களுத்துறை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரும் அவரது மகனும் களுத்துறை வடக்கிலுள்ள வீடொன்றிற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை காரணமாக இருவர் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதுதொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஐதேக களுத்துறைப் பிரதேச சபை உறுப்பினர் காமினி கவிரத்ன மற்றும் அவரது மகனும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(02) பிற்பகல் களுத்துறை வஸ்கடுவ - குடாவஸ்கடுவ ரணவிரு மாவத்தைக்கு அருகாமையிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளனர்.
(கேஎப்)

அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுவது போல, பொதுபல சேனா இயக்கம் ஒரு முஸ்லிம் நபருக்கு, முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றுக்கு அல்லது முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல், அல்லது அச்சுறுத்தல் விடுத்திருப்பதை நிரூபித்தால் தாம் மகியங்கனையிலுள்ள விகாரைக்குச் சென்று தனது காவி உடையை களைந்துவிடுவதாகவும், அதன்பின்னர் இராணுவத்தில் இணைந்துவிடுவதாகவும் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நிரூபிக்காவிடின், அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்திலிருந்து இருந்து விலக வேண்டுமெனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளாரர். ‘இவ்வாறு பொய்கூறும் உறுப்பினர்களுக்கு இனிமேலும் வாக்களிக்க வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மகியங்கனையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 07 ஆம் திகதி புதன்கிழமை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் உலமாக்கள், கதீப்மார்கள்,ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
07 ஆம் திகதி புதன்கிழமை மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 06.29 மணி முதல் ஷவ்வால் மாத்த்தின் தலைப்பிறையைப் பார்க்குமாறும் தலைப்பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உடனடியாக நேரிலோ அல்லது 0115234044, 2432110, 01122390783, 0777366099 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
பாப்பரசரை இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவிக்கின்றார்.முதலாவது பிரான்சிஸ் பாப்பாண்டவருக்கு கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் பாப்பாண்டவர் கருத்துத் தெரிவிக்கையில் தனது ஆசியச் சுற்றுப்பயணத்தின்போது இலங்கைக்கும் போய்வருவதற்கு சிந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
வெலிவேரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய சம்பவத்தில் 16 வயதான கஹந்தவஆராச்சிலாகே தேன் அகில தினேஷ் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாரும், வைத்தியசாலை தரப்பினரும் சரியான தகவல்களை வழங்குவதில்லை.
தமது உறவினர்கள், பிள்ளைகள் வீடுகளுக்கு வரும்வரை பிரதேச மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். அந்த பிரதேசத்தில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இராணுவ தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு பின்னர், வீட்டில் இருந்தவர்கள் வீதிக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
ரத்துபஸ்வல மக்கள் குடிக்க குடிநீர் கேட்டு பல நாட்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அன்றாட பாவனைக்காகவும், குடிக்கவும் அவர்கள் சுத்தமான தண்ணீரை கேட்டனர். தண்ணீர் கேட்ட மக்களுக்கு அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக துப்பாக்கி, பொலிஸாரின் தடிகள் மூலம் தாக்குதல் நடத்தி பதிலளித்தது. போராட்டம் நடத்திய மக்களின் கை, கால்களை உடைத்து இறுதியில் கொலை செய்துள்ளது.
இராணுவம் நடத்திய இந்த மிலேச்சத்தனமான தாக்குதலையும் கொலையையும் ஜே.வி.பி வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறது என்றார்.

