிக்கித்தவித்ததன் பின்னர்...விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் அதுவரை சமூகத்தை அதன் போக்கில் விட்டிருந்தார்களோ அல்லது சமூகம் விளக்கமின்றியே கட்டுப்படுமென்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. சமூகத்தை யார் யாரோ வழிநடாத்தி தீர்மானங்களை எடுத்து கருமமாற்றி முடிந்ததன் பிறகு... பெருநாள் கொண்டாடியவர்கள் பெருநாள் கொண்டாடியதன் பிறகு... நோன்பை விட்டவர்கள் நோன்பை விட்டதன் பிறகு... விமர்சனங்கள் செய்தவர்கள் முடிந்தமட்டும் விமர்சனம் செய்த பிறகு சமூகத்திற்கு விளக்கம் கிடைத்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது பிறைக்குழவின் முடிவு சரியாக இருந்தாலும் இதுபற்றிய சரியான விளக்கத்தை மக்களுக்கு சரியான நேரத்தில் வழங்கவில்லை என்பதே இவரின் குற்றச்சாட்டு. இதுவொரு ஆரோக்கியமான கருத்து என நானும் நினைக்கிறேன். அதாவது ஏன் பலரின் சாட்சிகளை மறுத்தார்கள்? பிறை பற்றிய அ.இ.ஜ.உ வின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி மக்களுக்கு சரியாக போய் சேரவில்லை. அன்று உரையில் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட போது தான் இதுபற்றி பலரும் அறிந்து கொண்டனர்.
மேலும் தலைவர் அவர்களின் உரையில்சில கடுமையான வார்த்தைகளும் வெளிப்பட்டன. இதுவும் சிலவேலை மக்களின் உள்ளங்களைப் பாதித்திருக்கும் என்பது உண்மை. இது அவரின் கவலையின் வெளிப்பாடாகவே இருந்திருக்குமே தவிர வேரில்லை. ஆனாலும் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.
(2) பொறாமை:
எல்லோரும் இல்லாவிட்டாலும் பலர் இவர்மீது பொறாமை கொண்டுள்ளனர் என்பது நான் இவர்களோடு மிக நெருக்கமாக இருப்பவன் என்ற வகையில் எனக்கு உறுதியாகக்கூற முடியும். அவருக்குரிய செல்வாக்கு, கௌரவம், மக்கள் ஆதரவு என்பவற்றையெல்லாம் வைத்தே இவ்வாறு இவர் மீது சிலர் சீரிப்பாய்கின்றனர். இதற்கு ஒரேயொரு நிகழ்வை மட்டும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது 2010 ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டின் ரோயல் இஸலாமிய தந்திரோப கற்கை நிலையம் (வுhந 500 ஆழளவ ஐகெடரநவெயைட ஆரளடiஅள)“உலக முஸ்லிம்களில் செல்வாக்குமிக்க முதல் 500 பேர்கள்” என்ற கருத்துக் கணிப்பீட்டில் உஸ்தாத் றிஸ்வி முஃப்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்ட செய்தி பல இணையங்களில் வெளியானது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் அவர் ஒரு தலைவர் என்றல்ல ஒரு சாதாரண இலங்கை முஸ்லிம் என்ற பிரஜை என்ற வகையில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். மாறாக இதுபற்றி எமது சகோதரர்களின் இணையதள அடிக்குறிப்புக்களும், கருத்துக்களும் மிக மோசமாகவே இருந்தன. “எமது நாட்டில் வேறு அறிஞர்கள் இல்லையா? இவர் மட்டும் தான் செல்வாக்குமிக்கவரா” என்றெல்லாம் எழுதி தமது பொறாமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். இதுவல்லாமல் இன்னும் பல மோசமான வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தனர். இவையெல்லாம் பொறாமையின் வெளிப்பாடு இல்லையா? நாம் எந்த இயக்கத்தைச் சார்ந்தாலும் அவரும் ஒரு முஸ்லிம் சகோதரர் என்றல்லவா நாம் எண்ணியிருக்க வேண்டும்.
(3) தப்பெண்ணம்:
முப்ஃதி பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் எல்லோரிடமும் இருக்கிறது. அதாவது“பெருமை பிடித்தவர்”“கண்டால் கதைக்க மாட்டார்”“எல்லோருடனும் சரிசமமாகப் பேசுவதில்லை”“செல்வந்தர்களோடு தான் அவருடைய நட்பு” என்பவையே அவைகளில் பிரதானமானவையாகும்.
உண்மையில் நான் எனது சிறுபிராயம் முதல் அவர்களுடன்; நெருங்கி இருக்கும் ஒருவன். ஓவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ{தஆலா இயற்கையாகவே சில குணாம்சங்களை வைத்துள்ளான். அதே வகைக் இயல்பு தான் இவரிடத்திலும் இருக்கிறது. வெளித்தோற்றத்தை பார்த்தால் மேற்படி எல்லாக் குணங்களும் அவரிடத்தில் இருப்பது போலவே தோன்றும். ஆனால் நெருங்கிப் பழுகும் போது தான் அவருடைய உள்ளத்தில் சமூகம் பற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.பலபோது ஒவ்வொரு ஆலிம்களதும், பொது மகன்களதும் வாழ்க்கை நிலை பற்றி விசாரிப்பார். உலமாக்களுக்கு மஸ்ஜித்களிலும், மத்ரஸாக்களிலும் இருக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவர்களது பொருளாதார நிலை பற்றியும் கவலைப்படுவார்.நாட்டு மக்களது பிரச்சினைகள், துன்பங்களின் போதும் பெரிதும் பங்குகொள்ள வேண்டுமென தம்மை ஈடுபடுத்திக்கொள்பவர்களில் முக்கியமானர். செல்வந்தர்களின் சகவாசம் இதுபோன்றவைகளுக்கே பயன்படுகின்றன தவிர சுய லாபங்களுக்காக அல்ல. இந்த சகவாசத்தின் மூலம் இவர் எந்தவொரு சுயலாபமும் பெற்றதும் கிடையாது. இதனை இவருடைய பிள்ளைகளின் திருமணத்தின் மூலமே முழு நாடும் அறிந்திருக்கும் என நினைக்கிறேன். தனது மகளினதும், மகனினதும் சம்மந்தத்தை உலக அடிப்டையில் சாதாரண ஒரு குடும்பத்தோடு தான் செய்துகொண்டார். பணக்காரர்கள் கைகட்டி வரிசையில் நின்றும் இவர் அதற்கு விரும்பவில்லை என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
தமது பதவியை வைத்து பெருமையடிப்பதையோ அல்லது பிரபல்யம் தேடுவதையோ இவர் மிகவும் வெறுப்பவர். குறைந்தது தாம் ஒரு போட்டோவுக்காவது போஸ் கொடுப்பதை வெறுப்பவர். தொலைக் காட்சி நிறுவனங்கள் பல பேட்டிகளுக்காகவோ அல்லது நிகழ்ச்சிகளுக்காகவோ அழைப்பு விடுத்தால் அதனையும் மறுத்து விடுவார். எந்த இடத்திலும் தமது பெயர் வரக்கூடாது எனச்சொல்லுவார். நான் ஜம்இய்யாவில் ஊடக உத்தியோகத்தராக பணியாற்றிய பொழுது இவைகளையெல்லாம் நேரடியாகக் கன்டவன். எப்பொழுது ஹலால் பிரச்சினை வந்ததோ அப்பொழுதே நிர்பந்தமாக மீடியாக்களில் காட்சியளித்தார்.
இவைகளைவிட ஒருபடி மேலாக (மறைந்திருந்திருக்கும்) ஒரு உண்மையை என்னால் கூறாமல் இருக்க முடியாது. சிலபோது இதனை அவர் படித்தால் என்னைக் கோபிக்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது. (என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்) இத்தருணத்தில் நான் இதனைச் சொல்லாவிட்டால் சில வேலை குற்றவாளியாகக் கூட ஆகிவிடலாம். அதாவது இவருடைய மேற்பர்வையில் இந்நாட்டில் மிகத்தேவையான இடங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் கட்டப்பட்டிருக்கின்றன. தேவையான இடங்களுக்கு ஆளனுப்பி தேவையை அறிந்து இவைகள் செய்யப்பட்டிருக்கின்றன. புகழ் விரும்பியாக இருந்தால் என்னவெல்லாம் செய்திருக்கலாம். எங்கேயாவது ஒரேயொரு “பெனரையோ” அல்லது பெயர்ப்பலகையோ காணமுடியுமா?
இதைவிட இரகசியமாக அவர்கள் செய்த இன்னும் செய்துகொண்டிருக்கின்ற பல நல்லவைகளை இங்கு குறிப்பிட்டுக்காட்ட முடியாது.
பாதிப்புமுஃப்திக்கு அல்ல ஜம்இய்யாவுக்கே!
ஜம்இய்யத்துல் உலமா என்பது முஃப்தி அவர்களின் ஏகபோக சொத்தல்ல. அது இந்நாட்டு 6000 க்கும் மேற்பட்ட உலமாக்களினதும், பொது மக்களினதும் சொத்தாகும். இவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஒரு தனிமனிதன் என்ற வகையில் முஃப்தி அவர்கள் விமர்சிக்கப்பட்டாலும் அந்த விமர்சனங்களால் பாதிக்கப்படப்போவது நாம் எல்லோரும் கட்டிக்காக்க வேண்டிய ஜம்இய்யா தான்.யார் என்ன சொன்னபோதிலும் முஸ்லிம்களுக்கென இருக்கும் ஒரேயொரு தலைமை இப்போதைக்கு இது மாத்திரம் தான். இதனையும் நாம் இழக்க முற்படுவோமேயானால் எமது எதிர்காலம் என்னவாகும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆலிம்களை மதிக்கும் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வோம்!
