இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற விபத்தில் மணியளவில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. அவர் பயணித்த சைக்கிள் லொறியொன் றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இலங்கையை சேர்ந்த முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான் 5 பெண் பிள்ளைகளின் தயே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் பேர்மிங்ஹாமில் ஆடைத் தொழிற்சாலை யொன்றில் பணிபுரிபவரெனவும் காலையில் தொழிலுக்கு செல்லும் போது ஹே மில்ஸ் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புங்குடுதீவு தபாலதிபர் தபோதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு,வடமத்திய பிரதித்த தபால் மா அதிபர் என்.இரட்ணசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு,வேலணை பிரதேச செயலர் மஞ்சுளா தேவி சதீசன்,யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் கா.குகபாலன்,வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.தவராசா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
(பா.சிகான்)
மாணவர்கள் கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனும் நோக்கில் உதவித்தொகை வழங்குவதற்காக ஆரம் பிக்கப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சையானது, புகழ்பெற்ற பாடசாலைகளுக்கு மாணவர்களை அநுமதிப்பதற்கான பரீட்சையாக மாறியுள்ளதனால் அது, 'மிலேச்சத்தனமான பரீட்சையாக மாறியுள்ளது என பாடசாலைகளைக் காக்கும் மக்கள் அமைப்பு குறிப்பிடுகின்றது.
இந்த மிலேச்சத்தனத்தினால் பரீட்சையில் சித்தியடையத் தவறுகின்ற பிள்ளை களை கருணையின்றி இல்லங்களிலிருந்து விரட்டியடிக்கும் நிலைமைக்குப் பெற்றோர்கள் மாறியிருப்பதாக அவ்வமைப்பின் ஒருங்கிணைப் பாளர் தம்மிக்க அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இதனால் உடனடியாக இந்நிலையை நீக்குவதற்கு கல்வியமைச்சு உட்பட பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் அதற்கு முன்னர் கல்வியியலாளர்களின் கருத்துக்களைப் பெற்று பரீட்சை நடாத்துவது குறித்து பொருத்தமானதொரு அமைப்புமுறையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரபல்ய பெயர்களை மாற்றியமைத்து, அனைத்துச் சிறார்களும் சுதந்திரமாக அனைத்துக் கல்விச் சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் பாடசாலைகளை ஏற்படுத்தி, திறமை வாய்ந்த மாணவர்களை அப்பாடசாலைகளுள் உள்வாங்குவதற்கான ஒருமுறையை நாட்டினுள்ளே ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
(கேஎப்)
இந்த மிலேச்சத்தனத்தினால் பரீட்சையில் சித்தியடையத் தவறுகின்ற பிள்ளை களை கருணையின்றி இல்லங்களிலிருந்து விரட்டியடிக்கும் நிலைமைக்குப் பெற்றோர்கள் மாறியிருப்பதாக அவ்வமைப்பின் ஒருங்கிணைப் பாளர் தம்மிக்க அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இதனால் உடனடியாக இந்நிலையை நீக்குவதற்கு கல்வியமைச்சு உட்பட பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் அதற்கு முன்னர் கல்வியியலாளர்களின் கருத்துக்களைப் பெற்று பரீட்சை நடாத்துவது குறித்து பொருத்தமானதொரு அமைப்புமுறையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரபல்ய பெயர்களை மாற்றியமைத்து, அனைத்துச் சிறார்களும் சுதந்திரமாக அனைத்துக் கல்விச் சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் பாடசாலைகளை ஏற்படுத்தி, திறமை வாய்ந்த மாணவர்களை அப்பாடசாலைகளுள் உள்வாங்குவதற்கான ஒருமுறையை நாட்டினுள்ளே ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
(கேஎப்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப்பதவி யாழ். மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
அதில் தமிழீழ விடுதலை இயக்கம் இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் தமிழீழ விதலை இயக்கம் டெலோ சார்பாக வழங்கப்பட்ட ஆசனம் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்க தீர்மானிக்கப்பட்டது.
