தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா போயிருக்கிறது. எதற்காக என்று யாருக்காவது தெரியுமா? இங்குள்ள தமிழ் மக்கள்தான் அவர்களைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருக் கிறார்கள். இந்த மக்களின் பிரதிநிதிகளாகத்தான் கூட்டமைப்பினர் ஜெனீவா சென்றிருக்கிறார்கள் என்றால், அங்கு போய்ச் சாதித்துவிட்டு வரப்போவது என்ன என்று, போகும் முன்னாவது வாக்குப் போட்ட மக்களுக்குச் சொல்லியிருக்க வேண்டுமல்லவா?இங்கு அரசை எதிர்த்துச் சவால் விடுவதும் உணர்ச்சிகர வசனங்கள் பேசுவதற்கும் மேலதிகமாக கூட்டமைப்பினர் செய்யும் அரசியல், வருடா வருடம் வரும் இந்த சர்வதேச மாநாடுகளில் எதையோ வெட்டிவிழுத்தி விடுவதாக மக்களுக்குக் கொடுக்கும் நம்பிக்கைதானே? அங்கு போய்ச் செய்யப்போகும் அந்தக் காரியங்களையும் ஏன் அத்தனை இரகசியமாக வைத்திருக்கிறார்கள், யாருக்காவது தெரியுமா? அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரப் போவதாகச் சொல்கிறது, இந்தியா ஆதரிக்கப் போவதாகச் சொல்லப்படுகிறது, இங்கிலாந்து கனடா போன்றவையும் இலங்கையைக் கண்டிக்கின்றன.
அதற்கெல்லாம் அவர்களிடமுள்ள நோக்கம் என்ன, இலங்கையிடம் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதெல்லாம் எல்லோருக்கும் புரிகிறது. அவர்கள் தங்கள் தேவைகளுக்காக மனித உரிமை மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சரி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சாதிக்கப் போவது என்ன? ஜெனீவா மாநாடு முடிந்தவுடன், அங்கிருந்து தீர்வுக்கான உத்தரவாதம் எதையேனும் கொண்டுவரப் போகிறார்களா? அல்லது இவர்களது நிபந்தனைகளுக்கு இலங்கை அரசைச் சம்மதிக்க வைத்து பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான நிலைமையை உருவாக்கிக்கொண்டு வருவார்களா? என்ன தீர்வுக்கு இலங்கை அரசை சம்மதிக்க வைக்க வேண்டுமென்று சர்வதேச நாடுகளின் அழுத்தத்தைக் கோரப் போயிருக்கிறார்கள், யாராவது அறிவீர்களா?
தமிழர்களின் தாயகத்தை மீட்கவும், சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கவும், வடக்கு கிழக்கிலிருந்து படையினரை வெளியேற்றவும், நிலம் பறிபோவதற்கு ஆத்திரப்படவும், தொடர்ந்து மக்களது ஆத்திரத்தை தூண்டிக் கொண்டேயிருக்கவும் உணர்ச்சிகரமான கோஷங்களை எடுத்து வீசியபடி எப்போதும் தயாராயிருக்கிறார்கள், சரி. இதற்கெல்லாம் இங்கே செய்யப்பட வேண்டியது என்ன? அதை எங்காவது சொல்கிறார்களா? அரசாங்கம் தீர்வை வைக்காமல் ஏமாற்றியபடி மேற்குறித்த எல்லாவற்றையும் செய்து எங்களைக் கோபப்படுத்தியபடி இருக்கிறது என்பதா தமிழ்மக்களுக்காக இவர்கள் வைக்கும் அரசியல் கோரிக்கை? சண்டை முடிந்து நாலு வருசமாக இதையே சர்வதேச நாடுகளிடம் போய்ச் சொல்லிக் கொண்டிருந்தால், அவர்களும் தான் என்ன செய்வார்கள்? வாத்தியார் வாத்தியார் பிரம்பை எடுத்து இந்த அரசுக்கு நாலு அடி போடுங்கோ என்றா இப்போதும் சர்வதேசத்திடம் கோரிக்கை வைக்கப் போயிருக்கிறார்கள்?
உங்களது அரசியல் கோரிக்கை என்ன? என்ன மாதிரியான தீர்வுத் திட்டத்தைக் கேட்கிறீர்கள்? தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியலுரிமைகள் எவை என்று சர்வதேச நாடுகளுக்குச் சொல்லியிருக்கிறீர்கள்? இதையெல்லாம் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் சொல்லக் கூடாதா? அப்படியென்ன சிதம்பர ரகசிய அரசியல்? உணர்ச்சிகரமாக மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வென்று கொண்டிருப்பதற்கான கோஷங்களை மட்டுமே இவர்கள் வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்குத் தேவையானதையெல்லாம் - அது அபிவிருத்தியாக இருந்தாலும் சரி, தீர்வாக இருந்தாலும் சரி - அரசாங்கமோ சர்வதேசமோ தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இவர்கள் இங்கு செய்துகொண்டிருக்கும் அரசியல்
யுத்தகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. வொஷிங்டனில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நீண்ட அறிக்கை இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினர் சார்பிலோ, அவர்களின் நலன்சார்ந்தோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இவற்றை நிராகரித்துள்ள நிலையில், அந்த அறிக்கையுடன் அமெரிக்கா இணங்கிப் போகிறதா, என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த பற்றிக் வென்ட்ரெல், இந்த நீண்ட அறிக்கையை நாம் ஆராய்ந்தோம். ஒரு நாள் அல்லது அதற்கு முன் அந்த அறிக்கை எமக்குக் கிடைத்தது. ஆனால், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக எமது பலமான கவலைகளை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.
