விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தது போல் அதன் அரசியல் பிரிவையும் அழிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்த அமைப்பின் அரசியல் பிரிவை அழிக்காததால் ஏற்பட்டுள்ள பின் விளைவுகளை தற்பொழுது அனுபவிக்க நேர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆயுதப் போராட்டத்தில் அடைய முடியாத நோக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் இராஜதந்திர ரீதியாக அடைய முயற்சித்து வருகிறது. இதன் முடிவுகள் நாட்டை நெருக்கடியான நிலைமைக்குள் கொண்டு செல்லும்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம். அதற்கான காலம் வரவில்லை என்று நாங்கள் ஆறு மாதத்திற்கு முன்னர் தெரிவித்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன? அது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு. அந்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிளிநொச்சி வருமாறு உத்தரவிடுவார். இந்த பூனைக்குட்டிகள் அங்கு செல்லும். தமிழ்ச் செல்வன் தலைமை நாற்காலியில் அமர்ந்திருப்பார்.
சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் பக்கத்தில் பூனைக்குட்டிகளைப் போல் அமர்ந்திருப்பர். தமிழ்ச் செல்வன் உத்தரவுகளைக் கொடுத்த பின்னர் அதனை இவர்கள் அமுல்படுத்துவர். இராணுவம் விடுதலைப்புலிகள் அமைப்பை யுத்த ரீதியாகத் தோற்கடித்தது. யுத்த ரீதியாக ஒரு பிரிவைத் தோற்கடித்த பிறகு அதன் அரசியல் பிரிவையும் தடை செய்வது உலக முழுவதும் நடந்துள்ளது. 1945 ஆம் ஆண்டு ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இன்று வரை அவரது நாஜி கட்சி ஜெர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியின் முசோலினி அதே ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதுடன் அவரது கட்சியும் தடை செய்யப்பட்டது. அதேபோல் தலிபான் தோற்கடிக்கப்பட்டதும் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு தடை செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் சதாம் உசேனின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. இன்றும் ஈராக்கில் அவரது பாத் கட்சி தடை செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. லிபியாவில் முஹம்மர் கடாபியின் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. ஆயுத சக்தி அல்லது சர்வாதிகார சக்தியைத் தோற்கடித்த பிறகு அதன் அரசியல் பிரிவையும் அழிக்க வேண்டியது அத்தியாவசியமானது. நாங்கள் அந்தக் காலத்தில் இதனைச் செய்யுமாறு கூறினோம். புலிக்குட்டியை விட்டு வைக்க வேண்டாம் என நாம் கூறினோம். புலிக்குட்டி வளர்ந்ததும் உறுமவும் கடிக்கவும் ஆரம்பிக்கும் என்று நாங்கள் சொன்னோம். தற்பொழுது பிரச்சினை ஆரம்பமாகி விட்டது என்றார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பான் உதவிநிறுவனமொன்றின் நிறுவுனர் பிரதமர் தி.மு. ஜயரத்னவை அவரது இல்லத்தில் சந்தித்து ருகுணு பல்கலைக்கழகத்தின் விடுதிவசதிக்காக நிதியுதவி வழங்கியுள்ளார்.ஜப்பான் உதவி நிறுவனமொன்றின் நிறுவுனர் விடுதி வசதி குறைவாகக் காணப்படும் ருகுணுப் பல்கலைக் கழகத்திற்கு விடுதிவசதிக்காக நிதியுதவி வழங்கியுள்ளார். கூடவே, ஜப்பான் நிதியுதவியாளர் சந்தித்தவேளை நோயில் இருந்த இலங்கைப் பிரதமர் தி.மு ஜயரத்னவின் மருத்துவச் செலவுக்கும் பல்லாயிரம் ரூபாய்களை வழங்கியதாக நம்பகத் தன்மைவாய்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிகழ்வில் கண்டியைச் சேர்ந்த விமலவன்ச தேரரும் கலந்து கொண்டுள்ளார்.
