மருதமுனைக் கடலில் 13 அடி முதலை சிக்கியது
கல்முனை, மருதமுனை பிரதேச கடற்கரையில் 13 நீளமான முதலை ஒன்று பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலிலிருந்த குறித்த முதலை இன்று கரைக்கு வந்திருக்கலாம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். பிடிபட்டு சில மணி நேரங்களில்இந்த முதலை உயிரிழந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அள்ளுண்டு ஆற்றிலிருந்து கடலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் இந்த முதலை சென்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.



0 comments
Write Down Your Responses