கடந்த 30 வருட யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் பற்றி ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்கவிற்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இந்த ஆணைக் குழுவுக்கு வழங்கப்படவுள்ள பணி மற்றும் கட்டளைகள், அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விபரம் தொடர்பான தீர்மானங்கள் விரைவில் எடுக்கப்படுமென ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமித்த கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக் குழுவானது, யுத்தகாலத்து மனித உரிமை மீறல் மற்றும் காணாமல் போனமை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு பரிந்துரை செய்திருந்தது.
இலங்கை இராணுவம் வேண்டு மென்றே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று கூறிய கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு, தேவையேற்படின் வழக்குகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு ஆதாரங்களை வழங்குவதோடு காணாமல் போனமை தொடர்பாக ஆராய அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென பரிந்துரை செய்திருந்தது.
முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களில் 99 சதவீதமானோர் புனர்வாழ் வளிக்கப்பட்டு சமூகத்தில் ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர் என்பதுடன் புலிகளினால் கொல்லப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 9000 பேருக்கு அரசாங்கத்தினால் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் 512 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று(27.07.2013) முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது. இந்த அரத்ததான முகாமில் 23 ஆவது கஜபா படைப் பிரிவிலிருந்து 150 இற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினார்கள்.
இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்திருந்ததாகத் 512 ஆவது படைப்பிரிவின் கேர்ணல், அஜித் பல்லாவல தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் வசித்துவந்தவன் ஏரியல் கஸ்ரோ என்ற 53 வயது நபர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட் (20), அமெண்டா பெர்ரி (17), கினா டிஜெசஸ் (14) என்ற மூன்று பெண்களை கிளீவ்லாந்து வீதிகளில் கடத்திச் சென்று தனது வீட்டிற்குள் சிறை வைத்திருந்தார்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர்களை வெளியே விடாமல் அடைத்து வைத்து அவர்களுடன் பாலியல் உறவு கொண்டிருந்ததுடடன் அந்தப் பெண்களில் ஒருவர் கர்ப்பமடைந்தபோது, அவருடைய கருக்கலையும் வரை அடித்து உதைத்து பட்டினி போட்டிருந்தபோது 2013 மே மாதம், இந்தப் பெண்களில் ஒருவர் தப்பித்து வெளியே வந்தபோது தான் இந்தக் கயவனின் சுயரூபம் வெளியே தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறை மற்றப் பெண்களையும், பெர்ரிக்குப் பிறந்த ஆறு வயது சிறுமியையும் விடுவித்திருந்தது சில மாதங்கள் கழித்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோக்காட்சி ஒன்றில் தோன்றிய அந்த மூன்று பெண்களும் தங்களுக்குத் தனிமை தேவைப்படுவதாகவும் காஸ்ட்ரோ மீதான வழக்கை விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
குற்றவாளி காஸ்ட்ரோவைக் கைது செய்த பொலிஸார், அந்நபர் மீது 977 குற்றங்களைப் பதிவு செய்ததுடன் நீதிமன்றத்துடன் அவன் மேற்கொண்ட மனு ஒப்பந்தத்தின் பேரில் அவனுக்கு பிணையில் வரமுடியாதவண்ணம் ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் அவனது சொத்துகள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஒப்பந்தம், அவன் மீது மேற்கொண்டு எந்தக் குற்றங்களும் சுமத்தப்படாமலும், மரண தண்டனையிலிருந்தும் காக்கின்றது. பெண்கள் சிறை வைக்கப்பட்டிருந்த வீடு இடிக்கப்படும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி கூறியுள்ளார்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளமுடியும் என இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
1919 தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொண்டு தமக்கு உரிய மாவட்டத்தையும், தேசிய அடையாள அட்டை எண்ணையும், முழுப் பெயரையும் அறிவித்து தமது வாக்குரிமை வழங்கும் பகுதியின் பெயரையும் மாவட்ட எண்ணையும் வாக்காளர் பட்டியலிலுள்ள தமது வரிசை எண்ணையும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் தேர்தல் திணைக்களமும் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தியுள்ளன

தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
போலியான முகத்துடன் இருக்கும் பலர் தேர்தல்கள் வந்துவிட்டால் ஒவ்வொரு குண்டைப் போட்டு தமிழ்மக்களின் வாக்குக்களை கவருவது என்பது யாரும் அறிந்ததே இந்தநிலையில் இம்முறையும் வாக்கு வேட்டையை முன்னிறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக டெலோ அமைப்பினரால் நாடுமுழுவது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

வவுனியா குருமண்காடு சந்தியில் சனநடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் யுவதியொருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியினை நபர் ஒருவர் அறுத்து எடுத்ததுக்கொண்டு தப்பியோட முற்பட சம்பவம் நேற்று(26.07.2013)மாலை நடைபெற்றது.
அதனால் அதிர்ச்சியுற்ற யுவதி போட்ட சத்தத்தினால் அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி திருடனை மடக்கிப்பித்ததுடன் அவரை நையப்புடைப்பு செய்ததுனர். சம்பவம் அறிந்து வந்த பொலிசார் பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்டு கைதுசெய்து அழைத்துச் சென்றதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்கா சார்பில் டேவிட் மில்லர் 85 ஓட்டங்களைப் பெற்றாதுடன் பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
224 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதல் விக்கெட்களை இழந்து தடுமாறி வந்ததபோதும் மத்திய வரிசையில் களம் புகுந்த திசார பெரேரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இலங்கையின் பக்கம் வெற்றிவாய்ப்பு திரும்பியது.
எனினும் திசார பெரேரா பீட்டர்சன் வீசிய ஒரு ஒவரில் 34(5 ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டம்) ஓட்டங்களை விளாசினார். இந்த ஓவரில் பீட்டர்சன் 35 ஓட்டங்களை வழங்கினர். இதுவே ஒருநாள் போட்டி ஒன்றில் வழங்கப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாகும்
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திசார பெரேராவை ஆட்டமிழக்கச் செய்து தென்னாபிரிக்கா இலங்கை இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இறுதியில் இலங்கை அணி 43.2 ஓவர்களில் திசார பெரேராவின் அதிரடியாக ஆடி 65 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்ததுடன் இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

வெளிநாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவில் வந்த சுவிஸ் நாட்டுப் பிரஜைகளான இருவரும், யாழ் கோட்டைப் பகுதியில் அரை நிர்வாண கோணத்தில் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டில் இளம் ஜோடி இன்று(26.07.2013) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது இடத்தில் அநாகரியமான முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டதுடன் குறித்த இருவரும் கணவன்-மனைவி எனக் குறிப்பிடுகின்ற போதும் அதனை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இவர்களிடம் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு விபத்துகளுக்கு இடையிடையே அடிக்கட சிக்கிக் கொள்வதால் அவர்களது பாதுகாப்பு கருதி அடுத்த வருடம் முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களையும் காப்புறுதி செய்வதற்கான சகல திட்டங்களும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
விபத்துக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு நஸ்ரஈடு வளங்குவதற்காள உரிய வேலைத்திட்டமொன்று காணப்படவில்லை எனவே மாணவர்களது பாதுகாப்பு கருதி புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக இலங்கையில் உள்ள காப்புறுதி நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கோரக்கன்கட்டு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி ஆயுதங்களை இரகசியத் தகவல்களின் அடிப்படையில் மீட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளர்.
மீட்க்கப்பட்ட ஆயுதங்களில் ஆட்லரி செல்கள்- 9, ஆட்லரி செல் பியுஸ்கள்- 5, ஆர் பிஜி செல்கள்- 2, ரி 56 ரைபில்- 2, ரி 56 ரைபில் மகசின்கள்- 6, 4 மில்லிமீற்றர் எல்.எம்.ஜி.ஆர் ரைபில்- 1, கைக்குண்டுகள் 19, கிளைமோர் குண்டுகள்-3, விடுதலைப் புலிகளின் அங்கிகள்- 8, சி – 4 ரகபோர் வெடிபொருள் மருந்து 360 கிராம், டிக்னைட்டர் 15, 81 மில்லிமீற்றர் செல்கள்- 4, 60 மில்லிமீற்றர் குண்டு- 1, பராகுண்டு- 3, விடுதலைப் புலிகளின் தயாரிப்பு அருள் குண்டு 2, சயனைட் குப்பிகள்- 2, புஸ்ட்டர்- 4, குண்டு துளைக்காத ஜக்கட்- 1, தொலைத் தொடர்புக் கருவிகள்- 5, ரவைகள் 1200 ஆகியனவே மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.
தொண்டை வலி குணமடையும்
தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.
வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்
உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.
நீரிழிவு நோய்க்கு
மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்
சீதபேதிக்கு அருமருந்து
மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.
மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.
மூலநோய் குணமடையும்
மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்.
கொசுத்தொல்லை நீங்க
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.

பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது காலத்திற்கு காலம் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருவதன் அடிப்படையில் தற்போது மொபைல் சாதனங்களிலோ அல்லது இணையத்தளங்கள் மூலமாகவோ பார்த்து ரசிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிளிலும் பார்த்து மகிழக்கூடிய வசதியுடைய Chromecast எனும் புத்தம் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை Netflix, YouTube, Google Play உள்ள வீடியோக்களை தொலைக்காட்சியில் இயக்குவதற்கும் செய்தவற்கும் பயன்படுத்த முடியும் என்பதுடன் கூகுள் குரோம் உலாவி மூலம் பார்வையிடும் விடயங்களை தொலைக்காட்சியிலும் பார்வையிடுதவற்கு விசேட நீட்சி ஒன்றும் காணப்படுகின்றது.
35 டொலர்களே பெறுமதியான இச்சாதனத்தை கூகுள் பிளே மற்றும் அமேசான் தளங்களிலிருந்து கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளான படகில் இருந்த 17 சிறுவர்கள் மற்றும் 10 பெண்கள் உட்டபட்ட 73 பேர் இன்று(26.07.2013) காலை 8.00 மணியளவில் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்கள் என்பதுடன் மிரிஸ்ஸ கடற்பரப்பின் ஊடாக இவர்கள் சில நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா நோக்கி பயணத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த கொள்கலன் வாகனம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் பாதையை விட்டு விலகி அப்பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதித் தடம் புரண்டதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் யாழ் மாவட்டத்திற்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளதுடன் இந்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
யாழ் மாவடடத்திற்கான மின் இணைப்பு தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் புதிய மின்கம்பம் இணைக்கும் பணியில் மின்சாரசபை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் குவாண்டொங் மாகாணத்தின் டொன்குஹான் பகுதியில் நிர்வாணமாக வீதியில் சண்டையிட்ட தம்பதிகள் இருவரின் படங்கள் சில இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் கணவன் தனது ஆடைகளைக் களைந்ததாகவும் அவரைத் தொடர்ந்து மனைவியும் அவ்வாறே செய்ததாகவும் தெரிவிக்கப்படுவதுடன் இவர்களது இந்தச்சண்டையால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்ட போதும் அதனை இருவரும் பொருட்படுத்தவில்லை என்பதுடன் சண்டையின் இறுதியில் ஒருவாறு சமாதானமாகி இருவரும் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்

கனடாவைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞரும் மெஜிக் கலைஞருமான அண்டி கிரொஸ் தனது உடலிருந்து வேறாக்கப்பட்ட தனது கால்களை தூக்கிக்கொண்டு பூங்கா மற்றும் வீதியில் உலாவந்ததனை பார்வையிட்ட பலரும் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.
பின்னர் சுதாகரித்துக்கொண்ட அவர்கள் அது போலி என்பதனை உணர்ந்ததுடன் எவ்வாறு இவர் இவ்வாறு உடலை இரண்டாகப் பிரித்தது எவ்வாறு என்ற ரகசியத்தை அண்டி வெளியிடவில்லை என்பதுடன் இதைப்பற்றி வேடிக்கை பார்த்தவர்கள் கேட்டதற்கு தான் செயற்கை கால்களின் பின்னால் மறைத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலகத்திற்கு பெறுமதிமிக்க இருநூறு புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான நிகழ்வு இன்று (25)காலை 10.30 மணியளவில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கருத்து தெரிவிக்கையில்,
இந்த இருநூறு பெறுமதியான புத்தகங்களும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரிதும் பயனுடையதாக அமைகின்றது என்று குறிப்பிட்டதுடன், இந்நூல்களை அன்பளிப்பு செய்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் இணைப்பாளர் மேத்தா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்வுக்கு யாழ் மாநகர சபை மேஜர் யோகேஸ்வரி பற்குணராஜா உலக சுகாதார ஸ்தாபன இலங்கையின் இணைப்பாளர் சிவராஜா மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(பாறூக் சிகான்)

