வெலிக்கந்தை பகுதியில் ஆயுதமுனையில் கொள்ளை அடிக்க முற்பட்ட முன்னாள் புலிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரு புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த குழுவினர் கடந்த நான்கு மாதங்களாக வெலிக்கந்தை, வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.புலிகளியக்கம் ஒழிக்கப்பட்டபின்னர் புனர்வாழ்வுக்கு செல்லாது பிரதேசத்தில் ஒழிந்திருந்த இவர்கள் தற்போது குழுவாக இணைந்து கொள்ளைகளில் ஈடுபட . ஆரம்பித்துள்ளனர்.
இன்று வெலிக்கந்தை பிரதேசத்தில் வாகனமொன்றை மறித்து ஆயுதமுனையில் கொள்ளை அடிக்க முற்பட்டபோது காரிலிருந்தவர்கள் பொலிஸ் அவசர சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அங்கு விரைந்த பொலிஸார் மீது முன்னாள் புலிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பதிலுக்கு பொலிஸார் தாக்கியபோது ஆயுததாரிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இக்கும்பலை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் வெலிகந்த கிம்புலாகல காட்டுப்பகுதயிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது
மட்டக்களப்பு மன்னம்பிட்டிய பகுதியில் காரைக் கடத்திக் கொண்டு செல்ல முற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது
இச்சம்பவத்தில் காயமடைந்த வெலிக்கந்த புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில் தப்பியோடியவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவருடன் இன்னும் இருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதோடு அவரிடமிருந்து ரீ-56 ரக துப்பர்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செம்சுங் கெலக்ஸி எஸ் வகைப் போன்கள் சாதனை படைத்துள்ள மீண்டும் ஒரு சாதனைக்கான அழைப்பை கெலக்ஸி நிறுவனம் விடுத்துள்ளது. செம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ் எஸ் 2 எஸ் 3 ஆகிய மாதிரிகள் விற்பனையில் சாதனை படைத்தவை.செம்சுங் கெலக்ஸி எஸ் வரிசையில் இறுதியாக வெளியாகியது எஸ் 3 இதுவும் முன்னையை வெளியீடுகளைப் போல நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் புதிய தனது போனிற்கான அழைப்பை சம்சங் விடுத்துள்ளது.தற்போது செம்சுங்கின் காலம் கனிந்து விட்டது. ஆம் செம்சுங் அடுத்த கெலக்ஸி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இது கெலக்ஸி எஸ் 4 ஆக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த அறிமுக நிகழ்வு மார்ச் மாதம் 14 ஆம் திகதி நிவ்யோர்கில் இடம்பெறவுள்ளது.இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ்களையும் செம்சுங் அனுப்பியுள்ளது.
எனவே இன்னும் சில வாரங்களில் செம்சுங் கெலக்ஸி எஸ் 4 எப்படி இருக்கப்போகின்றது என்ன தொழிநுட்ப அம்சங்களை உள்ளடக்கியிருக்கப்போகின்றது என தெரிந்து விடும்.
இதேவேளை சுமார் 3 வருடங்களின் பின்னர் செம்சுங் சுமார் தனது ஸ்மார்ட் போனொன்றிற்கான அறிமுக நிகழ்வை அமெரிக்காவில் நடத்தவுள்ளது.
அப்பிள் எனும் சிங்கத்தின் கோட்டையான அமெரிக்காவில் இது நடைபெறுகின்றமை இந்நிகழ்விற்கு கூடிய சிறப்பு சேர்க்கின்றது.குறிப்பாக அப்பிள் மற்றும் செம்சுங் இடையிலா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்நிகழ்வு அங்கு இடம்பெறவுள்ளது.
