மதத்திற்குள் ஒழிந்துகொண்டு வீரப் பாத்திரத்தை ஏற்றிருப்பதை விட்டு, இனவாதியாக இன்றி பைத்தியக்காரனாக இருப்பது மிகவும் சிறந்தது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலநோம்பு அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுகிறார்.தான் எந்தவொரு நிலையிலும் இனவாதியாக இருந்திருக்கவில்லை எனவும், யார் எதைச் சொன்னாலும் தான் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு மனிதாபிமானம் மிக்க ஒருவனாகவே இருந்துவருகின்றேன் என்று குறிப்பிடுகின்ற அமைச்சர், மதத்துக்குள் ஒழிந்துகொண்டு பலசேனாவை உருவாக்கிக்கொண்டு சிலர் நாட்டைத் தீப்பற்ற வைத்துள்ளார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஹாலிஎல ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்துவதற்காக இந்த பலசேனா என்ற அப்பன் பெயர் தெரியாத இயக்கம் முனைகிறது. அவர்கள் அவ்வாறு செய்யும் போது, நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் ஏனையோருக்காக குரல் எழுப்புகின்றோம். இவற்றைப் பொறுக்கவியலாத பலசேனா அமைப்பினர் டிலானுக்குப் பைத்தியம் என்கிறார்கள்.
இனவாதத் தீயை மூட்டி அதில் குளிர்காய்ந்து நாட்டை வந்த வழிக்கே எடுத்துச் செல்வதை விட பைத்தியமாக இருப்பது மேல். இனவாத, மதவாத வீரனாக இருக்க எனக்குத் தேவையில்லை. சென்ற சில மாதங்களுக்கு முன்னர் ஹலால் என்ற பிரச்சினையை வெளிக்கொணர்ந்தார்கள். அதன் விளைவு என்னாயிற்று. முஸ்லிம்கள் மேலும் பலமடைந்தார்கள். முஸ்லிம்கள் என்றும் சிங்களவர்களுடன் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். ஹாலிஎலவை யாராலும் ஒருபோதும் மதவாதத்தினால் அழித்துவிட முடியாது. நான் அதற்கு இடமளிக்கவும் மாட்டேன். அவ்வாறு செய்வதற்கு பொதுபல சேனா வந்தால் அன்றைக்கு ஹாலிஎல மக்கள் பற்றி அறிந்துகொள்ளவியலும்.
ஆயினும், நாங்கள் நாட்டை அபாயத்தின்பால் கொண்டு செல்வதற்கு இடமளிக்க மாட்டோம். கடைசியில் ஒன்றும் இல்லாமல் போவதே உறுதி. பரிசுத்தமான பௌத்த சமயத்திற்குக் களங்கம் ஏற்படுத்த முயலும் இந்த அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தான் மீண்டும் நமது தாய்நாட்டை யுத்தத்தின்பால் கொண்டு செல்ல முயல்கிறார்கள். புத்தபிரான் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை. புத்தபிரானின் காலத்தில் வாழ்ந்த எங்கள் மதகுருமார்கள் புத்திசாதுரியமானவர்கள். ஒருபோதும் தங்களது சீடர்களை தங்களின் சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தவில்லை. புத்தபிரான் எல்லா மதங்களுக்கும் மரியாதை செய்தார். அவற்றைப் போற்றினார். யாருக்கும் துன்புறுத்தல் செய்யவில்லை. இன்று பலசேனா எல்லோருக்கும் உபத்திரவம் செய்கிறது. இறைச்சிக் கடைக்குப் பக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்ற வாகனத்தை எரிக்கிறார்கள். அந்தக் கடைகளை உடைக்கிறார்கள். பிறமதத்தவர்களுக்கு மதபோதனை செய்ய இடமளிப்பதில்லை. இவர்கள் இதன்மூலம் பெளத்த சமயத்திற்கு இழுக்கினை ஏற்படுத்துகிறார்கள். அகிம்சை வழியிலான பௌத்த மதத்தை இன்றுள்ள பலசேனா திரிபுபடுத்தியுள்ளது.
கருணாரத்ன அபேசேக்கர எழுதி ஆர்.ஏ. ரொக்சாமி இசையமைத்த புத்தங் ஸரணங் கஜ்ஜாமி பாடலைப் பாடுபவர் யார்? மொஹிதீன் பேக். எங்கள் தேசிய பாடகர். பாருங்கள் பௌத்த – இந்து – முஸ்லிம் ஒருமைப்பாட்டினால் பாடல் எழுந்துள்ள முறைமையை. அவைதான் உண்மையான பொதுபல சேனா. அவர்கள் தேசத்திற்காகச் சேவை செய்தார்கள். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக எழுந்து நின்றபோது எங்களுக்கு உதவியாக வந்தவர்கள் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளே. எங்களுக்கு அவற்றை மறக்கவியலாது. இலங்கை அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்வதும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற எங்கள் சகோதர சகோதரிகளினாலேயே.
