தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வட மாகாண சபையில் கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் எனவும் இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து தீக் குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண் ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என தம்பிராசா (தம்பி) தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.கிளிநொச்சியில் கூட்டணியின் தலைவர் சங்கரி ஐயா திட்டமிட்ட முறையில் தோற்கடிப்பட்டுள்ளார். அவராலேயே கிளிநொச்சி தனி மாவட்டமாக உருவானதை மக்கள் மறந்துவிடாது வாக்களிக்கத் தயாரான வேளையில் சக கட்சியில் போட்டியிட்ட சிலர் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர் வெற்றியைத் தடுத்துவிட்டதாகவும் தம்பிராசா தெரிவித்தார்.
இதேவேளை ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிளிசொச்சியில் தனது யாளுராக்கும்பலைக் கூட்டிய சிறிதரன் அமையப்போகும் மாகாண சபையில் சங்கரிக்கு தேசியப்பட்டியலில் இடம்வழங்கினாலோ , சித்தார்த்தனுக்கு அமைச்சுப்பதவி வழங்கினாலோ தான் பதவியை ராஜனாமா செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். எலும்புத்துண்டு சூப்பி அதன் ருசி கண்ட நாய் என்றும் எலும்புத்துண்டை வெறுக்காது என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் இந்த நாய் வித்தியாசமான நாயா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வட மாகாணசபையின் அமைச்சு பதவியொன்றை மூவின மக்களும் செறிந்து வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வழங்கவேண்டுமென வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டைத் துண்டாடாமல் ஒரே நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்து முன்னேற்றுவதே எனது குறிக்கோள் எனவும் எதிர் காலத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நேச மனப்பா ன்மையுடன் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன் எனவும் அதற்கு சகல மக்களும் ஒன்றுபட்டுழைக்க வேண்டும் என்று வட மாகாணத்தில் போட்டியிட்டு முத ன்மை உறுப்பினராக அதிக விருப்புவாக்கு பெற்றுத் தெரி வாகியுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் நாட்டைப் பிரிக்க நான் ஒத்துழைக்க மாட்டேன் எனவும் அதற்குத் துணைபோகவும் மாட்டேன் எனவும், உதவிகளும் செய்யமாட்டேன் எனவும், இன்று சில பௌத்த குருமார்கள் நாம் நாட்டை பிரித்தாளப் போகின்றோம். அதற்கான முஸ்தீபு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் எம்மீது சேறு பூசிக் கொண் டிருக்கிறார்கள். ஆனால் அதில் எதுவித உண்மையும் இல்லை. இது உண்மைக்கு முற்றிலும் முரணானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உண்மையாகவே நாம் எமது வட மாகாண சபையின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யவே எதிர்பார்க்கின்றோம். இதற்காக நாம் மத்திய அரசின் உதவியையும் நாடி செயல்பட தயாராக இருக்கின்றோம். நாம் இச் சந்தர்ப்பத்தில் நாட்டை துண்டாட துணைபோகாமல் அதிகாரப் பகிர்வைச் செய்து நாட்டை முன்னேற்றிச் செல்லவே நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அல்லாமல் நாட்டைத் துண்டாடி மீண்டும் பிரச்சினைகள் உருவாக்கிவிடுவது எமது நோக்கமுமல்ல. அது பற்றி நினைப்பது மில்லை.
இந்த நாட்டை துண்டாட நான் முதலமைச்சராக வரவில்லை. மாறாக ஒரே நாட்டில் அதாவது பிளவுபடாத நாட்டில் ஒரே அரசின் கீழ் ஆள்வதையே நான் விரும்புகிறேன் என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எனவே இனியாவது சந்தேகக் கண் ணோடு எம்மை நோக்காது சகோதர எண்ணம் கொண்டு நோக்குங்கள் என்று பொய் வதந்திகளைப் பரப்பி வருப வர்களிடம் நான் வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்போது வடக்கில் யுத்தம் இல்லை. அதனால் படையினர் அங்கு தங்கத் தேவையில்லை. இதனால் வீண் சந்தேகம் எழுகின்றபடியால் படையினர் அங்கி ருந்து வாபஸ் பெறப்பட வேண்டும். இதனால் நாம் தனி நாடு கோருகிறோம் என்ற அர்த்தம் அல்ல என்றும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
ஒரே நாட்டினுள் இரண்டு விதமான மக்கள் கூட்டம் இருக்கும்போது மொழி முறையாகவோ மத முறையாகவோ பின்பற்றும் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் தங்களை தாங்களே ஆளும் வகைக்கு நாட்டின் அதே ஒழுங்கு அமைப்பினுள் தொடர்ந்து இருப்பதற்கு வழி செய்வது தான் சமஷ்டி. அதற்கு பிரிவினையென்று நாமம் சூட்டி தென் பகுதியில் குளிர்காய்வது தான் விசித்திரமாக இருக்கின்றது. தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து வட பகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றார்கள்.