எனினும் குறித்த ஆசனம் யாழ்ப்பானத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக போட்டியிட்டு மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி பா.டெனிஸ்வரனின் ஆதரவாளர்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே குறித்த ஆசனத்தை மன்னார் மாவட்டத்தில் டெலோ சார்பாக போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளை பெற்ற சட்டத்தரணி பா.டெனிஸ்வரனுக்கு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு அந்த மக்கள் கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த அமைச்சுப் பதவியை சட்டத்தரணி டெனிஸ்வரனுக்கு வழங்க வேண்டும் என கோரி தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் மன்னார் எருக்கலம் பிட்டி முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளி வாசல் ஆகியவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அண்மையில் வெளியான 5ஆம் ஆண்டு (2013) புலமைப் பரிசில் பரீட்சையில் வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் எண்மர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி. எம்.ஏ.எஸ். ஸனூலா தெரிவித்தார்.
பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளையும் ஆசிரிய, ஆசிரியைகளையும், அதிபரையும் படத்தில் காணலாம்.
முன்வரிசை - இடமிருந்து வலமாக:
ராஷித் பழுலுர் ரஹ்மான் (170), அம்ஜத் அர்ஹம் (188), அர்க்கம் அஷ்ரப் (175), யூனுஸ் பதுர்தீன் (158)
பின்வரிசை - இடமிருந்து வலமாக:
இஷ்பா நௌஷாத்தீன் (156), பஸீஹா உஸ்மான் (158), திருமதி எம்.இஸட்.என். விகாயா (ஆசிரியை), திருமதி எம்.டப்ளியூ.எப். நவாஸியா (ஆசிரியை), திருமதி எம்.ஏ.எஸ். ஸனூலா (அதிபர்), திரு எம்.எம்.எம். பௌஸ்தீன் (ஆசிரியர்), ஷாபியா அன்ஸார் (158), ஆயிஷா ஸித்தீக்கா பௌஸி (166)
(கலைமகன் பைரூஸ்)
பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளையும் ஆசிரிய, ஆசிரியைகளையும், அதிபரையும் படத்தில் காணலாம்.
முன்வரிசை - இடமிருந்து வலமாக:
ராஷித் பழுலுர் ரஹ்மான் (170), அம்ஜத் அர்ஹம் (188), அர்க்கம் அஷ்ரப் (175), யூனுஸ் பதுர்தீன் (158)
பின்வரிசை - இடமிருந்து வலமாக:
இஷ்பா நௌஷாத்தீன் (156), பஸீஹா உஸ்மான் (158), திருமதி எம்.இஸட்.என். விகாயா (ஆசிரியை), திருமதி எம்.டப்ளியூ.எப். நவாஸியா (ஆசிரியை), திருமதி எம்.ஏ.எஸ். ஸனூலா (அதிபர்), திரு எம்.எம்.எம். பௌஸ்தீன் (ஆசிரியர்), ஷாபியா அன்ஸார் (158), ஆயிஷா ஸித்தீக்கா பௌஸி (166)
(கலைமகன் பைரூஸ்)
மாத்தறை நகரப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை எற்பட் டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து விலக்கு மாறு கோரி இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் இரண்டு துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டன. இந்நிலையில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணவர்தன மற்றும் ஷிரால் லக்திலக்க தலைமை தாங்கினர். இதேவேளை மாத்தறை, வெல்லமடின் பிரதேசத்தில் அரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றது.
மாத்தறை நகரப்பகுதியில் இரு பகுதியினரும் சந்தித்தவேளை இரு குழுக்களுக்கு மிடையில் மோதல்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கற்களும் வீசப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் இரண்டு துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டன. இந்நிலையில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணவர்தன மற்றும் ஷிரால் லக்திலக்க தலைமை தாங்கினர். இதேவேளை மாத்தறை, வெல்லமடின் பிரதேசத்தில் அரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றது.
