சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதுடன் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் 16 மாவட்டங்களில் 80,534 குடும்பங்களைச்சேர்ந்த மூன்று இலட்சத்து 64,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
அடைமழை,வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினாலேயே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 56677 பேர் தற்காலிக முகாம்களில் இன்னும் தங்கியிருப்பதாகவும் சேதமடைந்த வீடுகளின் எண்ணக்கையும் அதிகரித்துள்ளதாக அந்நிலையம் அறிவித்துள்ளது.



0 comments
Write Down Your Responses