ஆபாச படம் பார்த்ததால் பதவி இழந்த கல்லூரி முதல்வர்!!

அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து கொச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கிரீசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள களமசேரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.இதன் முதல்வராக சில மாதங்களுக்கு முன் டாக்டர் கிரீசன் நியமிக்கப்பட்டார்.

சில தினங்களுக்கு முன் மாணவர்கள் சிலர் கல்லூரி கலைவிழா குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வரின் அறைக்கு சென்றனர். அப்போது அவர் தனது அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் இத்தகவல் கல்லூரி முழுவதும் பரவியது.

இதையறிந்த மருத்துவக் கல்வித்துறை இயக்குனர் கிரீசனை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டார். நேற்று இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் கல்லூரி முதல்வரை பணியிலிருந்து நீக்கக் கோரி கோஷமிட்டனர். இதையடுத்து கிரீசன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதையடுத்து காங்கிரசார் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் கிரீசன் தனது ராஜினாமா கடிதத்தை மருத்துவக் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பினார். மருத்துவக் கல்லூரி முதல்வரே தனது அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்து பதவியை இழந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News