பொதுவாக ஆலிம்களின் அந்தஸ்தை நாம் அறிய வேண்டும் என்பதற்காக இவைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். ஆலிம்கள் என்பவர்கள் நபிமார்களின் வாரிசுகள். அல்லாஹ{தஆலா இவர்களுக்கு நபிமார்களுக்கு அடுத்துள்ள அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறான் என்பதை நாம் எல்லோரும் மனதில் பதிய வைக்க வேண்டும். இணையதளங்களிலும், முகநூல் பதிவுகளிலும் எப்படியெல்லாம் உலமாக்களைத் திட்டி இருக்கிறார்கள். படுமோசமான வார்த்தைகளைக் கொண்டு ஜம்இய்யத்துல் உலமாவை விமர்சித்திருக்கிறார்கள். உலமாக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கூறவில்லை. ஆனாலும் எதிலும் எல்லை மீறாது நடந்துகொள்ள வேண்டும்.
ஆகவே கீழ்வரும் வார்த்தைகளை கவனத்திற் கொள்வோம்:
• உபாதத் பின் ஸாமித் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்:எவர்கள் பெரியவர்களை மதிக்கவில்லையோ, எமது சிறார்கள் மீது அன்பு காட்வில்லையோ மேலும் எமது உலமாக்களின் உரிமைகளை (அந்தஸ்தை) அறியவில்லையோ அவர்கள் எம்மைச்சார்தவர்கள் அல்லர் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் (அஹ்மத், திர்மிதி)
• அல்லாமா அல்-ஹாபிழ் இப்னு அஸாகிர் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எவர்கள் ஆலிம்களுடைய குறைகள் பற்றி கதைப்பார்களோ, அவர்களை அவர்கடைய மரணத்திற்கு முன்பு இதயத்தை மரணிக்கச் செவ்வது கொண்டு அல்லாஹ் சோதிப்பான். (அதாவது நல்லது கெட்டது அவருக்கு தெரியாமல் போய் விடும்) (அல்-தப்யீன்)
• மேலும் அவர்கள் கூறுகையில்: உலமாக்களுடைய மாமிசம் (அவர்கள் பற்றி குறை கூறுவது) நஞ்சாகும். எவர்கள் அதனை நுகர்வார்களோ நோயாளியாகி விடுவர், எவர்கள் அதனை சாப்பிட்டார்களோ அவர்கள் மரணித்து விடுவார்கள். (அல்-தப்யீன்)
• இமாம் அஹ்மத் பின் அல்-அத்ரயீ அவர்கள் கூறுகிறார்கள்: ஆலிம்கள் பற்றி குறை கூறுவது, குறிப்பாக அவர்களில் முதியவர்கள் பற்றிக் கதைப்பது பெரும் பாவங்களில் நின்றும் உள்ளதாகும். (அல்-ரத்துல் வாபிர்)
இவைகளை உவமைக்காகவே சுட்டிக்காட்டினேன். நாவிருக்கிறது என்பதற்காக நாம் பேசிவிடலாகாது. அத்துடன் இது முஃப்தி அவர்களுக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. எங்களுடைய மஸ்ஜித் இமாம் அது போன்று எம்மைச் சூழவுள்ள உலமாக்கள் எல்லோரையும் மதிக்கக் கற்றுக்கொள்வோம். அவர்கள் ஏதாவது தவறு செய்யுமிடத்து முறையாக அவர்களிடத்தில் அதனை அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு சுட்டிக்காட்டுவோம். எப்பொழுது நாம் உலமாக்களைப் பகைத்துக் கொள்வோமோ அப்பொழுது தான் நாம் பொது பல சேனாவின் திட்டங்களை நிறைவேற்றியவர்களாக ஆகிவிடுவோம். மட்டுமின்றி தாத்தாரிகளின் அழிவும் உலமாக்களை அவமதித்ததனாலேயே ஏற்பட்டது என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
இறுதியாக.... எனது கடமை என்ற வகையில் இவைகளை நான் தொட்டுக் காட்டினேன். பொதுமக்கள் அவைகளை அறிந்து செயற்பட வேண்டும்.இல்லையேல் நாம் செய்யும் நல்லமல்கள் வீணாகி விடும் என்பதில் ஐயமில்லை. நிச்சயம் இதனையும் விமர்சிப்பவர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வே போதுமானவன். “அல்லாஹ்வையேயன்றி வேறு எவரையும் நாம் தூய்மைப்படுத்த மாட்டோம்” அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் உருவான சர்ச்சை தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற ஒட்டுண்ணிக் கட்சிகளுக்கு வேட்பாளர் பட்டியல் ஒதுக்கீட்டில் 5 இடம் கிடைத்தது என்றால் மிகையாகாது.
கடந்த தேர்தல்களில் 80 விழுக்காடு பட்டியல் தமிழரசுக் கட்சியால் நிரப்பப்பட்டு மிகுதி கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தமையும் தமிழரசுக் கட்சியே தலைமைக் கட்சி என்றும் ஏனைய கட்சிகள் விரும்பினால் இருக்கலாம் என்ற நிலையும் மாறி நடைபெறவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி சுரேஸ் அணிக்கு 12 ஆசனங்கள் ரெலோவுக்கு 12 ஆசனங்கள் புளொட்டுக்கு 5 ஆசனங்கள் த.வி.கூட்டணிக்கு 5 ஆசனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.
நெல்லுக்கிறைத்த நீர் வாய்கால்வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசிந்த கதையாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த ஆசன ஓதுக்கீட்டை சரியான தருணத்தில் பயன்படுத்தாவிட்டால் என்கதி அதோ கதிதான் என சங்கரி ஆசனங்களில் ஒன்று இரண்டை விலைக்கு விற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றது.
ஆனால் சங்கரி பணம் வாங்கினாரா? இல்லையா? என்பதை நாம் கட்டியம் கூற வரவில்லை. சில்மிசச் செல்வன் சங்கரிக்கு கிடைக்கப்பெற்ற 5 வேட்பாளர் ஒதுக்கீட்டில் சங்கரியால் கிளிநொச்சி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தம்பி எனப்படுகின்ற தம்பிராஜாவின் மறுமுகம் தமிழ் மக்களுக்கு நிச்சயம் அருவருப்பை தரத்தக்கதும் பொருத்தமற்றதும் என்பதே விடயம்.
இந்தவிடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது. தம்பியின் பின்புலத்தை சங்கரி கருத்தில் எடுக்கவேண்டும். இவ்வாறான ஓர் சர்ச்சைக்குரிய நபரை வேட்பாளராக நிறுத்துகின்றபோது ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அக்கட்சி தெரிவித்திருக்கின்றது. ஆனால் சங்கரி இது மண்டையன் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடமல்ல தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கப்பட்ட இடம் அதை யாருக்கு வழங்குவது என்பது எனது முடிவு என்றுள்ளார்.
காரைநகர் களபூமியைச் சேர்ந்த தம்பி ஒரு ஆட்கடத்தல்காரன். வெளிநாடு அனுப்புவதாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தினை ஏமாற்றியவன். புலிகளுக்கு கொழும்பில் வேலை செய்வதாக கோடிக்கணக்கான பணத்தினை வாங்கிவிட்டு புலிகளுக்கு கம்பி நீட்டியவன். புலிகள் அடிவாங்க தொடங்கியதும் கனடாவிற்கு சென்று அங்கு தன்னிடமுள்ள கோடிக்கணக்கான பணத்தை காட்டி கனடாவில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொண்டவன்.
தம்பியிடம் பணம் கொடுத்த ஒரு சில புலிகள் அந்தப் பணத்தை மீண்டும் பெற முற்பட்டபோது அவர்கள் எவ்வாறு இலங்கை இராணுவத்திடம் மாட்டிவிடப்பட்டார்கள் என்பது பரம இரகசியம். கொழும்பில் தம்பியின் கால் படாத சூதாட்ட நிலையங்கள் இல்லை என்று கூறலாம்.
இதற்கும் அப்பால் சுவாரசியமான விடயம் யாதெனில் வன்னியில் புலிகளிடம் பணத்தினை வாங்கி கொழும்பில் தனது பாதுகாப்புக்காக ஈபிடிபி க்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தவன்.
இப்பேற்பட்ட கடைந்தெடுத்த கழிவை சில்மிசச்செல்வன் சங்கரி தமிழ் மக்களின் பிரதிநிதியாக்க முனைந்திருக்கின்றார். தம்பிக்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக என்ன தகைமை இருக்கின்றது, தம்பியின் பின்புலம் அருவருக்கத்தக்கதே என சங்கரியிடம் கேட்கப்பட்டபோது, தம்பி தேர்தலுக்கு 1 கோடி ரூபா செலவழிப்பான் என கூறினாராம் சில்மிசச்செல்வன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு எதற்கு பணம்? வழமைபோல் உணர்ச்சி ஊட்டும் தேர்தல் விஞ்ஞபனம் ஒன்றை எழுதி வெளியிட்டால் போதுமே மந்தைக்கூட்டம் விடிந்தெழும்பி கண்ணை கசக்கி கொண்டு போய் வீட்டுக்கு கீறீப்போட்டு வரும்தானே.
