யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் தாக்கப் பட்டதைக் கண்டித்து இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு
இனந்தெரியாத நபர்களால் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஈ.என்.ரி வைத்தியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.கிளையினர் இரண்டு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். நேற்றும் இன்றும் இவர்கள் இப்பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதேவேளை இச்சம்பவத்தில் காயமடைந்த வைத்தியரின் உயிருக்கு எந்தவிதமான சேதமும் இல்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.



0 comments
Write Down Your Responses