அத்துடன், பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்ட, இலங்கையில் நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து, இன்று வரை இலங்கை அரசாங்கம் ஒரு முழுமையான நம்பகமான, அல்லது சுதந்திரமான விசாரணைகளை ஆரம்பிக்கவேயில்லை. இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து நாம் உண்மையிலே ஆழமான கவலை கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்
புதுக்குடியிருப்பு - வல்லிப்புரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரித்தானியாவின் நிதியுதவியில் இயங்கும் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் இருந்து புலிகளின் அரசியல் தொடர்பாக எழுதப்பட்ட 229 புத்தகங்களை விசேட அதிரடிப்படையினரின் குழுவொன்று கைப்பற்றியுள்ளது.கைப்பற்றிய அனைத்து புத்தகங்களிலும் புலிகள் அமைப்பு என அச்சிடப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புலிகளின் நூலகத்தில் இருந்த புத்தகங்களை இந்த நிறுவனம் தனது அலுவலகத்தில் வைத்திருந்ததா என்பதை அறிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த புத்தகங்களைத் தவிர அலுலகத்திற்கு அருகில் உள்ள மடுவம் ஒன்றில் புலிகளின் 300 இற்கும் மேற்பட்ட பழுதடைந்த புத்தகங்கள் காணப்பட்டதாகவும் அவற்றை பொலிஸார் தீயிட்டுக் கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசசார்பற்ற நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளராக பணியாற்றி வருவபவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர் எனவும் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படும் 16 வயதுக்குக் குறைவான சிறுமியர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப் படுவதனைக் கட்டுப்படுத்தும் முகமாக விழிப்புணர்வூட்டும் குறும்படம் ஒன்று தயாராகி வருவதாக காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்தப் படம் விரைவில் கிராமப்புறங்களிலும் துஷ்பிரயோகங்கள் நடைபெறும் பகுதிகளிலும் காண்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் சிறுமியர்கள் குறிப்பாக 16 வயதுக்குக் குறைவானவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது.
இதற்கு எமது சமூகத்தின் போதிய விழிப்புணர்வின்மையே காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவே இந்தக் குறும்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தப் படம் விரைவில் திரையிடப்பட்டு யாழ். சமூகங்களிடையே இந்த விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளரை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அழைத்துள்ளார். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் புலிகளின் சிறார் படையணியில் இருந்தவர் எனவும் அவர் கொலை செய்யப்பட்டதாக மனித உரிமை பேரவையில் முன்வைத்துள்ள குற்றச் சாட்டுக்கு தாம் உரிய பதிலை வழங்கப்போவதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்தப் பொய்யான குற்றச்சாட்டை இராணுவத்தின் மீது சுமத்த ஏன் நான்கு வருடங்கள் தாமதமானது என தான் கேள்வி எழுப்பப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை மனித உரிமை பேரவையில் நேற்றைய தினம், பாலச்சந்திரன் சம்பந்தமான புகைப்படங்கள் அடங்கிய நோ பையர் சூன் திரைப்படத்தை திரையிட திட்டமிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தை உருவாக்கிய சனல் - 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரேவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தான் சவால் விடுப்பதாகவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குறித்த வீடியோ திரைப்படம் மனித உரிமை பேரவையின் மண்டபம் ஒன்றில் திரையிடப்படவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்துமாறு இலங்கை அரசு மனித உரிமை பேரவையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடர்பான அமெரிக்கப் பிரேரணை குறித்து இலங்கை அரசு அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பிரேரணை குறித்து இரண்டு தரப்பும் பேசிக்கொள்வதன் ஊடாகவே முறையான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் அமெரிக்காவினால் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் பிரதி ஒன்று இந்தியாவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கை உட்பட இந்தியாவை நெருங்கிய நாடுகளிலுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு நீண்ட கால, குறுகிய கால பயிற்சியை வழங்குவதற்கு இந்திய அரசு தயாராகின்றது. இதுபற்றி இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தனி உறுதிப்படுத்தியுள்ளார்.தொழிநுட்ப ரீதியாகவும், அவ்வாறின்றியும்இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக இந்திய லோக்சபாவுகு பாதுகாப்பு அமைச்சர் எழுத்துமூலமான கடிதமொன்றை சமர்ப்பித்துள்ள அதேவேளை, லோக்சபாவின் உறுப்பினர்களான பீ. லிங்கம், பிரபோ ஓ பண்டா இதுவிடயமாகக் குறிப்பிடும்போது, இந்தியப் படையினரால் இப்போதும் இலங்கைக்கு இராவணுவப் பயிற்சி வழங்கப்படுகின்றதா? என்பதுபற்றி தங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்தப் பயிற்சிநெறி வழங்கப்படுவதாகவும், பயிற்சிநெறியில் பாதுகாப்புக் கல்வி மற்றும் பயிற்சி உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் இதுபற்றி பாதுகாப்பு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
சந்திரிக்கா அம்மையார் தன் மகனுக்கு எருமை மாட்டுப் பிள்ளை என்று குறிப்பிட்டுள்ளதாகவும், ‘நான் பெற்றது எருமையாக மாடாக இருந்தால், நான் நல்லதொரு காளைமாடு’ என்று சந்திரிக்கா அம்மையாருக்கு சொல்கிறேன்’ என்று மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். நேற்றுக் காலை (01) அமைச்சில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நேற்று முன் தினம், விஜய குமாரத்துங்கவின் நினைவு தினம் கண்டி புஷ்பதான மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. அங்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க உரையாற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்புக் கூட்டப்பட்டுள்ளது.
மனிதர்களைக் கட்டிப் போடும் மனிதன் என்று சந்திரிக்கா தற்போது கூறுவதாகவும், தனக்குத் தேவையிருந்தால் அன்று பண்டாரநாயக்கா குடும்பத்தில் திருமணம் ஒன்று செய்திருக்கலாம் என்றும் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதற்குக் காரணம் கலை, மாலை, இரவு எவ்வேளையும் தான் சந்திரிக்காவின் வீட்டிலேயே நின்றிருந்தமையாகும் என்றும் அவர் தெளிவுறுத்தியுள்ளார். எனது வாய் மிக மோசமானது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் காட்டிக் கொடுக்கும் வேலைக்குத் தான் தயாரில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மர்வின்,
எதுஎவ்வாறாயினும், தேவையற்ற விடயங்களைக் கதைத்து எனது வாயைக் கிளப்பிக் கொள்ள வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரிடம் தான் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் உள்ளவர்கள் மடையர்கள், கள்வர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி முழங்குகின்றார். அவர்களின் பெயர்களை முன்மொழிந்த்தே அவர்தானே! அவருக்கு அது ஞாபகமில்லையா? என்றும் வினா எழுப்பியுள்ளார் மர்வின்.
