நீரில் மூழ்கிறது வவுனியா! ஏ9 வீதியில் சிறிய வாகனம் செல்ல தடை!
வடபகுதியில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால், வவுனியா மாவட்டத்திலுள்ள பல இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் ஏ9 வீதியில் மூன்றடிக்கு மேல் வெள்ளம் பாய்வதால் சிறிய ரக வாகனங்கள் இன்று (23.12.2012) காலை முதல் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதா மாமடு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.
மாமடு, தாண்டிக்குளம், திருநாவற்குளம், சமணங்குளம், கோமரசங்குளம், கந்தசாமி நகர், குடியிருப்பு, புதுக்குளம், பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறுகுளங்களும் நீர் நிரம்பி வான்பாய்வதால் பல பகுதிகளில் வெள்ளஅபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பாவற்குளத்தின் ஆறு வான் கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளதாகவும் இதனால் கல்லாறு, செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வவுனியா அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.



0 comments
Write Down Your Responses