நாடளாவிய ரீதியில் 2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பமாகின்றது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிக்கையில்,
'பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் சமுகம் அளிக்க வேண்டும்.பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். பகல் நேரம் 12.30 மணிக்கு இரண்டாவது கட்ட பரீட்சை ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிற்பகல் 2.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும். இன்று ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைகளில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் படி 2 இலட்சத்து 92 ஆயிரத்து 706 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, புதிய பாடத் திட்டத்தின் படி 2 இலட்சத்து 35 ஆயிரத்து 318 பாடசாலை பரீட்சார்த்திகளும் 45 ஆயிரத்து 242 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.
இந்நிலையில் பழைய பாடத்திட்டத்தின் படி 12 ஆயிரத்து 146 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். நாடு முழுவதும் 2ஆயிரத்து 164 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. விசேட தேவையுடையவர்களுக்கென இரத்மலானையிலும் தங்கல்லையிலும் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன' எனக் குறிப்பிட்டார்.
(VAT)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிராணி கடந்த வெள்ளிக் கிழமை (02) திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்துக்கு விஜயம் செய்து தலத்தை தர்சித்ததோடு ஆலயத்தை அலங்கரிக்க மின் விளக்குகள் அமைத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளர் கே.புஸ்பகுமாரின் அழைப்பின் பேரில் இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தபோதே அவர் ஆலய தரிசனத்தை மேற்கொண்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினருக்கு பிரதேசத்திலுள்ள குறைகளை எடுத்துக்கூறிய இனியபாரதி எனப்படுகின்ற புஸ்பகுமார் குறித்த இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்று நிலைமைகளை விளக்கியுள்ளார்.
திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகளை காண்பித்து தேவைகளை எடுத்துக்கூறியபோது எடுத்துக்கோள்ளப்பட்ட படங்கள் இணைபில்.
வைத்தியசாலையின் குறை நிறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான உடனடி உத்தரவினை பா.உ விடுத்தாக அம்பாறை மாவட்டத்துக்கான ஜனாதிபதி இணைப்புக்காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் மிகவும் கவனமுடன் இருக்குமாறு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 22 நாடுகளில் உள்ள தூதரகங்களையும் அது மூடி விட்டது. மேலும் அமெரிக்கா முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பும், பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அல்கொய்தா அமைப்பின் அரேபிய பிரிவினர் சிலர் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து இந்த அதி வேக நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் பராக் ஒபாமாவே நேரடியாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பான மேல் விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் அவசர ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி சாள்ஸ் உள்ளார். பன்னெடுங்காலமாக வவுனியா மாவட்டத்தில் நிர்வாக சேவையில் இருந்த அவர் வன்னியிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டு அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டபோது மிகவும் அயராது சேவையாற்றியவர் என்பது யாவரும் அறிந்தது. இவர் தற்போது மட்டு அரச அதிபராக கடமையாற்றி வருகின்றார். இவரது கதிரையை கைப்பற்ற கருணாவின் கையாளான மாவட்ட மேலதிக அரச அதிபர் பாஸ்கரன் முயன்று வருகின்றமை வெளிப்படையான உண்மை. இந்த பதவிப்போட்டி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை பிளவு படுத்தியுள்ளது. பிரதேசவாதிகள் சிலர் பாஸ்கரனின் பின்னால் ஒன்று திரண்டு அரச அதிபரின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையிடுகின்றனர் என்ற தகவல்களும் மறைப்பதற்கு உகந்ததன்று.
இந்த பிரதேசவாதத்தின் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு பெரும்புள்ளிகள் எனப்படுகின்ற பொன் செல்வராசா , அரியநேந்திரன், யோகேஸ்வரன், ஜனா ஆகியோர் மாத்திரம் அல்ல கருணாவும் உள்ளார்.
இந்நிலையில் அரச அதிபர் விடுமுறையில் சென்றுள்ளார். அந்த இடத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டு மாவட்ட செயலகம் பிளவு பட்டு நிற்கும் நிலையில் மேலதிக அரசாங்க அதிபரிடம் கடமையை பொறுப்பளித்தால் சிக்கல்கள் மேலும் விரிவடையலாம் என்ற எதிர்பார்ப்பில் பொது நிர்வாக சேவைகள் அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவினை மாவட்ட செயலக அதிகாரிகள் , ஊழியர்கள் மற்றும் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
தமிழ் நிர்வாக சேவை அதிகாரிகள் மக்களுக்கு தமது கடமைகளை சரிவரச் செய்யாத இடத்தில் அந்த இடத்திற்கு சிறந்த சேவையை செய்யக்கூடிய அதிகாரிகளை இன மத பேதங்களுக்கு அப்பால் நியமிப்பது வரவேற்ப்புக்குரியதே.
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, தனது மாமனார் வீட்டில் பதுங்கியிருப்பதாக கூறி பொய்யான தகவலைப் பரப்பிய என்ஜீனிர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி தன்னுடன் வந்து வாழ மறுத்ததால், மாமனார் குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்படுத்துவதற்காக இப்படி தவறான செய்தியை அவர் பரப்பினார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கே.துரைராஜ். என்ஜினீயராக இருக்கிறார். இவருக்கும், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த செல்வராணி (30) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. துரைராஜ் முதலில் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி நின்று விட்டார். பின்னர் வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வேலை தேடி வந்தார். இந்த நிலையில் துரைராஜ், தனது மனைவியுடன் சேலம் வந்து தனது மாமனார் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே வசித்து வந்தார். கரூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கேட்டு விண்ணப்பித்து இருந்தார் துரைராஜ். அந்த கல்லூரியிலிருந்து வேலை நியமன உத்தரவு சில நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்து. தனது முகவரியாக மாமனார் வீட்டு முகவரியைக் கொடுத்திருந்தார் துரைராஜ். எனவே கடிதம் துரைராஜ் மாமனார் வீட்டுக்குப் போனது. ஆனால் மாமனார் வீட்டில் இதுகுறித்துக் கூறவில்லை, தபாலையும் துரைராஜிடம் தரவில்லை. இதனால் வேலை போய் விட்டது.