அவ்வாறாயின் ஏன் முஸ்லிம் எதிர்ப்புச் சக்தியை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்குத் துடியாய்த் துடிக்கிறார்கள்? இதனைத்தான் வஞ்சனை என்று சொல்கிறோம். பௌத்த சமயத்தை அடிப்படைவாதமாகப் பயன்படுத்தி தேசிய வீரர்களாகத் துடிக்காமல் நாங்கள் இலங்கையர் என்று நினைத்துத் செயலாற்றுமாறு அந்த இனவாத பலசேனாவைக் கேட்டுக் கொள்கிறேன்.
முஸ்லிம் நாடுகளிலிருந்து எங்களுக்குக் கிடைக்கின்ற எண்ணெய்யிலிருந்தே ஈனியா பீடித்துள்ள பலசேனாவினரும் சொகுசு வாகனங்களில் செல்கிறார்கள். அந்த எண்ணெய் ஹலால்..! அதைப் பார்த்தார்களா? மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஏற்றாமல் நடந்து செல்லுங்கள்... அதற்காகத்தான் நாங்கள் சொல்கிறோம்... ஒருநாளும் இந்த சேனாவினால் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள். கடைசியில் நடப்பது இந்த பலசேனாக்கள் உல்லாசம் அனுபவிப்பது மட்டுமே ஆகும். அவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களை மூளைச் சலவை செய்கிறார்கள்’ என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த 23 வருடங்களாக படையினர் வசமிருந்த யாழ்ப்பாணம் குருநகர் வடக்கு றெக்கமளேஷன் வீதி என அழைக்கப்பட்ட புதிய கடற்கரை வீதி நேற்று(28.07.2013) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் காரணமாக குறித்த வீதியை மூடிபடைத்தரப்பினர் முகாமிட்டதை தொடர்ந்து குறித்த வீதியூடாக மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாதநிலை இருந்தநிலையில் குறித்த வீதியை தமது பாவனைக்காக திறந்து விடுமாறு அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோருடன் கலந்துரையாடியதன் பயனாக குறித்த வீதி 23 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து இவ்வீதியூடாக இன்று அல்லது நாளை முதல் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் வீதியிலுள்ள தடைகளை அகற்று மாறு அமைச்சர் படைத்தரப்பினரிடம் கேட்டுக்கொண்டார்.

டோக்கியோவுக்கு அண்மையிலுள்ள சைதாமா நகர ரயில் நிலையத்தில் சுமார் 30,000 கிலோகிராம் நிறையுடைய ரயிலை பயணிகள் இணைந்து நகர்த்தி, அதன்கீழ் சிக்கியிருந்த பெண்ணொருவரை உயிருடன் மீட்ட சம்பவமொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.
காலை சன நெரிசலில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயிலிலிருந்து 30 வயதுப்பெண்ணொருவர் தரிப்பு மேடைக்கும் ரயிலுக்குமிடையில் தவறி வீழ்ந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரயில் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பில் மக்களுக்கு அறிவித்து உதவும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கிருந்த சுமார் 40 பயணிகள் மற்றும் 12 ரயில் நிலைய அதிகாரிகள் இணைந்து 29030 கி.கி நிறையுடைய ரயிலை பக்கவாட்டில் தள்ளி அதன் கீழ் சிக்கியிருந்த பெண்ணை உயிருடன் மீட்டுள்ளனர்.
பெயர் வெளியிடப்படாத அப்பெண் தரிப்பு மேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான 8 அங்குலம் அளவிலான மிகச் சிறிய இடத்திலேயே சிக்கித் தவித்த பெண்மணியை சமயோசிதமாக செயற்பட்ட அதிகாரிகள் பயணிகளின் உதவியுடன் 8 நிமிடங்களில் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவத்தினால் ஜப்பான் ரயில் சேவை 8 நிமிடங்களால் தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் ஒருபோதும் ஈடுபடவுமில்லை இனிமேலும் ஈடுபடாதுமட்டுமன்றி வடக்கில் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கவேண்டிய தேவையும் இல்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே இராணுவம்தான் இதற்கமைய அந்தத் தேர்தல் நடவடிக்கைகள் சிவில் அதிகாரிகளாலும் சட்ட நடவடிக்கைகள் பொலிஸாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் எனவே இங்கு இராணுவத்தின் தலையீடு ஒருபோதும் இல்லை. இவ்வாறான நிலையிலும் தமிழ்க் கூட்டமைப்பு எம் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பெரும் வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்குத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனத்திலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டி பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டிருந்த சம்பந்தன், இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தேர்தல் நடவடிக்கையில் இராணுவத்தின் தலையீடு தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கலாமே. ஆனால், பொலிஸில் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.
