நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 35ஆக உயர்ந்தது உயிரிழப்பு
நாடளாவிய ரீதியில் நடைபெறும் சீரற்ற காலநிலை, மழை மற்றும் வெள்ளம் காரணமாக இது வரை உயிர்நீத்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வடைந்துள்ளதுடன் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் எல்லாம் திறந்து விடப்பட்டுள்ளன, இதன் காரணமாக நீர்த்தேக்கங்களுக்கு அருகாமையில் இருக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவமையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாது இன்றைய தினமும் (23.12.2012) வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்து கொண்டே இருப்பதுடன் இந்த காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் தமது அறிக்கையில் கூறியுள்ளது.



0 comments
Write Down Your Responses