மட்டக்களப்பு பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக கோயில்கள் உடைக்கப்பட்டு அங்குள்ள பெறுமதி மிக்க சிலைகள் உண்டியல்கள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு வருகின்றது. கடந்த 24 ஆம் திகதி 2230 மணியளவில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த 12ம் படையணியினர் கையில் சிலையொன்றை கொண்டுவந்து நபரொருவரை தடுத்து விசாரரித்தபோது , அவர் கொண்டு வந்தது கோயிலொன்றொன்றிலிருந்து களவாடப்பட்ட சிலை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறித்த சிலை ஐயங்கேணி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து களவாடியதாக கள்வன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
கள்வன் சிவராஜ் எனப்படுகின்ற 29 வயதுடைய பிரதான வீதி, வந்தாரமுல்லை யை நிரந்தர முகவரியை கொண்டவன் எனத் தெரியவருகின்றது. இவன் மேலதிக விசாரணைக்காக ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநநேரம் கடந்த 15 07 2013 ம் திகதி இரவு தாளங்குடா ஸ்ரீ வீரம்மாள் கோவிலில் இருந்த உண்டியல்; உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதை மறுநாள் 16.07.2013 உணர்ந்த பூசகர் ஆலய நிர்வாகத்தினரிடம் தெரியப்படுத்தியதை அடுத்து நிர்வாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முறையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது, பிரதேசத்தில் பல களவுகளை மேற்கொள்வதாக சந்தேகிக்கும் நபர் ஒருவர் தொடர்பாக மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். நிலைமையை உணர்ந்த நபர் உடனடியாக தலைமறைவாகியதை அடுத்து பொலிஸார் வியூகம் ஒன்றை வகுத்து அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பூங்கையடி வீதி, புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி யை சேர்ந்த அழகய்யா சந்திரன் எனத் தெரியவருகின்றது.
இவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இங்கே.

யாழ்ப்பாணத்து சின்னக்கதிர்காமம் எனப்படும் நல்லூர் பால கதிர்காம ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா நேற்று (24.07.2013)ஆரம்பமாகி மூன்று தினங்கள் நடைபெறும் வீதி யுலா இன்று(25.07.2013)யாழ்.கே.கே.எஸ் வீதியூடாக வலம் வருகிறது.
இந்த வீதி உலாவில் அதிகளவான அடியார்கள் கலந்து கொண்டதுடன் மன்னர் காலத்துக்குரிய கதைகள் மற்றும் பொய்க்கால் குதிரை, கூத்து, கச்சேரி என பளைமையை மீட்டுப்பார்க்கும் நிகழ்ச்சிகள் பல இந்த வீதி உலாவில் நடைபெறுகிறது.

சூரியன் எப்.எம் வானொலியின் பிறந்த நாளை முன்னிட்டு நேயர்களுக்கு ஹெலிகொப்டர் மூலம் பரிசு வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இன்று (25) காலை நடைபெற்றது.
சூரியன் எப்.எம். வானொலி ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஹெலிகொப்டர் மூலம்நேயர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதன் போது யாழ் மாவட்டத்தில் பரிசு மழை விசிறப்பட்ட போது யாழ் மத்திய பஸ் நிலையப்பகுதில் நேயர்கள் நிகழ்வில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கீழே காணலாம்.
பாறூக் சிகான்)