வடக்கில் சட்ட அமுலாக்கம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் பொலிஸார்தான் ஈடுபட்டு வருகின்றனர் எனக்குறிப்பிட்ட அவர் வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் மக்களுக்கான சேவையையும் பிரிவினைவாதிகள் உள்ளிட்ட வேறு குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபடுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் , இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எமக்குப் பெரும் வேதனையளிக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளராகவிருந்த வேலாயுதம் தயாநிதி என்ற தயா மாஸ்டருக்கு வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு பெயர் முன்மொழியப்படவில்லை எனத் தெரியவருகின்றது.
அதற்கேற்ப வட மாகாண சபைக்காக போட்டியிடக்கூடியவர்களின் பெயர்ப்பட்டியலில் இவரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக செய்திகள் கூறுகின்றன.
தயா மாஸ்டர் தவிர, எம்.எம். சிராஸ் என்பவரின் பெயர் முன்மொழிவு கிடைக்கப்பெறாதிருப்பதோடு, அதற்காக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரின் ஆதரவாளர்கள் சிலர் கூட இன்று காலை யாழ். கச்சேரியின் முன்பக்கமாக தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்னர்.
எவ்வாறாயினும், வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயா மாஸ்டர் ஊடகங்கள் வாயிலா குறிப்பிட்டிருந்தார்.
தயா மாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமைக்காக சென்ற ஜூன் மாதம் 22 ஆம் திகதி விண்ணப்பமொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.
வட மாகாண சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் முன்னணியினர் பெயர் முன்மொழிவுக் குழுவினர் கொழும்பில் அன்றைய தினம் ஒன்றுகூடியபோது, யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தயா மாஸ்டர் உள்ளிட்ட 23 பேர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதற்கேற்ப தனக்கு ஸ்ரீ.சு.க உறுப்புரிமை கிடைத்ததாகவும், வட மாகாணசபையில் போட்டியிடுவதற்காக தனக்கு கிடைத்திருப்பதாகவும் தயா மாஸ்டர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்குக் கரத்துத் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், தயா மாஸ்டரின் பெயர் கிடைக்கவில்லை எனவு்ம், அதுபற்றி அவர் ஸ்ரீசுத கட்சியின் மேலிடத்தினருக்கு அறிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் கூட்டணி கலந்துரையாடுகின்றது என்றும் கூறியுள்ளனர்.
ஆங்கில ஆசிரியராக தொழில் வாழ்க்கையில் நுழைந்த தயாமாஸ்டர் 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எல்.ரீ.ரீஈ அமைப்பினருடன் சேர்ந்து யுத்தத்தின் இறுக்கட்டத்தில் (2009) இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

பெண்களை பொறுத்த வரை கர்ப்பம் தரித்தல் என்பது ஒரு பெரிய வரமாகும் ஆனால் கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும் அதில் நீர் கோர்த்தல், முடி கொட்டுதல், உடல் சோர்வு போன்றவற்றுள் உடல் வீக்கமும் ஒன்றாகும்.
பொதுவாக கர்ப்பம் தரித்தல் மற்றும் உடலில் வீக்கம் ஒருங்கே உள்ளது. கர்ப்பம் தரிக்கும் போது வயிற்றில் மட்டும் வீக்கம் உண்டாகாது உடல் முழுவதுமே வீக்கம் உண்டாகும் இவ்வாறு கர்ப்பத்தின் போது வீக்கம் ஏற்பட இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை நீர் கோர்த்தல் மற்றும் அதிக இரத்த அடர்த்தியுமாகும். ஆகவே கர்ப்பத்தின் போது வீக்கத்தை சரிசெய்ய தமிழ் போல்டு ஸ்கை சில பயனுள்ள வழிகளை கொடுத்துள்ளது. அதைப் படித்து, பின்பற்றி வந்தால், நிச்சயம் உடலில் ஆங்காங்கு ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்.