இன்று பாராளுமன்றில் உள்ளவர்களை கள்ளர்கள் மடையர்கள் என்று குறிப்பிடக் காரணம் அன்று, அம்மையார் அவர்களின் வீடுகளுக்குச் சென்று உண்டு பருகி வந்தமையினாலாகும். இவ்வாறு அவர் நாக்குமீறிக் கதைப்பதற்குக் காரணம் சந்திரிக்கா ‘டவுன்ஹோலி’ல் புலிகளின் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி தலை நாசமாகியுள்ளமையே என்றும் அமைச்சர் மர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 22ஆவது அமர்வு – தமிழ் ஊடகங்களுக்கு செய்தி ஊற்றாகியுள்ளது. ஆனால் சிங்கள ஊடகங்கள் அதனை அவ்வளவாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை.சில தமிழ் பத்திரிகைகளில் இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட செய்திகளும் முழுப்பக்க கட்டுரைகள் உட்பட பல கட்டுரைகளும் பிரசுரிக்கப்படுகின்றன. குறிப்பாக சகல தமிழ் பத்திரிகைகளிலும் முன் பக்கத்தில் அநேகமாக அரைவாசி அல்லது அதற்கு மேல் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரைப் பற்றிய செய்திகளாகத் தான் காணப்படுகின்றன.ஆனால் சிங்கள் பத்திரிகைகளில் நாளொன்றுக்கு இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரு செய்தி அல்லது இரண்டு தான் பிரசுரிக்கப்படுகின்றன. கட்டுரைகளைப் பொறுத்தவரை சிங்கள பத்திரிகைகளில் இந்த விடயத்தைப் பற்றி வாரத்திற்கு இரண்டு மூன்று கட்டுரைகள் மட்டுமே வெளியாகின்றன.

சிங்கள பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளும் கட்டுரைகளும் பெரும்பாலும் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அத்துமீறல்களைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துபவனவாகவே இருக்கின்றன. அதேவேளை அவை மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேரணையொன்றை கொண்டு வரவிருக்கும் அமெரிக்காவை சாடுகின்றன. பிரேரணையை ஆதரிப்பதாகக் கூறும் நாடுகளையும் சாடுகின்றன.

தமிழ் ஊடகங்கள் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கின்றன. அவை முழுமையாகவே அரச எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டதாகவே காணப்படுகின்றன. இலங்கையில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தின்போது அரச படைகளும் புலிகளும் பாரியளவில் மனித உரிமைகளை மீறியுள்ளதாகவே சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் கூறிவருகின்றன. ஆனால் புலிகள் – மனித உரிமைகளை மீறியதாக அந்நிறுவனங்கள் பொதுவாக கூறிய போதிலும் அவை அச்சம்பவங்களை துள்ளியமாக குறிப்பிடுவதோ அவற்றைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுவதோ இல்லை.
.jpg)
அரசாங்கத்திற்கு எதிராக ஒரு யுத்தத்தையே தொடர்த்துள்ள சனல் 4 தொலைக்காட்சியும் கூட புலிகளும் மனித உரிமைகளை மீறியதாக தமது ஆவணப் படங்களில் பொதுவாக கூறுகின்றது. புலிகள் – சீறுவர்களை படையில் சேர்த்ததாகவும் மேலோட்டமாக கூறுகின்றது. ஆனால் புலிகளுக்கு எதிரான எவ்வித காட்சியும் அவற்றில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இது அரசாங்கத்தின் சீற்றத்திற்கு காரணமாகியுள்ளது. அதேவேளை புலிகளைச் சார்ந்த தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்கள்இ சர்வதேச நிறுவனங்களின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை. மாறாக அவ்வமைப்புக்களும் விசாரணைகளை கோருகின்றன. புலிகளின் செயற்பாடுகளும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டு அவற்றைப் பற்றியும் விசாரணை செய்ய வேண்டும் என்று சர்வதேச நிறுவனங்கள் கூறும் நிலை இருந்தால் அவ்வமைப்புக்களும் விசாரணை வேண்டாம் என்றே கூறும்.
விஸா இன்றி இலங்கைக்கு வந்து எமது நாட்டின் இறைமை குறித்து விசாரணை நடத்த எந்த நாட்டிற்கும் இடமளிக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்ததுடன் அரசாங்கத்திடம் சரணடைந்த 75 புலி உறுப்பினர்களை படையினர் பாலியல் சித்திரவதை செய்ததாக மனித உரிமை கண்காணிப்பகம் (ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்) தெரிவித்துள்ள குற்றஞ்சாட்டினை முற்றாக மறுத்த கெஹெலிய இது இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு சோடிக்கப்பட்ட பொய் அறிக்கை எனவும் குறிப்பிட்டார்.அமைச்சரவை முடிவுகளை அறி விக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மனித உரிமை பேரவை அமர்வு குறித்தும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் (ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்) குற்றச்சாட்டுகள் குறித்து வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக்குறிப்பிட்டார்.
இவர்கள் தூதரகங்களினூடாக வீஸா பெற்றே வெளிநாடு சென்றிருப்பர் அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டிருக்கும் அப்போ இதன் போதே மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு அறிவித்திருப்பர். இது தொடர்பான ஆதாரங்கள் எங்கே? அரசாங்கத்தை அபகீர்த்திக்குட்படுத்த திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையே இது எனக்குறிப்பிட்டார்.