பல தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இதனை நடத்துவதாக செம்சுங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட விவசாயிகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இவ் உண்ணாவிரதப் போராட்டம் முருங்கன் செம்மண் தீவு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.நிர்ணயித்த விலையில் நெல் கொள்வனவு செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு வரட்சி மற்றும் வெள்ள நிவாரணங்கள் உடன் வழங்குவதோடு வங்கிக்கடனை உடன் இரத்துச்செய்ய வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.இதில் பெண்கள் ஆண்கள் எனப் பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அரனாயக்க உஸ்ஸபிட்டியவில் உள்ள ரிவிசந்த மத்திய கல்லூயின் விளையாட்டுப் போட்டில் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட 18 வயதான மாணவி ஒருவர் தீடிரென்று மைதானத்தில் மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார் இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. மைதானத்தில் மயங்கி விழுந்த இந்த மாணவி மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் தொடர்பில் அரனாயக்க பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் குறித்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணினி முறைப் பயங்கரவாத நடவடிக்கைகளை வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையின் இணையத் தளங்கள் மீது மேற்கொள்வதாக அரசாங்கம் குற்றச்சாட்டியுள்ளது. ஊடக மற்றும் தகவல்கள் அமைச்சின் இணையத்தளங்கள உள்பட பல்வேறு தளங்கள் தாக்குதலுக்குள்ளான நிலையிலேயே இக்குற்றச்சாட்டை அரசாங்கம் முன்வைத்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இத்தாக்குதல்கள் முக்கியத்துவம் பெறுகின்றது என்று ஊடக அமைச்சின் செயலாளர் ஷரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளிலுள்ள புலிகள் பல முனைகளில் தொழிற்படுகின்றனர். அவற்றில் ஒன்று தான் இலங்கை அரசாங்கத்தின் இணைத்தளங்கள் மீதான தாக்குதல்.
ஊடக அமைச்சின் இணையத்தளமான media.gov.lk தாக்கப்பட்டு, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சில கொடூரங்களை காட்டும் ஒரு இணைப்பை ஏற்றியிருந்தது.
அதில் அப்பாவி தமிழர்களை கொல்வதை நிறுத்துங்கள் அல்லது எமது தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்ற செய்தியும் காணப்பட்டது. என்றார்.
நாட்டில் சார்சையை ஏற்படுத்தி வந்த ஹலால் சான்றிதழ் வழங்குவதை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது.இம்மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்றது.ஹலால் சான்றிதழ் விவகாரம் இன்று நாட்டில் சமூகங்களுக்கிடையே பிளவுகளைத் தோற்றுவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.
உலமா சபை இதன் மூலமாக நாட்டில் பிரச்சினைகள் தோற்றம் பெறுவதை ஒருபோதும் விரும்பவில்லை.
எனவே ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாகப் பொறுப்பேற்பதுடன் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என உலமா சபை தெரிவித்துள்ளது.
நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபiயின் 22 வவது மனித உரிமை மாநாட்டில் இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளதாக பரவலாக எதிர்பார்க்கப்படுன்றது இந்நிலையில் இலங்கைமீது முன்வைக்கப்படும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நாளை உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை ஆணைக்குழுவின் 22வது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தற்போது இடம்பெறுகிறது. ஆரம்பத்தில் ஐக்கிய மனித உரிமை ஆணைக்குழவின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, இலங்கை மீது மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.
நவநீதம் பிள்ளையின் இச்செயற்பாட்டு இலங்கை சுயாதீன தொலைக்காட்டி வன்மையாக விசமர்சனம் செய்துள்ளது. அதன் செய்தியில், அமெரிக்கா உள்ளிட்ட பலம்பொருந்திய நாடுகள், இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, பிரேரணையை நிறைவேற்றுவதற்கே, முயற்சிக்கிறது என்றும் இவர்களது குறுகிய நோக்கங்களை எட்டும் வகையிலேயே, நவநீதம்பிள்ளை செயற்பாட்டில் இறங்கியுள்ளார் என்று குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள எல்ரிரிஈ யிற்கு துணைபோகும் சக்திகளை போன்று, மனித உரிமை அமைப்புகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள ஒரு சில அமைப்புகளும், இலங்கைக்கு எதிராக போலி பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன எனவும் ஈராக்கில் நிலவிய அமைதியினை சீர்குலைத்து, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சதாம் ஹூஸைன் தூக்கிலிடப்பட்டமை தொடர்பில் அமெரிக்காவிற்கு எதிராக எதுவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் லிபியாவை அழித்து, முஅம்மர் கடாபி மிலேச்சத்தனமான