கிளி.உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது அதிகாலை தாக்குதல்.
கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருக்கும் உதயன் பத்திரிகை கிளைக்காரியாலயம் மற்றும் பத்திரிகை விநியோகத்தர்கள்,விநியோக வாகனம் ஆகியவற்றின் மீது இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை நான்கு மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உதயன் பத்திரிகையின் கிளைக் காரியாலயத்திற்கு அதன் பின்புறமாக வந்த முகமூடியணிந்த ஏழு பேர் கொண்ட ஒரு குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த நால்வரில் பொன்ராசா (வயது 57), பிரதீபன் (வயது -28) ஆகிய இருவரும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இந்த தாக்குதலில் பத்திரிகை ஏற்றி வந்த வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசாரும் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


0 comments
Write Down Your Responses