இந்த நிலையில் விஷயம் அறிந்து பெரும் வருத்தமடைந்தார் துரைராஜ். தனது மனைவியிடம் அவர் சண்டை பிடித்தார். இதனால் துரைராஜின் மனைவிகோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குப் போய் உட்கார்ந்து கொண்டார். பலமுறை மனைவியை அழைத்தும்அவர் வரவில்லை. இதனால் வெறுத்துப் போன துரைராஜ், தனது மாமனாரால்தான் இத்தனை குழப்பமும் என்று நினைத்து குடும்பத்தோடு பழிவாங்க முடிவெடுத்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகளுக்கு ஒரு தவறான எஸ்.எம்.எஸ்ஸை அனுப்பினார். அதில், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி. நகரில் வசிக்கும் பட்டறைக்காரர் மணி, பாப்பாத்தி, தர்மலிங்கம், கார்த்தி ஆகியோருடன் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தங்கி உள்ளார் என்றும், இவர்கள் அனைவரும் சேலத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சிக்கிறார்கள். எனவே, எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்தத் தகவலைப் பெற்ற டெல்லி சிபிஐ அதிகாரிகள், தமிழக காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினற். சென்னை, சேலம் போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டனர். சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் கடந்த இரண்டு நாட்களாக கிச்சிப்பாளையம் பகுதியில் விசாரித்து வந்தனர். பிறகு துரைராஜின் மாமனார் மணியின் வீட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போது அங்கு விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும், விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் இல்லை என்றும் தெரியவந்தது.
பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் துரைராஜ் தனது மாமனார் குடும்பத்தை பழிவாங்க இப்படி எஸ்.எம்.எஸ் தகவல் அனுப்பியது தெரியவந்தது. போலீசார் துரைராஜை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், எனது மாமனார் மணி, மாமியார் பாப்பாத்தி, மைத்துனர்கள் தர்மலிங்கம் , கார்த்தி ஆகியோர் எனக்கு வேலை கிடைக்காமல் செய்ததோடு எனது மனைவியையும் பிரித்து சென்று விட்டனர். இதனால் அவர்களை போலீசில் சிக்க வைக்க டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு விடுதலைப் புலிகள் சேலத்தில் பதுங்கி உள்ளனர் என்று எஸ்.எம்.எஸ்சை அனுப்பி வைத்தேன்என்று கூறினார். அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற தட்ஸ் தமிழ் இணையத்தளம்.
இதிலிருந்து இலங்கைத்தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று "இந்தியர் இலங்கைத்தமிழர் விவகாரத்தை தமது சொந்த தேவைகளுக்காக எந்த நேரத்திலும் பயன்படுத்துவார்கள் என்பது மட்டும்."
சுவிட்சர்லாந்திலிருந்து நாட்டுக்கு எதிராக செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் புலி உறுப்பினர் ஒருவர் நாட்டினுள் பிரவேசிக்க முற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பன்னெடுங்காலமாக நாட்டுக்கு எதிராக செயற்பாட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இவர் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரிக்கப்பட்டுவருவதாக அறியக்கிடைக்கின்றது.
இவர் சுவிட்சர்லாந்தில் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு வகைiயான பிரச்சாரங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர் என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த MobileMe ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவையானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதியுடன் அஸ்தமாவதுடன் இச்சேவைக்கு பதிலாக அந்நிறுவனத்தினால் iCloud எனும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் MobileMe சேவையினூடாக தனது பயனர்களுக்கு 20GB சேமிப்பு வசதியினை இலவசமாக வழங்கி வந்த இச்சேவை மூடப்பட்டாலும் தற்போது இதனைப் பயன்படுத்துவர்கள் iCloud – இன் 5GB சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் இதற்கு மேலதிகமாக பயன்படுத்த வேண்டுமாயின் வருடத்திற்கு 20 டொலர்கள் செலுத்தி 10GB சேமிப்பு வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.

நினைவாற்றல் என்றால் என்ன? – ‘ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பதுதான் நினைவாற்றல்‘ என்று பதில் வரும். ஆனால், இது சரியான பதில் இல்லை! மனதில் இருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!
இதற்கு அமெரிக்க விஞ்ஞானிகள் சில காரணங்களையும் கூறுகின்றார்கள். உதாரணமாக ‘‘ஒரு மாணவனை எடுத்துக் கொண்டால் நன்றாகப் பாடங்களை படித்துவிட்டு தேர்வுக்குச் செல்கிறான். அவன் படித்ததில் இருந்து கேள்விகள் வருகின்றன. ஆனால், தேர்வறையில் இருக்கும்போது பதில் நினைவுக்கு வராமல் வீட்டுக்குச் சென்றபிறகு நினைவிற்கு வந்தால், அதனால் ஏதாவது பலன் இருக்குமா? நிச்சயம் இல்லை.
பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும் ஆனால், தேவையான நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பதுடன் தேவைப்படும் நேரத்தில் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வருவதே சரியான நினைவாற்றல்.
மூளையின் சக்தி என்பது அளவிட முடியாதது என்பது உண்மையே நூறாண்டுகள் வாழும் 100 ஆண்டுகளில் ஒருவர் ஒவ்வொரு வினாடியிலும் ஒரு சில விஷயங்களை நினைவில் சேகரித்துக் கொண்டிருக்கிறார் என்பதுடன் அவ்வளவு விஷயங்களையும் அவர் நினைவில் சேகரித்து வைத்தால்கூட தனது மூளையின் செயல்திறனில் 10இல் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகின்றார்.
அதெல்லாம் சரி.. நினை வாற்றலை எப்படி வளர்ப்பது? ‘‘உடல் பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியமாக பேணிக் காப்பது போல மூளைக்கான பயிற்சியும் இருக்கிறது. இதற்கான பயிற்சியைச் செய்யும் போது மூளையின் செயல்திறன் அதிகரிப்பதுடன் நினைவாற்றலையும் மேம்படுத்தலாம்.
அடிக்கடி கணக்குப் போட்டுப் பார்ப்பது, கணக்கு சூத்திரங்களை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது மூளைக்கு நல்ல பயிற்சி என்பதுடன் கணிதப் பாடத்தின் போது கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் கையால் எழுதிப் பெருக்கி வகுத்துக் கணக்குப் போடுவது மூளைக்கு மிகமிக ஏற்றது.
இதே போல் சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கும் மூளை அதிகமாக வேலை செய்யும். மூளையில் இருக்கும் ‘நியூரான்கள்‘ விவரங்களை வெளிக்கொணர வேகமாக ஆர்வம் காட்டும். எனவே குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டினால், மன அழுத்தம் குறையும் என்பதுடன் இதன் போது சுரக்கும் ‘அட்ரினலின்‘ என்ற ஹார்மோன் குழந்தைகளின் நினைவாற்றலைக் கெடுக்கும். இதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

சிங்கப்பூரில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வருகைதந்த பயணி ஒருவரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது உள்ளாடைக்குள் 2½ கோடி ரூபா மதிப்புள்ள வைரம் பதித்த தங்க நகைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்து தீவிர விசாரணையை நடத்தியதில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இவர் சிங்கப்பூரில் உள்ள நகை மாளிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் விஹாரி போடார் என்பதுடன் இவருடைய கணவர் அபிஷேக் போடார் பிரபல ஜவுளி நிறுவனத்தின் அதிபர் எனத்தெரிய வந்துள்ளதடன் இவர் இதுபோன்று 10 தடவை வைரம் மற்றும் தங்க நகைகளை கடத்தி வந்த தகவலையும் விசாரணையின்போது அவர் வெளியிட்டார்.