(கேஎப்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையச் சேர்ந்த கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அமெரிக்க சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக குறித்த நபர் நீதிமன்றில் ஒப்புகொண்டிருந்தார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கான தண்டனையே தற்போது சர்ச்சையில் உள்ளது. தண்டனைக் காலத்தை குறைக்குமாறு சுரேஸின் சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர். அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரச சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி சுரேஸிற்கான தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
இவர் 2004 செப்டெம்பர் மாதத்திற்கும் 2006 ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளருக்கு, விமான கருவிகள், நீர்மூழ்கி, போர்க்கப்பல் வடிவமைப்பு மென்பொருட்கள், இரவுப்பார்வைக் கருவிகள், தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு உதவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பிறந்து கனேடியக் குடியுரிமை பெற்ற இவர், தண்டனைக்காலம் முடிந்த பின்னர் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் , இஸ்லாமிய அழைப்பு நிலையம் (IPC-Islam Presentation Committee) அவ்காப் அமைச்சுடன் இணைந்து வருடாந்தம் நடாத்தி வரும் "அல் ருஹைமானி" குர்ஆன் மனனப் போட்டியில் 2013 ஆம் ஆண்டுக்கான அரபி அல்லாதவர்களுக்கான பிரிவில் இலங்கை மீயல்லை, மாத்தறையைச் சேர்ந்த மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் இம்முறையும் தனது பிரிவில் முதலாம் இடத்தை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்க்கிறார் .அவர் தனக்கான பரிசை நீதியமைச்சின் முதன்மைச் செயலாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
கடந்த வருடப் போட்டியிலும் (அல் ருஹைமானி-2012) மற்றும் குவைத்தில் நடாத்தப்பட்ட இன்னும் பல குர்ஆன் மனனப் போட்டிகளிலும் இவர் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் அனைத்து பிரிவிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 550 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்……

கடந்த 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர் கலவரத்திற்கு காரணமானவர்களுக்கு பாதுகாப்பு அளித்தது. சீக்கியர்களை தாக்கிய பொலிசுக்கு சன்மானம் அளித்தது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றில் பிரதர் மன்மோகன் சிங் மீது மனித உரிமை மீறல் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்ற வொஷிங்டன் நீதிமன்றம் மன்மோகனுக்கு அழைப் பாணை அனுப்ப உத்தரவிட்டது.அமெரிக்காவில் உன்ன "நீதிக்காக போராடும் சீக்கியர்" அமைப்பு கடந்த 20 நாளுக்கு முன், 1984ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தை தூண்டியதாகவும், அதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா மீது வழக்கு போட்டது. அதில் சோனியாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது. இதேபோல, மன்மோகன்சிங் அமெரிக்கா வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக இதே அமைப்பு நேற்று முன்தினம் வழக்கு போட்டது. இந்த வழக்கை ஏற்ற வொஷிங்டன் நீதிமன்றம் மன்மோகனுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.
இந்த அழைப்பாணை பிரதமரிடம் 120 நாட்களுக்குள் வழக்கு போட்டவர்கள் தரப் பிலான சட்டத்தரணி அளிக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் பலத்த பாதுகாப்புடன் உள்ள மன்மோகன் சிங்கிடம் சம்மனை வழங்க முடியாது. அதனால், அதற்கு அனுமதி கோரி தனி மனு ஒன்றையும் இந்த அமைப்பு தாக்கல் செய்து ள்ளது.
இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றால் எங்களுக்கு தனி அனுமதி கிடைக்கும். அப்போது பிரதமர் மன்மோகனிடம் அவர் தங்கியிருக்கும் இடத்தில் அழைப்பாணை அளிக்க முடியும்' என்று வழக்கு போட்ட அமைப்பின் சட்டத்தரணி குருப்வந்த்சிங் கூறினார். இது ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட்தான். எற்கனவே சோனியாவுக்கு அழைப் பாணை பெற்றவர்கள். இப்போது பிரதமர் மன்மோகனுக்கு எதிராக பெற்றிருப்பது சொந்த நாட்டுக்கு எதிரான செயல் என்றார்.
