துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலாவது இடத்தை பிடித்தார் மைக்கல் கிளார்க்!!
அவுஸ்ரேலியாவின் மைக்கல் கிளார்க் சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.அடிலெய்டில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மைக்கல் கிளார்க் சிறப்பாக விளையாடி 230 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலமே இவரால் இவ்விடத்துக்கு வரமுடிந்துள்ளது.
இதோடு இவர் மூன்றாவது தடவையாக இத் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஆஷஷ் தோடரில் சிறப்பாக செயற்பட்டதால் தரவரிசையில் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்தார்.
மைக்கல் கிளார்கிற்கு அடுத்தபடியாக இலங்கையின் குமார் சங்ககார காணப்படுகின்றார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் நியூசிலாந்துடானான போட்டியில் சிறப்பாக செயல்படுவாராயின் மீண்டும் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு குமார் சங்ககாராவுக்கு உள்ளது. இந்தியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கெவின் பீட்டர்சென் 7 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.



0 comments
Write Down Your Responses