யாழில் பொலிஸ் புதுவருட விளையாட்டு விழா!

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையமும் 512 படைப்பரிவினரும் இணைந்து நடாத்தும் யாழ்.சித்திரை புதுவருட விளையாட்டு விழா யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று(06.04.2013) காலை 8.00 மணிக்கு தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரதன் ஓட்டப் போட்டியுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.

யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மரதன் ஒட்டத்தை ஆரம்பித்த வைக்க தொடர்ந்து,ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டம், பெண்களுக்கான மரதன் ஓட்டம், பெண்களுக்கான சைக்கிள் ஓட்டம், கயிறு இழுத்தல், அழகு ராணிப்போட்டி, கரப்பந்தாட்டம், தேசிக்காய் கரண்டி என பல போட்டிகள் என்பன நடைபெற்றன.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகிந்த கத்துறுசிங்க, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி.பி இந்து கருணாரட்ன, யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி, யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா உட்பட 512 வது படைப்பிரிவின் பிரிகேடியர் அஜித் பல்லேவல, உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகரிகள், எனப் பலர் கலந்து கொண்டனர்.
 


 

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News