ஏலத்துக்கு வரும் காந்தியின் இரத்த துளிகள்!
மகாத்மா காந்தி பயன்படுத்திய அவரது 50 நினைவு பொருட்களை இலண்டனில் உள்ள 'முல்லோக்' மையத்தில் வருகிற 21-ந் திகதி ஏலம் விடப்பட உள்ளது. காந்தியின் தோல் செருப்புகள், மிகவும் விரும்பி அணியும் மேலாடை, பெட்சீட், கோப்பை, கரண்டி, முள்கரண்டி மற்றும் கப் உள்ளிட்டவையும் அடங்கும். இவை தவிர காந்தியின் இரத்த துளியும் இந்த ஏலத்தில் விடப்பட உள்ளது.
கடந்த 1924-ம் ஆண்டு சுமதி முகர்ஜி என்பவருக்கு காந்தி இரத்த தானம் செய்தார். அதற்காக அவரது ரத்தம் ஒரு கண்ணாடி சிலேடில் எடுத்து மைக்ராஸ் கோப்பில் வைத்து பரிசோதிக்கப்பட்டது. அந்த இரத்த துளிகளே ஏலத்துக்கு வருகிறது. அது மட்டும் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments
Write Down Your Responses