முறையில் கொலை செய்யும்போது, முழு உலகமும் அதனை பார்த்துக்கொண்டிருந்தது என்றும் அல் கைதா தலைவர் ஒஸாமா பின் லாடன், நிராயுதபாணியாக இருந்தவேளை, கொலை செய்யப்பட்டார் என்றும் சிரியா மற்றும் மாலி ராச்சியங்களிலும் இவர்கள் யுத்தத்தை தூண்டியது மாத்திரமன்றி, அங்கும் பாரிய அட்டகாசங்களை புரிந்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ள சுயாதீனத் தொலைக்காட்சி மேற்படி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் , எந்தவொரு மனித உரிமை அமைப்பும், அமெரிக்கா மீது குற்றம் சாட்டவில்லை என்றும் 30 ஆண்டுகால பயங்கரவாதத்தினால் வரையறையற்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட இலங்கை மக்களை அதிலிருந்து மீடடெடுப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட மனித மனிதாபிமான நடவடிக்கைக்கு மனித உரிமை மீறல் என நாமம் சூட்ட முனைகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டனர் என்று தெரிவிக்கும் சுயாதீனத் தொலைக்காட்டி இந்நடவடிக்கை எவ்வாறு மனித உரிமை மீறலாக அமைய முடியுமென, கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் சுயாதீனத் தொலைக்காட்சியின் செய்தியில் அன்று போல், இன்று இலங்கையில் எங்கும் குண்டுவெடிப்பதில்லை., கிராமங்களில் ஊடுறுவி பொது மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கையூடாக மீடு;டெடுக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அச்சமின்றி, சுதந்திரமாக வாழக்கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், மனித உரிமைகளும், பாதுகாக்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்களின் சிறார்கள், இன்று சுதந்திரமாக கல்வி கற்கின்றனர். வடபுல இளைஞர் யுவதிகளுக்கு, பட்டதாரி நியமனங்கள் கூட, வழங்கப்பட்டுள்ளன.
பாலங்கள், நெடுஞ்சாலைகள் உட்பட புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதுடன், சுகாதார வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வங்கிக்கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. வடபுல மீன்பிடி கைத்தொழிலுக்கு அரசாங்கம் உயரிய வசதிகளை வழங்கியுள்ளது.
மக்களுக்கு சுதந்திரமாக தமது சமயத்தை பின்பற்றக்கூடிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அரசிற்கு எதிராக, விமர்சனங்களை தெரிவிப்பதற்கு ஊடகங்களுக்கு கூட, சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை. அன்று போல் இன்று ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதில்லை.
இந்நிலையில் போலி அடிப்படையற்ற கருத்துகளை முன்வைத்து, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக கூறுவது, நியாயமற்ற செயற்பாடாகும். இலங்கை அரசிற்கு எதிராக ஒரு சில நாடுகள் முன்னெடுத்துள்ள போலி பிரச்சாரங்கள், அடிப்படையற்றவையாகும். அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கையின் உண்மையான நிலைமைகள் தொடர்பாக, மனித உரிமை மாநாட்டில், நாளை உரையாற்றவுள்ளாராம்.
ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினரால் எதையும் சாதித்துவிட முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனை அவர் வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு செவிசாய்க்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் இங்கிருந்து கடிதம் அனுப்பியதாகக் கூட்டமைப்புத் தெரிவித்தது. ஆனால் இவ்வருடம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு சென்றிருக்கின்றனர். அவ்வாறு அங்கு சென்றவர்கள் கொண்டு செல்லும் கோரிக்கை என்ன? இந்தத் தீர்மானம் பற்றியும், இங்கு நடந்த சம்பவங்கள் பற்றியும் சர்வதேசத்திற்கு முழுமையாகத் தெரியும். இருந்தும் இவர்கள் அங்கு சென்று என்னத்தைச் சொல்லப் போகிறார்கள்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் நீங்கள் மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் மக்களிடம் இருந்து என்ன கோரிக்கை வருகிறது என்று மூன்றாம் தரப்பாக சர்வதேசம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பம்மாத்துக் காட்டிக்கொண்டிருக்கின்றது. தற்போது உலகத்தையும், தமிழர்களையும் ஏமாற்றுகின்ற செயற்பாட்டையே கூட்டமைப்பு செய்து வருகின்றது. தமது அரசியல் நலனில் கண்ணை மூடிக்கொடு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாதுகேள் மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளுமன்றி வேறில்லை என்கிறது மணிமேகலை. மக்களுக்கான இந்த வாழ்வாதாரங்களை வழங்குவதே அறத்தின்பாற்பட்டது என்றார் சாத்தனார்.அதை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு அல்லது அந்தத் தேவைகளை கேவலப்படுத்தி, சோற்றுக்கு வாலாட்டுபவர்களாக எள்ளிநகையாடிவிட்டு வேறு கனவுகளைச் சொல்லி மக்களை மிதத்திச் செல்வதில் வஞ்சனை இருக்கிறது. உழைப்பைச் சுரண்டுவதைவிட மிக மோசமானது மக்களின் உணர்ச்சியைச் சுரண்டி அவர்களை ஏமாற்றிக் கரடான பாதையிலேயே இழுத்துச் செல்வது.