அடிக்கடி நகர்தல்: கர்ப்ப காலத்தில் நகராமல் ஒரே இடத்திலேயே சோம்பலாக இருந்தால், உடலில் வீக்கம் உண்டாகும். ஏனெனில் சோம்பலுடன் உட்காரும் போது, உடலில் நீர் கோர்க்க செய்து வீக்கம் உண்டாக தூண்டுகிறது. ஆகவே அவ்வப்போது நிதானமான நடையை மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி: கர்ப்பிணிகள், உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுப்பதற்கு, தினமும் மருத்துவர் பரிந்துரைத்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
நீரில் மூழ்கி இருத்தல்: சிறிது நேரம் நீரில் மூழ்கி இருத்தல், மகிழ்ச்சிகரமாய் உணர வைக்கும். ஆகவே கர்ப்பக் காலத்தில் வீக்கத்தை குணப்படுத்த நீச்சல் பயிற்சி செய்யலாம். அது செய்ய முடியவில்லையெனில், உடலை நீரில் மூழ்கி இருக்க செய்யலாம். ஆனால் நீர் அதிக சூடாக இருக்கக் கூடாது. ஏனெனில் சுடுநீர் கர்ப்பிணிகளின் உடலுக்கு அவ்வளவு உகந்தது அல்ல.
கால்களை நீட்டி வைத்தல்: அலுவலகம் போன்ற பணி இடங்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால், அவை கால்களில் வீக்கத்தை உண்டாக்கும். ஆகவே இரத்த ஓட்டமானது சீராக இருக்குமாறு, உடலை நேராக வைத்து அமர வேண்டும். அதற்கு அலுவலகங்களில் மேசைக்கு கீழே ஒரு முக்காலி வைத்து, அதன் மேல் கால் வைத்து கால் மடங்காதவாறு அமரவும்.
இடப்புறமாக படுக்கவும்: கர்ப்பிணிகள் இடது புறமாக படுப்பது, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும் எனவே படுக்கும் போது இடப்புறமாக படுக்கவும்.
உப்பு உட்கொள்வதை குறைக்கவும்: கர்ப்பக் காலத்தில் உடலில் அதிக நீர் தங்கும். அதையே வீக்கம் என்று கூறுவோம். அனைவரும் அறிந்தது போல, உப்பு உடலில் அதிக நீரை தேக்கி வைக்கும். ஆகவே உப்பு உட்கொள்வதை குறைக்க வேண்டும்.

நடைபெறவுள்ள மாகாணசபைக்கான வேட்பு மனுக்களை நாளை (29.07.2013) தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான வவுனியா மாவட்ட வேட்பாளர் தெரிவில் பதவிக்காக கட்சிக்குள் குத்து வெட்டு இடம்பெறுவதாக அறிய முடிகிறது.
வவுனியா மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு இரு வேட்பாளர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்ததநிலையில் அதற்காக வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் ஒரு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முற்றைய வேட்பாளரை தெரிவு செய்வதற்காக தேவராஜா, சேனாதிராஜா, முகுந்தரதன், கோபிநாத், சுதாகரன் ஆகியோரில் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி தொடர்கிறது.
இந் நிலையில் வவுனியா நகரசபை உப தலைவர் முகுந்தரதனை நியமிக்க வேண்டாம் என வவுனியா மாவட்ட புத்திஜீவிகளும் சிரேஸ்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் கோரிய நிலையில், அதனை பொருட்படுத்தாத தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன், மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் முகுந்தரதனை வேட்பாளராக நியமிக்க முனைந்து வருவதனால், தாம் பழைய உறுப்பினராக இருந்தும் தமது சொல்லுக்கு மதிப்பளியாது நகரசபையில் இடமபெற்ற மோசடிகளுக்கும் குழப்பங்களுக்கும் உதவிய முகுந்தரதனை எவ்வாறு வேட்பாளராக நியமிக்க முடியும் என அதிருப்தியடைந்து பல சிரேஸ்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் அவர்களும் ரதனின் தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ரதன் நியமிக்கப்படும் பட்சத்தில் அவரும் வெளியேறலாம் என தெரிவிக்கப்படுவதுடன் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் நியமனத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளதுடன் சுயேட்சை குழு ஒன்றும் போட்டியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் தராது விடின் தான் இறக்கப் போவதாக வவுனியா நகரசபை உபதலைவர் முகுந்தரதன் தனது கட்சிக்கு தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.

