தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை அமைச்சுப் பதவிகள் பிரச்சினைக்கு சற்று முன்னர் தீர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வட மாகாண அமைச்சர் கள் நியமனம் குறித்த விபரங்களை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. விபரம் வருமாறு: சபையின் தவிசாளர் - சி.வீ.கே.சிவஞானம்
சபையின் பிரதி தவிசாளர் - அன்ரன் ஜெயநாதன்
முதலமைச்சர் - நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்
வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் - பி.ஐங்கரநேசன்
கல்வி, கலாச்சாரம் - தி.குருகுலராஜா
சுகாதாரம் - வைத்திய கலாநிதி.பி.சத்தியலிங்கம்
மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி - டெனீஸ்வரன்
இதேவேளை ஒன்பது பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு:
சனத் ஜயசூரிய
லக்ஷமன் பெரேரா
சரத் வீரசேகர
வை.ஜி.பத்மசிறி
என்டனி விக்டர் பெரேரா
ஹேமால் குணசேகர
மொஹான் லால் கிரேரு
நிஷாந்த முத்துஹெட்டிகம
சரத் முத்துகுமாரன
ததேகூ உறுப்பினர்களால் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரனின் உருவங்கள் தீயிடப்பட்டதாக அறிய வருகின்றது. ஜனாதிபதி முன்னால் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை தொடர்பாக தமது அதிருப்தியை அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சத்தியப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்ட ததேகூ தலைவர் ச ம்பந்தன், சுமந்திரன் எம்பி ஆகியோரின் உருவங்களையும் அவர்கள் கொளுத்தியுள்ளனர். வடமாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ததற்காக இந்த எதிர்ப்பை தாங்கள் காட்டுவதாக தெரிவிக்கின்றபோதும் , சம்பந்தனுக்கு எதிராக கூட்டமைப்பினுள் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் அமைச்சுப்பதவிகளை பிரிவிடுதலில் ஏற்பட்ட முரண்பாடுகளே என்பது யாவரும் அறிந்தவிடயம்.
அமைச்சுப்பதவிகளுக்காக என்று தமது காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளாமல் பதவிப்பிரமாணம் என்ற கோஷத்தை கையிலெடுத்துள்ள அவர்கள் எந்த சத்தியப்பிரமாணத்தை விக்னேஷ்வரன் செய்துகொண்டாரோ அதே பிரணாத்தையே பதவிகளை பெற்றுள்ள அனைவரும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அழுத்தக் குழு எம்பிக்கள், பிரதமர் டேவிட் கெமரூன் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரசுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பாது குறித்து கவலை வெளிட்டுள்ளனர். வெளிநாட்டலுவல்கள் தேர்வுக் குழு அடுத்த கிழமை மனித உரிமைகள் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிடுகின்றது. அதில் கெமரூனின் இலங்கை விஜயம் பற்றி முக்கியமாக குறிப்பிடப்படவுள்ளது.
விக்கினேஸ்வரன் முறைப்படி வட மாகாண சபையின் முதலமைச்சராக சத்தியப் பிமாணம் செய்து கொண்டார் என்றும் அவர்கள் மிகவும் தந்திமான முறையில் செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகின்றது என்றும் தேசிய தேசப்பற்றாளர் இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறயுள்ளார்.அலரி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், நாட்டைப் பிரிக்கும் எண்ணம் களையப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார். அவர்கள் இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு அமைய நடந்து கொள்கின்றனர் என்பது நன்கு புலனாகின்றது. ஆனால், சிங்கள அரசியல்வாதிகள் அதனைப் புரிந்து கொள்வதில்லை.