(சுழியோடி
கடந்த தேர்தல்களில் 80 விழுக்காடு பட்டியல் தமிழரசுக் கட்சியால் நிரப்பப்பட்டு மிகுதி கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தமையும் தமிழரசுக் கட்சியே தலைமைக் கட்சி என்றும் ஏனைய கட்சிகள் விரும்பினால் இருக்கலாம் என்ற நிலையும் மாறி நடைபெறவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி சுரேஸ் அணிக்கு 12 ஆசனங்கள் ரெலோவுக்கு 12 ஆசனங்கள் புளொட்டுக்கு 5 ஆசனங்கள் த.வி.கூட்டணிக்கு 5 ஆசனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.
நெல்லுக்கிறைத்த நீர் வாய்கால்வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசிந்த கதையாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த ஆசன ஓதுக்கீட்டை சரியான தருணத்தில் பயன்படுத்தாவிட்டால் என்கதி அதோ கதிதான் என சங்கரி ஆசனங்களில் ஒன்று இரண்டை விலைக்கு விற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றது.
ஆனால் சங்கரி பணம் வாங்கினாரா? இல்லையா? என்பதை நாம் கட்டியம் கூற வரவில்லை. சில்மிசச் செல்வன் சங்கரிக்கு கிடைக்கப்பெற்ற 5 வேட்பாளர் ஒதுக்கீட்டில் சங்கரியால் கிளிநொச்சி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தம்பி எனப்படுகின்ற தம்பிராஜாவின் மறுமுகம் தமிழ் மக்களுக்கு நிச்சயம் அருவருப்பை தரத்தக்கதும் பொருத்தமற்றதும் என்பதே விடயம்.
இந்தவிடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது. தம்பியின் பின்புலத்தை சங்கரி கருத்தில் எடுக்கவேண்டும். இவ்வாறான ஓர் சர்ச்சைக்குரிய நபரை வேட்பாளராக நிறுத்துகின்றபோது ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அக்கட்சி தெரிவித்திருக்கின்றது. ஆனால் சங்கரி இது மண்டையன் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடமல்ல தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கப்பட்ட இடம் அதை யாருக்கு வழங்குவது என்பது எனது முடிவு என்றுள்ளார்.
காரைநகர் களபூமியைச் சேர்ந்த தம்பி ஒரு ஆட்கடத்தல்காரன். வெளிநாடு அனுப்புவதாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தினை ஏமாற்றியவன். புலிகளுக்கு கொழும்பில் வேலை செய்வதாக கோடிக்கணக்கான பணத்தினை வாங்கிவிட்டு புலிகளுக்கு கம்பி நீட்டியவன். புலிகள் அடிவாங்க தொடங்கியதும் கனடாவிற்கு சென்று அங்கு தன்னிடமுள்ள கோடிக்கணக்கான பணத்தை காட்டி கனடாவில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொண்டவன்.
தம்பியிடம் பணம் கொடுத்த ஒரு சில புலிகள் அந்தப் பணத்தை மீண்டும் பெற முற்பட்டபோது அவர்கள் எவ்வாறு இலங்கை இராணுவத்திடம் மாட்டிவிடப்பட்டார்கள் என்பது பரம இரகசியம். கொழும்பில் தம்பியின் கால் படாத சூதாட்ட நிலையங்கள் இல்லை என்று கூறலாம்.
இதற்கும் அப்பால் சுவாரசியமான விடயம் யாதெனில் வன்னியில் புலிகளிடம் பணத்தினை வாங்கி கொழும்பில் தனது பாதுகாப்புக்காக ஈபிடிபி க்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தவன்.
இப்பேற்பட்ட கடைந்தெடுத்த கழிவை சில்மிசச்செல்வன் சங்கரி தமிழ் மக்களின் பிரதிநிதியாக்க முனைந்திருக்கின்றார். தம்பிக்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக என்ன தகைமை இருக்கின்றது, தம்பியின் பின்புலம் அருவருக்கத்தக்கதே என சங்கரியிடம் கேட்கப்பட்டபோது, தம்பி தேர்தலுக்கு 1 கோடி ரூபா செலவழிப்பான் என கூறினாராம் சில்மிசச்செல்வன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு எதற்கு பணம்? வழமைபோல் உணர்ச்சி ஊட்டும் தேர்தல் விஞ்ஞபனம் ஒன்றை எழுதி வெளியிட்டால் போதுமே மந்தைக்கூட்டம் விடிந்தெழும்பி கண்ணை கசக்கி கொண்டு போய் வீட்டுக்கு கீறீப்போட்டு வரும்தானே.
(சுழியோடி
"வடமாகாணசபைத் தேர்தல்" கேட்கவே தித்திக்கும் ஒரு இனிய ப்தம். எப்போதும் கனவாகவே இருந்து விடப் போகிறதோ என ஏங்கிக் கொண்டிருந்த நியாயமான உணர்வுகளைக் கொண்ட ஒவ்வொரு ஈழத் தமிழனின் மனமும் இப்போ ஓரளவு சமாதனமடைந்திருக்கும்.ஆனாலும் செப்டெம்பர் மாதம் நடக்கவிருக்கும் இம்மகாணசபைத் தேர்தலைப் பற்றிய விமர்சனங்கள் சராமாரியாக சகல பக்கங்களிலும் இருந்து கிளம்பிக் கொண்டேயிருக்கின்றன.
ஈழத்தமிழினத்தின் தனிப்பெரிந்தலைவர் "மேதகு வே.பிரபாகரன்" அவர்கள் ஆயுதமுனையில் அதிகரம் செய்து கொண்டிருந்த காலத்தில் மூச்சு விடத் தயங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று அரசியல் ஞானியராகி அரும்பெரும் கருத்துக்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சர்வாதிகாரத்தின் அழுங்குப்பிடியை தனித்தமிழரின் இராச்சியம் என வர்ணித்த புலம் பெயர்ந்த (புலன் பெயர்ந்த) தமிழர்களோ "தமிழீழமே" தீர்வு அதுவற்ற எதையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூட ஈழத்தமிழர் விரும்ப மாட்டார் என தமக்குத்தாமே ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகள் எனப் பட்டம் சூட்டிக் கொண்டு பல்வேறு நாடுகளில் புலிக்கொடியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்த ஈழப்பிரச்சனை "தனிப்பெருந் தலைவரின்" அமரத்துவத்தின் பின்னாலோரளவி தணிந்து புகைந்து கொண்டிருக்கிறது.
எங்கே அந்தப் புகை தணிந்து தமது சுதந்திர வெறி அணைந்து சாம்பலாகிப் போகுமோ என அஞ்சிக் கொண்டிருக்கும் இந்தப் புலி எச்ச சொச்சங்கள் இப்புகையை ஊதி ஊதி மீண்டும் எரியூட்டுவதற்காக தமது கைக்கூலிகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தின் தானைத் தம்பிகளுக்கு ஈழத்தமிழர்களிடம் விடுதலை எனும் பெயரில் சுரண்டிய பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாவம்,
ஈழத் தமிழ்ப் பகுதிகளில் கால்நூற்றாண்டுக்கு மேலாக தமது கல்வியை இழந்து, உத்தியோகங்களைப் பறிகொடுத்து அகதிகளாக அங்குமிங்கும் ஓடித்திரிந்து விடுதலை இயக்கங்களில் பங்களித்ததின் மூலமாகவும், அதே விடுதலை இயக்கங்களினால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டதன் காரணமாகவும், தமது உயிர்களைப் பறி கொடுத்தவர்கள் போக எஞ்சியுள்ளவர்கள் கொஞ்சம் மூச்சு விட அவகாசம் கிடைத்ததே என எண்ணும் நேரம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் படலத்தை நடத்த முனைகிறார்கள் இப்புலி விசுவாசிகள்.
கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம் !
வடமாகாணத் தேர்தலை நடத்தக்கூடாது என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கும் சிங்கள இனவாத சக்திகளின் இடையூறுகளுக்கு மத்தியில் வெளிநாட்டு அழுத்தங்களைச் சாளைக்கும் முகமாகவோ என்னவோ இலங்கை ஜனாதிபதி இத்தேர்தலை நடத்த முன்வந்துள்ளமை ஒரு முன்னோக்கிய நகர்வு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்திவாரம் இன்றி ஒரு சாதாரண குடிசையக் கூட கட்டுவது கடினம் ஆனால் இவர்களோ அத்திவாரம் இன்றி மாளிகை அமைக்கலாம் எனக் கனவு காண்கிறார்கள்.
இத்தேர்தலினால் அமையப் போகும் மாகாணச்பை எந்த அளவிற்கு அதிகாரம் கொண்டது எனும் விவாதத்தில் ஈடுபடுவதை விட்டு ஒரு சிறிய அளவிலான கட்டமைப்பைக் கொண்ட ஒரு அமைப்பைக் கையிலெடுத்துக் கொண்டு அதனை விஷ்ரிக்கும் வழியைக் கையாண்டால் எம்மினத்தின் எதிர்கால வானத்தில் ஓரளவு ஒளியாவது பிறக்கும்.