புலிகளின் ஊடகப் பேச்சாளராகச் செயற்பட் தயாமாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்து வந்த நிலையில் நேற்று(27.07.2013) சுதந்திரக்கட்சியால் வெளியிடப்பட்ட வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடுபவர்களது பொயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்காததால் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு ஆலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இடம் வழங்காததை அடுத்து வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வெளியேறுவதாக இருந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்களது வேண்டுதலை அடுத்து சுயேட்சையாக களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் இரண்டொரு நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக வட மாகாணசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டு வந்த எம்.சிராஸ் அக்கட்சியினால் வெளியிடப்பட்ட வேட்பாளர் விபரத்தில் உள்ளடக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை அதில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி சுமார் 1000இற்க்கும் மேற்பட்ட மக்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியை வழிமறித்து இன்று(28.07.2013) காலை 11 மணியளவில் ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸிற்கு வேட்பாளர் பட்டியிலில் உள்ளடக்கப்பட்டாமைக்கு எதிராகவே இந்த போராட்டம் இடம்பெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே’ ‘வேண்டும் வேண்டும் எங்கள் அண்ணன் வேண்டும்’ ‘பனை மரத்தில் வெளவலா, எங்களுக்கே சவாலா’ ‘இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா’ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கடமையில் இருந்த பொலிஸாரோடு முரண்பட்டதை காண முடிந்தது.

இலங்கையில் 2012 ஆம் ஆண்டிலும் ஊடகவியலாளர்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன் ஊடக சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளதாக ப்ரீடம் ஹவுஸ் என்னும் உலக ஊடக சுதந்திர அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவான தேசிய செயற்திட்டத்தில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது குறித்த பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக் கப்பட்ட போதிலும், உண்மையில் அந்தப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்ப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், வேறு சட்டங்களின் மூலம் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. 1979 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக பல்வேறு கெடுபிடிகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பால்மா வகைகள் பலவற்றில் டிசிடி (DCD my;y J Dicyandiamide) என்ற ரசாயன பொருள் கலந்திருப்பதாக தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பால்மா வகைகளில் டிசிடி இரசாயனம் கலந் திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த சர்ச்சைகளின்போது, சுகாதார அமைச்சும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையும் அது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தன.
இந்த பால்மா வகைகளில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் இல்லை என்று சுகாதார அமைச்சும் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சு, தனியான ஆய்வொன்றை நடத்தி, வெளிநாட்டு பால்மா வகைகளில் டிசிடி கலந்திருப்பதாக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.
DCD என்பது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற அல்லது வைக்கோலுக்கு பயன்படுத்துகின்ற ஒருவகை இரசாயனப் பொருள். நாங்கள் ஆய்வுக்குட்படுத்திய வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எல்லா பால்மா வகைகளிலும் இந்த DCD இராசயனம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சின் ஊடகச் செயலாளர் தனுஷ்க ராம நாயக்க தெரிவித்தார்.
இலங்கை நுகர்வோர் அதிகார சபைக்கும் சுகாதார அமைச்சுக்கும் சுங்கத்துறைக்கும் தொழிநுட்ப ஆய்வுத் துறை அமைச்சு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பால் மாவகைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்வதை அனுமதிப்பதா அல்லது இலங்கையில் தடை செய்வதா என்ற தீர்மானத்தை நுகர்வோர் அதிகாரசபையும் சுகாதார அமைச்சும் எடுத்தால் அதன்படி நாட்டின் சுங்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று தனுஷ்க ராமநாயக்க கூறினார்.

நம் பிரதேசத்தில் இராணுவ நிர்வாகத்துக்கான நியாயங்களையே தொடர்ந்து வழங்காமல், சிவில் நிர்வாகத்தைக் கையேற்றுக்கொண்டு, தென்னிலங்கைத்தரப்பின் சந்தேகங்களைப் போக்குவதன் வாயிலாக மெல்ல மெல்ல வேண்டிய அதிகாரங்களையும் பெற்று வளம்பெருகும் நம் கனவுப் பிரதேசத்தைக் கட்டியெழுப்பக்கூடிய காலம் வடக்கிற்கு வந்திருக்கிறது.
மனித வரலாற்றில், மிகப் பழமையான நிர்வாகம் இராணுவ நிர்வாகம்தான். நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, உலகின் மிகப் பெரும் நிறுவனங்கள், அரசுகளின் படைகளே. நாட்டிற்காக உயிரை விடவும், வெற்றி பெற்றால், கொஞ்சம் கொள்ளையடித்துக் கொள்ளவும் அனுமதி பெற்ற தனி நபர்கள் அடங்கிய மாபெரும் குழு. பெரும்பாலும், உடல் பலத்தாலும், அரச பக்தி அல்லது தேச பக்தியாலும் நிர்வகிக்கப்பட்டு வந்த ஒன்று.
அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பல நூல்களும், போர்த் தந்திரங்கள், நாட்டை நிர்வகிப்பது போன்றவையே. Sun Tzu வின் போர்க்கலை, வள்ளுவரின் திருக்குறள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், மாக்கியாவில்லியின் இளவரசன், அடம் ஸ்மித்தின் wealth of Nations போன்றவை படையினர் மூலம் நாட்டை நிர்வகிப்பது பற்றியே பேசியிருக்கின்றன. முதலாம் உலகப் போர் காலத்தில், மேலாண்மை என்னும் கோட்பாடு மெல்ல மெல்ல வலுப்பெற்றது. ஒவ்வொரு வேலையையும் சிறு சிறு பாகங்களாகப் பிரித்து, அதற்குத் தேவையான நேரம், உழைப்பு முதலியவை கணிக்கப்பட்டு, வேலையை மேலாண்மை செய்யும் ஒரு நோக்கு தொடங்கியது. இவற்றை சாதாரண பொதுமக்களிலிருந்து அவர்களால் தெரிவு செய்யப்பட்டு வருவோரே செய்யும் நிலை படிப்படியாக உருவாகியது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்று வள்ளுவர் ஒரு நிர்வாகியின் திறனை வரையறுத்தார். சிறந்த தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய மக்களின் பொறுப்பும் அதுவே. நிர்வாகிகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். தன் எல்லைக்குள்ளேயே சிந்தித்து அதற்குள் தம்மைத் தலைவர்களாக தக்கவைத்துக் கொள்பவர் ஒரு வகை. இவர்கள் மற்றவர்களையும் கணக்கிலெடுத்து அவர்களது தேவைகளையும் புரிந்துகொண்டு தடைகளை அகற்றி நிரந்தர இலக்கு நோக்கிச் செல்ல முடியாதவர்கள்.
இன்னொருவகை, தன் பிரிவு தாண்டி, தன் நிறுவனத்தின் இலக்கைத் தாண்டி, நிறுவனம் இயங்கும் சூழலையும் வெளிசக்திகளையும் அறிந்து கொண்டு, நிறுவனத்தின்; நீண்டதூர இலக்கை நோக்கி, அவற்றை வழி நடத்தும் திறன் கொண்ட நிர்வாகிகள். இவர்கள்தான் தலைவர்கள்! தம் தரப்பை மட்டுமல்லாது, எதிர்த்தரப்புகளின் எண்ணங்களையும் அவர்களுக்கும் இருக்கக் கூடிய சிக்கல்களையும் யதார்த்தத்தையும் ஒரு மனமுதிர்வுடன் எதிர்கொண்டு தாம் சாந்தோருக்கும் புறச் சூழலுக்கும் வெற்றிதேடித் தருபவர்களே மிகப் பெரும் தலைவர்கள்.
இப்போது தமிழ்மக்களுக்கு தங்களது தலைமை எதுவென்பதைத் தீர்மானித்துத் தேர்ந்துகொள்ள வேண்டிய காலம் மற்றுமொருமுறை வந்திருக்கிறது. இதுவரைகாலம்போல எதிர்ப்பு அரசியலின் மூலம், மக்களுக்கு எதையுமே சாதித்துத் தராமல் தங்கள் தலைமையை மட்டுமே காப்பாற்றி வருபவர்களையா அல்லது பகைமறப்பையும் இணக்கத்தையும் முயன்று இந்த நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் உண்டாக்குவதன் மூலம் செழிப்பான எதிர்காலத்தைக் கொண்டுவரக் கூடியவர்களையா தலைவர்களாகத் தெரிவுசெய்து கொள்ளப்போகிறோம்? இந்த முடிவிலேயே நம் மக்களின் தொடர் அவலங்களை மாற்றும் விவேகம் தங்கியிருக்கிறது.

தலையில்லாத உடம்பை மட்டும் கொண்டவனாக என்னை முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேக்கர கடந்த காலத்தில் என்னை விமர்சித்ததற்காக நான் அவருடன் கோபப்படமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குறிப்பிடுகிறார்.
துமிந்தவுக்கு தலையில்லை உடம்பு மட்டும்தான் என்று என்னை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த தயாசிரி ஜயசேக்கர ஆளும் கட்சியியுடன் இணைந்து கொண்டமை பற்றிக் கருத்துரைக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
'பாராளுமன்றத்தினுள் அவ்வாறான செய்திகளைச் சொல்லி விமர்சித்தாலும் எங்கள் மத்தியில் தனிப்பட்ட கோபதாபங்கள் இல்லவே இல்லை.