யாழ் அரியாலைப் பகுதியில் 512 ஆவது படைப்பிரின் பயன்பாட்டில் இருந்த 35 வீடுகள் மற்றும் ஆறு காணிகள் விடுவிப்பிப்பதற்கான உத்தியோக பூர்வ கடித்தினை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்ககையளித்தார்.
1997 ஆம் ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் மற்றும் வீடுகளே இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு அரியாலையில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.
அரியாலைப்பகுதியில் இயங்கி வந்த 512 ஆவது படைப்பிரிவிற்கு வைத்தியசாலை வீதியில் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொதுமக்களின் வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கவேண்டியுள்ளது எவ்வாறு எனின் அநியாயமே என்று சொல்லித்தான். ஏன் என்றால் இலஞ்சம் பெற்றார் எனக் கூறப்படும் நீதியரசர் தொடர்பில் இன்னும் நீதிமன்றத்தில் வழக்காடப்படுகிறது. அந்த நீதியரசர் இலஞ்சம் வாங்கினாரோ இல்லையோ அதுதொடர்பில் நீதிமன்ற வட்டாரத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை கணிப்பிட முடியாது. ஏன் என்றால், அந்த நிகழ்வானது சமூகத்தின் பேச்சுக்குட்பட்டு மக்களின் நம்பிக்கை சுக்கு நூறாகிப் போவதனால். இந்த நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்த அதேநேரம் நீதியரசர் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்களில் அதிருப்தியுற்றவர்களின் உள்ளங்களில் சந்தேகம் துளிர்விடத்தான் செய்யும். அந்த நீதியரசர் எனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருப்பதும் அடுத்த பகுதியினரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக் கொண்டுதான் என்ற சந்தேகம் அது. அதுதொடர்பில் யாரேனும் ஒருவர் நீதியரசருக்கு எதிராக மீள்விசாணைக்கான விண்ணப்பம் சமர்ப்பித்தால் அதனால் எழுகின்ற கேள்வி விவாதத்திற்குரியதாக மாறும். அதுமட்டுமன்றி அது தொடர்பில் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களும் சந்தேகத்திற்கு வழி வகுக்கும்.இங்கு இலகுவான கோட்பாடு எதுவென்றால், இன்றைய நிலைமையில் நீதியரசரின் நிலைமை, அவர் பற்றி வெளிவருபவை, அவரது நடத்தை மாற்றம், முன்னர் அவர் வழங்கிய தீர்ப்புக்கள் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைகின்றன. நீதியரசர் ஒருவர் கிராமத்தில் உள்ள மரண உதவிச் சங்கங்களில் இணையாமல் இருப்பதற்குக் கூட காரணம் எதுவென்றால் அச்சங்கத்து உறுப்பினர் ஒருவரின் கண்களினால் அவ்வாறானதொரு தீர்ப்பைக் காணக்கூடாது என்பதற்காகவேயாகும்.
நீதியரசர் ஒருவர் ஓய்வு பெற்றாலும் கூட அவரது சேவையின் பொறுப்பு முடிவடைவதில்லை. நீதியரசர் ஒருவர் வழங்கிய தீர்ப்பு பற்றி மக்கள் அவர் ஓய்வுபெற்றதன் பின்னர்தான் சிந்திக்கத்தொடங்குவர். இலஞ்சம் பெற்று அல்லது தனது சுய விருப்பின் பேரிலோ, தலையீடுகளினால் அல்லது பிற வழிகளினால் நீதியரசர் ஒருவர் ஓய்வு பெற்றதன் பின்னர் ஏதேனும் ஒரு பக்கத்தினர் பக்கம் சாய்ந்து தீர்ப்பு வழங்கியிருந்தால் அந்த நீதியரசர் தனது சேவைக்காலத்தில் ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கியிருப்பர் என்று சந்தேகிக்க இடம் உண்டு. இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால் ஒரு நீதியரசர் தான் ஓய்வு பெற்ற பின்னரும் கூட தன்னிலையில் மாறக் கூடாது என்பது. அதுமட்டுமன்றி அதைப் பொதுமக்கள் கண்டு கொள்ளும்படி தான் செயற்படவும் வேண்டும். ........
வட்டுக் கோட்டைப் பகுதியில் யூலை மாதம் 26 ஆம் திகதி 15 வயது சிறுமி கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சங்கானை சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெறும் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலையே அவர் இவ்வாறு கூறிப்பிட்டார்.
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த சந்தேக நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.

