சம்பந்தனின் முதலைக்கண்ணீருக்கு முஸ்லிம்கள் மயங்கக் கூடாது! - முஸம்மில்

‘சம்பந்தனின் முதலைக் கண்ணீருக்கு முஸ்லிம் சமூகம் ஏமாறக்கூடாது’ என தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிடுகிறது. அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், கொழும்ப நகர சபை உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில்மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சில நாசகார சக்திகள் மேற்கொள்ளும் தீய நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் முன்வர வேண்டும் என நேற்று முன்தினம் (09) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை பாராளமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் - முஸ்லிம்கள் ஒரெமொழியைத்தான் பேசுகின்றார்கள் என்றும், அது அழிக்கமுடியாத உறவுப் பாலம் என்றும் குறிப்பிட்டுள்ள சம்பந்தன், சகோதர முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு அல்லற்படும்போது அதனைத் தம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களுள் பிளவுகளை பல்வேறு வழிகளிலும் உண்டாக்கிய புலிப் பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமான முறையில் மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது 116 பேர் உள்ளிட்ட முஸ்லிம்களை கண்டதுண்டங்களாக வெட்டிக் கொலை செய்தனர். அவ்வாறே, புலிப் பயங்கரவாதிகள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் வியாபாரிகளாக நின்று சிறந்த முறையில் வியாபாரம் செய்துவந்த முஸ்லிம் வியாபாரிகளை அநியாயமாக அவர்களின் இருப்பிடங்களிலிருந்து விரட்டியடித்தனர். அவர்களுக்கு மீதியாக இருந்தது அவர்களது ஆடைகள் மட்டுமே! ஆயினும், புலிகளின் தலையாட்டு பொம்மையாகக் காட்சியளித்த - செயற்பட்ட ஆர். சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு என்றும் அமையாக வாய்பொத்தி நின்றனர். தற்போது குறைத் தூக்கத்திலிருந்து அவசரமாக எழுந்து ஆற்றுகின்ற உரை விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆர். சம்பந்தன் போன்றோரிலிருந்து இயல்பாக இவ்வாறான வார்த்தைகள் வரவே வராது. அவர்கள் சிந்தித்து சோடித்துச் சொல்கிறார்கள் என்பதை கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். இன்று அவர்கள் அவ்வாறு முதலைக் கண்ணீர் வடிப்பதற்கான காரணம் ஒன்றுள்ளது. என்னவென்றால், இன்னுமே தங்களிலிருந்து விலகாத பிரிவினைச் சிந்தனையை - மெய்ப்படுத்திக் கொள்ளவே அவர்கள் கிழக்கு முஸ்லிம்களை பகடைக்காய்களாக மாற்ற முனைகிறார்கள்.

எவ்வாறாயினும் வட மாகாண சபையின் பலத்தை தாங்கள் பெற்றுக்கொண்டு, அதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு வடக்கு கிழக்கை ஒருகுடைக்கீழ்க் கொண்டுவந்து வடக்கு - கிழக்கு ஒருமித்த மாகாண சபையொன்றைக் கட்டியெழுப்புவதற்கே அவர்கள் உண்மையில் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

மூன்று தசாப்தங்களாக கொடூரமான முறையில் பிளவினை ஏற்படுத்திய பயங்கரவாதிகளினால் துன்புறுத்தப்பட்ட, கிழக்கு முஸ்லிம்கள் உட்பட நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் சம்பந்தன் போன்றோரின் சூழ்ச்சிகளுக்கு மதிமயங்கக் கூடாது என்றும் முதலைக் கண்ணீருக்கு மயங்க்க் கூடாது என்றும் குறிப்பிடுகிறோம்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(கேஎப்)

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News