இறுதியில், வடக்கு கிழக்குக்கு ஒரு வேறான அதிகாரம் உருவாகும். சிங்களவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று அமரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நிறுவனங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தென்னிந்தியாவில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பற்றி ஜேவிபி எம்பி அனுர குமார திசநாயகா இன்று (09) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்தனா இந்தியாவும் இலங்கையும் வலுவான உறவைக்கொண்டுள்ளன. எனினும் தமிழ்நாட்டில் உள்ளவை உள்ளிட்ட சில தீவிரவாத குழுக்கள் இலங்கை, இந்தியாவுக்கிடையிலான உறவைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றன என்று குறிப்பிட்டார்.இலங்கையர் பயமுறுத்தப்படும்போது இந்தியா தென்னிந்தியா பக்கம் விரலை நீட்ட முடியாது. இந்தியா முழுப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ் நாட்டில் இயங்கும் இலங்கை நிறுவனங்களுக்கு இந்தியா அளித்துள்ள பாதுகாப்பு திருப்தியானதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் இந்தியவில் உள்ள இலங்கை நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றி இந்திய அதிகாரிகள் புலனாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் தினேஸ் குணரட்ண குறிப்பிட்டார்.
சி. வி. விக்கினேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக சத்தியப் பிமாணம் செய்து கொண்டது வடக்கு கிழக்கு தமிழ் மக்களை நாட்டிலுள்ள வடகிழக்கு தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்திய வம்சாவளி மக்களையும் மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்வது என்பது அரசாங்கத்திடம் மண்டியிடுவதோ உரிமைகளை விட்டுக் கொடுப்பதோ அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் வாழும் தமிழர்களின் நிலைமைகளைப் புரிந்து கொள்ளாத புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வைகோ போன்றவர்கள் இதனை வன்மையாக கண்டித்துள்ளார்கள். தென்னிலங்கையில் சிங்கள மக்களோடு வாழும் தமிழ் மக்களைப் பற்றி எந்த அறிவும் இவர்களுக்கு இல்லை. தமிழ் கூட்டமைப்பின் இந்த முடிவின் மூலமாக சிங்கள மக்கள் மத்தியிலே இன்று பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்குரிய கொடுக்கப்படாத ஏனைய அதிகாரங்களைக் கூட வழங்கினால் தவறில்லை என்ற மனநிலை இதன் மூலம் சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் இந்த செயல்பாட்டினால் எமது அரசாங்கம் தான் தடுமாறிப் போயுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வினை கொண்டு வரவேண்டும் என்ற அழுத்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் இவ்வாறான இராஜததந்திர செயல்பாடுகள் எதிர்காலத்தில் தொடர வேண்டுமென்றே நான் எதிர்ப்பார்க்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கலஹா - புப்புரஸ்ஸ பொலிஸ் சோதனைச் சாவடி பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் மூவர் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஜதலாவ பகுதியில் நேற்று (08) இரவு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இரவு நேர பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் ஜீப் மீது ரஜதலாவ பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பின் அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸ் சோதனைச்சாவடி பொறுப்பதிகாரி மற்றும் இரு சார்ஜன்கள் மீது பிரதேசவாசிகள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதன்போது காயமடைந்த மூவரும் கம்பளை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மோதலில் காயமடைந்த பிரதேசவாசி ஒருவர் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தப்பிச் சென்றுள்ள ஏனைய சந்தேக நபர்களைப்ப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று(09.10.2012) இரவு 9.30 யளவில் கல்முனையில் வாகன விபத்தொன்று இடம் பெற்றது . கல்முனை மதுபான சாலை ஒன்றில் இருந்து மது போத்தல்களுடன் வீரமுனை தமிழ் கிராமத்தை நோக்கி மோட்டார் பைசிகளில் வேகமாக சென்ற வேளை எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதி பாரிய விபத்து நடந்தது.
மோட்டார் பைசிகளில் எடுத்து சென்ற மது பானப் போத்தல்கள் உடைந்ததால் மோட்டார் பைசிகளில் சென்ற இருவரும் பலத்த வெட்டு காயங்களுடன் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மோட்டார் பைசிகள் பலத்த சேதமாகி காணப் படுகிறது . இதே வேளை மோதுண்ட காரும் சேதமாகி உள்ளதுடன் காரில் இருந்த இருவரும் காயங்களுடன் அதே வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் .
சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணை செய்கின்றனர்

இலங்கை கனிஷ்ட வலைப்பந்து தலைவி செமினி டி அல்விஸ் தேசிய வலைப்பந்து அமைப்பில் இருந்து விலகினார். அவர் இந்த திடீர் தீர்மானம் எடுத்தற்கான காரணம் தனது தாயான தீப்தி டி அல்விஸ் தேசிய வலைப்பந்து குழுவின் பயிற்சியாளராகப் பதவியேற்க உள்ளமைதான். தேசிய வலைப்பந்து குழுவில் இருக்கும் விளையாட்டு வீராங்கனையின் உறவினருக்கு இலங்கை பயிற்சியாளராக பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதனால் தான் விலகுவது தவிர்க்கப்பட முடியாதது என்று அவர் குறிப்பிட்டார். நேற்று முன் தினம் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் செமினியின் தாயாரான தீப்தி டி அல்விஸ் பயிற்சியாளராகத் தெரிவு செய்யப் பட்டார்.
அரசியலிலும் இப்படி நடந்தால் நாட்டுக்கு எவ்வளவு நன்மையாக இருக்கும்!
கிழக்கின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் உள்ளது. கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டு துறை அமைச்சு மட்டக்களப்பு வெபர் மைதான த்தை அபிவிருத்தி செய்து வருகின்றது.107 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் இவ்விளை யாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்தவுடன் கிழக்கின் விளையாட்டு வீரர்கள் கூடிய பயனை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் புனரமைப்பு பணிகளை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டார். பிரதி அமைச்சர் முரளிதரன் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கம கேயிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இம் மைதானம் புனரமைக்கப் படுகின்றது. நீச்சல் தடாகம், உதைபந்தாட்ட திடல், கிரிக்கட், வலைபந்தாட்ட திடல், பார்வையாளர் அரங்கு, உள்ளக அரங்கு உட்பட பல நவீன வசதிகளை உள்ளடக்கியதாக மைதானம் புனரமைக்கப்படுகின்றது. எதிர்வரும் டிசம்பர் 25 அம் திகதி அனைத்து பணிகளும் பூர்த்தி செய்யப்படுமென மாவட்ட செயலகம் தெரிவித்தது.
கிளிநொச்சி கொழும்புக்கான ரயில் போக்குவரத்துக்கான ஆசனப்பதிவுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கான ஒழுங்குகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது என ரயில்வே திணைக்களத்தின் பிரதான அதிகாரி த.செந்தில்நாதன் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து ரயில் பயணத்தை மேற்கொள்ளவுள்ள பயணிகள் கிளிநொச்சி சென்று அவசர அவசரமாக கொழும்புக் செலவதற்கான பயணச் சிட்டைகளைப் பெற முண்டியடிக்கின்றனர் இதனால் இந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக 14 நாள்களுக்கு முன்னதாகவே ஆசனப் பதிவுகளை யாழ்.நகரில் மேற்கொள்ளமுடியும் என தெரிவித்தார்.
இதற்கான பதிவுகளை யாழ். கே.கே.எஸ் வீதியில் உள்ள பிரதம தபாலகத்துக்கு அருகில் உள்ள “மொபிற்றல்’ கிளை அலுவலகத்தில் இதற்காக ரயில் நிலைய உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் எனக்குறிப்பிட்ட அவர் இந்தப் பணிமனை ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாள்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை இயங்கும் எனவே குறித்த நேரகாலத்தில் பயணிகள் ஆசனப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
யாழ். குடாநாட்டை சேர்ந்தவர்கள் இங்குள்ள கருமபீடத்தில் பதிவுகளை செய்து பயணத்தை இலகுபடுத்திக் கொள்ள வசதியாகவே ர்யில்வே திணைக்களம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.

எதிர்வரும் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு, வெள்ளைப்பிரம்பு கொடி விற்பனையின் முதலாவது கொடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அணிவிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது இந்நிகழ்வில் விழிப்புலனற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த த சில்வா முதலாவது கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி அச்சங்கத்துக்கு ஒருதொகை நிதியை கையளித்தார் இதனை தொடர்ந்து வெள்ளை பிரம்பு பாதுகாப்புத்தினத்தின் அடையாள வெள்ளைப் பிரம்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமாரன் ஆகியோருடன் இலங்கை விழிப்புலனற்ற பட்டதாரி கள் சங்க அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் பழங்களில் முதன்மையானது தான் ஆப்பிள் ஏனெனில் ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ள என்பதுடன் மருத்துவர்கள் கூட தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று சொல்வார்கள்.
