லொறி இடித்து தள்ளியதில் இராணுவ வீரர் ஒருவர் பலி மேலும் ஒருவர் படுகாயம்.
வீதியை விட்டு விலகிய லொறியென்று மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இன்றிரவு கனகராஜன் குளப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தங்கொட்டுவ பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுண்ணாம்பு ஏற்றிச்சென்ற லொறியொன்றே இவ்வாறு விபத்தக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தையடுத்து லொறியின் சாரதி வவுனியாப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



0 comments
Write Down Your Responses