பொது பல சேனாவுக்கு எதிராக ஐ.நா விற்கு கடிதம் எழுதுகின்றனர் முஸ்லிம்கள்!
இலங்கை முஸ்லிம்களுக்கு பொது பல சேனாவின் மூலம் இழைக்கப்படும் அநீதிகள் பற்றி, முஸ்லிம் தமிழ் கூட்டணியினர் ஐ நா சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.ஐநா சபையின் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் நவநீதன் பிள்ளை, செயலாளர் நாயகம் பேன் கீ மூன் என்போருக்கு இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பொது பல சேனா இயக்கத்தினரின் மூலம் முஸ்லிம்களின் காணிகள் பலவந்தமாக பறிக்கப்படுவதாகவும், மத வழிபாட்டுத்தலங்கள் தகர்த்தழிக்கப்படுவதாகவும், அவர்களின் மனித உரிமைகள் பல்வேறு முறைகளில் நசுக்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம்களின் உரிமைகளை கட்டிக்காக்க அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தும் அது பற்றி கணக்கிற்கொள்ளாமல் இருப்பதாகவும் கூறி முஸ்லிம் தமிழ் கூட்டணியின் தலைவர் அஸாத் ஸாலி கடித்தை அனுப்பிவைத்துள்ளார்.
(கேஎப்)


0 comments
Write Down Your Responses