போருக்குப் பின்னரான மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் முனைந்துள்ளோம். இப்பொழுதே பல வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி தருவதாக கூறுகின்றார்கள். இது சம்பந்தமாக நாம் அரசாங்கத்துடன் பேசி அவர்களின் அனுசரணையுடனேயே செய்ய வேண்டியிருக்கும். நிபுணத்துவம் வாய்ந்த வர்களுடன் இச் செயற் திட்டம் பற்றி கலந்துரையாடி மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தால் நிநியுதவிகளைப் பெற்று ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
அரசாங்கம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட எங்களது சபை நல்ல விடயத்தை எடுத்துச் செல்ல வழிவகுக்குமாயின் அரசாங்கத்திற்கும் நன்மை பயக்கும். மக்களும் பலன் காண்பார்கள். வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட அமைச்சர் பஷில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இனத் துவேஷத்துடன் செயல்பட சிலர் இருக்கின்றார்கள். அதன் காரணத்தினால் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரோ தெரியவில்லை. காலம் காலமாக வந்த அரசியல் பின்னணி இது என தெரிவித்துள்ளார்
சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டிய விக்னேஸ் வரனை கைது செய்ய வேண்டுமென ஜாத்திக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பான வகையில் சர்வதேச தலையீட்டை நாடினால் விக்னேஸ் வரனை கைது செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை கோருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் முரண்பாடுகளை தூண்டும் வகையில் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஏனைய உலக நாடுகளை இலங்கைக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பிக்க வலியுறுத்தியுள்ளார்.
(ஜீரீஎம்)

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமையை மத்திய அரசாங்கம் முழுமையாக தன்வசம் வைத்திரு க்காது, மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்கக் கூடியதொரு முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.
அதற்காக தேசிய காணி ஆணைக்குழுவொன்றை நியமிப் பதற்கான பிரேரணையொன்றை தான் அரசாங்கத்திடம் முன்வைக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடும் அவர், அந்தப் பிரேரணையை அடுத்த பாராளுமன்றத் தொடரில் தேர்வுக் குழுவினரின் முன்னிலையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமை மத்திய அரசுக்கே சொந்தமானது என நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்வு அதற்குப் பாதகமாக அமையாது எனவும், நீதிமன்றத்திடம் எத்தனை தீர்வுகள் இருந்தபோதும், அதற்கெல்லாம் மேலாக பாராளுமன்றத்திற்கே உயர் அதிகாரம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதானது மிக மோசமான ஒரு விடயமாகும் எனவும், அதற்கு தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் வட மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள தயாசிரி ஜயசேக்கர குறிப்பிடுகிறார்.
அவருக்கு வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றால் இவ்வதிகாரம் தொடர்பில் தனது நிலைப்பாடு என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(கேஎப்)
அவருக்கு வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றால் இவ்வதிகாரம் தொடர்பில் தனது நிலைப்பாடு என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(கேஎப்)
தனது ஒரே குறிக்கோள் தெற்கின் முதலமைச்சராக வருவது அல்ல... மாறாக, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முன்வருவதே என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கும், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளாராக நிற்பதற்கு மே தான் தயாராக இருப்பதாக அவர் தெளிவுறுத்துகிறார்.