1987ம் ஆண்டு நடந்த சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் மறைந்த பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனையின் படி அம்மகாணசபையை ஏற்றுக் கொள்ளும் புத்திசாதுர்யம் கொண்டவராக எம் மேதகு தலைவர் இருந்திருந்தால் இன்று அதிகாரப் பரவலாக்கப்பட்ட ஒரு வடக்குக் கிழக்குக் இணைந்த சட்டசபையின் முதலமைச்சராக அவர் கோலோச்சியிருந்திருக்கலாம்.
தீர்க்க தரிசனமற்ற பார்வையைக் ஒண்டிருந்ததாலும் தன் மக்களின் நல்வாழ்வை விடத் தனது அதிகாரத்தையே பெரிதாக எண்ணியதாலும் இன்று தானும் அழிந்து எமது மக்களின் பெரும்பகுதியையும் அழிவு எனும் படுகுழிக்குள் தள்ளி விட்டுள்ளார்.
இனியாவது எமது இனம் இப்பிழையைத் தவிர்த்து இத்தேர்தலின் மூலம் பெறக்கூடிய அதிக அளவிலான அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு அதை விஸ்தரிக்கும் முயற்சியை மேற்கொள்ளுவதே சாலச் சிறந்ததாகும்.
முதன்முறையாக அனைத்துத் தமிழ்க் கட்ச்சிகளும் இணைந்து ஓரளவு நடுநிலையான ஒரு மிதவாத வேட்பாளரை முதலமைச்சராக்க முயற்சிக்கிறது.
இவ்வேட்பாளரும் எதை எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி தனது மிதவாதத்தனத்தை வெளிக்கொணர்ந்துள்ளார்.
இவரின் இவ்வரசியல் நிலைப்பாட்டுக்கு நாமனைவரும் ஆதரவளித்து ஜக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சுயமரியாதையுடன் ஒரு மாநில ஆட்சி அமைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுப்பது ஒன்றே இன்றைய காலகட்டத்தில் எம்முன்னால் தெரியும் ஒரு சாத்தியமான வழிமுறையாகும்.
அவர் விடுத்த வேண்டுகோளின் படி புலம் பெயர்ந்த தமிழர்களும், எமது தமிழ்நாட்டுச் சகோதரர்களும் எமது இந்தச் சமாதானபூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து இடையூறளிக்கும் வகையில் தனீ ஈழம், தனிநாடு எனும் நிறைவேற முடியாத கோஷங்களைத் தவிர்த்துக் கொள்வது இப்போதைய காலக்கட்டாயமாகும்.
இதை இவர்கள் இனியாவது உணர்வார்களா? தமது சுயலாபத்தின் அடிப்படையிலமைந்த கொள்கைகளைக் கைவிட்டு, நலிந்து போன எம் ஈழத்தமிழரின் வாழ்வைச் செம்மைப்படுத்தும் வகையில் தம்மை நெறிப்படுத்திக் கொள்வார்களா?
சரித்திரத்தில் இவர்கள் எவ்வாறு நினைவு கொள்ளப்படப் போகிறார்கள் என்பது இவர்களின் வசமே உள்ளது.
நல்லையா குலத்துங்கன்
ஈழத்திலிருந்து.
லண்டன் புலிக்கொடி வீரர்களுக்கு பிரிசித்தி பெற்ற இடம். தமிழ் தேசிய ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் ஆளை விட்டால் காணும் என்று திறந்த விசாவிலும், கள்ள விசாவிலும், விசாவே இல்லாது கையை உயர்த்தி வந்த கோழைகள் பலர்தான் இன்று லண்டனில் புலிக்கொடி வீரர்களாக மாறியுள்ளனர். வந்த புதிதில் புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் திட்டித் தீர்த்த இந்த பெருந்தகைகளே, இன்று புலிகள் அழிந்த பின்னரும் புலிகளின் தலைவர் எங்களிடம் போராட்டத்தை தந்து விட்டு போய்விட்டார், நாங்களே இனி தமிழ் தேசியத்தை காக்கும் தூண்கள், தமிழீழத்தை பெறாது நாங்கள் தூங்க மாட்டோம் என்று கூச்சலிட்டபடி, தங்கள் பெரும் ஆயுதமாக புலிக்கொடியை தூக்கியபடி, பகுதி நேர போராளிகளாக இவர்கள் மாறியுள்ளனர். ஆனையிறவு முகாமை புலிகள் வெற்றி கொண்ட பின்னர் புலிகள் பக்கம் தாவிய இந்த புலிக்கொடி வீரர்கள் கல்யாணம், கருமாதி, சாமத்தியவீடு, ஊர் விழா, உலக்கை விழா தவிர்ந்த ஏனைய தமது வெட்டியான நேரத்தில் மட்டும் புலிக்கொடி ஏந்தி ஊர்வலங்களுக்கு போவதே இவர்களின் பொழுது போக்கு புலிக்கொடி போராட்டம். இந்த போராட்த்தில் தொண்டை கிழிய கத்துவதற்காக மட்டும் சில ஆங்கில வார்த்தைகளை தெளிவாக படித்து டிப்பிளமோவும் எடுத்துள்ளனனர். 'அவர் லீடர் பிரபாகரன், வீ வோண்ட் தமிழ் ஈழம்' போன்ற அங்கில வார்த்தைகளில் டிப்பிளமோ எடுத்த இந்த புலக்கொடி வீரர்களில் பலர் வேலைக்கு பேவதே இல்லை! அரச பணத்தில் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவையும் கறந்து சாட்டு மேனிக்கு ஒரு மினிக் கப் அல்லது கடையில் பகுதி நேர வேலை என்று வாழ்க்கை ஓட்டுவார்கள். இந்த பகுதி நேர வேலை கூட அண்மையில் பிரித்தானிய அரசு வேலையற்றோருக்கு கொடுக்கும் கொடுப்பனவுகளில் பல இறுக்கங்களை கொண்டு வந்ததை அடுத்தே செய்து வருகின்றனர். ஆனால் இந்த புலக்கொடி வீரர்கள் பண விசயத்தில் வலு கறார்! வட்டிக்கு கொடுத்தல் பினாமி பெயரில் வியாபாரம் செய்வது போன்ற பல கில்லாடி வேலைகளை செய்து வருகின்றனர்.
இப்படியான ஒரு புலிக்கொடி வீரர்தான் அண்மையில் இலங்கை சென்ற போது இவரது கில்லாடி வேலையாலேயே இலங்கை உளவுத்துறையிடம் மாட்டிக்கொண்டு விட்டார். லண்டனில் வட்டிக்கு பணம் கொடுக்கும் இந்த புலிக்கொடி வீரர் அண்மையில் தன் குடும்ப சகிதமாக வன்னி சென்றுள்ளார். வட்டிக்கு பணம் கொடுப்பது பாவச் செயல் என்பதாலோ என்னவோ தனது பாவங்களை கழுவ ஒரு கோயிலில் நேர்திகடனை முடிக்கவே அங்கு பயணமானார். நேர்த்திக்கடன் எல்லாம் முடிந்து லண்டன் திரும்ப இருக்கையில் இலங்கை உளவுத்துறை புலிக்கொடி வீரரை மடக்கிப் பிடித்தது.
வழமை போல புலம் பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் குய்யோ முறையே என்று கூச்சலுடன் அப்பாவித் தமிழனை மடக்கிய இலங்கை அரசு தமிழரை அழிக்கும் இலங்கை அரசு என்ற தலையங்கத்துடன் செய்திகளை வெளியிட்டனர். லண்டன் வாழ் புலிக் கொடி ஜனநாயக வாதிகளோ உடனே ஐயோ அப்பாவி தமிழர்களை இலங்கை அரசும் இராணுவமும் துன்புறுத்துவதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேணும் என்று ஒப்பாரி வைத்தனர். பிரித்தானிய தமிழனுக்கே இந்த கதி என்றால் இலங்கை தமிழனின் கதி என்ன என்று இந்திய தமிழ் தேசிய விசிலடிச்சான் குஞ்சுகள் ஓலம் இட்டனர். ஆனால் தற்போது உண்மைகள் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்ததும் அனைவரும் ஓட்டுக்குள் போன ஆமை போல அடங்கி விட்டனர்.
நடந்தது இது தான்! கைது செய்யப்பட்ட புலிக்கொடி வீரர் புலிகள் ஊர்வலம் எதற்கும் தவாறது போய் வருபவர். ஜெனிவா முதல் பெல்ஜியம் வரை, பிரித்தானியா கொடுக்கும் வேலையற்றோர் கொடுப்பனவில் இருந்து பெற்ற பணத்தை வட்டிக்கு கொடுத்து வந்த குட்டிக்காசில் பயணம் செய்து வருபவர். இவரிடம் ஒரு அப்பாவி தமிழர் தனது அவசரத்திற்கா குடும்ப சொத்தான நகைகைள் அனைத்தையும் கொடுத்து வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். அந்த அப்பாவியின் கஷ்டகாலம் பணத்தை திருப்பி கொடுக்க சிறுது தாமதமாகி விட்டது. அப்பாவியும் இந்த புலிக்கொடி வீரரிடம் கெஞ்சி மன்றாடி தனது நகைகளை எப்படியாவது வெகு விரைவில் திருப்பி எடுத்து விடுவேன் கொஞ்சம் பொறுங்கள் என்று கேட்டுள்ளார். விடுவாரா இந்த புலிக்கொடி வீரர்! தனது புலி வீரத்தை காட்ட இதுதான் தருணம் என்று தங்க விலை மிக உச்சமாக இருந்த கட்டத்தில் அனைத்து நகைகளையும் விற்று வட்டிக்கு கொடுத்த பணத்தை விட முன்று மடங்கு லாபத்தை பெற்றார்.