இரண்டு கர்ப்பப்பைகளுள்ள இளம் தாய் தனது இரட்டைக் கர்ப்பப்பைகளிலும் இரண்டு பெண் குழந்தைகளை பிரசவித் துள்ளார். கடந்த (26) வியாழக்கி ழமைஇ தம்புள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்திய சாலையில் அறுவை சிகிச்சை யின் மூலம் இந்த பிரசவம் நிகழ்ந்துள்ளது.இரண்டு கர்ப்பப் பைகள் ஒரு பெண்ணுக்கு அமைவது உல கில் மிகவும் அபூர்வம். இத்தகைய இரட்டைக் கர்ப்பப் பைகள் அமைந்துள்ள பெண்கள் கருத்தரிப்பது குழந்தைகள் பிரசவிப்பதென்பது மிகவும் அபூர்வம். இலங்கையில் இத்தகைய இரட்டைக் கருப்பைகளைக் கொண்ட தாய்மார் தொடர்பாக இது வரை அறிந்ததில்லை என வைத்தியர்கள் கூறினர்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள உலக நாடுகளின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள் ளப்படும் என வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றி யீட்டிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளதோடு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதனை அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தினால், கடுமையான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைவாக நிறைவேற்றப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தில் காணி காவல்துறை அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் காணி காவல்துறை அதிகாரங்களை வழங்கத் தவறினால் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் அவற்றைப் பெற்றுக்கொள்ள நேரிடும் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காணி அதிகாரம், மாகாண சபைக்குரியது அல்லவெனவும், மத்திய அரசாங்கத்திற்கே காணி தொடர்பான அதிகாரம் இருப்பதாகவும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான கே. ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஏகமனதாக இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை, அமெரிக்க விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில், 40 ஆரம்பப் பாடசாலை மாணவர்களிடம் நடத்திய சோதனையில், பகலில் ஒரு மணி நேரம் தூங்கும் மாணவர்களின் நினை வாற்றல் மற்றும் கற்கும் திறன் அதிகரித்ததை, மாசாசூ செட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.பாடசாலைக் குழந்தைகளின் வாழ்வில், தொடக்கத்திலேயே, நினைவாற்றலை அதிகரிப்பது அவசியம் என்றும், அதற்கு குழந்தைகளை மதிய நேரத்தில், சிறிது நேரம் தூங்கவிட்டால் படிப்பில் சுட்டியாக விளங்குவர் என்றும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கந்தப்பளை பிரதேசத்தை சேர்ந்த தோட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவரது கர்ப்பத்திற்கு காரணமாகவிருந்தார் என்ற சந்தேகத்தில் கந்தப்பளை பகுதி தோட்ட பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரையும் அதற்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் மாணவியின் தாயாரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவ்விருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குறித்த சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவி கடந்த சில மாதங்களாக பாடசாலைக்கு வருகை தரவில்லை என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த ஆசிரியர் கந்தப்பளை பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையறிந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு சென்று குறித்த ஆசிரியரை பாடசாலையை விட்டு வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டம் செய்தைதை அறிந்த சந்தேகநபரான ஆசிரியர் அரைநாள் விடுமுறையுடன் செல்வதற்கான முயற்சியில் இடுபட்ட போது அங்கு வந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
அது மட்டுமல்லாது மாணவி கர்ப்பமாகுவதற்கு மாணவியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவ்விருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகொன்று இந்தோனேசிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் இதுவரை அதிகமான குழந்தைகள் உட்பட 20 சடலங்களை இந்தோனேசிய ஜாவா தீவு வாசிகள் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது படகில் 120 பேர் வரை இருந்ததாக தெரிவிக்கப்படுவதுடன் இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மீட்கப்பட்டவர்கள் ஜோர்தான், லெபனான், மற்றும் யேமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன் பயணித்த அனைவரும் மத்தியகிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு, புளுமென்டல் வீதியில் வைத்து இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 56 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இலக்கத்தகடு இல்லாத காரொன்றில் வந்த இனந்தெரியாத சிலர் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்று ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத் தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மேற்படி நபர் வைத்தியசாலை அனுமதிக்கப் பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க இன்று (27) காலமானார். 1954ம் ஆண்டு ஜூலை 15ம் திகதி பிறந்த பேர்டி பிரேமலால் திஸாநாயக்க கல்வி, விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கியவராவார் 1971ம் ஆண்டு தனது தந்தையின் மறைவை அடுத்து குடும்ப பொறுப் புக்களை ஏற்க வேண்டி ஏற்பட்டதால் கல்வியை இடை நிறுத்தினார்.அதன்பின் ஒரு வர்த்தகராக அவர் தொழில்புரிந்து வந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஹொரண செயலாளராக 1972ம் ஆண்டு அரசியலில் இணைந்தார். அதன்பின் தலாவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1989ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.
பின்னர் 1999ம் ஆண்டு வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரானமை குறிப்பிடத்தக்கது.
வாக்குகளைக் கணிப்பிடும்போது, குறைந்த வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களை மீண்டும் தேர்தலில் போட்டியிடும் உரிமையை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கும் வண்ணம் சிவில் சமூகத்தினிரிட மிருந்தும், அரசியல் கட்சிகளிலிருந்தும் யோசனை முன்வைக் கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவிக்கிறார்.
அரசியல் கட்சிகளும் சுயாதீனக் குழுக்களும் மிகக் கூடுதலாக இருப்பதனால் வாக்குச் சீட்டு இரண்டு அடிகளைத் தாண்டிச் செல்கின்றது எனவும் வாக்குச் சீட்டுக்களை 18 முறைகள் மடிக்க வேண்டிய தேவையிருப்பதாகவும் அவர் தெளிவுறுத்துகிறார். இது வாக்குகளைக் கணிப்பதற்கும் சிரமத்தை ஏற்படுத்துவது போலவே, கடதாசிக்கான செலவினையும் அதிகரிக்கின்றது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் 1000 இற்குக் குறைவான வாக்கு களைப் பெற்ற கட்சிகளை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரப்பட்டுள்ள தாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக் காட்டுகின்றார்.