மக்கள் தங்கள் தேவைகளைப் பெற்று வாழ்வதற்கு எந்த உதவிகளும் செய்யாதவர்கள், அதற்கான எந்த எத்தனங்களையும் மேற்கொள்ளாதவர்கள், மக்களின் தேவை சர்வதேச நீதிமன்ற மேசைகளில்தான் இருப்பதாகச் சொல்லிக் கொண்டே தலைவர்களாகவும் பெயர் சொல்லி ஓட்டிக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய ஏமாற்று!
வெளிநாடுகள் இதோ கிட்ட வந்துவிட்டன கிட்ட வந்துவிட்டன என்று சொல்லிக்கொண்டே பெரும்பாலான மக்களை வாழவிடா மலே இழுத்துச் செல்லும் இந்த உணர்ச்சிகரம் என்றைக்கு ஓயும்? வெற்றுத் தோள்தட்டல்களால் மக்களுக்குப் பெற்றுத்தந்து கொண்டிருப்பது ஆவேசங்களையும் சிதைவுகளையும் தவிர வேறென்ன?
மேலும் மேலும் பட்டினிகளாலும் அந்தரிப்புகளாலும் வாழ்வுத் தேவைகளை இழந்தும்தான் பொன்னுலகம் என்னும் கானல் பயணம் நடக்க வேண்டுமா? அந்தப் பொன்னுலகம் சாதாரண மக்களுக்கானதா? அல்லது எல்லா வசதிகளுடனும் வாழ்ந்தபடி எதிரியைப் பழிதீர்த்து அதில் திருப்திகொள்ள விழையும் மேட்டுக் குடிகளுக்கானதா? மக்களுக்கான மகிழ்ச்சிகரமான சுபிட்சமான வாழ்வை அளிக்கயாரோ வருவார்கள், இவர்களுக்கு அதிகாரத்தை வாங்கித் தருவார்கள், அதன்பிறகுதான் எல்லாம் என்று இன்னமும் இவர்கள் கூறிக்கொண்டிருப்பது ஏமாற்றில்லையா?
உங்கள் வீராவேசத் தினவுகளுக்காகவும், ஆதிக்க இறும் பூதுக்காகவும், நடப்புகளுக்காகவும் மற்றும் வியாபார லாபங்களுக்காகவும் மக்களைப் பலிகொடுத்துக் கொண்டேயிருக்கத் தூண்டுவதில் என்ன மனிதநேயம் இருக்கிறது? நீங்களே மக்களின் அவலங்களுக்காகக் கண்ணீர் சிந்துவது போலவும் குமுறுவது போலவும் காட்டி ஏமாற்றி வருவதில் என்ன உண்மை இருக்கிறது? வன்முறை உணர்வுகளைத் தூண்டிவிட்டுக் கொண்டே மக் களை வதைபடவிட்டு, வெளியாருக்கு அதை விற்பது என்ன நேயம்?
வன்முறையும் ஆவேசமும் பழியுணர்ச்சியும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய பொற்காலத்தை மீட்டெடுக்கும் தாகங்களும், மற்றவர்களை நிராகரிக்கும் ஏகப்பெருமிதங்களும், இணங்கிப் போவதில் இசைவின்மையும், அவநம்பிக்கையும் நம்மை வாழச் செய்வதற்குரிய வழிகளைத் தேர்ந்துகொள்ளத் தடையாக இருப்பவை. மீண்டும் மீண்டும் அழிவுச் சுழலுக்குள்ளேயே நம்மைக் கொண்டு சேர்ப்பவை.
நம் மனோபாவத்தின் அடிப்படைகளை மாற்றிக் கொள்ளாமல் நாம் மீட்சி பெற முடியாது. வீம்பும், பகையுணர்வும், முட்டாள்த்தனமான ரோசங்களும் நம் சமூகத்தை மேலும் மேலும் சிதைத்துவிடுவதற்கே உதவும்.