இது தவிர இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த ஒரு இலட்சத்து 47 ஆயிரம் பொதுமக்களை நிர்வாணமாக சென்றதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவை பொய்க்குற்றச்சாட்டுகளாகும். இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளோம்.
மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில விஸா இன்றி இலங்கை சென்று இலங்கை குறித்து விசாரணை நடத்த முடியாது. அவ்வாறு செய்வது ஒரு நாட்டை ஆக்கிரமிப்பது போன்றதாகும். இதற்கு இடமளிக்க முடியாது. மனித உரிமைப் பேரவையினால் அவ்வாறு வீஸா இன்றி இங்கு வர முடியாது. பாதுகாப்பு சபையினூடாக அவ்வாறு வர அவகாசம் உள்ள போதும் அதிலுள்ள வீட்ரோ அதிகாரமுள்ள நாடுகள் எமக்கு ஆதரவாகவே உள்ளன எனத்தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்கு பங்காற்றக்கூடிய திறமையான பட்டதாரிகள் உருவாக்கப்படல் வேண்டும்.வெளிவாரிப்பட்டங்கள் திருப்திப்படும் வகையில் இல்லை எனவே அவற்றிக் தரம் தொடர்பில் ஆராய வேண்டும்.6, 7ம் வகுப்புக்கு மேல் சகல மாணவர்களுக்கும் கணினி வழங்க திட்டமடப்படுவதாகவும் எனவே வெளிநாடுகளில் வாழும் இலங்கை விரிவுரையாளர்கள் நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்தார்.நாட்டுக்காக அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையைக் கவனத்திற் கொண்டு அவர்களை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி பல்கலைக்கழகத்துடன் அவர்கள் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையை மீறியுள்ளதால் அவர்கள் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை பணம் தொடர்பில் நிவாரணம் ஒன்றை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இலங்கை விரிவுரையாளர்கள் 650 பேர் வரையில் உள்ளதாகவும் அவர்கள் நாடுதிரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்த போதே அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மேற்படி பகிரங்க அழைப்பினை விடுத்தார்.
அமைச்சுக்களின் செயற்பாட்டு முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் இரண்டாவது நிகழ்வு வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் உயர் கல்வி அமைச்சில் நடைபெற்றது.
அமைச்சர்கள் எஸ்.பி. திசாநாயக்க, பசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர உட்பட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது போலவே நாம் பெருந்தொகையாக ஆசிரியர்களை நியமித்த போதும் ஆசிரியர் பற்றாக்குறைகளும் நிலவுகின்றன.
பல்கலைக்கழகங்களின் மூலம் நாம் திறமையான பட்டதாரிகளையே எதிர்பார்க்கிறோம். அதற்காக பல்கலைக் கழகங்களின் சதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.நாம் 54,000 பட்டதாரிகளுக்கு அரசதுறையில் நியமனம் வழங்கியுள்ளோம். இதில் 90 வீதமானவர்கள் கலைப் பட்டதாரிகளே. கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளிலும் பெருமளவிலான பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும். நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய திறமையான பட்டதாரிகளை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும். தற்போது நாட்டின் அபிவிருத்திக்குத் தேவைப்படுவோர் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவருவது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
வெளிவாரிப் பட்டதாரிகளின் திறமைகள் திருப்திப்படும் வகையில் இல்லை வெறுமனே பட்டங்களைப் பெயருக்கு வழங்கும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் இயங்குகின்றன. அதன் தரம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும். விரைவில் உள்நாட்டில் எரிபொருள் எமக்குக் கிடைத்து விடும். அதற்கு பெற்றோலியம் தொடர்பான பொறியியலாளர்கள் எமக்குத் தேவைப்படுவார்கள். இதனைக் கருத்திற்கொண்டு நாட்டுக்குத் தேவையான திறமையுள்ள பட்டதாரிகளைப் பல்கலைக் கழகங்கள் உருவாக்க வேண்டும்.
இன்டர்நெட்டுடன் தொடர்புடைய அறிவை பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுப்பது அவசியம். மாணவர்களுக்கு மட்டுமன்றி இது தொடர்பில் பாரிய அறிவை விரிவுரையாளர்களும் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விசேட திட்டம் அவசியம். இல்லாவிட்டால் சர்வதேச மட்டத்திலான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமற்போகும்.கணனி அறிவின் முக்கியத்துவத்தைக் கவனத்திற் கொண்டு ஆறு அல்லது 7ம் வகுப்பிற்கு மேல் கல்விகற்கும் சகல மாணவர்களுக்கும் கணனி வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதியை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
தமது தாய் நாட்டைப் பற்றிய உணர்வைக் கொண்ட பலர் கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அவர்கள் நாடு திரும்பி நாட்டுக்கான சேவையை மீண்டும் வரமுன்வந்துள்ள நிலையில தற்போது கணிதம், விஞ்ஞானத்துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது போன்று பாடசாலைக் கல்வி முதலே நாடுபற்றிய உணர்வையும் நாட்டின் அபிவிருத்தி பற்றிய தெளிவையும் கற்பிக்க வேண்டியது அவசியமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமது பல்கலைக்கழகங்களுக்கான எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
அவற்றுக்குச் செவிமடுத்த ஜனாதிபதி மேற்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் கல்வி அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
ஜனவரி மாதத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற 224 பேரை இலங்கை மின்சார சபையின் திடீர் சுற்றிவளைப்புக்களின் மூலம் சட்டத்தின்முன் கொண்டு வந்ததன் ஊடாக மின்சார சபைக்கு ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.இவற்றில் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களின் ஊடாக நீதிமன்றத் தண்டப் பணமாக 25 இலட்சம் ரூபாவும், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டப் பணமான 144 இலட்சம் ரூபா சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களிலிருந்தும் அறவிடப்பட்டுள்ளது.