பொதுமக்கள் தன்னை ஜனாதிபதி வேட்பாளராகக் காண்பதற்கே ஆசை வைத்திருக்கின்றார்கள் எனக் குறிப்பிடும் சஜித் பிரேமதாச, தான் நாடெங்கிலும் பயணிக்கும் போது, பொதுமக்கள் தன்னிடம் அதனையே எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை யாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருவதற்கு முன்பே, தன்னுடைய அறிக்கையைத் தயார் செய்துள்ளார் என்பது இலங்கை வாழ் மக்களின் கருத்து என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி குறிப்பிடும்போது, தன்னைச் சந்திக்கும் போது அவர் இலங்கைக்கெதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார்.
அவரது வருகையைத் தடைசெய்யாது சுதந்திரமாக தகவல் பெற்றுக் கொள்வதற்கு இடமளித்ததாகவும், இலங்கையை அடுத்த நாடுகளுடனேயே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனவும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கெதிராக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம் மட்டுமே எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவுறுத்தியுள்ளார்.
வடக்கில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடாத்தியது என்றும், அத்தேர்தலில் அரசாங்கம் தோல்வியடையும் என்பதைத் தான் அறிந்திருந்த்தாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருப்பதுடன், சென்ற நான்கு ஆண்டுகளில் பாராளுமன்றத் தேர்தல் உட்பட 19 தேர்தல்களை நடாத்தியிருப்பதால் நவநீதம்பிள்ளை இலங்கை ஏகாதிபத்தியத்தை நோக்கிப் பயணம் செய்கின்றது என்று குறிப்பிட்டது வெறும் பொருளற்ற வெறும் பிதற்றலே எனவும் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)

கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இயங்கும் போதைப் பொருள் விற்ப னையாளர்கள் மற்றும் சமூக விரோத குழுக்களு க்கு பெருந்தொகையான பொலிஸ் அலுவலர் களும் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களும் உதவி செய்து வருவது தொடர்பான நம்பந் தகுந்த தகவல்கள் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அத்தகைய அலுவலர்கள், குற்ற வாளிகள் கப்பம் பெறுவதற்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஆதரவு அளித்து வருவதாகவும் காணப்படுகின்றது.
கடந்த சில காலமாக அத்தகைய செயற்பாடுகள் இடம் பெற்று வந்தாலும், இவற்றில் சம்பந்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக அவர் களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக அறியப்படுகின்றது.
பெரும்பாலான அத்தகைய பொலிஸ் அலுவலர்கள் தற்போது ஓய்வுபெற்று விட்டனர்.எனினும் புலன் விசாரணைகளைத் தடுப்பதற்கு தமது செல்வாக்கைப் பயன்படுத்தி வருவதாகவும் இராணுவ புலனாய்வுப் பிரிவு கண்டு பிடித்துள்ளது. நீர்கொழும்பில இருந்த அத்தகைய ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறினர்.
(Ceylon Today Online)

வவுனியா விவசாய திணைக்களத்தினால் பரீட்சார்த்த முறையில் மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்ததை தொடர்ந்து மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படு வதாக வவுனியா விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் இப்பயிர் செய்கை தொடர்பாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள் உட்பட 25 விவசாயிகள் இப்பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இப்பயிர் செய்கை தொடர்பாக பயிற்சியை மேற்கொண்ட பம்பை மடு, மாந்தை, பாலமோட்டை, நெடுங்கேணி பிரதேச விவசாயிகள் தமது சொந்த இடங்களில் மஞ்சள் பயிர் செய்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் இப்பயிர் செய்கைக்கு ஏற்றுமதி அதிகாரசபையின் உதவி நாடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

வவுனியா தோணிக்கல் பகுதி வீடொன்றில் நேற்று (28.09.2013) மதியம் நடைபெற்ற வெடிப்புச்சம்பவத்தில் சிறுவனொருவன் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்படும் உள்ளுர் வெடியொன்றை வீட்டில் இருந்து (வெங்காய வெடி) சிறுவன் விளையாடியபோது இவ் வெடி விபத்து ஏற்பட்டதனால் திலக்சன் எனும் 3 வயது சிறுவன் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் தலையில் காயமடைந்த நிலையிலும் வவனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவனியா பொலிஸார் மேற்கொண்டனர்!