மக்களை வாழ விடுவதற்கும், போரின் காயங்களிலிருந்து அவர்கள் விரைவாக மீண்டு வருவதற்கும், வாழ்வைத் திருத்தியபடியே அரசியலுரிமைக்குச் செல்வது பற்றியும்தான் நாம் இன்று யோசிக்க வேண்டும். வாழவிடாமலே சர்வதேசம் வந்திறங்கும் எதிர்பார்ப்பை விதைத்து விட்டு வீட்டில் உறங்குவதற்கல்ல.
நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுச் சிறுவர்கள் விவகாரத்தில் அவர்களது பெற்றோர்களை பலவந்தமாக குற்றவாளிகளாக்கி அதன் மூலமான அறிக்கை ஒன்றை ஜெனீவா பேரவையில் சமர்ப்பிக்க நோர்வே அரசாங்கம் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் தமது செயற்பாட்டை சர்வதேசத்தின் முன்னிலையில் நியாயப்படுத்துவதற்கான சூழ்ச்சிகர நடவடிக்கைகளில் நோர்வே அரசாங்கம் மூடிக்கி விட்டுள்ளது.
நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண் காணிப்பின் கீழ் இயங்குகின்ற சிறுவர் நலன் காப்பகங்களால் வெளிநாட்டுப் பெற்றோரிடமிருந்து பலவந்தமாகவும் அதேநேரம் கடத்தல் பாணியிலும் கொண்டுசெல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விடயத்தில் உண்மை நிலைமைகளை ஆய்ந்தறியாத வகையில் தயாரிக்கப்பட்டதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பெற்றோர் நோர்வே சிறுவர் காப்பங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெற்றோர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அந்த ஒப்புதல்களை ஜெனீவா பேரவையில் சமர்ப்பித்து அதனுடாக தமது அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் சதித்திட்டமாக இருப்பதாகச் கூறப்படுகின்றது.
கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல், கண்ணைக் கசக்குதல், கண்மடல் வீங்குதல், வெளிச்சத்தைப் பார்க்கக் கூச்சம் எனச் சிலருக்கு கண்களே தொல்லையாகி விடுவதுண்டு.இவை எல்லாம் கண்ணில் ஒவ்வாமையின் Eye Allergy அறிகுறிகளாகும்.இவை பொதுவாகத் தனியாக வருவதில்லை. தும்மல், மூக்கால் வடிதல், மூக்கடைப்பு போன்ற வேறு ஒவ்வாமைகளுடன் கைகோர்த்து வருவதுண்டு.பொதுவாக ஒவ்வாமைகளுக்குக் காரணம் என்ன? தூசி, புழுதி, போன்றவை காரணமாகலாம். வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், கடுமையான மணங்கள் காரணமாகலாம்.
சிலருக்கு சீதோசன காலநிலைகளும் காரணமாகலாம். பூக்கள் மகரந்தங்கள் போன்றவையும் காரணமாகலாம். தூசிப் பூச்சி, ஒட்டடை, பூனை நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களின் ரோமம் போன்றவையும் சொல்லப்படுகிறது.கீழ்கண்ட ஆலோசனைகளை The American Academy of Allergy Asthma and Immunology வழங்குகிறது.
வீட்டைவிட்டு வெளியே போகும் போது தூசி, மகரந்தம் போன்றவை கண்ணில் விழாமலிருக்க பரந்த விளிம்புள்ள தொப்பிகளை அணியுங்கள். தொப்பி தலையில் வெயில் மழை படாமலிருக்க மட்டுமின்றி இந்த வகையிலும் உதவுகிறது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.
அதே போல கண்ணாடி, கருப்புக் கண்ணாடி அணிவதாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் கண்ணில் நேரடியாகதத் தாக்காது காப்பாற்றலாம்.
வெளியில் போய் வந்ததும் கண்களை நீரினால் கழுவுங்கள். நன்கு அலசிக் கழுவினால் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற முடியும். சோப் போட வேண்டியதில்லை.
கொன்டக்ட் லென்ஸ் contact lenses.போடுவராயின் அதனை அகற்றுவதும் உதவும்.எவ்வளவு அரித்தாலும் கண்களைக் கசக்குவதைத் தவிருங்கள்.அரிப்புடன் கிருமித் தொற்றும் கண்ணில் நுண்ணிய உரசல்களும் பிரச்சனையை மோசமாக்கும்.