ஆனால் அத்தகைய ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பதிலாக தீமையைத் தான் விளைவிக்கும்.
எப்போதும் பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடுவதை விட, அப்படியே சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற முடியும் அதிலும் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அப்போது அதில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகம் இருப்பதால், ஆப்பிள் ஜூஸை அதிகம் பருகி வந்தால், நீரிழிவு மற்றும் பற்சிதைவு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக ஆப்பிளை அரைத்து, அதனை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் பருகினால் தான் மிகவும் ஆபத்தானது அதுபற்றி கீழே பார்க்கலாம்.
ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் அதிகம் இருப்பதால், இது உடலில் பல ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் அதாவது கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை தினமும் உட்கொண்டால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் இதற்கு காரணம் ஆப்பிள் ஜூஸில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக் என்னும் பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளதுமட்டுமின்றி கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், அது உடல் பருமனுக்கு வழிவகுப்பதோடு, நீரிழிவு நோயினையும் ஏற்படுத்துகிறது.
ஆப்பிள் ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால், குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் இதனை விட பாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸில் அதிகப்படியான இரசாயங்கள் சேர்ப்பதால், அது உடலின் ஆரோக்கியத்தை இன்னும் அதிகம் பாதிக்கும் எனவே கடைகளில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
ஆப்பிளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், ஆப்பிளை ஜூஸ், ஸ்மூத்தி என்று செய்து குடிக்காமல் அதனை அப்படியே சாப்பிடுங்கள் அதுதான் உடலுக்கு எந்தவிமான பாதிப்பும் அற்றது என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

கல்வி உரிமை பிரசார கரான மலாலா யுசப்சாயை கொலை செய்யும் திட்டத்தை மீண்டும் புதுப்பித்திருப்பதாக தலிபானின் பாகிஸ்தான் கிளை அறிவித்துள்ளதுடன் மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தால் அவர் மீது தாக்குதல் நடத்துவது உறுதி என தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது எப்போது எமக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர் மீது தாக்குதல் நடத்துவோம்” என்று தலிபான் பாகிஸ்தான் கிளையான தஹ்ரீக் தலிபான் அமைப்பின் பேச்சாளர் ஷஹிதுல்லாஹ் ஷஹீத் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு கொடுத்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி மலாலா மீது தலிபான் ஆயுததாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தலையில் காயத்திற்குள்ளான அவர் பல மாத சிகிச்சைக்கு பின் சுகம் பெற்றார் ஆனால் அவரது கல்வி உரிமை பிரசாரத்திற்காக வன்றி இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்காகவே தாக்குதல் நடத்தியதாக தலிபான் குறிப்பிட்டுள்ளது.
கடந்த முறை கூட “அவர் பாடசாலை செல்வதற்காக நாம் தாக்குதல் நடத்தவில்லை தலிபான் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவதற்காகவே தாக்குதல் நடத்தினோம்” என்று ஷஹீத் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக சத்திப்பிரமாணம் செய்து கொண்ட சீ.வி.விக்னேஸ்வரன் உத்தியோக இன்று(09.10.2013)காலை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக வடமாகாண முதலமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று காலை நடைபெற்ற இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று காலை நடைபெற்ற இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மகளை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மதகுருவுக்கு சவுதியில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 600 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2012 ஆம் ஒக்டோபர் மாதம் லாமா அல் காம்டி என்ற சிறுமி தந்தையின் கொடூர தாக்குதலுக்குள்ளாகி அவரது மண்டையோடு நொறுங்கியிருந்துடன், மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.