விஹாரி போடாருக்கு மும்பை சாந்தாகுரூசில் நகைக்கடைகள் உள்ளன என்பதுடன் அந்த கடைகளுக்காக சிங்கப்பூரில் இருந்து நகைகளை கடத்தி வந்ததாக தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சாந்தாகுரூசில் உள்ள அவருடைய நகை கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டதுடன் அங்கு கணக்கில் காட்டப்படாத 4 கோடி ரூபா மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
நீர்வேலி அத்தியாயர் இந்து கல்லூரியில் நாளை (05.08.2013) நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த யாழ். கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று(04.08.2013)காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக கடமையாற்றும் பண்டாரவளையை சேர்ந்த E.M.புத்ததாச (வயது 48) என்பவரே ஆவர்.
இவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவருவதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

சீட்டுப் பணத்தை செலுத்த முடியாமல் யாழ்.சுதுமலை பகுதியிலுள்ள எட்டு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்கு அடிக்கடி வரும் சீட்டுக்காரரின் அவமான பேச்சைத் தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருவதுடன் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் இவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சீட்டு, மீற்றர் வட்டி, காசோலை மோசடி போன்ற செயற்பாடுகளால் அதிகளவான தற்கொலைகள் நடைபெற்றுவதாக பொலிஸார் தெரிவித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் முளைவிடும் அடிப்படைவாதத்தைக் கிள்ளியெறியாமல் இருப்பதனால் இனங்களிடையே பிளவுகள் உருவாகிவருகின்றன என மேல் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர், நாட்டில் அடிப்படைவாதத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடுகின்றவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதனால் சட்டவாக்கம் கீழே சாய்ந்து நாடு மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் மேலெழுந்துள்ள இவ்வாறான நிலைமையினால் நாட்டு மக்களின் மதவழிபாட்டு உரிமை இல்லாதொழிந்திருப்பதாகவும், மத சுதந்திரம் இல்லாதொழிந்து நாட்டு மக்கள் கவலைமிக்கவர்களாக போர்த்துக்கேயரின் காலத்திலேதான் இருந்ததாகவும், அதன் பின்னர் அதிகமாக மத உரிமை இல்லாதொழிந்திருப்பது தற்போதைய அரசாங்கத்திலேயே என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
(கேஎப்)
30 வருட யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகின்றன. என்றாலும், வடக்கிலுள்ள மக்களுக்காக கொத்தமல்லி மிடர் ஒன்றாவது வழங்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கிலுள்ள பொதுமக்களின் வாக்கினைக் கேட்பதற்கு எந்தவொரு நியாயமான தேவையும் இல்லை என அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா குறிப்பிடுகிறார்.
பேரந்துடுவை மருதங்கேணி பிரதேசத்தில் அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் பாலர் பாடசாலைகள் பலவற்றைத் திறந்து வைத்து, மருதங்கேணி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திச் சங்க கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அமைச்சர், அப்பிரதேசத்தில் சட்ட விரோதமாக மீன் பிடிப்பதைத் தடைசெய்யுமாறு பாதுகாப்பு இராணுவத்தினருக்கு கட்டளையிட்டதுடன், சட்டரீதியாக மீன் பிடிப்பவர்களுக்கு சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்குமாறும் கூறினார்.
பிரதேசத்திற்குத் தேவையான மின்சாரத்தை 03 மாதங்களில் முழுமையாகப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ள அமைச்சர், அதற்குத் தேவையான பணஒதுக்கீட்டை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சார சபைக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல பிரதேசத்தில் நிலவுகின்ற காணிப் பிரச்சினை தொடர்பில் மிக விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாகவும், பொறுப்பான அதிகாரிகளிடம் அதுவிடயத்தில் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி மற்றும் கல்விசார் நிறுவனங்களுக்குரிய தேவைகளும் முழுமையாக ஏக காலத்தில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று (03) சனிக்கிழமை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த இப்தார் நிகழ்வு முதற்றடவையாக இந்த வருடம் கண்டியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஜனாதிபதிக்கு முஸ்லிம் பிரமுகர்களும் உலமாக்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)

நிவ்ஸிலாந்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பால்மாப் பொருட்களையும் தங்களது நாட்டுக்குள் தடை செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது என The New Zealand Herald செய்திப் பத்திரிகை குறிப்பிடுகிறது.
ரஷ்ய RIA செய்திச் சேவையிலிருந்து மேற்கோள் காட்டி Hareld செய்திச் சேவை, ரஷ்ய நுகர்வோர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் குழந்தைப் பால்மா உட்பட பொண்டேரா உற்பத்திகள் மீண்டும் திருப்பியனுப்பப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது. பெண்டேரா நிறுவன பணிப்பாளர்களில் ஒருவர் சென்றவருடம் குறிப்பிடுகையில் தமது உற்பத்திப் பொருட்களான பால்மா, சீஸ் பட்டர் உட்பட மில்லியன் 120 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ரஷ்யா கொள்வனவு செய்கிறது என்று குறிப்பிட்டார்.
உலகின் மிகப் பெரும் பால்மா உற்பத்தி நிறுவனமான நிவ்ஸிலாந்து பொண்டேரா நிறுவனத்தின் பால்மா உற்பத்தியில் பொட்யுலிம் எனும் (botulism) பயங்கர இரசாயன விஷப் பொருள் கலக்கபட்டுள்ளதை அறிந்து கொண்ட சீனா பொண்டேரா உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் தடை செய்திருந்தது.
பொண்டேரா நிறுவனம் இலங்கைச் சந்தைக்கு வழங்குகின்ற எங்கர், மெலிபன் உட்பட்ட உற்பத்திப் பொருட்களில் DCD விஷ இரசாயனப் பொருள் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட போதும் இலங்கை எந்தவிதத் தடையும் விதிக்காமல் தொடர்ந்து அதனைச் சந்தைப்படுத்துகின்றது.