உங்கள் மருத்துவரைக் காணுங்கள்.
ஒவ்வாமையைத் தணிக்கும் மாத்திரைகளை அல்லது, அதற்கான கண் துளி மருந்துகளையும் அவர் தருவார். சில தருணங்களில் இரண்டையும் சேர்த்தும் தரக் கூடும்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர் சற்று முன்னர் சுவிட்ஸர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.ஐக்கியநாடுகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையில் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை இக் கூட்டத் தொடர் இடம்பெறும்.அத்துடன் இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை மார்ச் மாதம் 20 ஆம் திகதி மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் இலங்கையின் சார்பில் ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதியின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஜெனீவா நோக்கி பயணமாகியுள்ளனர்.
ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆப்பு இறுக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு குழுவினர் ஜெனீவாவிற்கு செல்லவுள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவா செல்லவிருக்கின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன். எஸ். ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் வாகனமும் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதில் சில்லாலை பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் அன்ரனிராஜா (வயது 17) என்பவரே உயிரிழந்துள்ளார்.படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற கொடியேற்றத்தை தொடர்ந்து 21 ஆம் நாள் இன்று காலையில் முருகன், சிவன் - அம்பாள், ஸ்ரீ கணேசன், சண்டேஸ்வரி மற்றும் மாரியம்மன் ஆகியோருக்கு நடைபெற்ற விசேட பூயையை தொடர்ந்து இரதோற்சவம் நடைபெற்றது.
இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் “வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சமகால ஆக்கபூர்வமான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காய்”, “அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளினதும் புத்தியீவிகளினதும் பங்குபற்றுதலை உறுதி செய்வதற்காய்” என பலவாசகங்கள் எழுதப்பட்டுள்ளதடன் இந்தப்புதிய 'தமிழ் தேசிய முன்னணி' கட்சி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 024 2226436, 0777642329 என்ற தொலைபேசி இலக்கங்களும் இந்த சுவரொட்டிகளில் இடப்பட்ட நிலையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவருடைய இளம் பராயத்தில் தமிழ் பேசும் இலங்கையரின் தானைத் தலைவராக ஈழத்துக் காந்தி தந்தை செல்வநாயகம் இருந்தார். செல்வநாயகத்தின் அரசியலோ சிங்கள வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட இனவாதத்துள் பிறந்து. யாழ்ப்பாண நடுத்தர வர்க்க தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தியது. பரந்த மனிதம் தழுவிய கருத்தியல் செல்வநாயகம் அறியாத ஒன்று. ஒரு பிரிட்டிஷ் விசுவாசியான செல்வநாயகம் இலங்கை வரலாற்றிலேயே மோசமான இனவாதக் கட்சியான UNPயுடன் உறவாக இருந்தார். N.M பெரேரா, கொல்வின் R.D.சில்வா, பீற்றர் கெனமன், சண்முகதாசன் போன்றவர்களுக்கு இருந்த சிந்தனை விருத்தி, ஒரு சாதாரண மேடைப்பேச்சைக் கூட நிகழ்த்த முடியாத செல்வநாயகத்துக்கு இருக்கவில்லை. இதனைக் கண்ணுற்ற சண்முகலிங்கம் அவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் முழு நேர தொண்டனாக சேர்ந்தார். அமிர்தலிங்கம் முதல் ஆனந்தசங்கரி வரை ஆரமபத்தில் லங்கா சமசமாஜக் கட்சியில்தான் சேர்ந்திருந்தனர். ஆனால் இவர்கள் அனைவரும் பின்னர் இனவாதச் சகதியினுள் விழுந்து விட இனவாத அரசியலை முற்றாக நிராகரித்த சண்முகலிங்கம் அவர்கள் அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மலையக மக்களுக்காக தன்னலம் பாராது உழைத்தார். ஜெயவர்த்தன அரசினால் 1977ல் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு அநாதரவாக வன்னிக்குத் துரத்தப்பட்ட மலையக மக்களுக்காக இராஜசுந்தரம், சந்ததியார், சுந்தரம் போன்றவர்களுடன் சேர்ந்து காந்தீய அமைப்பு மூலம் அகதிகளான மலையக மக்களின் விடிவுக்காக பணியாற்றினார்.
