கண்ணிவெடியகற்றும் ஊழியர் யாழ்ப்பாணத்தில்; காணாமல் போயுள்ளார்.
கண்ணிவெடியகற்றும் ஹாலோ டிரஸ் நிறுவன ஊழியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் கடந்த சனிக்கிழமை முறையிட்டுள்ளார். இதில் சற்குணராஜா சாரங்கன் வயது 22 என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 12ஆம் திகதி வீட்டிலிருந்து வேலைக்காக புறப்பட்டுச் சென்றதாகவும் பின்னர் வீடு திரும்பவில்லையென்றும் முறைப்பாட்டில் தாயார் தெரிவித்துள்ளார்.



0 comments
Write Down Your Responses