மாத்தறை நகரப்பகுதியில் இரு பகுதியினரும் சந்தித்தவேளை இரு குழுக்களுக்கு மிடையில் மோதல்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கற்களும் வீசப்பட்டுள்ளன.
திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற் றல் உள்ளது என அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் போல்ட்ஸ் என்பவர் கண்டறிந்துள்ளார் பொதுவாக மாரடை ப்பால் மரணம் ஏற்படுவதற்கும் இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, 'பிளாவனாய்டு' என்ற வேதிப்பொருள் உதவுகிறது.ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே தான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதய நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சை யில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிறஇதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான்ஃபோல்ட்ஸ் தெரிவிக்கிறார்.
இதயநோயளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அருந்தக் கொடுக்கலாமென அவர் பரிந்துரைக்கிறார்.
பொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது. இப்போது திராட்சை ரசத்தில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம்.
வரும் 7 ம் திகதி திங்கட் கிழமை ஜனாதிபதி முன்னிலை யில் வட மாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக த.தே.கூ-வின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வு காலை 9 மணிக்கு அலரி மாளிகையில் இடம் பெறும்.வட மாகாண அமைச்சர்களின் பதவியேற்பு 11 ம் திகதி யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் முன்னிலையில் இடம் பெறும். எனினும் யார் யார் அமைச்சர்கள் என்பதில் இன்னும் குடுமிப்பிடி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் சேவை என்பதை விட, தனது மனைவி மக்களின் தேவை என்பதிலேயே கண்ணுக் கருத்துமாக இருந்து காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள விழைகிறார்கள்.
தலைமைத்துவப் பதவியில் இருந்து விலகுவதற்கு இரண்டு நாள் கால அவகாசம் கேட்டுள்ளார் ரணில் விக்கி ரமசிங்க. கொள்ளுப்பிட்டி தர்மகீர்த்தியாராம விகாரையில், தேசிய பிக்கு பெரமுனையின் அறிவுரையாளர் வண. கிரிபே ஆனந்த தேரர் முன்னிலையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.தலைவர் பதவியில் இருந்து விகுவதைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என்று தான் கூறிய போது, அவர் அது பற்றி யோசிக்க இரண்டு நாள் அவகாசம் கேட்டதாக கிரிபே ஆனந்த தேர்ர் கூறினார். உத்தேச தலைவரகள் குழுவுக்கும் ரணில் விக்கிரமசிங்க இணங்கியதாக தேர்ர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியை, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் யாவரும் ஐக்கியமாக சேர்ந்திருக்கும் தேசியக் கட்சி என்றுதான் 1946 ல் இருந்து இந்நாட்டு மக்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அது சிங்கள-பௌத்த பிக்குகளின் கட்சி என்று இப்போதுதான் தெரிகிறது. மரபாலும் மனதாலும் கிறிஸ்தவனாக இருந்து கொண்டு பதவிக்காக எவ்வளவுதான் பௌத்தனாக நடித்தாலும் பிக்குமார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று இப்போதாவது ரணிலுக்குப் புரிந்திருக்கும். கிறிஸ்தவ சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் அவர்களுக்கு விமோசனம்
கனடா விஸா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்த வருடக் கடைசியிலிருந்து சில புதிய நிபந்தனைகளை(Biometrics Requirements) பூர்த்தி செய்வது அவசியமாகும். அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் அப்பேனியா, அல்ஜீரியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எரித்திரியா, லிபியா, நைஜீரியா, சவூதி அரேபியா, சோமாலியா, தென்சூடான், சூடான், துனூசியா என்பன உட்பட மேலும் சில நாடுகளாகும். இந்த புதிய நிபந்தனைகளின்படி, ஒருவர் தனது விரல் அடையாளங்கள், புகைப்படங்கள் என்பனவற்றை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான
செலவாக மேலதிகமாக 85 கனடிய டொலர்களையும் செலுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் கனடாவுக்குள் வந்துள்ளதை பின்னர் கனடிய அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். அதன்
காரணமாகவே இந்தப் புதிய விதிமுறைகளின் மூலம் கனடாவின் குடியேற்ற முறைமையைப் பாதுகாக்க முடியும் என கனடிய அரசு கருதுகிறது.