சுகாதார அதிகாரிகள் உட்பட இந்நாட்டில் பொறுப்புச் சொல்ல பகுதியினரும் கைத்தொழில் உற்பத்தி நிறுவன அறிக்கைகளை கண்டும் காணாது இருளில் தேடிக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன்னரும் விவசாய இரசாயனப் பொருளில் ஆசனிக் நஞ்சு அடங்கியுள்ளதாக களனிப் பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கையை நிராகரித்து, அரசாங்கம் சட்ட ரீதியாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI) வெளியிடுகின்ற அறிக்கையை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். ஆயினும் DCD தொடர்பிலான விடயம் மாற்றமடைந்துள்ளது.
(கேஎப்)
இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாமல் சர்வதேசமே மிகவும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் எதிர்பார்த்திருக்கும் வடமாகாண சபை தேர்தலினை ஒரு பிரதேசசபை தேர்தலுக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தைகூட கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்து செயல்படுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டமைப்புக்குள் உள்ளடங்கப்பட்ட கட்சிகளுக்கிடையிலான குத்துவெட்டுக்கள் தொடக்கம் வேட்பாளர்கள் தெரிவுவரை தான்தோண்றித்தனமான வகையில் இலங்கை தமிழரசுக்கட்சினரதும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணினரதும் செயற்பாடுகளை புரிவது பெருங்கடலில் விழும் மழைத்துளியை காண்பற்கு ஒப்பானதாக அமைந்துள்ளது.
மிக நீண்டகால அரசியல் அனுபவங்களும் மக்கள் பலமுமுள்ள எத்தனையோ அரசியல் தலைமைகள் உள்ள நிலையிலும் எந்த ஒரு தேர்தலானாலும் அத்தேர்தலின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கும் இளைஞர்களையும் மாணவ சமூகத்தையும் புறம் தள்ளி உறவினர்களுக்கும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் வேட்பாளர் நியமனங்கள் வழங்கியுள்ள கூட்டமைப்புக்குள் இருக்கும் தமிழரசுக்கட்சி மற்றும் சுரேஸ் குழுவினர் வட மாகாண தமிழ் மக்களுக்கு இதனைவிட பெரிதொரு துரோகம் செய்துவிட முடியாது.
தானே முதலமைச்சர் வேட்பாளராகவும் வடக்கின் முதலமைச்சராகவும் வந்தேதீருவேன் என கனவுகண்டுகொண்டிருந்த சேனாதிராசாவுக்கும் பெரும்பாலான தமிழரசுக்கட்சியினருக்கும் எப்போதுமே அரசுடன் அரவணைந்து தமது சுய தேவைகளை பூர்த்திசெய்யும் சம்பந்தன் சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போண்றோரால் ஆப்பு வைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமே.
ஜே ஆர் ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது திருகோணமலை விருந்தினர் விடுதிக்கு மதுபான அனுமதிப்பத்திரம் பெற்ற சம்பந்தன் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலங்களில் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறி குண்டுதுளைக்காத வாகனத்தையும் ஜனாதிபதி விசேட பாதுகாப்புப்பிரிவினரின் பாதுகாப்பும் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கும் விசேட உலங்கு வானூர்தி வசதிகளையும் பெற்ற உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம் .
அதேபோண்று தனது உன்னத தலைவனையும் மத்திய செயற்குழு உறுப்பினர்களையும் ஒரே தினத்தில் பலிகொடுத்து தன்னைத் தானே தலைவனாக்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட மிகமுக்கியமான ஒருவர், அதன் காரணத்தினால் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலங்களில் மீன்பிடித்துறை அமைச்சராகவிருந்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஸவின் அமைச்சின் ஆலோசகர் பதவியினைப்பெற்ற்றதோடு சமிற் மாடிக்கட்டிடத்தில் அரசாங்க வீடுஒண்றினையும் பெற்று சுகபோக வாழ்வு நடாத்தியவர்
பின்னர் புலியின் வாலைப்பிடித்தாலே பாராளுமண்ற ஆசனத்தைக் கைப்பற்றமுடியும் என்பதை தெளிவாக புரிந்திருந்த சுரேஸ் புலிகளுக்காக வக்காளத்துவாங்குவதில் தன்னை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு படம் காட்டியவர்.
இலங்கைத் தமிழர்களை ஆயுததாரிகள் மற்றும் கபடதாரிகளினால்தான் அழுங்கு பிடியி்லி்ருந்து விடுவிப்பதற்கு முகம்தெரியாத சங்திகள் பலவற்றின் திணி்ப்பே திரு.விக்னேஸ்வரன் என்றால் அது மிகையாகாது.
இது ஒருபுறமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகளுடன் மிக நெ ருங்கிய நட்பினைக்கொண்டுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி பத்மநாபா அமைப்பினரையும் உள்வாங்கிச்செல்லவேண்டுமென பலர் விரும்பியிருந்த வேளையில் தம்க்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் ஒனறை அவர்களுக்கு வழங்க தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்வந்தபோதும் பிரபல மதுபான வியாபாரியும் தனது சொந்த சகோதரனை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனின் கடுமையான எதிர்ப்பினால் அந்த ஒற்றுமையும் கைகூடாமல் விடப்பட்டிருக்கின்றது.
அதே நேரம் புளட் அமைப்பின் தலைவர் திரு.சித்தார்த்தனை தொடர்புகொண்டு பல்கலைக்கழக மாணவ பிரதிநிதி தர்ஸனனை தமிழரசுக் கட்சியினர் ஓரம் கட்டியுள்ளது ஒரு சிறந்த நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியுமா என வினவியபோது தர்ஸனன் விரும்பினால் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் இரண்டில் ஒன்றை தாம் வழங்க தயார் எனத்தெரிவித்துள்ளார். ஆனால் இதே பல்கலைக்கழக சமூகம் புளொட் அமைப்பை துரோகிகளாகவே பார்க்கின்றது என்பது வேறு அத்தியாயம்.
எது எவ்வாறாயினும் தேர்தல் அரசியலிலும் விட்டுக்கொடுப்பு தேவைஎன்பதனை தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் புளட் அமைப்பினரும் எண்ணுவது வரவேற்கப்படவேண்டியதே.
தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே குத்துவெட்டியும் தமது இருப்புகளுக்காக மட்டுமே இளைஞர்களையும் மாணவர்களையும் பாவிக்கும் தமிழரசுக் கட்சினருக்கெதிராக தமிழ்கரசுக் கட்சியின் இளஞர் அமைப்பும் யாழ் பல்கலைக்கழக மாணவ சக்தியும் கடுமையான எதிர்ப்பினை காட்டிவரும் இந்த நிலையிலாவது குடித்தால் பளைய கள்ளு நிறுத்தினால் மீசை நரைத்தவன் என்ற கொள்கையை தாமதமின்றி மாற்றி வயது வந்தவர்களை இல்லத்தில் இருத்திவிட்டு வாலிபர்களுக்கு வழிவிடுவதே சிறந்த செயலாக அமையும்.