முற்போக்கு சிந்தளையும் தெளிவான அரசியல் பார்வையும் கொண்ட சண்முகலிங்கம் அவர்கள் 1981ல் சந்ததியாரை கொழும்புக்கு அழைத்துச் சென்று சண்முகதாசனை அறிமுகம் செய்து வைத்தார். எண்பதுகளில் கைதாகி சிறைவாசமும் அனுபவித்தார். சிறையிலிருந்து வெளிவந்தபின்னர் தமிழ்நாடு சென்று புளொட் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனைகளால் வெளியேறி தவித்த இளைஞர்களுக்கு உதவி செய்தார். ஞானசேகரம் (பரந்தன் ராஜன்) , தேவானந்தா (டக்லஸ்), அற்புதன் போன்றவர்களுடன் சேர்ந்து ENDLF என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் மித்திரன், மயில், கருமையம் சபேசன், மனவெளி செல்வன் போன்றவர்களுடன் இணைந்து தேடகம் அமைப்பிலும் தீவிரமாகப் பங்காற்றினார். மிகவும் நேர்மையாக பொதுப்பணத்தை கையாள்வதிலும், கொள்கைகளை ஒரு போதும் விட்டு கொடுக்காது போராடுவதிலும் எந்தவித சுய இலாபமும் இல்லாத ஏராளமான பொது காரியங்களில் சிரத்தையோடு ஈடுபடுவதிலும் சண்முகலிங்கம் அவர்கள் முன்னணியில் திகழ்ந்தார்.
புலிகளினது மாபியா அரசியல் தமிழ் மக்களை படுகுழியில் விழுத்திவிடும் என்பதில் மிகவும் தெளிவான சிந்தனை கொண்டிருந்த சண்முகலிங்கம் அவர்கள் புலிகளை துணிகரமாக வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார். எந்த விதமான பணமோ புகழோ கருதாது மாற்று கருத்துக்கள் வெளிப்படுத்தும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் டென்மார்க் பாரதி பாலனின் "சமரசபூமி" நூல் வெளியீட்டுவிழாவை கனடாவில் நடாத்திய பெருந்தகைதான் சண்முகலிங்கம் அவர்கள்.
நாளொரு அமைப்பும்,பொழுதொரு பிழைப்புமாக புறம்போக்குத் தமிழர்களும் முஸ்லீம்களும் பணத்திற்காகவும் புகழிற்காகவும் பிழையென தெரிந்துகொண்டும் சரியென நியாயப்படுத்துகையில், தங்களது சுயநலத்துக்காக கொள்கைகளை காற்றில் பறக்க விடுவோர் மலிந்துபோன காலகட்டத்தில் சுயமாக சிந்தித்து இறுதி வரை வாழ்ந்த சண்முகலிங்கம் அவர்கள் ஒரு ஒளிவிளக்காக கொள்கை குன்றமாக திகழ்ந்தவர்.
நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சண்முகலிங்கம் அவர்கள் கடந்த 22ம் திகதி டொராண்டோவில் காலமானார்.
அவரின் இறுதி மரியாதைகள் பற்றிய விபரங்களிற்கு
647-878-2478 அல்லது 416-431-0718 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
- சி.கந்தசாமி
பொது பல சேனாவுக்கு அழைப்பு!‘ஈரானில் மாற்று மதங்களுக்கு அளிக்கப்படுகின்ற மரியாதைகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஈரானுக்கு ஒருமுறை வந்து செல்லுமாறு ஈரானிய அரசு உத்தியோகபூர்வ அழைப்பொன்றை பொது பல சேனாவுக்கு விடுத்துள்ளது.
இன்று காலை பொது பல சேனாவின் தலைமையகத்துக்குச்சென்ற இலங்கையின் ஈரான் தூதுவர் கலாநிதி எம்.என். ஹஸானி போ இந்த வேண்டுகோளை இயக்கத்தினரிடம் விடுத்துள்ளார்.
ஈரானிய அரசு பௌத்த சிலைகளை தடைசெய்துள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் சொல்வதில் எந்த உண்மையும் கிடையாது என்பதை தெளிவுறுத்திய தூதுவர் ஹஸானி, பௌத்த சிலைகள் ஓர் ஒழுங்கமைப்பின்றி அங்குமிங்கும் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து அதற்குரிய மரியாதைகளுடன் விற்பனை செய்யப்பட வேண்டுமென்றே அரசு அவ்வாறான வேண்டுகோள் ஒன்றை விடுதத்து என்றும் அவர் தெளிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலின்போது, பொது பல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் மற்றும் அந்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான திலந்த விதானகேயும் கலந்துகொண்டனர்.