விருந்தினர்கள், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மாணவர்கள் என கனடிய விஸாவுக்கு விண்ணப்பித்துள்ள 3 இலட்சம் பேரில் 20 வீதத்தினர் இந்த விதிமுறை அமுல் செய்யப்பட்ட முதல் வருடத்தில் தமது சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் குழந்தைகள், வயோதிபர்கள், இராஜதந்திரிகள் போன்றோருக்கு இந்த நடைமுறையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஆளுங்கட்சியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவரான பிரதமரின் மகன் அனுருத்த ஜயரட்னவுக்கு முதலமைச்சர் பதவியோ வேறு அமைச்சர் பதவியோ வழங்கப்படவில்லை. அதே போல வட மேல் மாகாண சபையில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் ஜொகான் பெர்ணாண்டோவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.அதேவேளை, வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்க தான் மாகாண சபையில் பதவி எதையும் கோரவில்லை என்று கூறியுள்ளார்.
மறைந்த ஜனாதிபதி பிரேமதாச பிரதமராக இருக்கும் போது கூறினார் ஜனாதிபதி நிர்வாக முறையில் பிரதமர் பதவி பியோன் பதவிக்குச் சமமானது என்று. அது உண்மைதான். பாவம் இன்றைய பிரதமர் தி.மு.ஜ.
சில மாதங்களுக்கு முன்பு கம்பகா வெலிவேரியாவில் தொழிற்சாலையொன்றின் கழிவு நீரால் குடிநீர் மாசடைந்தமைக்கு எதிராக பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தது தெரிந்ததே. அது தொடர்பாக விசாரணை செய்வதற்கு இராணுவ கட்டளைத் தளபதி லெப். ஜென. தயா ரட்னாயக்காவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு குறித்த வெலிவேரியா ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூடானது இராணுவம் தனது சட்டபூர்வமான கடமைக்கு அப்பால்செயல்பட்டுள்ளதாகக் கண்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள சாட்சியங்களை நெறிப்படுத்த வருவதாக அறியப்படுகின்றது.
வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பிபிசி வானொலியின் தமிழ் சேவைக்கு வழங்கிய செவ்வியில் ...வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகவும், தாமும் அதனையே ஆதரிப்பதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.
ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும் என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா. சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவை குறித்த அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இந்த இணைப்பில் அழுத்தி கேட்கலாம்.
நன்றி பிபிசி
சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித் துறை நகர சபையில் ததேகூ-வைச் சேர்ந்த ந. ஆனந்தராஜுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு கிடைத்தது. கட்சியின் நியமப்படி அதிகூடிய விருப்பு வாக்குபெற்ற ஆனந்தராஜூக்கே நகரசபைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாவதாக வந்த முன்னொரு காலம் அதன் தலைவராக இருந்த மாஜி எம்பியான எம்.கே. சிவாஜிலிங்கம் தலைவர் பதவி தனக்கே வேண்டும் என்று அடம் பிடித்து தலைவருக்கு தேவையற்ற பிரச்சினைகளைக் கொடுத்து நகர சபையை ஒழுங்காக இயங்கவிடாது குழப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வட மாகாண சபைத் தேர்தல் வந்தது. வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் பதவி வேண்டும் கொல்லைப் புறத்தில் கொக்கரித்துக் கொண்டிருந்த அவர் வட மாகாண சபையில் போட்டியிட்டார். ஆனந்தராஜும் வல்லை மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் சனியன் தொலைந்ததென்று.ஆனால், அந்தச் சனியன் இப்பொழுது ரெலோ தலைவர் அடைக்கலநாதனைப் பிடித்துக் கொண்டது. வட மாகாண சபையில் ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக வன்னி மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கட்சியோ அந்த அமைச்சுப் பதவியை பதவிப் பித்தரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது. இதனால் மனமுடைந்த கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தீர்மானதுக்கு கட்டுப்பட்டாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்பதால் தனது தலைமைப் பதவியைத் தூக்கி எறியத் தீர்மானித்து விட்டார். நிச்சயமாக சிவாஜி இந்தப் பதவியையும் எட்டிப் பிடித்துவிடுவார்.