அண்மiயில் இந்த புலிக்கொடி வீரர் ஊருக்கு போவதை அறிந்த அந்த அப்பாவி தன் வன்மத்தை தீர்க்க இதை விட வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை உணர்ந்து இலங்கை உளவுத்துறைக்கு புலக் கொடி வீரரை பற்றி நன்றாக போட்டுக் கொடுத்து விட்டார். இந்த அப்பாவி போட்டுக்கொடுத்த முக்கியமான ஒரு விடயம் லண்டனில் புலிகளுக்கு பணம் சேர்த்த முக்கிய நபரின் சகோதரர் தான் இந்த புலிக்கொடி வீரர் என்றும் புலிகளுக்கு சேர்த்த பணத்தில் பெரும் பங்கை இவர்தான் வட்டிக்கு கொடுத்து வருவகிறார் என்று மிக துல்லியமாக தெரிவித்துள்ளார்.
வட்டிக்கு கொடுத்த பணத்தில் அரைவாசியை இப்போது புலிக்கொடி வீரரின் விடுதலைக்கு இலங்கையில் அள்ளிக்கொடுக்க வேண்டி வந்துள்ளதாம். ஆனால் இந்த புலிக்கொடி வீரர் விடுதலை செய்து இங்கிலாந்து வரும் போதுதான் ஆப்பு இன்னும் இறுக்கப் போகிறதாம். பகுதி நேர வேலை பாரத்தபடி பிரித்தானியாவில் வருமானம் போதாது என்று உதவித்தொகை பெற்ற படி ஆயிரக்கக்கான பவுன்ஸ் செலவு செய்து எவ்வாறு குடும்பத்துடன் இலங்கை சென்று வந்தீர்? என்ற கேள்விக்கு புல்ககொடி வீரர் என்ன பதில் கொடுக்க போறாரே தெரியவில்லை. ஆனால் அது மட்மல்லாது இலங்கை உளவுத்துறையும் இவரின் வட்டி விவகாரங்களையும் ஜெனிவா மற்றும் பெல்ஜியம் பயணங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் பிரித்தானிய உளவுத்துறையிடம் கையளித்துள்ளனர்! புலிக்கொடி வீரர் இலங்கையில் இருந்து இலண்டன் திரும்பியதும் மிண்டும் சிறை செல்வதோடு தனது சொத்துகள் அனைத்தையும் பறி கொடுக்க வேண்டிய கட்டாயமும் இதனால் வரலாம்! இந்த புலிக்கொடி வீரர் இழுத்துள்ள ஆப்பு சாதாரண ஆப்பல்ல அகில உலக ஆப்பான ஆப்பு!
‘புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது’ என்பது பழமொழி. இந்தப்பழமொழியை வைத்துத்தான் புலிப் பயங்கரவாதிகள் தமது சுயலாபநோக்கங்களை நிறைவேற்றி வந்திருந்தார்கள். ஆனால், புலிகள் பசித்தால் புல் அல்ல புண்ணாக்கும் தின்பார்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சொல்வதற்காகத்தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.‘கடைசிவரை விலைபோக மாட்டோம், விட்டுக்கொடுக்கமாட்டோம்’ என தமிழ் மக்களுக்கு வீர வசனங்கள் சொல்லிவந்தனர் புலிகள். ஆனால், பிரபாகரன் கோவணத்துடன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டதன் பின்னர் மஹிந்தரின் கோடிக்குள் பின்கதவால் நுழைந்த புலம்பெயர் புலிகள் புண்ணாக்கு தின்கின்றார்கள் என்பதே உண்மை.
புலிகள் இலங்கைக்குச் செல்வதும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுடன் உறவாடுவதும் தவறான விடயம் அல்ல. ஆனால், புலிகள் பின்கதவால் சென்று அரசிடம் பெறவேண்டியதை தங்களது சுயலாபங்களுக்காக பெற்றுக்கொண்டு, தொடர்ந்தும் மக்களை மந்தைகளாக்க முயல்வதும் அவர்களை அரசுக்கு எதிரான மாயையினுள் வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்குண்டிருந்த இலங்கை, பல்லாயிரக்கணக்கான உயிர்த்தியாகங்களால் விடுபட்டிருக்கின்றது. அதாவது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தாம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றோம் என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்களின் இந்த மன மாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாத புலம்பெயர் புலிகள் தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தமது பிரச்சாரப் பீரங்கியை இயக்கிக்கொண்டே இருக்கின்றனர்.
இவ்வாறான அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களில் ஒன்றான தமிழ்சீஎன்என் எனப்படும் தளத்தை இயக்கிக்கொண்டிந்தவர் அல்லது தொடர்ந்தும் இயக்கிக்கொண்டிருப்பவர் கண்ணன் என அழைக்கப்படுபவர். இவர், தற்போது மஹிந்தரின் கோடிக்குள் நுழைந்துள்ளார். இவரை தொடர்பு கொண்டு இலங்கை நிலவரங்கள் தொடர்பாக கேட்டேன்.
இலங்கை உலகிலே சொர்க்கம் என்று சொல்லப்பட்டதை உணர்ந்துள்ளேன், இது ஒரு சொர்க்காபுரிதான் என்றார் தமிழ்சீஎன்என் கண்ணன்.
நீங்கள் இந்த நாட்டுக்கு எதிராக செய்த பிரச்சாரங்கள் தொடர்பாக என்ன கருத்து எனக்கேட்டேன், நான் செய்த தவறுக்காக வருந்துகின்றேன் என்றார்.
வடக்கிலே சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும், பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரச்சாரம் செய்துள்ளீர்கள், நிலைமைகள் எவ்வாறுள்ளது என்றேன் : நாவற்குளி பிரதேசத்தில் சுமார் 35 சிங்கள மக்கள் உள்ளனர். அவர்கள் இப்பிரதேசத்திலே முன்னர் வாழ்ந்தவர்கள் அது தவிர இங்கு எந்த குடியேற்றமும் இல்லை. பௌத்த கோவிலும் இல்லை. அவ்வாறு இருந்தால்தான் அதில் என்ன தப்பு என்றும் கேட்டார். இவையெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும், புலம்பெயர் தேசத்தில் தொடர்ந்தும் மக்களின் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலிப்பினாமிகளின் பொய்பிரச்சாரங்கள் என்றார்.
மேலும் தலதா மாளிகைக்கு சென்று சங்கைக்குரிய தேரரை சந்தித்ததாகவும் அவரது காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாகவும் கூறிய கண்ணன், பௌத்த பிக்குகள் கருணை உள்ளம் கொண்ட அன்பான மனிதர்கள் என்றும் அவர்களிடமுள்ள அன்பும் கருணையும் தமிழ் பூசகர்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், நீங்கள் தமிழ் மக்களிடம் விதைத்த விஷம் இன்னும் அகற்றப்படவில்லை அதிதுடன் இலங்கை அரசு தொடர்பாக தமிழ் மக்களுக்கு சொன்ன அவதூறான செய்திகள் தமிழ் மக்களின் மனங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. எனவே, நீங்கள் எனக்கு கூறுகின்ற இந்தக்கருத்துக்களை மக்களுக்கு எப்போது தெரிவிக்கின்றீர்கள் என்றேன். தலையை சொறிய ஆரம்பித்து விட்டார். ஏன் இந்த தயக்கம் என்றேன். இல்லை இல்லை இதை மக்களுக்கு பெரியதாக சொல்ல வேண்டும் என்றார்.
பெரியதாக என்றால் என்ன? என்றேன். உலகத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் அச்செய்தி சென்றடையக்கூடியவாறு சொல்லவேண்டும் என்றார்.
அதற்குரிய ஏற்பாடுகளை செய்யவா எனக்கேட்டபோது வேண்டாம்.. வேண்டாம்.. என்னை இங்கு அழைத்து வந்தவர்களிடம் நான் கேட்கவேண்டும் என்றார் கண்ணன்.
தமிழ் மக்களை தாங்கள் தவறாக வழிநாடாத்தினோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் கண்ணன் , மக்களுக்கு காலம்கடந்தேனும் உண்மையை சொல்வதற்கு தயங்குவதை அவதானிக்க முடிகின்றது. கண்ணனின் இந்தச் செயற்பாடு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றவே திட்டமிட்டுள்ளனர் என்பதுடன் கண்ணன் தீய நோக்கோடு இலங்கையினுள் நுழைந்துள்ளான் என்ற முடிவுக்கு வரவிடுகின்றது.
இவ்வாறான தீயநோக்கோடு செயற்படுகின்றவர்கள் விடயத்தில் இலங்கை அரசு அவதானமாக இருக்கத் தவறும் பட்சத்தில் 30 வருடங்கள் பயங்கரவாதத்தின் பிடியில் மக்கள் அனுபவித்த அதே அவலங்களை மீண்டுமொருமுறை அனுபவிக்க நேரிடலாம்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் தமிழ் மக்களுடன் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களை முடக்குவதற்கு புலம்பெயர் புலிகள் பல்வேறு உத்திகளை மேற்கொண்டுவருகின்றனர். அவ்வுத்திகளில் பிரதானமானது தமது முகவர்களை குறித்த திட்டங்களுள் நுழைப்பது. காரணம் புலிகள் ,இந்திருக்கின்ற ஒரு செயற்றிட்டத்தில் சாதாரண பொதுமக்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்பது புலிகளுக்கு தெரிந்த விடயம்.