(கேஎப்)
85வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நேற்று பிரமாண்டமான முறையில் லாஸ் ஏஞ்சலில் நடைபெற்றது.இதில் இந்திய கதைச்சூழலை பின்னணியாக கொண்ட Life of Pi திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது. சிறந்த இயக்குனர், சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பின்னணி இசை என நான்கு பிரிவுகளில் இத்திரைப்படம் விருதுகளை குவித்தது. அதாவது இம்முறை ஆஸ்கார் விழாவில் அதிக விருதுகளை குவித்த ஒரே திரைப்படம் Life of Pi தான்.சிறந்த இயக்குனருக்கான விருதை Life of Pi இயக்குனர் ஆங் லீ இரண்டாவது முறையாக பெறுகிறார். இத்திரைப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து உழைத்த 3000 பேருக்கும் இவ்விருதை சமர்ப்பிப்பதாக விழாவில் பேசிய ஆங் லீ உணர்ச்சி வசமாக பேசினார்.மேலும் இத்திரைப்படம் உருவாக முக்கிய காரணமான நாவலாசிரியருக்கும், தயாரிப்பாளருக்கும் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுராஜுக்கும் தனிப்பட்ட முறையில் அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.
இதேவேளை சிறந்த தனிப்பாடல் பிரிவில், இத்திரைப்படத்திற்காக பாடிய பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயசிறீயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு பதில் பிரபல பாப் இசை பாடகி அடிலிக்கே இவ்விருது வழங்கப்பட்டது. இதேவேளை இம்முறை ஆஸ்கார் விருதுகள் நிகழ்வுகளில் சற்று வித்தியாசமாக அமெரிக்க அதிபர் மாளிகையும் முதன்முறையாக கலந்து கொண்டது. அதாவது சிறந்த திரைப்படத்திற்கான அறிவிப்பை வெள்ளைமாளிகையிலிருந்து அதிபர் பாரக் ஒபாமாவின் துணைவியார் மிச்செல் அம்மையார் வாசித்தார். சிறந்த திரைப்படமாக அர்கோ தெரிவானது. ஈரானிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு குழுவினர் எப்படி மீட்டெடுக்கின்றனர் எனும் 1979ம் ஆண்டுக்கான கதைக்களம் கொண்டது இத்திரைப்படம்.
சிறந்த அடெப்டட் ஸ்கிரீன்பிளே, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளிலும் இத்திரைப்படமே வெற்றி பெற்றது. ஆனால் சிறந்த இயக்குனர் பிரிவில் இத்திரைப்படம் பரிந்துரைக்கப்படவில்லை. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் அஃப்லெக்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விழா குழுவினர், தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அப்போது பதில் அளித்த அஃப்லெக், ஈரானில் கடுமையான சூழலில் எமது நண்பர்களுக்கு இந்நேரம் நன்றி கூறுகிறேன் என்றார்.
இதேவேளை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒசாமா கொல்லப்பட்ட தாக்குதல் திட்டத்தை அடிப்படையாக கொண்ட Zero Dark Thirty திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை எடிட்டிங்கை தவிர வேறெந்த பிரிவிலும் விருது கிடைக்கப்படைவில்லை.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா இலங்கை- இந்திய மக்களின் பங்கேற்றலுடன் யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.திருவிழா நிகழ்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். யாழ். ஆயரின் தலைமையில் இலங்கை இந்திய நாடுகளின் அருட் தந்தையர்கள் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றியதுடன், திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் இணைந்து மேற்கொண்டிருந்தன.
காலை 8.00 மணிக்குத் திருவிழா திருப்பலி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, யாழ்ப்பாணத்திலுள்ள பிரதி இந்தியத் தூதுவர் மகாலிங்கம், வட மாகாணத்திற்கான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். கடற்படை கட்டளைத் தளபதி ஷிரந்த உடவத்த, யாழ் மாவட்ட நீதிபதி அமலவன் உட்பட இலங்கை இந்திய நாடுகளிலிருந்து 1000 கணக்கான பக்தர்ள் கலந்து கொண்டிருந்தனர்.