உலகளவில் பிரபலமடைந்த சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இயற்கை சீற்றம் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை தருவதற்காக Twitter Alert என்ற புதுவித சேவையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தலைமை அதிகாரி ஒருவர், கடந்தாண்டு லைப்லைன் என்ற பெயரில் ஜப்பானில் எமர்ஜென்சி அக்கவுன்ட்ஸ் மூலம் அவசரகால தகவல்களை பரிமாறிக்கொள்ள வழி செய்தோம் இதே பாணியில் இப்போது டுவிட்டர் அலர்ட் என்ற பெயரில் உலக முழுவதும் பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தியுள்ளோம்.
சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பொலிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு ஏஜென்சிகள், அவசரகால சேவை அமைப்புகள், செஞ்சிலுவை போன்ற அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவை இதை பயன்படுத்தி பொதுமக்களுக்கு, அவ்வப்போது தேவையான எச்சரிக்கை தகவல்களை தரும் என்று நம்புவதுடன் டுவிட்டர் அக்கவுன்ட் வைத்துள்ளவர்களுக்கு போனிலும் தகவல்களை சொல்ல தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிவி, ரேடியோ போன்ற தகவல்தொடர்பு சாதனங்கள், மின்சார துண்டிப்பு போன்றவை ஏற்படும் போது டுவிட்டர் அலர்ட் சேவை பயன்படும் என்று தெரிவித்துள்ள அதே வேளை இந்த சேவை ஏற்கனவே அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இயற்கை சீற்றம் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை மெசேஜ் தரும் சேவையை டுவிட்டர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உடல் அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.
அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய்படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள் இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும் இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும் அதைப் பயன்படுத்தினால் எந்த ஒரு பலனும் இருக்காது.
ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம் அதற்கான சில வழிமுறைகளை காண்போம்.
* சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது.
அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.
* தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்யவேண்டும் அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால் நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.
* கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள் அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிப்பது மட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.
* பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது அதிகம் உள்ளது எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும் வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
* ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறையவைக்கும்.
* தக்காளியில் அதிகமான விட்டமின்கள் இருப்பதால் அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி தழும்புகளை மறைய வைக்கும் அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.
* டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு அதன் இலைகளை தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

மாத்தறையில் இருந்து அனுராதபுரம் வரை வார இறுதி நாட்களில் சேவையில் ஈடுபட்டுவந்த புகையிரத சேவை கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்படும் புகையிரதம் மு.ப. 9.50மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தையும் பி. ப. 3.50மணிக்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தையும் சென்றடையவுள்ளது.
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை மு. ப. 11 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் மாலை 5.15க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினையும் இரவு 7.15 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்தையும் வந்தடையவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேசசபை தலைவர் எஸ்.