அதேபோல மிகத் திறமையான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு வந்திருப்பது குறித்து எனக்கு அளவிட முடியாத சந்தோசமாக இருக்கின்றது.
தயாசிரி அரசாங்கத்திற்கு வந்திருக்கின்றார் என்பது வட மேல் மாகாணத்தை நாங்கள் வெற்றி கொள்வோம் என்பது. அதுமட்டுமல்ல.. நாங்கள் மத்திய மாகாணத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவோம்'
(கேஎப்)

இந்தியாவில் வசிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மனைவியை இந்தியாவிலிருந்து விரட்டிவிடுவதாகவும், அவ்வாறு செய்யாமலிருக்க வேண்டுமென்றால் சீ.வீ. விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அதிகாரம் மிக்க இந்தியர்கள் பலர் மாவை சேனாதிராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.வட மாகாண சபையின் முதலமைச்சரின் பெயரை முன்மொழிவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் குறிபிடப்படுவதுடன், அமெரிக்கத் தூதுவராலயமும் விக்னேஷ்வரனை முதலமைச்சர் அபேட்சகராக்குவதற்காக பாரிய முன்னெடுப்புக்களைச் செய்துவருகின்றது என்பதும் தெரியவருகின்றது. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் அமெரிக்கத் தூதுவராலயம் பலமுறை முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் அறியக்கிடக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையை இரண்டாகப் பிரித்து, இந்தியாவையும் இரண்டாகப் பிரிக்கின்ற சீர்திருத்த யுத்தத்திற்காக மிகவும் பொருத்தமானவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான விக்னேஷ்வரனே என்பது அமெரிக்காவின் கருதுகோளாக இருக்கின்றது.
எவ்வாறாயினும், பல கட்சிகளுடன் ஒன்றிணைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை விருப்பாக இருப்பது என்னவென்றால், மாவை சேனாதிராவை வட மாகாண முதலமைச்சராக்க வேண்டுமென்பதே. சேனாதிராஜாவும் இதற்கு விருப்புத் தெரிவித்து ஆயத்த நிலையில் இருக்கின்ற வேளை, இந்தியாவின் ரோ இரகசிய சேவை தலையிட்டு, இந்தியாவில் வசிக்கின்ற அவரின் மனைவியை இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிடுவதாக அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இறுதியில் பெரும்பான்மையினரின் விருப்புத் தன்பக்கம் இருக்கின்றபோதும் ரோவின் தலையீட்டினால் தன் மனைவி மீது இருக்கின்ற பாசத்தினால் மாவை சேனாதிராஜா தனது குறிக்கோளை கைவிட்டுவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
(கேஎப்)
மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் நடத்தப்பட்ட செயலமர்வின்போது ஏற்பட்ட கைகலப்பினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணிப் பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செலமர்வொன்று தேசிய சமாதான பேரவையினால் நடத்தப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் , சிவில் சமூகத்தினர், மீள்குடியேறிய பகுதியிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
திடீரென அந்தச் செயலமர்விற்கு வருகை தந்த மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டிய சமரத்ன தேரர் தானும் இந்த செயலமர்வில் உரையாற்றவேண்டுமென கேட்டுள்ளார். அவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அந்த செயலமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இடமளித்துள்ளனர்.
அவரது உரை செயலமர்வின் தொனிப்பொருளுக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கின்றமை குறித்து ஏற்பாட்டாளர்கள் விகாராதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதே அவர் ஏற்பாட்டார்களை தாக்கியதாகவும், இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை கேள்வியுற்று அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், இருதரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.
அத்துடன், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோரும் அவ்விடத்திற்கு வருகைதந்து நிலைமையை கேட்டறிந்துக்கொண்டுள்ளனர்.
தந்தையினால் தீயினால் சுடப்பட்ட வயது ஒன்றரை மட்டுமே ஆன சின்னஞ் சிறுமி காலஞ் சென்றுள்ளாள்.பகவத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையொருவரினால் தனது மகள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு, சுடப்பட்டதனால் கண்டி பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயதுச் சிறுமி இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தந்தையினால் சென்ற 17 ஆம் திகதி பிற்பகல் தனது மகள் துன்புறுத்தப்பட்டு கை கால்கள் சுட்டெரிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை பொகவத்தலாவ வைத்தியசாலைக்கு அநுமதிக்கப்பட்டதன் பின்னர், கண்டி பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகையில் 10 நாட்களின் பின்னர் இறந்துள்ளது.
சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் இம்மாதம் 30 ஆம் திகதி வரை சிறைவைக்கப்பட்டுள்ளார்.
(கேஎப்)
ரூபா 25 கோடி பணத்திற்கு அடிமையாகியே அரசாங்கத்துடன் தயாசிரி இணைந்து கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையில், தயாசிரி ஜயசேக்கர, 'வட்டிக்காரனின் மகனொருவனுக்கு பணம் பெரிதானதற்கு எனக்குப் பணம் பெரிதல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹெட்டிபொல நகரத்தில் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
'தயாசிரி 25 கோடி ரூபாவுக்காகவே ஆளுங் கட்சியினருடன் இணைந்துகொண்டார் என்று இப்பொழுது கதைக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து யாரேனும் ஒருவர் விலகிவிட்டால் பொதுவாக வரும் குற்றச்சாட்டு அது. பணத்திற்காக அடிமைப்படுபவனல்லன் தயாசிரி ஜயசேக்கர. அதனால் அந்த உடைந்த கதையைச் சொன்ன பா.உ. ஹரீத் பிரனாந்துவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அவ்வாறு மூன்றாம் வகுப்பு அரசியலில் விழுந்தமையை இட்டு நான் வெட்கப்படுகிறேன். வட்டிக்காரனொருவனின் மகனுக்கு பணம் பெரிதாக இருக்கலாம். ஆனால் எனக்கு பணம் பெரிதாகத் தெரிவதில்லை.
இன்னும் கதைக்க வந்தால் அந்த வரலாற்றை என்னிடம் சரியாகவே கேட்டுக்கொள்வார். இந்த தலைவரின் நாறக்கூடிய ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சென்றதன் வெளிப்பாடு அது. அதனைத் தெரிந்துகொள்ளவியலாமல் அந்தத் தலைவரின் நாறும் ஒப்பந்தங்களைச் செயற்படுத்துவதாயின் அவர்களும் அந்த குப்பையிலேயே விழுந்துவிடுவார்கள்'
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரசீக வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஈரானிய கடற்படையினரால் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கடல் வாழ் உயிரினத்தின் படங்கள் ஈரானிய இணையத்தளமொன்றில் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியாகியதன்பின்னரே இது என்ன உயிரினமாக இருக்குமென விவாதம் தொடங்கியதுடன் பலர் இது ஒரு வகை திமிங்கிலமே எனத் தெரிவித்துள்ளதுடன் ஆராய்ச்சியாளர்களும் இதனையே தெரிவிப்பதுடன் இது திமிங்கிலத்தின் எப்பிரிவைச் சார்ந்தது என்பதை உறுதியாகக் கூற முடியாமல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலில் இத்தகைய மர்ம விலங்குகள் கண்டுபிடிக்கப்படுவதும், கரையொதுங்குவது இது முதன் முறையல்ல எனக்குறிப்பிட்ட ஆராட்சியாளர்கள் இதற்கு முன்பும் நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கரையொதுங்கியதை நினைவு கூறினர்.
அழுகிய நிலையில் உள்ள குறித்த உயினமானது 30 அடி நீளமானதென தெரிவிக்கப்பட்டது. இதேபோல் சீனாவின் குவாண்டொங் கடற்கரைப் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு இராட்சத உயிரினமொன்று கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திறக்கு உட்படுத்தியமை தெடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பதிவு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஆசிரியரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பாடசாலையொன்றின் ஆசிரியர் கடந்த மே, யூன் மாதம் 13, 14 வயதுடைய சிறுமிகளுடன் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறிப் பதிவுசெய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் கைதுசெயயப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள 17 பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் சம்பந்தமான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரத்தியேகமாக பொலிஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என நேற்று(26.07.2013) நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்த பிரிவுகளில் எந்தநேரத்திலும் முறைப்பாடுகளைச் செய்யலாம் எனக்குறிப்பிடட அவர் இதுதவிர யாழ். செயலகத்தில் விசேடமாக தேர்தல்கால பொலிஸ் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சிகள் முறையீடு செய்யவென தனித்தனி பொலிஸ் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதில்லை எனக்குறிப்பிட்டார்.
தற்போது வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு யாழ். செயலகத்தில் இடம்பெறுவதால் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கட்சிகளின் கூட்டங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பு கோரப்படும் பட்சத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.