மாறாக வேட்டி கட்டி விபூதியணிந்து உருத்திராக்கமாலை போட்டவர்கள்தான் வேட்பாளர்கள் என்று தமிழரசுக் கட்சி எண்ணும் பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதமே தமிழரசுக் கட்சினருக்கு வடமாகாணத்தில் மட்டுமல்ல கிழக்கிலும் அரசியல் அஸ்த்தமனம் என்பதனை மக்கள் நிருபிப்பார்கள்
எஸ்.எஸ்.கணேந்திரன்

வியாழன் அன்று உள்ளூர்நேரம் பிற்பகல் 3.30க்கு, எட்வர்ட் ஸ்னோடென் மாஸ்கோ விமானநிலைய இடைத்தங்கல் பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார். ஐந்து வாரங்களுக்கும் மேல் அவர் அங்கு பொறியில் அகப்பட்டது போல் இருந்தார். ரஷியாவினால் ஸ்னோடனுக்கு தற்காலிகத் தஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறைந்தப்பட்சம் அந்நாட்டில் ஓராண்டு வசிக்க அனுமதிக்கப்படலாம்.வாஷிங்டனின் சர்வதேச பழிவாங்கும் தன்மையினால் அவர் உடலியல்ரீதியாக ஆபத்தை முகங்கொடுப்பது குறித்த தீவிரநிலையை அடையாளம் காட்டுவது போல், ஸ்னோடென் ஒரு இரகசிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
“கடந்த எட்டு வாரங்காள ஒபாமா நிர்வாகம் சர்வதேச அல்லது உள்நாட்டுச் சட்டத்திற்கு மதிப்புக் காட்டுவதில்லை என்பதைக் கண்டோம்; இறுதியில் சட்டம் வெற்றி பெறுகிறது என்று தஞ்சம்கொடுக்கும் சான்றிதழை பெறும்போது ஸ்னோடன் கூறினார்.
எதிர்பார்த்தபடி தஞ்சம் வழங்கப்பட்டமை அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து கண்டனங்களையும் பதிலடி அச்சறுத்தல்களையும் தூண்டியுள்ளது.
அமெரிக்காவும் பிற முதலாளித்துவ அரசாங்கங்களும் நிறுவியுள்ள எங்கும் படர்ந்த கண்காணிப்பிற்கு எதிர்ப்பின் சர்வதேச அடையாளமாக ஸ்னோடென் மாறிவிட்டார். எனவே அவர் அமெரிக்க இராணுவ உளவுத்துறைப் பிரிவிற்குள்ளும், பெருநிறுவன-நிதியத் தன்னலக்குழுவின் பாரிய அதிருப்திக்கும் வெறுப்பிற்குமுரியவராகவும் மற்றும் அரசாகத்தினுள்ளும் முன்னணி எதிராளியான நபர் என்பதற்கான மூலஆதாரமாகிவிட்டார்;
ஒபாமாவின் வெள்ளை மாளிகை அரசாங்கத்தின் குற்றத்தை அம்பலப்படுத்தும் வெளிக்கொண்டுவருபவர்களை முந்தைய நிர்வாகங்களைவிட கூடுதலாக இலக்கு கொண்டுள்ளது. ஸ்னோடென் இந்நடவடிக்கையின் மையத்தில் உள்ளார். ரஷியாவில் அவரைத் தங்க அனுமதித்துள்ளது நிர்வாகத்திடம் இருந்து பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
“ரஷியக் கூட்டமைப்பு இந்நடவடிக்கை எடுத்தது குறித்து நாங்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்” என்றார் வெள்ளை மாளிகையின் செய்திச் செயலர். “இது ஒரு சாதகமான நிகழ்வு அல்ல என்பது வெளிப்படை” என்று கூறிய கார்னே பதிலடியாக வெள்ளை மாளிகை திட்டமிட்ட மாஸ்கோ பயணம் ஒன்றை இரத்து செய்யக்கூடும் என்று தெரிவித்தார்.
“அவர் ஒன்றும் மாறுபட்ட கருத்துக்காரர் அல்ல. திரு.ஸ்னோடென் ஒரு தகவல் வெளிக்கொண்டுவருபவரல்ல. அவர் இரகசியத் தகவலைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மூன்று பெரும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன, விரைவில் அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்படவேண்டும், அங்குத்தான் அவர் உரிய சட்ட வழியையும் பாதுகாப்புக்களையும் பெற முடியும்.” என கார்னே தெரிவித்தார்.
ஸ்னோடென் உரிமைகள் சட்டத்தில் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிய வழக்குவிசாரணை பாதுகாப்புக்களைப் பெறுவார் என்று வலியுறுத்தும் தேவை கார்னேக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம் ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே அமெரிக்கக் குடிமக்களை முறையான வழக்குவிசாரணையின்றிக் கொன்றுள்ளதுடன், நிர்வாகத்தின் சிறப்பு உரிமையாக சட்டத்திற்கு அப்பாற்பட்ட இலக்கு வைத்த கொலைகள் இருக்கும் என்று தொடர்ந்து கூறுகிறது.
சட்டமியற்றுபவர்களும் ஸ்னோடெனையும் ரஷிய அரசாங்கத்தையும் கண்டிப்பதில் சேர்ந்து கொண்டனர். “ரஷியா எங்களை முதுகில் குத்திவிட்டது, ஸ்னோடென் சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் கத்தியின் மூலம் மற்றொரு தாக்குதல்” என்றார் ஜனநாயகக் கட்சி நியூயோர்க் செனட்டர் சார்ல்ஸ் ஷ்யூமர். ஸ்னோடெனை ஒரு “கோழை” என்றும் “ஓடிவிட தீர்மானித்துள்ளார்” என்றும் அவர் கூறினார்.
அரிசோனாவின் குடியரசு செனட்டர் ஜோன் மக்கெயின் தஞ்சம் கொடுத்துள்ளது “எல்லா அமெரிக்கர்கள் கன்னத்திலும் அறைந்தது போல் ஆகும்” என்றும் அமெரிக்க-ரஷிய உறவுகள் “அடிப்படையிலேயே மறு சிந்தனைக்கு உட்படுத்துதல் தேவை” என்றும் கூறினார்.