எனவே புலிகளையும் மக்களையும் இணைத்து நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என்ற உண்மையை அரசு உணர்ந்து கொண்டு புலிகளை தனிமைப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.
புலிகளின் மேற்படி வியுகத்தை முறியடிக்கும் விடயத்தில் இலங்கைப் புலனாய்வுத் துறையின் சேவை மிக அத்தியாவசியமாகின்றது. இலங்கையினுள் நுழைகின்ற புலம்பெயர் தமிழர்களின் கடந்தகால மற்றும் தற்காலச் செயற்பாடுகள் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். புலம்பெயர் தேசத்திலில் புலிச்செயற்பாட்டாளர்களாக இருந்து இலங்கையின் இன நல்லிணக்க செயற்பாடுகளினுள் இணைய விரும்புகின்றோம் என வருகின்றவர்களை முதலில் புனர்வாழ்வு நடைமுறைக்கு உட்படுத்திய பின்னரே சாதரண மக்களுடன் இணைய அனுமதிப்பது சிறந்தது.
புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசினால் இன நல்லிணக்க இணைப்பாளர்களாக, செயற்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிலர் தெரிந்தோ தெரியாமலோ துணைபோகின்றனர் அல்லது ஏமாறுகின்றனர்.
இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, புலிகள் என்றுமே தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும் அவர்கள் மரபுவழி படையணியையும், கடற்படையுடன் கூடிய விமானப்படையையும், பயங்கரமானதோர் தற்கொலைப்படையணியையும் வைத்திருக்கின்றார்கள் என இலங்கை இராணுவ வீரர்களை உளரீதியாக நலிவடைச் செய்து , புலிகள் தோற்கடிக்கப்படமுடியாதவர்கள் என்ற புலிகளின் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்த சிங்கப்பூரினைத் தளமாக கொண்டுள்ள புளுகுமூட்டைக்கு புலிகள் ஓர் பப்படம் என்பதும் பப்படத்தை இறுகப்பிடித்தால் அது நொருங்கிவிடும், நொருங்கினால் சந்தர்ப்பவாத அரசியலுக்கு தளம் அற்றுப்போய்விடும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த கால ஆட்சியாளர்கள் புலிப்பப்படத்தை மென்மையாக கையாண்டார்கள் என்பது தெரியாமல் போயிருந்தது கவலைக்குரியதே.
குறிப்பிட்ட புளுகுமூட்டையே கண்ணனை இலங்கைக்கு கொண்டுவந்தாக அறியக்கிடைக்கின்றது. இவர் இலங்கை புலனாய்வுத்துறையின் கண்ணில் மண்ணைத்தூவி கணணனை நேரடியாக ஜனாதிபதியின் இன நல்லிணக்க பிரிவினருடன் இணைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
கண்ணனின் பின்புலம் தெரியாமல் கண்ணன் புலிகளுடன் எந்த தொடர்பும் அற்றவர் என்ற நம்பிக்கையில் நேரடியாக ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்டாரா? அன்றில் தெரிந்து கொண்டு வேறு ஏதாவது லாபங்களுக்காக இணைக்கப்பட்டாரா? அவ்வாறாயின் அந்த லாபங்கள் தனிப்பட்டவையா ? தேசிய நலன் சார்ந்ததா?
கண்ணன் புலிகள் இயக்கத்தில் தான் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டவர் என்கின்றார். புலிகள் இயக்கத்தில் தான் இருந்தபோது அவ்வியக்கத்தினர் மேற்கொண்ட மனித விரோத செயல்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவ்வியக்கத்தை விட்டு வெளியேறிச் சென்றேன் என்கின்றார். ஆனால், அவர் சுமார் 1995 களிலிருந்து தென்கிழக்காசிய நாடுகளில் புலிகளின் ஆட்கடத்தல் காரர்களுடன் இணைத்து செயற்பட்டு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
அக்காலகட்டத்தில் புலிகளின் விநாயகம் அணியின் முக்கியஸ்தரான பாண்டியனுக்கு சுமார் இரண்டரைக்கோடி பணம் கொடுத்ததாகவும் அந்தப்பணத்தை கொண்டு பாண்டியன் கனடாவில் தனது உறவுக்காரர் ஒருவரின் பெயரில் வீடு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும் பலரிடம் தெரிவித்துள்ளார். பாண்டியனிடம் இந்த பாரிய தொகை கொடுக்கல்வாங்கலை மேற்கொள்வதற்கு பண்டியனுடன் கண்ணன் வைத்திருந்த உறவு என்ன? குறித்த பணம் புலிகளுடையது என்றும் புலிகளின் பணத்தை தென்கிழக்காசியாவில்; கையாண்டவர்களில் கண்ணனும் ஒருவர் என்றும் பேசப்படுகின்றது.
மேலும், கண்ணன் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பிரயாண முகவர் நிலையம் ஒன்றை நடாத்திவந்தாகவும், அந்நிலையத்தில் புலிகளுக்கான புலனாய்வு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதாக பேசப்படுகின்றது.
2004ம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ‘கப்டன்’ தர அதிகாரி ஒருவர் , புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நுழைய முற்பட்டபோது, ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவத் கப்படனை கையாண்டது கண்ணன் என்றும் அவரை புலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டுவை சந்திக்க அழைத்துச் சென்றபோதே கப்படன் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கப்டனின் கோப்பை புரட்டினால் கண்ணனுக்கு புலிகளுடனான தொடர்பு தொடர்பில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரே தமிழ்சீஎன்என் எனும் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னணி நெடியவன் குழு என நம்பப்படுகின்றது. இணையத்தளைத்தினை மக்கள் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதற்கு கண்ணன் அயராது உழைத்தார். தமிழ் இளைஞர் யுவதிகளின் முகப்புத்தகங்களினுள் சென்று மில்லியன்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்தார். இம்மின்னஞ்சல் சேகரிப்புக்கு புலம்பெயர் தேசத்தில் நெடியவன் கட்டுப்பாட்டிலுள்ள இளையோர் அமைப்புக்கள் உதவியதாகவும் அறியக்கிடைக்கின்றது. குறித்த மின்னஞ்சல்முகவரிகளுக்கு நாளாந்தம் தமது பொய்பரப்புரைகளை அனுப்பிவந்தார் கண்ணன். அத்துடன் தமிழ்சீஎன்என் இணையதத்தின் நடாத்துனராக தன்னை அறிமுகப்படுத்திய அவர் பல்வேறு தொடர்புகளை உருவாக்கி கொண்டதுடன் அத்தொடர்புகள் ஊடாக அரசுக்கு எதிரானது மாத்திரமல்ல நெடியவன் குழுவிற்கு எதிராளிகளான விநாயகம் குழுவிற்கும் எதிரான பிரச்சாரங்களையும் மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் கண்ணன் புலிகளின் ஊடுருவலாளனாக அல்லாமல் நல்ல நோக்கத்துடன் இலங்கை வந்துள்ளாராகவிருந்தால், அவர் தனது தமிழ்சீஎன்என் இணையத்தளம் ஊடாக இலங்கையில் தனது அனுபவங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் அத்துடன் , தான் எத்தனை மின்னஞ்சல் முகவரிகளுக்கு போலிப்பிரச்சாரங்களை அனுப்பி வந்தாரோ அத்தனை முகவரிகளுக்கும் தனது தற்போதைய மனமாற்றத்தையும் தான் கண்டுகொண்டதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்துக்களையும் உண்மைகளையும் தொடர்ச்சியாக தெரியப்படுத்தவேண்டும்.
வவுனியா தாண்டிக்குளத்தில் கடந்த இரு வாராங்களுக்கு முன் (16.05.2013) ஒரு தாய் தன் மூன்று சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை (4 வயது, 3வயது, 1வயது) கிணற்றில் வீசி எறிந்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இச் சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்துக்கு சில அரசியல்வாதிகளும், மக்களும் திரண்டனர். அந்த அளவு இச் செய்தி வவுனியாவில் பெரும் சூடு பிடித்தது. அவ்விடத்துக்கு சிறி ரெலோ கட்சியின் தலைவர் திரு.உதயராசா என்ற அரசியல்வாதி விரைந்து சென்றுள்ளார். ஊர் மக்கள் பலர் அவ்விடத்தில் கூடி வேடிக்கை பார்ப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர். ஆனால் பிரச்சினை நடப்பதற்கு முன் எவ்வித செயற்பாடுகளையும் இவர்கள் செய்ய முன்வரவில்லை.
