சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்தருக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து மனித எலும்பு எச்சங்கள் மீட்பு
பேருவளை, கலவில பகுதியில் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்தருக்குச் சொந்தமான வளாகத்தில் உள்ள கிணற்றிலிருந்து மனித எலும்பு எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில காலமாக பயன்படுத்தப்படாத இந்தக் கிணற்றைச் சுத்தப்படுத்துவதற்காக நீரை இறைத்தபோதே இந்த மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சடலத்தின் கழுத்தில் கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்


0 comments
Write Down Your Responses