“எட்வர்ட் ஸ்னோடென் ஒரு தப்பி ஓடுபவர், அமெரிக்க நீதிமன்றத்தில் இருக்க வேண்டியவர், ரஷியாவில் தஞ்சம் பெறத் தகுதி அற்றவர்” என்று ஜனநாயகக் கட்சியின் நியூஜேர்சி செனட்டர் ரோபர்ட் மெனன்டெஸ். இச்செயல் “அமெரிக்க-ரஷிய உறவுகளில் ஒரு பின்னடைவு” எனக் குறிப்பிட்ட மெனென்டெஸ் “அமெரிக்கத் தேசிய நலன்களுக்கு இது பெரும் சேதத்தை அளிக்கும், பயங்கரவாதிகளுக்கு உதவும்” என்றார்.
ஓக்லஹோமா குடியரசு செனட்டர் டோம் கோபர்ன், ஸ்னோடென் “நம் நாட்டிற்கு ஒரு துரோகி” என்றார்.
தற்காலிகத் தஞ்சத்தை கொடுத்திருக்கையில், ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அமெரிக்காவுடனான சுமுகமான உறவுகளில் ஸ்னோடென் விவகாரம் குறுக்கிட விரும்பவில்லை என்று பலமுறை கூறியுள்ளார். புட்டினின் ஓர் உதவியாளரான யூரி வி.உஷ்ஹகோவ் ஸ்னோடென் விவகாரம் “அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய விவகாரம் அல்ல” என்றார்.
ஸ்னோடனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தஞ்சம் அவர் அனைத்து அரசியல் செயல்களையும் நிறுத்துவதில் தங்கியுள்ளது. “நம் அமெரிக்கப் பங்காளிகளைச் சேதப்படுத்தும் நோக்கம் உள்ள வேலையை அவர் நிறுத்த வேண்டும்” என்று புட்டின் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்னோடெனுடைய உயிர் இன்னும் ஆபத்தில்தான் உள்ளது. அமெரிக்க அரசாங்கம் இதில் சந்தேகத்திற்கு இடம் வைக்கவில்லை. அரசாங்கத்தின் விரோதிகள் எந்தவிடச் சட்டநயங்களும் இன்றி கொல்லப்படலாம். ஸ்னோடென் வாழ அனுமதிக்கப்படுவாரா அல்லது படுகொலைக்கு இலக்காவாரா, என்பது உயர்மட்ட அமெரிக்கதிகாரிகளின் அரசியல் தந்திரோபாயத்தைப் பொறுத்துள்ளது.
ஸ்னோடென் விவகாரத்தின்போது ஒற்றுச்செயல்கள் பற்றி சமீபத்தில் வெளிவந்துள்ள தகவல் அசாதாரண முறையில் குறிப்பிடத்தக்கதும், பெரும் நாசமளிப்பதுமாகும். தஞ்சச் செய்திக்கு முதல் நாள், கார்டியன் பத்திரிகை ஸ்னோடென் கசியவிட்ட மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. அதில் NSA உடைய “மிகப்பரந்தளவிலான” இணையத்தள ஒற்றாடல் செயலாக XKeyscore எனப்பட்டது இருந்தது அறியப்பட்டுள்ளது. இது தனிநபர்களின் மின்னஞ்சல்களைப் படித்தலுடன் ஏனைய செயல்களுடன் கூடிய இணையத்தளக் கண்காணிப்பு வலையாகும்.
CNN.com கருத்துப்படி XKeyscore, “இணையத் தளத்தில் நீங்கள் என்ன செய்திருந்தாலும் அதைக் கிடைக்கச் செய்யும், தகவல் ஆராய்தல், தேடுதல்கள், உங்கள் மின்னஞ்சல்களின் பொருளுரைகள், வலைத்தள உரையாடல்கள், உங்கள் முழுத் தகவல்கள் அனைத்தும் keyboard இனை தட்டினால் கிடைக்கும்.... இத்திட்டம் பகுப்பாய்வாளர்களுக்கு உங்கள் தகவல் தரவு முழுவதையும் ஆராயும் திறனை எவ்வித முன் அனுமதியும் இன்றி அளிக்கும் -- எந்த அனுமதி ஆணையும் கிடையாது, நீதிமன்ற உத்தரவு கிடையாது, புள்ளி வைக்கப்பட்ட இடத்தில் கையெழுத்து தேவையில்லை. பகுப்பாய்வாளர் ஒரு சாதாரண கணணித்திரை படிவத்தை நிரப்ப வேண்டும், சில வினாடிகளில் உங்கள் வலைத்தள வரலாறு அந்தரங்கமற்றுப் போய்விடும்”.
ஒபாமாவில் இருந்து கணக்கற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், செனட்டர்கள் கண்காணிப்பு “அமெரிக்கர்களை இலக்கு கொள்ளவில்லை” என்று உறுதிப்படுத்தினாலும், XKeyscore தான் விரும்பும் வகையில் அனைவருடைய தரவுகளை தேடும் திறனை அரசாங்கப் பகுப்பாய்வாளர்களுக்குக் கொடுக்கிறது.
உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு (2013) ஆகஸ்ட் 4ஆம் திகதி உலக நட்பு தினமாகும். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம். இருவருக்கிடையில் அல்லது பலருக்கிடையில் ஏற்படக்கூடிய நட்பு இரு குழுக்களிடையே அல்லது பல குழுக்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு சமூகங்களுக்கிடையே அல்லது பல சமூகங்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு நாடுகளுக்கிடையே அல்லது பல நாடுகளுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு என்று பல வடிவங்களில் அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால், பொதுவாக நட்பு தினம் என்று கூறும்போது இருவருக்கிடையே ஏற்படக்கூடிய நட்பின் பரிமாணமே கருத்திற் கொள்ளப்படுகின்றது. இது ஆண் -ஆணிடையே, பெண் – பெண்ணிடையே, ஆண் – பெண்ணிடையே ஏற்படலாம்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார். முக்கியமாக நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார்.
பெற்றோர்கள், மனைவியைவிட நமது துக்கத்திலும், சந்தோஷத்திலும் பங்கு கொள்வதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாயிடமும், மனைவியிடமும், தந்தையிடம்கூட ஆலோசனை செய்ய முடியாத பல விடயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம். சில சந்தர்ப்பங்களில் பிறருடன் மேற்கொள்ளப்படும் நட்பைப் போலவே குடும்ப அங்கத்தவர்களிடையே நட்பார்த்தமான உறவுகள் ஏற்படுவதுண்டு.
உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது என பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். உண்மையான நட்பின் முன் தமது உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது மனதில் ஏற்படும் அமைதியை அளவிட முடியாது. பிரச்சினைக்குரிய ஒரு விடயத்தை அல்லது தீர்வு காண வேண்டிய விடயத்தை மனதுக்குள் அடக்கி வைத்துக்கொள்வதனால் விமோசனம் கிடைக்கப்போவதில்லை மாறாக மன அழுத்தங்களும், விபரீதங்களுமே ஏற்பட இடமுண்டு.உண்மையான நட்புடன் அவற்றைப்பகிர்ந்து கொள்கையில் சில சந்தர்ப்பங்களில் எமக்குக் கிடைக்கும் ஆலோசனைகள் விலைமதிக்க முடியாமல் இருக்கலாம். தற்போதைய வேகமான நவீன காலத்திலும் நட்பினை கௌரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சில நட்பினை கலங்கப்படுத்தாமலும் இருப்பதில்லை.
சாதி, இனம், மொழி, பால் பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக கொண்டாடப்பட்டுவரும் இந்த நண்பர்கள் தினத்தில், தலைமுடி நரைத்தாலும் நண்பா உன்னிடம் நான் கொண்ட நட்பு இன்னும் மாறவில்லை என்று உலகெங்கும் உள்ள வயதானவர்கள்கூட இன்றைய தினத்தில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது அவர்கள் ஞாபகம் வருதே… நண்பா ஞாபகம் வருதே… பள்ளிக் காலங்களில் நாம் ஒன்றாக சேர்ந்து சுற்றியது. ஆற்றங்கரையில் சிறு வயதில் கல் எறிந்து விளையாடியது. மாந்தோப்பில் மாங்காய் பறித்து தின்ற சுவையான நாட்கள் என்று பல பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்து பூரிப்படைவார்கள்.
நண்பர்கள் தினத்தில்… நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். தொலைதூரத்தில இருப்பவர்களுக்கு செல்பேசி வழியாக குறுந்தகவல் அனுப்பியும் (எஸ்.எம்.எஸ்.), கணினி வழியாக மின்னஞ்சல் அனுப்பியும் தங்கள் நட்பை பலப்படுத்திக் கொள்கின்றனர்.
துன்பம் வரும் வேளையில் கடவுளை நினைக்கிறோம். அடுத்ததாக உதவி கேட்க நல்ல நண்பர்களைப் பற்றிய எண்ணம் நம்மையும் அறியாமல் நம் மனதில் உதயமாகிறது. பரஸ்பரம் அன்பை மட்டும் அல்லாமல் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆற்றல் நட்புக்கு மட்டுமே உரிய சிறப்பாகிறது. ஆனால் பலர் நட்பின் மகத்மீகத்தை சரிவர உணர்ந்து கொள்வதில்லை.
இதுநாள் வரையிலும், நண்பர்களே எனக்கு இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது. நட்பு, தோழமை என்பது இருவர் இடையேயோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், பால், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
"வடமாகாணசபைத் தேர்தல்" கேட்கவே தித்திக்கும் ஒரு இனிய ப்தம். எப்போதும் கனவாகவே இருந்து விடப் போகிறதோ என ஏங்கிக் கொண்டிருந்த நியாயமான உணர்வுகளைக் கொண்ட ஒவ்வொரு ஈழத் தமிழனின் மனமும் இப்போ ஓரளவு சமாதனமடைந்திருக்கும்.ஆனாலும் செப்டெம்பர் மாதம் நடக்கவிருக்கும் இம்மகாணசபைத் தேர்தலைப் பற்றிய விமர்சனங்கள் சராமாரியாக சகல பக்கங்களிலும் இருந்து கிளம்பிக் கொண்டேயிருக்கின்றன.
ஈழத்தமிழினத்தின் தனிப்பெரிந்தலைவர் "மேதகு வே.பிரபாகரன்" அவர்கள் ஆயுதமுனையில் அதிகரம் செய்து கொண்டிருந்த காலத்தில் மூச்சு விடத் தயங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று அரசியல் ஞானியராகி அரும்பெரும் கருத்துக்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சர்வாதிகாரத்தின் அழுங்குப்பிடியை தனித்தமிழரின் இராச்சியம் என வர்ணித்த புலம் பெயர்ந்த (புலன் பெயர்ந்த) தமிழர்களோ "தமிழீழமே" தீர்வு அதுவற்ற எதையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூட ஈழத்தமிழர் விரும்ப மாட்டார் என தமக்குத்தாமே ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகள் எனப் பட்டம் சூட்டிக் கொண்டு பல்வேறு நாடுகளில் புலிக்கொடியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்த ஈழப்பிரச்சனை "தனிப்பெருந் தலைவரின்" அமரத்துவத்தின் பின்னாலோரளவி தணிந்து புகைந்து கொண்டிருக்கிறது.
எங்கே அந்தப் புகை தணிந்து தமது சுதந்திர வெறி அணைந்து சாம்பலாகிப் போகுமோ என அஞ்சிக் கொண்டிருக்கும் இந்தப் புலி எச்ச சொச்சங்கள் இப்புகையை ஊதி ஊதி மீண்டும் எரியூட்டுவதற்காக தமது கைக்கூலிகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தின் தானைத் தம்பிகளுக்கு ஈழத்தமிழர்களிடம் விடுதலை எனும் பெயரில் சுரண்டிய பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாவம்,
ஈழத் தமிழ்ப் பகுதிகளில் கால்நூற்றாண்டுக்கு மேலாக தமது கல்வியை இழந்து, உத்தியோகங்களைப் பறிகொடுத்து அகதிகளாக அங்குமிங்கும் ஓடித்திரிந்து விடுதலை இயக்கங்களில் பங்களித்ததின் மூலமாகவும், அதே விடுதலை இயக்கங்களினால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டதன் காரணமாகவும், தமது உயிர்களைப் பறி கொடுத்தவர்கள் போக எஞ்சியுள்ளவர்கள் கொஞ்சம் மூச்சு விட அவகாசம் கிடைத்ததே என எண்ணும் நேரம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் படலத்தை நடத்த முனைகிறார்கள் இப்புலி விசுவாசிகள்.
கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம் !
வடமாகாணத் தேர்தலை நடத்தக்கூடாது என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கும் சிங்கள இனவாத சக்திகளின் இடையூறுகளுக்கு மத்தியில் வெளிநாட்டு அழுத்தங்களைச் சாளைக்கும் முகமாகவோ என்னவோ இலங்கை ஜனாதிபதி இத்தேர்தலை நடத்த முன்வந்துள்ளமை ஒரு முன்னோக்கிய நகர்வு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்திவாரம் இன்றி ஒரு சாதாரண குடிசையக் கூட கட்டுவது கடினம் ஆனால் இவர்களோ அத்திவாரம் இன்றி மாளிகை அமைக்கலாம் எனக் கனவு காண்கிறார்கள்.