இதில் முக்கியமான விடயம் யாதெனில் தனக்கு சுகாதார அமைச்சை தரவேண்டும் என்று வேறு கேட்கிறாராம்
அடைக்கலநாதன் ரெலோவே அடைக்கலம் என்று இருந்தவர். சிவாஜியோ ஓடுகாலியாக கட்சியை விட்டோடி புதுக் கட்சி ஆரம்பித்து அது சந்தைப் படாததால் ஊதாரிப் பிள்ளைபோல திரும்பி வந்தவர்.
தங்கத்துரை, குட்டிமணி மற்றும் ஶ்ரீ சபாரட்னம் போன்ற எண்ணற்ற தியாகிகளின் ஆவிகள் இவரைப் போன்றவர்களைச் சும்மாவிடாது.
தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றுமாறு கோரி ஐக்கிய பிட்சுக்களின் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூறிய வேளை, அதனை நிராகரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
பிட்சுக்கள் முன்னணியின் பிரதான நிறைவேற்றுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பிட்சுக்கள் 12 பேருக்கும் ஐதேக தலைவருக்குமிடையே இன்று (04) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ரணில் விக்கரமசிங்க அவ்வாறு குறிப்பிட்டார் என தேசிய பிட்சுக்களின் முன்னணியைச் சேர்ந்த உலுபனே சுமங்கள தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஐக்கிய பிட்சுக்களின் முன்னணயின் கண்டி மாவட்ட செயலாளர் தல்பொத்த தம்மஜோதி தேரர், சிங்கள ஊடகமொன்றுக்கு விசேட செவ்வியொன்றை வழங்கிவிட்டுக் குறிப்பிடும்போது, வழக்கறிஞர் சிரால் லக்திலக்க, வழக்கறிஞர் மைத்திரி குணரத்ன என்போரின் தலைமையிலேயே இவ்விடயம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்திற்கு முழு அநுசரணையையும் வழங்குவதாக ஐக்கிய பிட்சுக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை மாற்ற வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் வீதி ஊர்வலம் நாளை (05) காலை தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
பிட்சுக்கள் முன்னணியின் பிரதான நிறைவேற்றுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பிட்சுக்கள் 12 பேருக்கும் ஐதேக தலைவருக்குமிடையே இன்று (04) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ரணில் விக்கரமசிங்க அவ்வாறு குறிப்பிட்டார் என தேசிய பிட்சுக்களின் முன்னணியைச் சேர்ந்த உலுபனே சுமங்கள தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஐக்கிய பிட்சுக்களின் முன்னணயின் கண்டி மாவட்ட செயலாளர் தல்பொத்த தம்மஜோதி தேரர், சிங்கள ஊடகமொன்றுக்கு விசேட செவ்வியொன்றை வழங்கிவிட்டுக் குறிப்பிடும்போது, வழக்கறிஞர் சிரால் லக்திலக்க, வழக்கறிஞர் மைத்திரி குணரத்ன என்போரின் தலைமையிலேயே இவ்விடயம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்திற்கு முழு அநுசரணையையும் வழங்குவதாக ஐக்கிய பிட்சுக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை மாற்ற வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் வீதி ஊர்வலம் நாளை (05) காலை தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