இவர்கள் மின்மானியை மாற்றியமைத்தல், மின்கம்பிகளிலிருந்து சட்டவிரோதமாக மின்பெறுதல் உள்ளிட்ட 224 சம்பவங்கள் இச்சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மின்சாரசபை அறிவித்துள்ளதுடன் இவற்றில் 159 சம்பவங்கள் மின்மாற்றியை மாற்றியமைத்த சம்பவங்களாக பாணப்படுகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கை மின்சாரசபை மேற்கொண்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் 3,569 சம்பவங்கள் கண்டறியப்பட்டன. இவற்றின் ஊடாக சுமார் 21 கோடியே 20 இலட்சத்து 34 ஆயிரத்து 545 ரூபா வருமானமாக கிடைத்திருப்பதாகவும் மின்சாரசபை தெரிவித்ததுடன் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெறுவதன் ஊடாக இலங்கை மின் சாரசபைக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்கள் பற்றி தகவல்களைத் தந்துதவுமாறு பொதுமக்களின் உதவியையும் மின்சாரசபை கோரியுள்ளது.
சட்டவிரோதமாக மின்சாரம் பெறுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டால் இலங்கை மின்சார சபையின் விசாரணைப் பிரிவின் தொலைபேசி இலக்கமான 0112422259 உடன் தொடர்பு கொண்டு அறிவித்தால் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டப் பணம் அறவிடப்படுவதுடன் அவர்களுடைய மின்சார இணைப்பும் துண்டிக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஒபாமா பொருளாதார மீட்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவித்து செவ்வாயன்று கூட்டரசின் நிலை (State of the Union) குறித்த வருடாந்த உரையை ஆரம்பித்தார. “நெருக்கடியின் இடிபாடுகளை நாம் ஒவ்வொன்றாக அகற்றிவிட்டோம், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் நம் கூட்டரசு வலுவாக இருக்கிறது என்று கூற முடியும்” என்றார்.கடந்த மாதக் கடைசியில் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் சமீபத்திய சமூக சமத்துவமின்மையை பற்றிய தரவுகள், இந்த உரை அறிக்கை எதைக்குறிக்கிறது என்பதை இன்னும் துல்லியமாகத் தெளிவுபடுத்துகிறது. ஒபாமா மற்றும் அரசியல் ஸ்தாபனம் முழுவதற்கும், “நெருக்கடி” பற்றிய முக்கிய குறியீடுகளாக இருப்பது பங்குச் சந்தைகளும் அத்தோடு பெருநிறுவனங்களினதும் நிதிய உயரடுக்குகளினதும் செல்வம்தான்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் எமானுவல் சாயெஸால் ஒன்றாகச் சேர்த்து கொண்டுவரப்பட்ட தரவுகளின்படி, அதாவது 2009 க்கும் 2011க்கும் இடையே – அதாவது “மீட்பின்”முதல் இரண்டு ஆண்டுகள் – சராசரி உண்மையான வருமானம் ஒரு குடும்பத்திற்கு 1.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், “உயர்மட்ட 1 சதவிகிதத்தினரின் வருமானங்கள் 11.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது; அதே நேரத்தில் கீழுள்ள 99 சதவிகிதத்தினரது வருமானங்கள் 0.4 சதவிகிதம் சுருங்கிவிட்டது. எனவே உயர்மட்ட 1 சதவிகிதத்தினர் மீட்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் வருமான ஆதாயங்களாக 121 சதவிகிதத்தைப் பெற்றுள்ளனர்” என்று சாசெயஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, உயர்மட்ட 1 சதவிகிதத்தினர் உண்மையில் இந்த இரண்டு ஆண்டுகளின் மொத்த வருமான வளர்ச்சி அனைத்தையும் விழுங்கியுள்ளதுடன், அதைத்தவிர கூடுதலாக 20 சதவிகிதத்தையும் விழுங்கியுள்ளனர். இப்புள்ளிவிவரங்கள் நிரூபிப்பது என்னவென்றால், ஒரு மாபெரும் செல்வத்தின் இட மாற்றமானது, பெரும்பாலான மக்களின் அதாவது தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் நிதியச் சந்தைகளுக்குள் நிதிகளாக உட்செலுத்தியது என்பதுதான்.
சாயெஸ் மேலும் கூறுவது: “2012ல் உயர்மட்ட 1 சதவிகிதத்தினர் எழுச்சி அடையக்கூடும்; இதற்குக் காரணம் ஏற்றம் அடைகின்ற பங்குகளின் விலைகள் மற்றும் வருமானத்தைப் பெறும் காலத்தை மாற்றி 2013 ஆண்டின் உயர்ந்த வரி விகிதங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் இருப்பதனாலுமாகும். கீழேயுள்ள 99 சதவிகிதத்தினர் சற்றே கூடுதல் மெதுவான வளர்ச்சி என்று 2011 இருந்து 2012 வரை உயர்மட்ட 1 சதவிகிதத்தினரைவிட இருக்கலாம். இந்தக் கருத்துக்களானது உயர்மட்ட வருமான பகிர்வுகளை தற்காலிகமாகத்தான் பெருமந்த நிலை குறைத்ததேயன்றி 1970 களிலிருந்து பெறப்படுகின்ற உயர்மட்ட வருமானப் பகிர்வுகளை வியத்தகு அதிகரிப்புக்களை நிறுத்த எதுவும் செய்யவில்லை என்பதாகும்.”
வருமானப் பகிர்வில் இத்தகைய போக்குகளானது வெறும் அருவமான பொருளாதார சக்திகளின் விளைவு மட்டும் அல்ல. இவைகள் ஓர் உறுதியான, இரக்கமற்ற வர்க்கக் கொள்கையானது முதலில் புஷ்ஷால் பின்பற்றப்பட்டதும் பின்னர் ஒபாமாவின் கீழ் விரிவாக்கப்பட்டதன் விளைவுதான். முன்னோடியில்லாத அளவில் வரலாற்றுத் தன்மை படைத்த நிதிய ஊகத்தின் விளைவாக ஏற்பட்ட 2008 சரிவை எதிர்கொள்ளும் வகையில், அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பு வங்கி ஆகியவைகளால் வங்கிகளுக்கு வரம்பில்லாத அளவிற்கு நிதிகள் அளிக்கப்பட்டன.