விஜயகாந் காசோலை மோசடிக் குற்றச் சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதான திருத்த வேலைகளுக்கு மண் தருவிப்பதற்கான ஒப்பந்தத்தில், லொறி சாரதி ஒருவருக்கு ரூ.5 லட்சம் என குறிக்கப்பட்ட போலி காசோலை வழங்கியமை தொடர்பிலேயே பிரதேசசபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட வெருகல் பிரதேசசபை தலைவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது ரூ.2 லட்சம் பெறுமதியான இரு சரீரப்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவின் க்ளொவ்ஸ்டசெயர் பிரதேசத்தில் அமை ந்துள்ள தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்ற ச்சாட்டின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குரொய் டனனை சேர்ந்த பஸீர் முஸ்தபா (21 வயது, அசோக் பாலசுப் பிரமணியம் (21 வயது), தங்கவேல் வேலாயுதம் (50 வயது) மற்றும் மிடில்செக்ஸ் பேனார்ட் காடன் பிரதேச த்தைச் சேர்ந்த குசலகுமார் சிதம்பரப்பிள்ளை ஆகிய நால்வருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள் மீது பிரித்தானிய வங்கிகளில் வங்கி அட்டை களின் மூலம் முறைகேடுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செவ் வாய்க்கிழமை 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் இன்று மீண்டும் மற் றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் கடுமை யாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். அவாரன் நகரில் இருந்து 96 கி.மீ. தொலை வில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடலுக்கு அடியில் 14.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக குறைவு. போதிய மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் இல்லை. தொலைதூரத்தில் இருப்பதாலும், ராணுவம் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதாலும் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 359 பேர் பலியாகி உள்ளனர். 765 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீ நிகர்த்த தேர்தல் மேடைகளில் அனல் பறக்கும் ஆவேசப் பேச்சுக்கள் அரங்கேறி முடிந்து விட்டன. வாய்க்கு வந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் கலக்க விடப்பட்டு, வாக்காளப் பெருமக்களின் நெஞ்சங்களுக்குள் நிரப்பப்பட்டு விட்டன. தேர்தல் விஞ்ஞாபனங்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், பத்திரிகை அறிக்கைகள்,பதாகை வசனங்கள் என்று அள்ளி வீசிய கொள்கை விளக்கங்கள் மூலம் மக்களின் மூளையைச் சலவை செய்தாகிவிட்டது. இவற்றின் பெறுபேறாக,சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலிலே வரலாற்று முக்கியத்துவமிக்க பெரும் வெற்றியையும் பெற்றாகிவிட்டது.இனி அடுத்தது என்ன...?
வட மாகாண ஆட்சி பீடத்தில் அமரப் போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தக் கேள்விக்குரிய சரியான-தெளிவான பதில் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
"முதலில் பழத்தைப் பறி எப்படித் தின்னலாம் என்பதை அப்புறம் யோசிக்கலாம்" என்பது போல, இப்போது வெற்றிப் பழத்தைப் பறித்து வைத்திருக்கும் கூட்டமைப்பு, அதை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்று இனித்தான் யோசிக்கப் போகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒன்றல்ல, பல்வேறு உள்ளகச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கப் போகிறார்கள். புதிதாகத் தோன்றப் போகும் உள்வீட்டுப் பிரச்சினை களுக்கு சுமுக முடிவு கண்டு அவர்கள் தெளிவுக்கு வந்த பின்னர்தான் மக்களுக்கான தமது ஆட்சியைக் கொண்டு செல்வது எவ்விதம் என்பது பற்றி அவர்களினால் சிந்திக்கத் தொடங்க முடியும்.
எதிர்கொள்ளப் போகும் அக முரண்பாடுகளை இணக்கமான முறையில் கூட்டமைப் பினால் தீர்த்துக் கொள்ள முடியுமா என்பது ஐயம்தான்...!
பல்வேறு சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் இணைந்து பெற்றிருக்கும் வட மாகாண சபையின் ஆட்சிக் காலம் முழுதும் அக் கட்சிகள் ஒரே கொள்கையுடன் செயலாற்றுவதில் பாரிய சவால் களைச் சந்திக்கப் போகின்றன என்பது மட்டும் பேருண்மை.
முதலில், வட மாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களினால் அந்தப் பதவியில் ஐந்து வருடங்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதே பாரிய வினாவாக எழுந்து நிற்கிறது. முதலமைச்சர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனின் பதவியின் தொடர்ச்சியான இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவது, அவர் கொழும்பு வாசியாக இருப்பதும்தான்.
கொழும்பிலிருந்து அடிக்கடி வந்து போய் அல்லது கொழும்பிலிருந்து கொண்டே அவர் வட மாகாண சபையை ஆட்சி செய்வதென்பது அத்துணை எளிதான விடயமல்ல் அவ்வாறு அவர் செய்ய முற்படுவாராயின் தமிழ்த் தலைவர்களினது மட்டுமல்ல, வட மாகாண மக்களினதும் அதிருப்திக்குள்ளாகி விடுவார். அதற்காக, அவர் தனதும் தான் சார்ந்த குடும்பத்தினரதும் தலைநகர சுகபோகங்களை விட்டு விட்டு ஒரேயடியாக யாழ்ப்பாணத்தில் மக்களோடு மக்களாகத் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு வாழத் தொடங்கி விடுவார் என்றும் கற்பனை பண்ணிவிட முடியாது.