22 பாடசாலை பிள்ளைகளை ஒரே தடவையில் ஆட்டோவில் ஏற்றிச் சென்றதற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வவுனியா மதவாச்சியைச் சேர்ந்த எம். எ. சமன்குமார பண்டார என்ற ஆட்டோ சாரதிக்கு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சந்திம எதிரிமான்ன 9500 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மீண்டும் இது போன்ற குற்றத்திற்கு கைது செய்யப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிவான் தெளிவில்லாதுள்ள சாரதி அனுமதி பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச பிடிவிராந்து பிடிக்கப்பட்டிருந்த புலிகளின் முன்னாள் உறுப்பினரான 35 வயதான தேவா சதீஸ்குமார் இந்தியா மும்பை குற்றத்தடுப்பு பிரிவினரால் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது
அவர் மும்பையில் இருந்து நைரோபிக்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இவரை கைது செய்து விசாரணையின் போது தான் வானூர்தி மூலம் இலங்கையில் இருந்து இந்தியா வந்ததாக அவர் தெரிவித்தார் எனினும் அவர் மீதான விசாரணையை துரிதப்படுத்திய போதும், அவர் படகு மூலமே இந்தியா சென்றிருந்தமை தெரிய வந்ததைத் தொடர்ந்தே அவர் நாடு கடத்தப்பட தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளாக பெட்டியில் அடைக்கப்பட்டு கொழும்பு ஹோர்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையக் காணியில் வைக்கப்பட்டிருந்த லக்ஷ்மன் கதிர்காமரின் சிலையை அந்நிலையத்தில் வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சர்வதேசப் புகழ்பெற்ற முன்னாள் சர்வதேசப்புகழ் வெளிநாட்டமைச்சர்லக்ஷ்மன் கதிர்காமர் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டளவில் இந்தச் சிலை ரஷ்யாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
விசேட உலோகத்தினால் வடிவமைக்கப்பட்டு, ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சிலையின் எடை 15 மெட்ரிக் தொன் எனக் கூறப்படுகிறது.
அந்தச் சிலையை கொழும்பு 07, ஹோர்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் வைப்பதற்கு திட்டமிடப்பட்ட போதும், அமைச்சர் ஒருவரின் எதிர்ப்பினால் அதனை நிருவ முடியாமல் போயுள்ளது.
அதனால் அந்தச் சிலை மரப்பெட்டியில் உள்ளிடப்பட்டு, அந்நிலத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மரப்பெட்டி சேதமடைந்து உருக்குலைந்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்து, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பல்கலை தற்காலிகமாக மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தில் சில கட்டடங்களுக்கும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில மோட்டார் சைக்கிள்களுக்கும் சேதம் ஏற்பட்டதனையடுத்து கடந்த 31 ஆம் திகதி மதியத்துடன் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாகவும் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மீண்டும் அறிவிக்கப்படும் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதியினர் மாத்தறை கனத்தகொட பிரதேசத்தில் வைத்து நேற்று(01.08.2013 இரவு 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 18 ஆண்களும் 7 பெண்களும் 14 சிறுவர்களும் அடங்குவதுடன் இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த என பொலிஸார் தெரிவித்ததடன் இவர்கள் அனைவரும் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக செயற்படுத்த வேண்டும் எனவும் அது தமிழ் மக்களின் உரிமை எனவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) குறிப்பிடுகிறார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டமானது தமிழர்களின் உரிமை என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்த உரிமையைப் பெற்றுத் தாருங்கள் என்று அரசாங்கத்தில் இருந்து கொண்டு கேட்க முடியாது என்று யாருக்கும் சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த திருவிழா எதிர்வரும் வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன.
இதற்கமைவாக, இன்று(01.08.2013) வியாழக்கிழமை கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லல் நிகழ்வு நடைபெற்றது.
நல்லூரின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இம்முறையானது நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக நடைபெறுவது இந்த நிகழ்வு வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்பு பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் (ஒற்றைதிருக்கை வண்டில்) மூலம் எடுத்துச்செல்லப்படும்.
ஆரம்ப காலத்தில் கொடிசீலைக்கான காளாஞ்சியானது குதிரை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் கடந்த நூறு வருடங்களிற்கு மேலாக இந்த நடைமுறை மாற்றப்பட்டிருந்தது அதாவது நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை தொடர்ந்து இப்பாரம்பரியம் மறக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இவ்வருடம் முருகபெருமானின் திருவருள் கைகூடியதற்கமைவாக மாட்டு வண்டியில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச்செல்லப்பட்டு ஆலய பிரதம குருவினால் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