அச்சிறுமி பல முறை வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தாகவும் தகவல் வெளியாகியிருந்த போதிலும் அதனை அவரது தாயார் மறுத்திருந்தார். இச்சம்வம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது சிறுமியின் கொலைக்கு காரணமான அவரது தந்தை சில மாதங்கள் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சிறுமியின் தாய்க்கு அதாவது தனது மனைவிக்கு குருதிப் பணம் செலுத்த இணங்கியமையால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் இதன் பின்னர் அல் காம்டியை தண்டிக்க வேண்டுமெனவும் லாமாவின் கொலைக்கு நீதி வேண்டுமெனக் கோரியும் சவுதிக்கு பல நாடுகளால் அழுத்தம் ஏற்பட்டதால் மறுபடியும் விசாரணைக்கு வந்த இவ் வழக்கில் சிறுமியின் மரணத்திற்கு காரணமான தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 600 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தெரிவுக்குழுவே, தற்போதைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறந்த களமென, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட்டிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சல் மான் குர்ஷிட், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்தித்தார். இந்திய - இலங்கை உறவு களை மேலும் கட்டியெழுப்புவதற்கு, நெருங்கி செயற்படுவதற் கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில், இப்பேச்சு வார்த்தை இடம்பெற்றது.அண்மையில் நடைபெற்ற வட மாகாண தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், தேர்தலை நடாத்துவதற்கு, ஜனாதிபதி மேற்கொண்ட துணிச்சல்மிக்க தீர்மானத்திற்கு தனது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். மாகாண சபை தேர்தல் நடைபெற்றமை, வரலாற்று பதிவெனவும், இதன்மூலம் மேலும் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்றும், அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
13வது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு, சிறந்த களம், பாராளுமன்ற தெரிவுக்குழுவே என கூறினார். பாராளுமன்ற தெரிவுக்குழுவை கூட்டி, மக்கள் தேவைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை இனங்காண வேண்டுமெனவும், ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பலரும், இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் மத்திய அரசுடன் மோதி மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். மாகாண சபை தற்போதுதான் பிறந்த ஒரு குழந்தை. அது வளர வேண்டும். மாகாண சபையை நடாத்துவதற்கு ஓர் அலுவலகக் கட்டிடம் கூட இல்லை. இந்த உண்மை நிலையை உணர வேண்டும் என்று தமிழ்த தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.இந்த நல்லெண்ண அடையாளத்தை சிங்கள அரசியல் தலைவர்கள் ஏற்று தமிழர்களுக்கு சரியான தீரவைத் தராவிட்டால், அதன் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதின் முன்னால் முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வது பற்றி கூட்டமைப்புக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் பற்றிக் கூறிய சம்பந்தன் இதில் உள்ளார்த்தம் ஒன்றுமில்லை யார் முன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டாலும் இதே வாக்கியங்களைத்தான் கூறுவார்கள். இது ஒரு நல்லெண்ண அடையாளம் தவிர வேறில்லை என்று கூறியுள்ளர்.
சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று அங்கு பல சித்திரவதைகளுக்கு இலங்கை பணிப்பெணகள் முகங்கொடுத்து வருவது சாதாரணமாகிவிட்ட நிலையில் பலாங்கொட வேவல்வத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பாப்பாத்தி என்பவர் 2012ம் ஆண்டு சவுதிக்கு சென்று சித்திரவதை களுக்கு உள்ளான நிலையில் நாடு திரும்பி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் குறித்த பெண் கருத்து தெரிவிக்கையில் தான் தொழிலுக்கு சென்ற நாள் தொடக்கம் வீட்டு உரிமையாளரான பெண் தன்னை சித்திரவதை செய்த தாகவும், இரண்டு வருடங்கள் துன்புறுத்தப்பட்ட தான் ஒருநாள் மயக்கமடைந்ததாகவும், அப்போது வீட்டு உரிமையாளரான பெண் தன்னை வீதியில் போட்டுச் சென்றதாகவும், அதன்பின் சவுதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தன்னை நாட்டுக்கு திருப்பி அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த 20 வயதான விஜி சிரான் என்ற இளைஞன் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் மட்டக்களப்பில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. காதல் தோல்வியால் குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.