சுபாவத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் மென்மையானவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிடம் காணப்படும் 'கடும் போக்கு' விக்னேஸ்வரனிடம் கிடையாது. விடயங்களையும் பிரச்சினைகளையும் அவர் உணர்ச்சி ரீதியாகவன்றி, அறிவு ரீதியாகவே சிந்திப்பவர். நடந்து முடிந்த தேர்தலுக்காக அவர் 'புலித் தோலை' அரைகுறையாகப் போர்த்திக் கொண்டிருந்தாரே தவிர, அவருக்கும் 'புலி'யின் குணங்களுக்கும் சம்பந்தமே கிடையாது. இத்தகு அவரது இயல்பை 'போராட்ட குணம்' கொண்ட தமிழ்த் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றும் மக்களும் பொருந்திக் கொள்வார்களா என்பதும் கேள்விக்குறிதான்.
ஒரு வகையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்தவிற்கு உறவினர். இதனை ஜனாதிபதியே பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இந்த உறவைத் தாண்டி, ஜனாதிபதிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதிராக விக்னேஸ்வரன் அவர்களினால் செயற்பட முடியுமென்று தோன்றவில்லை. ஒரு பிரபாகரன் போல், ஒரு அமிர்தலிங்கம் போல், ஒரு சம்பந்தன் போல் இன்னும் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், சிறிதரன், ஆனந்தசங்கரி போல் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வன்மையாக விமர்சனம் செய்து தன் 'அரசியல் இருப்பை' விக்னேஸ்வரன் தக்க வைத்துக் கொள்ளக் கூடியவராகவும் தெரியவில்லை.
எடுத்ததெற்கெல்லாம் 'இந்தியா...தமிழ் நாடு' என்றும் புலம் பெயர்ந்த புலிப் பினாமிகள் என்றும் (இந்தியாவினதும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினதும் இரட்டை விளையாட்டைத் தெரிந்திருந்தும்) ஆலாய்ப் பறந்து, தமிழ் மக்களை இத்தனை காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பினரைப் போலல்லாது, விக்னேஸ்வரன் தனித்துவமாகச் சிந்திக்கக் கூடியவர். அவர் இந்தியாவினது அல்லது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினது அல்லது புலம்பெயர் புலிப் பினாமிகளினது அழுத்தங்கள் தன்மீது திணிபடுவதை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார். ஆனால், இன்னும் இந்திய, தமிழ்நாட்டு, புலத்துப் புலிகளின் மாயைகளை நம்பியிருக்கும் கூட்டமைப்பினர், விக்னேஸ்வரன் அவர்களின் 'தனித்துவத்தை'ப் பொறுத்துக் கொள்வார்களா என்பதும் யோசிக்க வேண்டிய விடயம்தான்.
இவ்வாறான விடயங்களினால் விக்னேஸ்வரன் அவர்களுக்கெதிரான தமிழ் கடும் போக்குவாத சக்திகளின் செயற்பாடுகள் வட மாகாணத்தில் விரைவிலேயே அரங்கேறும் என்பதே பெரும்பாலோனோரின் கணிப்பாக இருக்கிறது.
விக்னேஸ்வரன் அவர்களை ஒரு புறம் வைத்துவிட்டுப் பார்த்தால், அப்போதும் கூட்டமைப்புக்குள் இந்த வட மாகாண சபை பெரும் பிளவுகளையும் வெடிப்பு களையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகமாகவே தென்படுகின்றன. வட மாகாண சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் அமைச்சுப் பதவிகளைப் பெறப் போகும் அந்த சொற்ப உறுப்பினர்களை ஏனையோர் மனதார ஏற்றுக் கொள்வார்களா என்பதும் இயல்பாகவே எழக் கூடிய பிரச்சினைதான். வவுனியா மாவட்டத்திற்கென்று ஒரு அமைச்சுப் பதவி வேண்டும் அது வைத்தியக் கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் இப்போதே எழத் தொடங்கி விட்டன. இது போன்று தமது கட்சியைச் சார்ந்தவருக்கு-தொகுதியைச் சார்ந்தவருக்கு-ஊரைச் சார்ந்தவருக்கு-உறவைச் சார்ந்தவருக்கென்று இன்னும் எத்தனை எத்தனை கோரிக்கைகள் எழப் போகின்றனவோ தெரியவில்லை.