பங்குச் சந்தை ஏற்றத்திற்கு நிதியளிப்பதற்கு, கூட்டமைப்பு வங்கி கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் பெறுமதியுடைய சொத்துக்களை 2008 இலிருந்து வாங்கியுள்ளதுடன், பிரதானமாக இதே அளவு பணத்தை அச்சடித்து நிதிய அமைப்பு முறைக்குள் மாற்றியுமுள்ளது. சர்வதேச அளவில் ஒரு சமாந்திரமான கொள்கையைத்தான் அரசாங்கங்கள் தொடர்ந்துள்ளன. இதன் விளைவுகள் கணிக்கும்படிதான் உள்ளன: அதாவது சொத்துக் குமிழிகள் மீண்டும் பெருத்துள்ளன; அதே நேரத்தில் நிதியப் பிரபுத்துவத்தின் அறவிடமுடியாக் கடன்களானது மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்க வரவு-செலவுத் திட்டங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன.
இந்த நடவடிக்கைகளின் விளைவுகளானது மக்கள்தொகையில் மிகப் பெரும்பாலானவர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல் ஆகும். கூட்டரசு நிலை குறித்த உரையில், உற்பத்தித்துறை வேலைகளில் நம்பப்பட்ட மீள்எழுச்சி குறித்து ஒபாமா தம்பட்டம் அடித்தார்—உண்மையில் அழிக்கப்பட்டுவிட்ட துறைகளில் ஒரு மிகச் சிறிய அளவுதான் மீட்கப்பட்டுள்ளது. இந்த வகையிலான வேலைகள் வறுமை மட்டத்தர ஊதியங்களின் அடிப்படையில்தான் தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை; அத்தோடு இதற்கு நிர்வாகத்தின் 2009ம் ஆண்டு கார்த் தயாரிப்புத் தொழிற்துறையின் மறுகட்டமைப்புத்தான் வழிகாட்டியாக இருந்தது.
இதன் விளைவாக, அமெரிக்காவில் “வேலை செய்யும் ஏழைகளின்” எண்ணிக்கை—வேலை செய்தும்கூடக் கிட்டத்தட்ட வறுமையில் வாழ்பவர்கள் -- தீவிரமாக உயர்ந்துள்ளது. 2011 ஆண்டில் 47.5 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வ வறுமை விகிதத்தைக் காட்டிலும் 200 சதவிகிதம் வருமானத்திற்குக் கீழுள்ள குடும்பங்களில்தான் வாழ்ந்தனர். இது கிட்டத்தட்ட அனைத்து உழைக்கும் குடும்பங்களிலும் மூன்றில் ஒரு பகுதி ஆகும் (அதாவது 33 சதவிகிதம்); இது 2010இல் 31 சதவிகிதத்திலிருந்தும் 2007இல் 28 சதவிகிதத்திலிருந்தும் உயர்ந்துவிட்டது.
இப்புள்ளிவிவரங்கள் வேலையின்மையில் இருப்பவர்களை சேர்க்கவில்லை. உத்தியோகபூர்வமாக வேலையின்மை விகிதம் சரிவு என்றாலும்கூட, மில்லியன் கணக்கனவர்கள் உழைப்பாளர்கள் தொகுதியிலிருந்து நீங்கியிருப்பதால், மொத்த வேலையின்மை மக்கள்தொகை விகிதம் நெருக்கடிக்கு பிந்தைய அதனுடைய மிகவும் குறைந்த நிலையில்தான் உள்ளது.
“நல்ல முறையில் வாழும் மத்தியதர வர்க்கம்” என்னும் கருத்திற்கு உயிரூட்டும் நலிவான வனப்புரைக்குப் பின், நிர்வாகத்தின் கொள்கை அதனுடைய இரண்டாவது பதவிக் காலத்தில் பெரு வணிகத்தின் நலன்களுக்கு முற்றிலும் தாழ்த்தப்படுவதானது இன்னும் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களிலிருந்து வெட்டப்படுவதுடன் ஆரம்பிக்கும் என்பதை ஒபாமா தெளிவுபடுத்தினார்.
சமத்துவமற்ற தன்மையின் புள்ளிவிவரங்கள் அமெரிக்க சமூகத்தின் பண்பு குறித்து நிறையவே கூறுகின்றன; அதாவது இச்சமூகம் ஒரு மிகச் சிறிய பிரபுத்துவத்தின் மேலாதிக்கத்தில் உள்ளது என்பதைத்தான். அரசியல் ஸ்தாபனத்தின் திட்டம் முழுமையும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மிகச் சிறிய பிரபுத்துவ சமூகத் தட்டின் செல்வத்தை உறுதிப்படுத்தத்தான் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்தப் பிரபுத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையேயுள்ள மோதல்தான் அடிப்படையாக சமூகப் பிளவை ஏற்படுத்துகிறது; இதற்கு மாறாக, அரச கொள்கையின் ஒருங்கிணைந்த கூறுபாடுகளாக மாறிவிட்ட பல வகையான அடையாள அரசியல் வடிவங்கள் அல்ல.