இது தொடர்பான மனதை உலுக்கும் புகைப்படங்கள் பல இணைய தளங்களிலும், செய்தித் தாள்களிலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் செய்திகளில் பிரதேச செயலகம் மற்றும் அதனுள் இயங்கும் பெண்கள் அமைப்புக்கள், சிறுவர் அமைப்புக்கள் உட்பட சிறுவர் காப்பகங்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் 27.05.2013 திங்கட்கிழமை வீரகேசரி பத்திரிகையில் பிரதேச செயலாளரால் இச் செய்திக்கு தாங்கள் காரணம் இல்லை என்றும், 5 வருடங்களாக குறித்த பெண்ணான சந்திரகுமாரி மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், அவருக்கு தாங்கள் உதவ முன்வந்திருந்ததாகவும் ஆனால் காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு தற்கொலை முயற்சியிலும், கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன் மேலும் அவர் தெரிவிக்கையில் ஊடகங்கள் உண்மையை அறியாது தம் மீதும், தம் அலுவலகம் மீதும், அலுவலகர்கள் மீதும் குற்றஞ்சாட்டியதாகவும் கூறியுள்ளார்.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பான உண்மைகள் பலவற்றை நாம் இங்கு முன்வைக்கி்ன்றேன். அவற்றை முன் வைப்பதனூடாக இச் சம்பவத்தின் உண்மைத் தன்மைகளையும், சமூக நிறுவனங்களின் போலித்தனமான அக்கறைகளையும் வெளிக் கொணரலாம் என்று நினைக்கின்றேன்.
பிரதேச செயலாளரான திரு.சிவபாதசுந்தரம் குறிப்பிட்ட செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் காணப்படவில்லை. உண்மைத் தன்மைகளை மறைத்து தம் மீதுள்ள குற்றத்தை திசை திருப்ப முனைகின்றார். நடந்த சம்பவங்கள் அவருடைய அலுவலகத்திலிருந்து எம்மால் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணாண சந்திரகுமாரி சம்பவம் நடைபெறும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் வவுனியாவில் உள்ள பிரசித்தி பெற்ற சிறுவர் காப்பகங்களுக்கு சென்று தம் பிள்ளைகளை பொறுப்பேற்குமாறு கேட்டிருக்கின்றார். ஆனால் அந் நிறுவனங்கள் பெற்றோர் உள்ள குழந்தைகளை தாம் பொறுப்பேற்க முடியாது என்று தட்டிக் கழித்திருக்கின்றனர். அவ்வேளையிலும் மன்னார் வீதியில் அமைந்துள்ள ஓர் காப்பகத்தில் இரண்டு மணி நேரமாக தன் பிள்ளைகளின் மறு வாழ்வுக்காக போராடியிருக்கின்றார். அனால் அங்கும் அவர்களுடைய சட்டங்கள் இப் பெண்ணுக்கு எதிராகவே காணப்பட்டதால் அங்கும் ஏமாற்றத்துடனேயே திரும்பியதாக அவரை மனிதாபிமான முறையில் இலவசமாக அங்கு ஏற்றிச் சென்ற ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
பின்பு அவ் ஆட்டோ உரிமையாளர் கூறிய அறிவுறுத்தலின் படி அப் பெண் கிராம சேவையாளரிடம் சென்று பிரச்சினையை கூறியுள்ளார். அவர் பிரதேச செயலகத்தக்கு செல்லுமாறும், சிறுவர் பிரிவு உத்தியோகத்தரிடம் செல்லுமாறும் அறிவுறுத்தியிருக்கின்றார். அடுத்த நாளே அப் பெண் பிரதேச செயலகத்துக்கு இறுதி முயற்சியாக விரைந்திருக்கின்றார். அங்கு சிறுவர் பிரிவு பொறுப்பாளர் திரு.கனடி, பெண்கள் பிரிவு பொறுப்பாளர் திருமதி ஜெயசித்திரா ஆகியோர் இதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் இவரையும், இவருடைய குழந்தைகளையும் காட்டி நகைத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பிரதேச செயலாளரான திரு.சிவபாதசுந்தரத்திடம் நேரடியாக அப் பெண் பிரச்சினையை முன்வைத்த போது அவரை பேசியிருக்கின்றார். அவ் வேளை அப் பெண் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தாம் தற்கொலை செய்வதாக கூறியிருக்கின்றார். ஆனால் அதற்கு அங்கிருந்த பெரு மதிப்பு மிக்க ஊழியர்கள் சிறிதும் சிந்திக்காமல் முதலில் அதைச் செய் என்று கேலி செய்திருக்கின்றனர். இச் சம்பவம் உண்மையில் நடைபெற்றதாக பிரதேச செயலக அலுவலர் ஒருவர் தெரிவித்து கவலைப்பட்டார்.
இத் தொடர் தோல்விகளாலும், தொடர் கேவலங்களாலும் பாதிக்கப்பட்ட அப் பெண் தற்கொலை மற்றும் கொலை முயற்சிக்கு தூண்டப்பட்டிருக்கின்றார் என்பது அறியப்படுகின்றது. கொலை செய்தவரை விட அக் கொலைக்கு தூண்டுகோலாக இருந்தவரே பெருங்குற்றவாளி என்று சட்டம் கூறுகின்றது. அவ்வாறாயின் இங்கு முதற் குற்றவாளி யார்?
இங்கு எமக்கு கிடைக்கப்பட்ட செய்திகளின் படியும், பிரதேச செயலாளர் குறிப்பிட்ட செய்திகளின் ஊடாகவும் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அதை இங்கு முன்வைக்கின்றோம்.
5 வருட காலமாக சந்திரகுமாரி என்ற அப் பெண் மன நோய் பாதிக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார். அவ்வாறானால் அப் பெண் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தான் தன் மூன்று பெண் பிள்ளைகளையும் பெறெடுத்தாரா?
அந் நிலையில் குழந்தைகளை பெற்றெடுத்திருந்தால் அவரது கணவர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தன் செக்ஸ் உணர்வை தீர்த்திருக்கின்றாரா? அப்படியானால் அவருக்கு என்ன தண்டனை?
இறந்த பிள்ளைகளில் மூத்த பிள்ளைக்கு வயது 4. அப்படியானால் அப்பிள்ளை பிறக்கும் போது சந்திரகுமாரி மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பது பிரதெச செயலாளரின் கருத்து. இதை வைத்தியர்கள் கணவரிடம் அறிவிக்கவில்லையா? என்றால் இதில் ஆழ்ந்திருக்கும் மர்மம் என்ன?
தன் பிள்ளைகள் பட்டினியால் பாதிக்கப்பட்டு இருந்த போது ஒரு வாரமாக தன் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக போராடிய நிலையை பைத்தியம் என்று கொள்ளலாமா?
ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால் காப்பகங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுக்குச் சென்று இத்தகைய நிலையில் தன்னந்தனியாக போராட முடியுமா?
குழந்தையை கிணற்றில் வீசி இறந்த போது விளையாட்டுப் பொருட்கள் சில கிணற்றில் கிடந்தன. முதலில் கிணற்றில் அவை வீசப்பட்டு பிள்ளைகளின் பதட்டத்தை போக்கியிருக்க முனைந்திருக்கலாம். இது ஒரு பைத்தியம் செய்யக்கூடிய வேலையா?
இவர் உண்மையிலேயே மன நிலை பாதிக்கப்பட்டவராக இருந்திருந்தால் பிள்ளைகளின் நன்மை கருதி உடனடியாக பிள்ளைகளை பொறுப்பேற்க ஏன் குறித்த நிறுவனங்கள் முன்வரவில்லை? கூடியிருந்த அயல் மக்கள் இப் பெண்ணின் நிலை மோசம் என்று கருதியிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருப்பர். இவற்றிலிருந்து உண்மையில் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதை அறியலாம். ஆனால் அவர் உளவியல் ரீதியாக தற்போது பாதிக்கப்பட்டிருப்பதற்கு மேற்குறிப்பிட்ட அனைவருமே காரணகர்த்தாக்கள் ஆவர்.
இவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று எங்கு தாம் குற்றவாளி இல்லை என்று கூறினாலும் சமூகம் ஏற்கப்போவது இல்லை.
இவற்றை ஆராய்கின்ற போது பிரதேச செயலாளரும், உதவி பிரதேச செயலாளரும், மற்றும் பொறுப்பான பதவியில் உள்ள அதிகாரிகளும் பாரிய குற்றம் நிகழ்வதற்கு காரணமாக இருந்துவிட்டு இப்போது தம் பதவியை பயன்படுத்தி வழக்கை திசை திருப்புகின்றனர்.
எனவே உயர் அதிகாரிகள் இப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும், தான்தோன்றித்தனமாக தம் வேலைத் தளங்களை விபச்சார பூமியாக்கிக் கொண்டிருக்கும் சீர்கெட்ட அசர அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோருகின்றோம்.
இது போன்ற ஒரு கேவலமான நிலை இனி இவ் இலங்கைத் திருநாட்டில் நடைபெறாமல் இருக்க வேண்டாம் என்றால் இத்தகைய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
அரசியல்வாதிகள் வெறும் கண்துடைப்புக்காக இருக்கின்றனர். குற்றம் செய்ததாக காட்டப்பட்டுள்ள பெண்ணின் கணவர் சிறி ரெலோவுடன் நெருங்கிய உறவில் உள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவ்விடத்துக்கு அக் கட்சியின் அமைப்பாளர் சென்றதன் மர்மம் என்ன? இதையும் அரசு கண்டறிய வேண்டும்.
5 பிள்ளைகளை பெற்றெடுத்தவருக்கு பிள்ளைகளை வளர்க்க முடியாமல் இன்னொரு திருமணம். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
இத் தற்கொலை முயற்சியின் பின்னாலும், கொலையின் பின்னாலும் பெரும் மர்மம் ஒழிந்திருப்பது உண்மை. இவ் வழக்கில் பொலிசார் நீதியாக நடந்து கொண்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.