(கலைமகன் பைரூஸ்)

வெளிநாட்டுக் கம்பனிகள் பலவற்றுக்கு இந்நாட்டுத் தனி யார் பஸ்கள் கைமாற்றுவதற்கு ஆயத்தமாகவிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என அகில இலங்கை தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் குறிப்பிடு கின்றது.இது அரசாங்கம் தனியார் போக்குவரத்துச் சேவையினை முன்னெடுத்துச் செல்வதற்கு குறைந்தளவாகவேனும் வசதிகளைப் பெற்றுத்தராமையும் நட்டம் ஏற்படாதிருக்கக் கூடிய வண்ணம் வருடத்திற்கு ஒருமுறையேனும் கட்டண உயர்வினை மேற்கொள்ளவிடாமையும் தனியார் பஸ் உரிமையாளர்களை பலவீனப்படுத்தும் சூட்சுமாக இருக்கின்றதா என்பதை தேடியறியவுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியங்ஜித் குறிப்பிடுகிறார்.
இந்த நடவடிக்கையின் மூலம் தனியார் பஸ் போக்குவரத்து தொழிலானது வீழ்ந் துமடிய, தனியார் பஸ் சேவையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றுவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெளிவுறுத்துகிறார்.
(கேஎப்)
வடக்கு வாழ் மக்களிடம் இறந்தவர்களை பற்றிய இருண்ட நினைவுகளை மீட்டதன் மூலம் வடமாகாணத்தில் ஒரு சுதந்திரமான நீதியான தேர்தல் நடப்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளையின் வடக்கு விஜயம் தடுத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.வட மாகாண தேர்தலின் போது இந்தியாவும் ஏனைய நாடுகளும் இனவாதத்தை கிளப்பியதாக ஜாதிக ஹெல உறுமய உறுப்பினரும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த சர்வதேச சக்திகள் தமது தலையீடுகள் மூலம் இந்த நாட்டின் அமைதி ஏற்படுவதை தடுத்தன. வடக்குக்கு சென்ற நவி பிள்ளை அந்த மக்களுக்கு யுத்தத்துடன் தொடர்பான பழைய துன்பமான நிகழ்வுகளை ஞாபகப்படுத்திய தாகவும் இதனால் வடக்கில் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற உதவியது' என அவர் கூறினார்.
சண்டை நடந்தபோது வட பகுதி மக்கள் பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியமாதிரி வாக்களித்தனர். ஆனால் இப்போது அவர்கள் பரீஸிலிருந்தும் ரொறன்ரோவிலிருந்தும் வரும் தெலைபேசி அழைப்புகளுக்கு பயந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றனர் என அவர் மேலும் கூறினார்.
ஆயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தாளத்துக்கு ஏற்ப நாம் நாட்டின் அரசியலை ஆட விடப்போவதில்லை. ஈழத்துக்கான யுத்தம் கொழும்புக்கும் வரும். சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்றுவார் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
இவர்கள் பிரபாகரனின் அரசியல் யுத்தத்தை முன்னெடுக்கின்றனர். இது குரங்கு கத்தியை எடுத்தது போலாகும் என ரணவக்க கூறினார். பிரபாகரன் விட்ட இடத்திலிருந்து விக்னேஸ்வரன் இந்த அரசியல் போராட்டத்தை தொடக்குவார் என ஜாதிக ஹெல உறுமய உறுபினர் உதய கமன்பில கூறினார். இந்த புலிகள் பிரபாகரன் காலத்து புலிகளைவிட ஆபத்தானவை மற்றும் பொல்லாதவை எனவும் அவர் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட யாவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் கீழ் வேலை செய்தவர்கள் எனவே ஈழயுத்தம் தற்போது இராஜதந்திர ரீதியான இலக்காகியுள்ளது என்றும் கமன்பில கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் முன்வைத்த வாய்மூல அறிக்கைக்கு உறுப்பு நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இதனால் மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுபட்டு ள்ளது.அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் நவநீதம்பிள்ளை யின் அறிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. எனினும் ஏனைய நாடுகள் அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான், ரஷ்யா, சீனா மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை தெரிவித் துள்ளன.