இச்சமூக உறவுகள் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியை அறிந்து கொள்ள மிகவும் முக்கியமானவை ஆகும். செய்தி ஊடகமோ அல்லது அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளோ காத்திரமான எதிர்ப்பு எதுவும் இல்லாத நிலையில், எவ்வித நீதித்துறைப் பரிசீலனை அல்லது முறையான சட்ட வழிமுறைகளும் இன்றி அமெரிக்க குடிமக்களை படுகொலை செய்யும் உரிமையை ஒபாமா நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் சாதாரணமாகவே ஒதுக்கித் தள்ளப்பட்டு நூற்றாண்டுகளுக்கு பின்னுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அமெரிக்க குடிமக்களை நீதித்துறைக்கு புறம்பாகக் கொலை செய்வது குறித்த நிர்வாகத்தின் வெள்ளைத்தாள் பற்றிய ஆரம்பச் செய்தி ஊடக தகவல்களுக்குப்பின், இப்பிரச்சினை பெரிதும் கைவிடப்பட்டுவிட்டது. CIA க்குத் தலைமை தாங்குவதற்கு ஒபாமா தேர்ந்தெடுத்துள்ள ஜோன் பிரென்னன்தான், “படுகொலைப் பட்டியல்களை” உருவாக்கிய சிற்பி, இம்மாதப் பிற்பகுதியில் செனட்டால் இவரின் பதவி உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பயங்கரவாதத்தின் மீதான போர்” என்னும் பதாகையின் கீழ், நிறைவேற்று அதிகாரமானது இடையறாத விரிவாக்கத்தை கடந்த தசாப்தத்தில் கண்டுள்ளது; இதில் காலவரையறையற்ற தடுப்புக்காவல், இராணுவ ஆணையங்கள் முதல் உள்நாட்டு உளவு வேலை மற்றும் தகவல் தொடர்புத்துறையில் பெரும் தரவுகளின் அபிவிருத்தி வரை அடங்கியுள்ளன.
ஆட்சியின் ஜனநாயக வடிவங்களானது அமெரிக்க சமூகம் முழுவதும் படர்ந்திருக்கும் மிகப் பெரும் சமத்துவமற்ற தன்மைகளுடன் பொருத்தமாக இருக்கவில்லை.
ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம் என்பது பிரிக்கமுடியாதவாறு இணைந்துள்ளதுள்ளதோடு மற்றும் நவீன பிரபுத்துவம் தன்னை நிலைநிறுத்தியுள்ள பொருளாதார அஸ்திவாரமான முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதாக இல்லை என்பது தற்பொழுது புத்திஜீவிகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் மனஆதங்கங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஜெனீவாப்பயண நாடகம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பதிவு, கட்சிக்குள் இடம் பெறுகின்ற ஊழல்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வசமுள்ள பிரதேச சபைகளுக்குள் நடைபெறுகின்ற உட்கட்சிமுறன்பாடுகள் போன்ற பலவிடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு வலுச்சேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேச நாடுளில் முகாமிட்டுள்ளதால் தமிழ் மக்களுக்கு எந்தவெரு பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதையும் மக்கள் நன்குணர்ந்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கலந்துகொள்ளக்கூடிய சந்தர்பங்கள் இருந்தும் அதனை சூட்டுமமாக தவிர்த்துவிட்டு அதில் கலந்துகொள்வது போன்ற மாயையினை கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கபடத்தனமான அரசியலை வெளிக்காட்டி நிற்கின்றது.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத்தம்மைக் கூறிக்கொள்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிங்கள ஆட்சியாளர்;களிடம் பணத்திற்காக மண்டியிட்டு மஹிந்தவின் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டு வருகின்றனர். சர்வதேச ரீதியாக சிங்கள ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும் பொழுது மஹிந்த குடும்பத்தினைப் பாதுகாப்பதைத் தமதுகடமையாக ஏற்றுச்செயற்படுகின்றனர்.
வீதிகளில் கோசமிட மட்டும் வடகிழக்கு பகுதிகளுக்கு வருகின்ற இவர்கள் தமது அரசியல் தேவைகள் முடிந்தகையுடன் தென்பகுதியில் தங்கியிருந்து சுகபோகங்களை அனுபவித்துக்கொணடு சர்வதேச நாடுகளுக்குப் பறந்துவிடுகின்றனர்;. ஆனால் போராட்டத்தின் வேதனைகளைத் தமிழ் மக்களே சுமக்கவேண்டும். இதுதான் தாயகத் தமிழனின் தலைவிதி.
வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான சமிக்ஞையை சிங்களம் காட்டியுள்ளது. தற்போதய அளும்கட்சியின் முக்கிய பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சகந்திரக் கட்சியை வடபகுதியில் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவடப்பட்டுள்ளன. இந்த எதிர்வுகூறலின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வடக்கில் தேர்தலுக்கான மணியை அடித்துள்ளனர் என்றே கூறவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் கடந்த காலத் தேர்தல்களில் யுத்த அழிவுகளையும் அனர்த்தங்களையும் அடக்குமுறைகளையும் காட்டித் தமிழ் மக்களிடம் அனுதாபவாக்குகளை பெற்று வெற்றியீட்டினர் என்பது யாவரும் அறிந்தவிடயமே.
இதே முறைகளைப் பின்பற்றித் தேர்தலை வெல்வதற்காகவே மக்கள்போராட்டங்கள் எனக்கூறிக்கொண்டு தமது கட்சி ஆதரவாளர்களின் உதவியுடன் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் மக்களே பாதிப்படைகின்றனர். அதேபோல் தமிழ் அரசியல் தலைவர்கள் ஜெனீவா விவகாரத்திலும் பாசாங்கு காட்டி வேடிக்கையான அரசியல் செய்துவருகின்றனர். ஒருஇனம் அழியாமல் இருப்பதற்கு அந்த இனத்தின் எண்ணிக்கை குறையாமல் இருக்கவேண்டும். அதேபோல் அந்த இனம் வாழ்ந்த பிரதேசமும் பறிபோகாமல் இருக்கவேண்டும் என்பதை இவர்கள் நன்குணர்ந்துகொள்ளும் வரை தமிழனின் தலை விதியை எவராலும் மாற்றவே முடியாது.
இனங்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென, அஸ்கிரிய பீட சங்க சபை உறுப்பினர்களான தேரர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிநிதிகள், அஸ்கிரிய பீடத்தில் சங்க சபை உறுப்பினர்களை சந்தித்தபோது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் தொடர்பில் இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதனால், அவ்வாறான கருத்து பேதங்கள் ஏற்படாத வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக, இச்சந்திப்பின்போது, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹலால் தேவைப்படுவோருக்கு மட்டும் அச்சான்றிதழின் கீழ் உணவு உற்பத்தியை மேற்கொள்வதில் பிரச்சினைகள் எதுவும் இல்லையெனவும், அச்சான்றிதழை விரும்பாத மக்களை, அவ்வுணவுப்பொருட்களை விநியோகிப்பது, பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமெனவும், அஸ்கிரிய பீட சங்க சபையின் தேரர்கள் சுடடிக்காட்டியுள்ளனர்.