இச்சம்பவம் பற்றி செய்தி வெளியிட்டுள்ள பிரதேச செயலாளர் கிரவல் குவாரி, கருங்கல் குவாரி என்று எடுத்து பல சொத்துக்களை சேர்த்துள்ளார் மக்கள் பேசுகின்றனர். இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆராய வேண்டும். அரச கேள்விகள் இவர்கள் ஊடாக வெளியே விற்கப்படுவதாகவும் தெரிவுக்கப்படுகின்றது. இது தொடர்பான கட்டுரையை ஆதாரங்களுடன் வரும் வாரம் வெளியிடுகிறேன்.
---சித்தன்---


தம்மை அர்ப்பணிக்கிறதாம் தமிழ்தேசியக் கூட்டமைப்பு....!இலங்கையில் இடம்பெற்ற அத்தனை அவலங்களுக்கும் வித்திட்டது இந்திய அரசும் அதன் புலனாய்வுத்துறையான றோ வும் என்பது மக்கள் மனதிலிருந்து என்றும் அகலாத வடு. 1980 களின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம் எனும் சீனி மிட்டாயை திணித்தனர். இந்தியாவின் பசப்பு வார்த்தைகளை நம்பிய வடகிழக்கு இளைஞர் யுவதிகள் இந்தியா கபடநோக்குடன் வழங்கிய இராணுவப் பயிற்சிகளை பெற்றுக்கொண்டதுடன் இலங்கைக்கு எதிராக இந்தியா வழங்கிய ஆயுதங்களையும்தம் கைகளில் ஏந்தினர். ஒரு நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டிய இளைஞர் சமூகத்தை அந்த நாட்டுக்கு எதிராக போராடத் தூண்டி, ஆயுதங்களையும் ஆயுதப்பயிற்சிகளையும் வழங்கிய வரலாற்றுத் துரோகத்திலிருந்து இந்தியா ஒருபோதும் விடுபடமுடியாது!!
இந்தியா தமிழீழம் என்ற வார்த்தையை வெளியே தெரிவித்திருந்தாலும் நிபந்தனையுடனேயே பயிற்சிகளையும் ஆயுதத்தையும் வழங்கியது. என்ன அந்த நிபந்தனை? "இலங்கை அரசு தமிழீழத்தை உங்களுக்கு தந்தாலும் , அதை நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது!" இலங்கையிலே தமிழீழம் மலர்ந்தால் அது இந்தியாவின் இறைமைக்கு பாதிப்பாக அமையும் என்பது அந்த நிபந்தனைக்காக கூறப்பட்ட காரணம். ஆனால் இந்த விடயம் சாதாரண போராளிகளுக்கோ, மக்களுக்கோ கடைசிவரை சொல்லப்படவில்லை. ஏன்? இன்றும் தமிழக அரசியல்வாதிகள் , இலங்கைத் தமிழருக்கு இறுதித் தீர்வு "தமிழீழந்தான்" என்கின்றனர். இது கேலிக்குரியவிடயம்.
இந்தியாவின் இந்தக் கபடநாடகத்தை தமிழ் அமைப்புக்களிலிருந்த சிலர் உணரத் தொடங்கினார்கள். இந்தியா தமிழ் மக்களை அதாள பாதாளத்தில் தள்ளப்போகின்றது என்பதையும் , அந்த அபாயத்திலிருந்து தமிழ் மக்கள் மீள வேண்டுமானால், போராட்டம் சிறந்த பாதையில் செல்லவேண்டுமானால் இந்தியாவின் பொறியிலிருந்து விடுபட்டு இயக்கங்கள் சுயமாக தமது போராட்டத்தை முன்னெடுக்வேண்டும் என்றும் இந்தியாவின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்பட முடியாது என்றும் முடிவு செய்தார்கள். அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. (இது இயங்கங்களிலிருந்த ஒரு சில முன்நோக்கு கொண்டோரால் மாத்திரம் முயற்சிக்கப்பட்டது என்பதும் ஏனையோர் இன்றும் இந்தியாவின் முள் தின்னும் ஏவல் நாய்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
தமது தேவைக்காக வளர்க்கப்பட்ட தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்தும் தம் கைப்பொம்மைகளாக இருக்கப்போவதில்லை என்பதை ஆபத்தாக உணர்ந்த இந்தியா இவ்வியக்கங்களை அழித்தொழிப்பதை விட வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தது. இயங்கங்களிடையே உட்கட்சி முரணபாடுகளை தோற்றுவித்ததுடன் நின்று விடவில்லை. மேலும் சகல இயக்கங்களுக்கும் எதிராக புலிகளை ஏவியது. விடுதலை அமைப்பாக நின்ற புலிகள் இயக்கம் பாசிசக்கொள்கைளை வரிந்து கட்டியது. ஏகப்பிரதிநிதித்துவ மோகம் கொண்டு சகல இயக்கங்களையும் தடைசெய்து அதன் உறுப்பினர்கள் கொடூரமாக கொன்றொழித்தது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டது. போராட்டம் பயங்கரவாதமாக மாற்றம் பெற்றது.
பயங்கரவாதத்தை இலங்கையில் அழித்தொழிக்க உலக நாடுகள் அணிதிரண்டன, வல்லரசான சீனாவும் நட்பு நாடான பாகிஸ்தானும் இதற்குத் தனது உச்சகட்ட ஒத்துழைப்பை வழங்கின. சீனா, பாக்கிஸ்தானுக்கு போட்டியாக இந்தியா போருக்கான தனது சக்திக்கு மீறிய உதவிகளையும் இலங்கைக்கு வழங்கியது. ஆனால், இந்தியா இலங்கைக்கு உதவி செய்ததன் நோக்கத்தை இலங்கை மக்களும் அதன் அரசாங்கமும் உணராமல் இல்லை.
இலங்கையிலே புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டமையால் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பை விட இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பு பேரிழப்பாகும். இந்தியா எத்தனை உத்திகளை மேற்கொண்டாலும், இலங்கை அரசும் அதன் மக்களும் இந்தியா இலங்கைக்கு செய்த துரோகங்களை மறப்பதற்கு தயாராக இல்லை. இந்தியாவுடனான தொடர்பினை துண்டிக்கவேண்டும் என்றும் மாறாக சீனா பாகிஸ்தானுடான உறவை மேம்படுத்தவேண்டும் என்றும் அரசின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
இந்தியா இலங்கையினால் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்து கொண்டு , தனது காலை தொடர்ந்தும் இலங்கையில் பதித்து வைத்துக்கொள்வதற்காக தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கின்றது. அதன் பிரகாரம் தற்போது ‘இலங்கையில் மண்ணுக்காக போராடும் அமைப்பு’ எனும் பெயரில் புதிய அமைப்பொன்றை உருவாக்க முனைகின்றது. இந்த அமைப்பு எதிர்வரும் வாரங்களில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக நம்பப்படுகின்றது. இதற்கான மேற்பார்வைகளை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் துணைத்தூதுவர் மகாலிங்கம் மேற்கொள்வதாக அறியக்கிடைக்கின்றது.
இந்தியாவினால் தயாரிக்கப்படுகின்ற புதிய சீனி மிட்டாயை தமிழ் மக்கள் மத்தியில் விற்பனை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகின்றது. இந்தச் சீனி மிட்டாய் வலிகாமம் மக்களை இலக்காக கொண்டதாக உள்ளது.
‘வலிகாமம் மக்களின் காணிகளுக்காக போராடுவோம். அவர்களுக்காக 5000 வழக்குகள் பதிவு செய்வோம்’ என்றெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் கூறப்படுகின்றது. அதற்கு பின்னணியில் மேற்படி அமைப்பு உள்ளது. வலிகாமம் மக்களின் காணியில் என்னடா இந்தியாவுக்கு இவ்வளவு அக்கறை என்ற கேள்வி உங்களிடம் எழலாம். காரணம் இல்லாமல் இல்லை.
இலங்கை அரசாங்கம் யாழ்பாணத்தின் பாதுகாப்பு வலயத்தை விஸ்தீரணம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன் நிமித்தம் வலிகாமம் வடக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களிலுள்ள காணிகளை உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது. அந்தக்காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு இராணுவ முகாம் விஸ்தரிக்கப்பட்டால், அங்கே இந்தியாவை கண்காணிப்பதற்கு சீனாவிற்கு அனுமதி வழங்கப்படலாம் என இந்தியா அச்சம் கொள்கின்றது.
எனவே இதை தடுப்பதானால் இராணுவ முகாம் விஸ்தரிப்புக்கு காணி கிடைக்கப்பெறுவதை தடுக்க வேண்டும் எனக் கருதுகின்றது இந்தியா. எனவே ஐயாயிரம் அல்ல, ஐம்பதாயிரம் வழக்குகளையும் முடிந்தால் தாக்கல் செய்யும். இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகின்ற நன்மை எதுவும் இல்லை.
ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு கல்லில் இரு பெரிய மாங்காய்கள். ஒன்று எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்களின் காணிக்காக போராடுகின்றோம் என வாக்குகளை அபகரித்து ஆசனங்களைக் கைப்பற்றி தொடர்ந்தும் கொழும்பில் உல்லாசம் அனுபவிக்கலாம்..... இரண்டாவது ஐயாயிரம் வழக்குக்கு என இந்திய அரசிடம் பண சூட்கேசுகளை பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல தமது எஜமானர்களுக்கு விசுவாசத்தை உறுதி செய்யலாம்....