சிங்கள இலக்கியத்தில், கவிதையியலில், சிறுகதையியலில் அதைப்போல சிங்கள சினிமாவில் மிகவும் கவலைக்கிடமான கதைகள் உள்ளடங்கியுள்ளன என்றும், அவற்றிலிருந்து வெளிவருகின்ற அவற்றிலிருந்து தெளிவுறுத்தப்படுகின்ற உணர்வுகள் சிங்கள சமூகத்தில் நன்கு பிரபல்யம் பெற்றவை என்றும், சிங்கள சமூகத்திலிருக்கின்ற இந்த உணர்வுகளை பொதுபல சேனாவிற்கோ ராவண பலயவிற்கோ அந்த பலயவிற்கோ இந்த பலயவிற்கோ குழப்பிவிட முடியாது என்றும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.பன்னூலாசிரியர் எம்.சீ. ரஸ்மினின் ‘ போர்க்கால சிங்கள இலக்கியங்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு 10 இல் அமைந்துள்ள இலங்கைத் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, அந்நிகழ்வின் பிரதம அதிதியாக்க் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்:
நாங்கள் சிங்களத்திலும் எழுதுகிறோம். தமிழிழும் எழுதுகின்றோம். தமிழ் பேசும் மக்கள் தமிழை வாசிக்கிறார்கள். சிங்களவர்கள் சிங்களத்தை வாசிக்கிறார்கள். எங்கள் எழுத்தாளர் சங்கம் என்னைச் சந்தித்து, ‘நாங்கள் தற்போது சிங்களத்தில் எழுதுவதை தமிழிற்கும், தமிழில் எழுதுவதை சிங்களத்திற்கும் மொழி பெயர்க்க வேண்டும்’ என்று சொன்னார்கள். அதற்காக நாங்கள் நிதியம் ஒன்றை ஆரம்பித்தோம். அதற்கு எங்கள் அமைச்சு உதவுகின்றது. நாங்கள் சிங்கள, தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து வடக்கிற்குச் சென்று அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களைச் சந்திக்கச் சென்றோம். அவர்களை அங்கு சந்தித்து மிகவும் மகிழ்ச்சியாக உரையாடினோம். நானும் சகல ஒன்றுகூடல்களிலும் கலந்து கொண்டேன்.
இன்று நாங்கள் ஜனநாயக சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் தேவைப்பாட்டில் உள்ளோம். ஜனநாயக சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஒருவகை களைப்பையை இன்று நாங்கள் காண்கிறோம். இன்று இன்னும் ஜனநாயகம் பிறக்காமல் துடித்துக் கொண்டிருக்கிறது.... ஆயினும் இன்னும் பிறந்தபாடில்லை. தற்போது நாங்கள் அதற்குத் தேவையான தகுதிகளைப் பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். போரின் அழிவு தொடர்பான அனுபவம் ஒருவகையில் தகுதியாக இருக்கின்றது.
தற்போது மூளை தெளிவாகியுள்ளது. இவ்வளவு மனிதர்களை கொன்றொழித்து, இவ்வளவு உடைமைகளை அழித்தொழித்து எதனைக் கண்டோம் என்று இப்பொழுது சிந்திக்கிறார்கள். இனியாவது நாங்கள் ஜனநாயக சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவோம். இலங்கையை ஒருமைப்படுத்துவோம். இலங்கை ஒருமைப்படுத்தப்படாதவிடத்து ஒருபோதும் இலங்கை எந்த புதுமையை (ஆச்சர்யத்தையும்) நோக்கியும் நகர முடியாது. இலங்கையில் ஒருமை மலர்வது ஆச்சர்யத்துக்கான அத்திவாரமாகும். அதனால் இலங்கையை ஒருமைப்படுத்த இலங்கையின் சகல இடங்களிலிருந்தும் ஆவன செய்ய வேண்டும். இலங்கியக் கலை அவற்றில் பிரதான அங்கம் வகிக்கும் என்று உறுதியாக நான் கூறுகின்றேன்... என்றும் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
வடகிழக்கின் இளைஞர்களை வெடிகுண்டுகளை கட்டி போர் முனைக்கு அனுப்பி விட்டு புதுக்குடியிருப்பில் நிலக்கீழ் மாளிகை ஒன்றைக்கட்டி தனது மனைவி மக்கள் உற்றார் உறவினருடன் சுகபோகம் அனுபவித்து வந்தார் பிரபாகரன். இவரது இந்த நிலக்கீழ் மாளிகை இராணுவத்தினரின் கையில் வீழ்ந்தது. இந்த மாளிகையை மக்கள் கடந்த காலத்தில் சென்று பார்வையிட்டும் வந்தனர். இந்த மாளிகை இன்று இராணுவத்தின் பொறியியல் பிரிவினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தின் தடயங்களை அழிக்கும் நோக்குடன் புலிகளுக்கு சொந்தமான பல்வேறு தடயங்கள் கடந்த காலங்களில் அழிக்கப்பட்டமை யாவரும் அறிந்தது.