இந்நிலையில் நவநீதம்பிள்ளை இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறந்த செயற்த்திட்டங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லையென இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. புனரமைப்பு, கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் போன்ற வற்றில் இலங்கை அரசாங்கம் சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பில் நவநீதம்பிள்ளை உரிய அங்கீகாரத்தை வழங்க தவறியுள்ளதாக மனித உரிமை பேரவைக்கான இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார். வடமாகாண சபை தேர்தலை நடாத்தியதன் மூலம் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்டியுள்ளதாகவும் இந்தியப் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் புரிந்துணர் வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயிராபத்து காரணமாக வெனிசுவெலா ஜனாதிபதி நிகொ லஸ் மடுரோ ஐ. நா. பொதுச் சபையின் கூட்டத்தில் பங்கேற் பதற்கு நியூயோர்க் செல்லும் திட்டத்தை ரத்துச் செய்து ள்ளார்.சீனா சென்று திரும்பிய மடுரோ நேற்று முன்தினம் புதன்கிழமை கனடாவின் வன்கூவர் நகரில் தற்காலிகமாக தரையிறங்கியபோது, தனது ஐ.நா. சுற்றுப் பயணத்தின்போது உயிராபத்து ஏற்படுத்த சதிசெய்யப்பட்டிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து அந்த திட்டத்தை ரத்துச் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தனது உடல் மற்றும் உயிரை பாதுகாத்துக்கொள்ள இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெனிசுவெலா கம்மியுனிஸ கியூபாவுடன் பிராந்தியத்தில் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் நாடாகும். தனது அரசை கவிழ்க்க நாட்டில் உணவு, மின்சாரம் மற்றும் எண்ணெய் விநியோகத்தில் வெள்ளை மாளிகை குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக மடுரோ குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தியாவின் மும்பை நகரில் 5 மாடிகள் கொண்ட கட்டிட மொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.குடியிருப்பு கட்டிடமொன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்து ள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டிடம் முழுமையாக தரைமட்டமாகியுள்ளது. குறித்த கட்டிடம் மும்பை மாநகராட்சிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள வர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். 40 முதல் 50 வரையானோர் அனர்த்தத்தின் போது கட்டிடத் திற்குள் இருந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த சில மாதங்களில் மும்பை நகரத்தில் மாத்திரம் 5 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
தங்கக் கட்டிகள் விழுங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நான்கு பேரிடமிருந்து 26 தங்க கட்டிகள் மீட்டெடுக்கப்பட்டன. இவர்களில் நான்கு பேரிடமே தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. இன்னும் 3 தங்க கட்டிகள் இருவரது வயிற்றில் உள்ளதாகவும், தொடர்ந்தும் இவர்கள் ஆஸ்பத்திரியில் இன்று மூன்றாவது நாளாகவும் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும், சுங்க திணைக்கள பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.முதலாவது நபரின் வயிற்றில் 13 தங்கக் கட்டிகள் இருப்பதாக ஸ்கேன் மூலம் தெரிந்த போதும் 15 தங்கக் கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன. இரண்டாவது நபரின் வயிற்றிலிருந்து 6 தங்க கட்டிகள் எடுக்கப்பட்டன. 3 ஆவது நபரின் வயிற்றில் ஐந்து தங்கக் கட்டிகள் இருப்பதாக தெரிந்த போதும் 6 தங்க கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன. நான்காவது நபரின் வயிற்றிலிருந்து ஒரு தங்க கட்டி மட்டுமே எடுக்கப்பட்டது.
ஏனைய மூரிடம் வயிற்றினுள் தங்கக் கட்டிகள் இல்லை என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்றும் சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை ஐ. தே. கட்சியின் தலைவர் பதவியை விட்டு உடனடியாக வெளியேறும்படி மாத்தளை நகரில் இரண்டு பேர்கள் சாகும்வரை உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தனது பதவிக் காலத்தை ஆறு வருடத்திற்கு நீடித்துக் கொண்ட பின் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ முகம் கொடுத்த முதலாவது தேர்தலில் ஐ. தே. க.வை சரித்திரம் காணாத தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளார். ஐ. தே. க.வின் தலைமைத் துவத்தை ஏற்றுக் கொண்ட பின் ரணில் விக்கிரமசிங்றுக 27 தடவைகள் தோல்வி யடைந்துள்ளார். தொடர்ந்தும் தலைமைத்துவத்திலிருந்து கொண்டு கட்சியை அழித்துவிடக்கூடாது.
எனவே பொருத்தமானவர்களின் கையில் தலைமைத்துவத்தை ஒப்படைத்து விட்டு ரணில் விக்கிரமசிங்ஹ உடனடியாக வெளியேற வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்து இவர்கள் சாகும் வரை உண் ணாவிரத போராட்டத்தில் இறங்கி யுள்ளனர்.

.jpg)