தமது அதிகார வரம்பிற்குள்ளே நியமனங்கள்-இடமாற்றங்கள்-கொந்தராத்துகள்-கொடுப்பனவுகள்-அபிவிருத்திகள்-ஏனைய உதவிகள் என்று எத்தனை பேரைத்தான் திருப்திப்படுத்த முடியும்...? எத்தனை கிராமங்களைத்தான் சந்தோஷப்படுத்த முடியும்...?ஆக, மாகாண சபையின் தொடக்கப் புள்ளியிலிருந்தே, வட மாகாண சபையின் ஆட்சியாளர்கள் மக்களின் அதிருப்திக்கு ஆளாக ஆரம்பித்து விடுவார்கள்.
13ம் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே, காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திற் கேயன்றி, மாகாண சபைக்கல்ல என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. காணி அதிகாரமே இல்லையென்றான பிறகு, காவல்துறை அதிகாரங்களைப் பெறுவதென்பது வெறும் கற்பனையாகத்தான் இருக்கப் போகிறது.
இராணுவத்தை முற்று முழுதாக வட மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதோ அல்லது முகாம்களுக்குள் முடக்குவதோ நடந்து முடிந்த தேர்தலின் போதான கூட்டமைப்பினரின் வீராவேசப் பிரசாரத்துக்குப் பயன்பட்டிருக்கலாமே தவிர, ஒரு போதும் நடைமுறைச் சாத்தியமாகப் போவதில்லை.
ஆக, தம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றங்களை மட்டுமே வட மாகாண சபை மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கப் போகிறதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
தாங்க முடியாத துக்க அனுபவங்களையும் வலிகளையும் சுமந்த படியே, தவிர்க்க முடியாத தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கி நிற்கும் வட மாகாண மக்கள், அவை பூர்த்தியடையாத பட்சத்தில் தம்மால் பெரும் கனவுடனும் பிரயத்தனத்துடனும் தேர்வு செய்யப்பட்டவர்களின் மீது தமது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கோபத்தையும் கொந்தளிப்புகளையும் கொட்டித் தீர்க்காமல் விட மாட்டார்கள்.
எனவே, எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப் பினருக்கு வட மாகாண சபை என்பது நிச்சயம் ஒரு தேய்பிறைக் காலமாகத்தான் இருக்கப் போகிறது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2014/2015 வருடங் களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள் ளது. இதற்கான விண்ணப்பம் பிராந்திய ஊடகவியலா ளர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல அறிவித்துள்ளார் .
விண்ணப்பத்தை பூரண படுத்தி முத்திரை அளவிலான புகைப்படம் ஒட்டப்பட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அரசாங்க தகவல் திணைக்களம் ,163.கிருலப்பன மாவத்த ,கொழும்பு -05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
(யு.எம்.இஸ்ஹாக்)

அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக் களை விழிப்பூட்டும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களம் தமிழ் மொழியில் வெளியிடும் "திங்கள்" தகவல் சஞ்சிகையின் புதிய இதழ் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் நடைபெற்ற இவ்வைபவ த்தில் தகவல் ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பி. அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல- திங்கள் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஏ. ஹில்மி மொஹமட்- திங்கள் சஞ்சிகை ஆசிரியையான நூருல் ஐன் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜி.ஏ. சந்திரசிரி, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ள முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சி.வி. விக்கனேஸ்வரனை, அவரது முதலமைச்சர் நியமனம் மற்றும் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக அடுத்த கிழமை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் இராணுவத் அதிகாரியான ஆளுநர் ஒருவர் முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளமாட்டார் என்ற செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் நியமனம் என்பது ஜனாதிபதியின் நியமனம். விதிமுறைகளின் பிரகாரம் முதலமைச்சர் ஆளுநர் முன் பதவிப்பிரமானம் செய்யவேண்டும். அவ்வாறு மறுப்பதற்கு நீதியில் இடமுண்டா, இல்லை இது வெறும் வாய் வீராப்புத்தான என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

.jpg)
.jpg)

.jpg)