பண மோசடியில் ஈடுபட்ட நபர் பாதிக்கப்பட்ட மக்களால் நையப்புடைப்பு!
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பலரிடம் இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்து தலைமறைவான நபர் ஒருவர், பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட சிலரால் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீதுவை கொடுகொட பிரதேசத்தைச் சேர்ந்த டயஸ்டஸ் பெர்னாந்து என்பவரே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மீது சீதுவை பிரதேசத்தில் வைத்து கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


0 comments
Write Down Your Responses