இடைநிறுத்தப்படுகிறது ஹலால் சான்றிதழ்!
இஸ்லாமிய சமயத்திற்கேற்ப வழங்கப்படும் ‘ஹலால்’ சான்றிதழை உடனடியாக இடைநிறுத்த முடிவு எடுத்துள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் அறிவிக்கின்றன. பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ இது சம்பந்தமாக குறித்தபகுதியினருடன் பலமுறை கலந்துறவாடி இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
அனைத்து பௌத்த மதபீடங்களினதும் தலைமை தேரர்களுடனும், இலங்கை வணிக அமைப்புக்களின் உறுப்பினர்கள், முஸ்லிம் வியாபாரிகள், ஜம்இய்யத்துல் உலமா சபை ஆகியவற்றுடன் இதுபற்றி பாதுகாப்புச் செயலர் நீண்ட உரையாடலை மேற்கொண்டதன் பின்னரேயே இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
எதுஎவ்வாறாயினும் ஹலால் சான்றிதழ் தற்போது இடைநிறுத்தப்பட்டாலும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் முடிவடையும்வரை அவற்றை விற்பனை செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் இவ்வாறு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுமாயின் அவற்றுக்கு எந்தவொரு தொகையும் அறவிடப்பட மாட்டாது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் தொடர்பாக அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே பாதுகாப்புச் செயலளர் இதில் தலையிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலருடன் ஜனாதிபதி ஆலோசகர் மிலிந்த மொரகொடயும் கலந்துரையாடலில் பங்குகொண்டுள்ளார்.
(கேஎப்)
ஹலால் விவகாரத்தில் தலையிடுகிறார் கோத்தபாயர் !
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results


0 comments
Write Down Your Responses