இச்சந்திப்பில் அஸ்கிரி விஹாரையின் தலைமை பதிவாளர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் உள்ளிட்ட உறுப்பினர்களும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, ஹலால் பிரிவு செயலாளர் மௌலவி முர்சித் முலப்பர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்கள் பலரை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து என்ற போர்வையில் அந்நாட்டிலிருந்து வெளியேற்றி வருகின்றனர். பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கையை, அந்நாட்டின் மனித உரிமை அமைப்பின் இயக்குனர், டேவிட் மெப்பம், கண்டனம் செய்திருந்தார். 'பிரிட்டனிலிருந்து வெளியேற்றப்படும் தமிழர்கள், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள், அந்நாட்டு ராணுவத்தின் கொடுமைக்கு, மீண்டும் ஆளாக நேரிடும். இலங்கையில், விடுதலை புலி ஆதரவாளர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன' என, டேவிட் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த லண்டன் ஐகோர்ட், இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்ப தடை விதித்துள்ளது.
இதற்கு பிரிட்டன் எல்லைபுற பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேற்படி தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது' என, எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தவறான இடத்தில் டாக்சியை நிறுத்தினார் என்பதற்காக கையில் விலங்கிட்டு பொலிஸ் வண்டியில் இழுத்துச் செல்லப்பட்ட சாரதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்சம்பவம் தென்னாப்பிரிக்காவின், டேவிடோன் நகரில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 27 வயதுடைய மிடா மாசியா, என்பவராவார். சாலையில், தவறான இடத்தில் டாக்சியை நிறுத்தியதாக, போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதனால், மிடா மாசியா போலீசாரிடம் தகராறு செய்தார். இதையடுத்து, அவரை கைவிலங்கிட்டு, போலீஸ் வேனின் பின்புறம் கட்டி, போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். போலீஸ் நிலைய வாசலில், வேன் நின்ற பிறகு, டிரைவர் மாசியா, இறந்து கிடந்தார்.
இச்சம்பவம் நம்ம நாட்டில் இடம்பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?

தமிழீழம் கிடைக்குமோ என்னவோ அறிக்கைகள் ஏராளம் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வரிசையில் நேற்றுவரை இலங்கை இராணுவத்தின் கவச வாகனத்தினுள் முகமூடி போட்டுக்கொண்டு காட்டிக்கொடுத்து திரிந்த துரைரெட்ணமும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் „மனித நேயமற்ற, மனிதகுலத்திற்கெதிரான ஈவிரக்கமற்ற யுத்தத்தின் கொடுரம் காரணமாக ஏதும் அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், கொன்றழிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பாலசந்திரனின் படுகொலை மறைக்க முடியாத சிறந்த சான்றாகும்' என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆயதக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக உயிர்கள் அழிக்கப்பட்டது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் இத்தனை அழிவுகளிலும் நேரடி பங்காளியாக இருந்த இரா துரைரெட்ணம் இன்று சுத்த சுவாமியாக மாறியுள்ளதுதான் நகைப்பு.
இந்தியன் ஆமியுடன் தொடங்கி இலங்கை இராணுவம் முள்ளிவாய்காலில் புலிகளை முடிக்கும் வரை முகமூடியுடன் நின்ற துரைரெட்ணத்தால் ஈபிஆர்எல்எப் அமைப்பினால் கொல்லப்பட்ட தமிழ் உயிர்களின் எண்ணிக்கையை சற்று மீட்டுப்பார்க்க முடியுமா என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றோம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி தனது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதில் முன்னணியில் உள்ளவர் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி. இவர் எல்ரிரிஈ என்பதற்கு தற்போதைய விழக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது டிவிட்டரில் மேற்கொண்டுள்ள பதிவில் LTTE = Lost Tigers Turned Eleegal 'தொலைந்த தமிழர்கள் எலிகளாக மாறியது' என அர்த்தம் கொடுத்துள்ளார்.கடந்த வாரம் இலங்கை வந்திருந்த சுவாமி ஜனாதிபதியை சந்தித்துப்பேசினார். அத்துடன் இராணுத்தினரின் நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் பேசிய அவர் 'விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தால், தமிழகத்தில் கூட்டம் சேர்வதில்லை என்றும் இதிலிருந்து, விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்து விட்டனர் என்றுதான் பார்க்க வேண்டும் என்றும் இதை இந்தியன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றும் தெரிவித்துள்ளார்:
கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான்-ஈரான் நாடுகள் எரிவாயு பைப்லைன் பதிக்கும் பணியை மார்ச் 11-ம்தேதி தொடங்க உள்ளது. எல்லையில் காப்த் ஜீரோ பாயிண்டில் நடைபெறும் தொடக்க விழாவில் இரு நாட்டு அதிபர்களும் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவின் முடிவில், எல்லையில் உள்ள காப்த் மற்றும் பாஸ்னி ஆகிய இடங்கள் வழியாக பைப்லைன் அமைப்பதற்கும், குவாதார் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதன்பின்னர் காப்த் பகுதியில் இருந்து பாகிஸ்தான் பிரிவு பைப்லைன் அமைக்கும் பணி தொடங்கும் என்று அந்நாட்டிற்கான தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இரண்டு நாள் பயணமாக ஈரான் சென்று பைப்லைன் ஒப்பந்தத்தை இறுதி செய்ததுடன், நிதி மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகள் பற்றி ஆலோசனை நடத்திவிட்டு நேற்று நாடு திரும்பினார். இதனையடுத்து பைப் லைன் திட்டம் விறுவிறுப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