ஆனாலும் குறித்த பிரதேசத்தில் கன்னிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவேறாது பிரபாகரனின் மாளிகைக்கு குண்டு வைத்து தகர்க்குமிடத்து அக்கன்னிவெடிகள் அதிர்சியினால் வெடிக்கும் என்ற காரணத்தினால் இதுவரை காலமும் இச்செயற்பாடு தாமதமாக இருந்தாக அறியக்கிடைக்கின்றது.
மிகவும் வறிய நிலையில் பின் தங்கிய பிரதேசங்களில் இருந்து வந்து மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் அழுக்கடைந்த நீரைப் பருகி பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கல்வித் திணைக்களத்திடம் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.திங்கட்கிழமை காலை சுகவீனம் காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலை மாணவர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
விடுதியில் உள்ள மாணவர்கள் தொடர்பில் குறித்த பாடசாலை நிர்வாக ம் கவனத்தில் கொள்ளாமல் செயற்படுவதே இதற்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
கோபத்தை மனதில் வைத்து போக்கிரித்தனம் செய்யும் ஊடகவியலாளர்களிடம் அன்பு செலுத்துகிறேன். அவர்கள் திருந்த சந்தர்ப்பம் வழங்குகிறேன். திருத்த முடியாத ஊடகவியலாளர்களை பன்சலைகளுக்கு அழைப்பித்து பிக்குகள் மூலம் தர்ம உபதேசம் நடத்த போகிறேன். வத்தளை கொங்கிதொடை பிரதேசத்தில் 2 ம் திகதி நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு கூறினார்.
நியாமான மற்றும் நடுநிலையான் செய்திகளை வெ ளியிடும் இலத்திரனியல் மற்றும் அச்சூடகங்களுக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நியாமான மற்றும் நடுநிலையான் செய்திகளை வெ ளியிடும் இலத்திரனியல் மற்றும் அச்சூடகங்களுக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நான்கு கட்சிகளுக்கும் கட்சிக்கொரு அமைச்சுப்பதவி வழங்குங்கள் என்று தமிழ் பேசும் மக்களாகிய நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வேண்டுகோள் செய்கின்றோம். மக்களாகிய நாம் கட்சிகளின்கொள்கைகளுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கவில்லை மாறாக தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தி சர்வதேச ரீதியாக எமது உரிமையை வென்றெடுக்க அபிவிருத்தி, உதவிகள் போன்ற அனைத்து சேவைகளையும் மறந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம். அதன் பிரதிபலனாக வடமாகாண சபை மூன்றில் இரண்டுக்கு மேலாக வெற்றி பெற்றுள்ள இந்ந சந்தர்ப்பத்தில் மாகாணஅரசையும், தமிழர்களின் உரிமைப்போராட்டத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கு ஏதுவாக கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் நான்கு கட்சிகளுகம் தலா ஒரு அமைச்சு என வழங்கி கூட்டமைப்பின் ஒற்றுமையைப் பலப்படுத்துவீர்கள் என நம்புகினறோம்.
தலைவர்களே! மக்கள்களாகிய நாங்கள் ஒற்றுமையாகவும் விட்டுக்கொடுப்புடனும் செயல்ப்பட்டுள்ளோம் . உங்கள் செயற்பாட்டையும் அப்படியே எதிர்பார்த்து..... கையொப்பமிட்டு அனுப்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்காக மக்களாகிய நாம் மனம் வருந்துகின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்.
தமிழ்த் தேசிய கூட்டமைபிற்கு வாக்களித்த மக்கள்