உலகத்தில் இலவசம் என்று எதுவும் இல்லை பாதுகாப்பு, ரகசியம் என்றும் எதுவுமில்லை. சமீபத்தில் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள் எட்வர்ட் ஸ்நோடன் என்பவரைப் பற்றி உலகில் உள்ள அனைத்து நாடுகளை உளவு பார்ப்பது மட்டுமல்லது தனி நபர் தகவல்களையும் திரட்டுகிறது அமெரிக்கா என்ற உண்மையை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியவர்தான் இந்த ஸ்நோடன் இவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டி தேடிவருகிறது அமெரிக்கா இவருக்கு அடைக்கலம் தரவேண்டாம் என்று உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது அமேரிக்கா.
கூகுள்,ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்கள் தாங்கள் சேகரித்த தகவல்களை அமெரிக்காவிற்கு அளித்து வருகிறதாம். அரசாங்கங்கள் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக என்று சொல்லி எங்களிடமிருந்து தகவல்கள் கோருகின்றன. ஆனால் அது முற்றிலும் உண்மையா என்பதை நாங்கள் கண்டறிய இயலாது என்று கூறுகிறது கூகுள்.
பல்வேறு தேடு பொறிகள் இருந்தாலும் கூகுள்தான் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. அவ்வப்போது புதிய தேடுபொறிகள் முளைப்பதும் சிறது சிறிது காலத்திற்குள் காணாமல் போவதும் சகஜமே! அப்படி புதிதாக உருவான தேடு பொறி “டக் டக் கோ” (DuckDuckGo)
இணையத்தில் யாருடைய தகவல்களை சேகரிக்கவோ, உளவு பார்க்கவோ மாட்டோம் என்ற முழக்கமிடுகிறது ‘டக்டக் கோ’. இதனாலேயே இது சற்று பிரபலம் அடைந்துள்ளது.
இதற்கும் மேலாக கூகிள். எவ்வாறு இணையப் பயனாளர்களின் விவரங்களை சேகரிக்கிறது, என்பதை தெளிவான பட விளக்கங்களோடு விவரிக்கிறது.. அதனால் எந்த விவரமும் சேகரிக்காத, விளம்பரங்கள் இல்லாத எங்கள் DuckDuckGo) தேடு பொறியை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறது
கூகுள் எப்படி தகவல் திரட்டுகிறது என்று பார்ப்போமா?
உதாரணத்திற்கு Google இல் herpes என்று டைப் செய்து தேடுவதாகக்
கொள்வோம்.
தேடுதலின்போது ஒரு லிங்கை கிளிக் செய்ய
உங்கள் தகவல்கள் அந்ததளத்திற்கு உங்கள் தேடுதல் வார்த்தையோடு உங்கள் கணினி மற்றும் பிரவுசர் விவரங்களை கீழ்க் கண்டவாறு அனுப்பி வைக்கிறது.
இவ்விவரங்கள் மூலம் உங்களை எளிதாக கண்டறிந்து விடுகிறது.
இது போன்ற சில தளங்கள் விளம்பரங்களை உடையதாக இருக்கின்றன, இவை விளம்பரம் செய்வதோடு உங்களைப் பற்றிய புரொஃபைலையும் தயாரிக்கின்றன
இவ்வாறு சேகரிக்கப் படும் விவரங்கள் விற்கப்பட்டுவிடுகின்றன சில சமயங்களில் தேடுவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடும் ரகசிய குறியீடுகளாக சில வார்த்தைகளை சமூக விரோதிகள் பயன் படுத்த அதை வேறு காரணத்திற்காக நாம் தேட சேமிக்கப் பட்ட இந்த தகவலால் நாம் விசாரணைக்கு உட்படுத்தப் படலாம்.
இது போன்று பல சிக்கல்கள் எழ வாய்ப்பு உண்டு, எனவே உங்கள் சொந்த தகவல்களை சேமிக்காத, யாருக்கும் விற்காத பாதுகாப்பான எங்கள் தேடுபொறியான DuckDuckGo வை பயன்படுத்துங்கள் என்று கூறுகிறது.
கூகுள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் டக்டக் கோ எந்த அளவு நம்பகத் தன்மை வாய்ந்தது என்பது போகப் போகத் தான் தெரியும் . உலகத்தில் எதுவும் இலவசமில்லை. சொல்லும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.குறிப்பாக பெண்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.

வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழில் விண்ணப்பித்த இரண்டு சிங்கள இனவாத அரசியல் கட்சிகளதும், ஒரு சுயட்சைக் குழவினதும் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டத்திலிருந்து 11 அரசியல் கட்சிகளும் 9 சுயட்சைக் குழுக்களும் தகுதி பெற்றுள்ளதாக யாழ்.தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளனார்.
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைபெறும் நிலையிலேயே இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 13 அரசியல் கட்சிகளும் 10 சுயட்சைக் குழுக்களும் தேர்தல் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தன.

கடந்த சில வாரங்களாக வட மாகாணத்தில் போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரித்துள்ளதுடன் வங்கி ஊழியர்களே போலி நாணயத் தாள்களை இனங்காண்பதில் சிரமப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, வடக்கில் போலி நாணயத்தாள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வங்கி ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் போலி நாணயத்தாள் அச்சிட்ட ஒருவர் யாழ்.மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பணம் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களும் போலி நாணயத்தாளை இனங்காண்பது தொடர்பான செயலமர்வு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியக் கிளையினால் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்தச் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.
இந்தச் செயலமர்வில் போலி நாணயத்தாளை இனங்காண்பது மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் விளக்கவுரைகள் இடம்பெறவுள்ளன.

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பலருடன் சென்ற பயணிகள் பஸ்ஸிற்குள் தொலைக்காட்சியில் ஆபாச படம் காண்பித்த சம்பவத்துடன் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பஸ் சாரதியும் நடத்துனரும் அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நாளை (02.08.2013) நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன் அறிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்களம் இன்று(01.08.2013) வியாழக்கிழமை நண்பகலுடன் வடக்கு மாகாணசபை மற்றும் கலைக்கப்பட்ட இரண்டு மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததையடுத்து இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் அறிவித்தார்.