இத்தேர்தலினால் அமையப் போகும் மாகாணச்பை எந்த அளவிற்கு அதிகாரம் கொண்டது எனும் விவாதத்தில் ஈடுபடுவதை விட்டு ஒரு சிறிய அளவிலான கட்டமைப்பைக் கொண்ட ஒரு அமைப்பைக் கையிலெடுத்துக் கொண்டு அதனை விஷ்ரிக்கும் வழியைக் கையாண்டால் எம்மினத்தின் எதிர்கால வானத்தில் ஓரளவு ஒளியாவது பிறக்கும்.
1987ம் ஆண்டு நடந்த சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் மறைந்த பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனையின் படி அம்மகாணசபையை ஏற்றுக் கொள்ளும் புத்திசாதுர்யம் கொண்டவராக எம் மேதகு தலைவர் இருந்திருந்தால் இன்று அதிகாரப் பரவலாக்கப்பட்ட ஒரு வடக்குக் கிழக்குக் இணைந்த சட்டசபையின் முதலமைச்சராக அவர் கோலோச்சியிருந்திருக்கலாம்.
தீர்க்க தரிசனமற்ற பார்வையைக் ஒண்டிருந்ததாலும் தன் மக்களின் நல்வாழ்வை விடத் தனது அதிகாரத்தையே பெரிதாக எண்ணியதாலும் இன்று தானும் அழிந்து எமது மக்களின் பெரும்பகுதியையும் அழிவு எனும் படுகுழிக்குள் தள்ளி விட்டுள்ளார்.
இனியாவது எமது இனம் இப்பிழையைத் தவிர்த்து இத்தேர்தலின் மூலம் பெறக்கூடிய அதிக அளவிலான அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு அதை விஸ்தரிக்கும் முயற்சியை மேற்கொள்ளுவதே சாலச் சிறந்ததாகும்.
முதன்முறையாக அனைத்துத் தமிழ்க் கட்ச்சிகளும் இணைந்து ஓரளவு நடுநிலையான ஒரு மிதவாத வேட்பாளரை முதலமைச்சராக்க முயற்சிக்கிறது.
இவ்வேட்பாளரும் எதை எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி தனது மிதவாதத்தனத்தை வெளிக்கொணர்ந்துள்ளார்.
இவரின் இவ்வரசியல் நிலைப்பாட்டுக்கு நாமனைவரும் ஆதரவளித்து ஜக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சுயமரியாதையுடன் ஒரு மாநில ஆட்சி அமைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுப்பது ஒன்றே இன்றைய காலகட்டத்தில் எம்முன்னால் தெரியும் ஒரு சாத்தியமான வழிமுறையாகும்.
அவர் விடுத்த வேண்டுகோளின் படி புலம் பெயர்ந்த தமிழர்களும், எமது தமிழ்நாட்டுச் சகோதரர்களும் எமது இந்தச் சமாதானபூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து இடையூறளிக்கும் வகையில் தனீ ஈழம், தனிநாடு எனும் நிறைவேற முடியாத கோஷங்களைத் தவிர்த்துக் கொள்வது இப்போதைய காலக்கட்டாயமாகும்.
இதை இவர்கள் இனியாவது உணர்வார்களா? தமது சுயலாபத்தின் அடிப்படையிலமைந்த கொள்கைகளைக் கைவிட்டு, நலிந்து போன எம் ஈழத்தமிழரின் வாழ்வைச் செம்மைப்படுத்தும் வகையில் தம்மை நெறிப்படுத்திக் கொள்வார்களா?
சரித்திரத்தில் இவர்கள் எவ்வாறு நினைவு கொள்ளப்படப் போகிறார்கள் என்பது இவர்களின் வசமே உள்ளது.
நல்லையா குலத்துங்கன்
ஈழத்திலிருந்து.
சனா: யெமனிலுள்ள 11 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்கள் பணத்துக்காக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக யூரியூப்பில் குற்றஞ் சாட்டியுள்ளார்.
இளமையான இச் சிறுமி மிகவும் அகந்தையுடனும் அச்சத்துடனும் கமராவை நோக்குகின்றார். ஆனால், அவரது கேள்வி அதிர்ச்சிதரும் ஒன்றாகஉள்ளது. என்னை திருமணம் செய்து கொள்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா? என 11 வயதுடைய அச் சிறுமி கேள்வியெழுப்பியுள்ளார்.
யெமனில், பால்ய வயது திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடா அல்ஆடல் என்ற இந்தச் சிறுமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
யெமனின் பால்ய வயது மணமகள்களிலொருத்தியாக நடா இருக்க விரும்பவில்லை. இந்த 11 வயது சிறுமியின் கேள்வி ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாகும். இந்த பால்ய வயது திருமணத்தை விட, மரணிப்பது சிறந்ததாகுமெனவும் நடா தெரிவித்துள்ளார்.
பணத்துக்காக திருமணம் செய்து கொடுக்க தனது பெற்றோர் முயற்சி செய்து வருவதாகவும் நடா குற்றஞ்சாட்டியுள்ளாள். இரண்டரை நிமிடங்கள் நீடிக்கும் நடாவின் நேர்காணல் யூ ரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
யெமனிய சிறுமிகளின் பாடசாலைக் கல்வியை இடைநடுவே அவர்களுடைய பெற்றோர் நிறுத்திவிட்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அவர்களுடைய ஆரம்பக் கல்விக்கு இடையூறு ஏற்படுகின்றது. அத்துடன், உடல் நல பாதிப்புகளும் ஏற்படுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பெண் உரிமைகளுக்கான பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
யெமனில், பால்ய வயது திருமணம் என்பது பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்றது. நடா, தற்பொழுது தனது பெற்றோரை விட்டு வந்து, அவளுடைய மாமனாரின் வீட்டில் வசித்து வருகின்றாள்.
நான் திருமணத்திலிருந்து ஓடி வந்து விட்டேன். நான் அப்பாவித் தனத்திலிருந்து தப்பி விட்டேன். நான் விற்கப்படவோ, வாங்கப்படவோ வேண்டிய நிலையிலிருந்து தப்பி விட்டேன் எனவும் நடா தெரிவித்துள்ளார். தற்பொழுது நடா மகிழ்ச்சியாகவும் ஓய்வாகவும் இருப்பதைக் காணமுடிகின்றது.

.jpg)

.jpg)