எங்கள் குரல் ஓயாது ஒலிக்கும்... எங்கள் அடுத்த இலக்கு முஸ்லிம் முகவர் நிலையங்கள்....!
'த இண்டிபெண்டண்ட்' இணையத்தளத்திற்கு கருத்துரைத்துள்ள பொது பல சேனா செயலாளர் கலபொடஎத்தே ஞானஸார தேரர், எதிரில் பல விடயங்கள் பற்றி பல உள்ளன என்றும். அதில் முதற்கட்ட நடவடிக்கையாக வெளிநாட்டு முகவர் நிலையங்கள் என்ற பெயரில் முஸ்லிம்கள் கொண்டுசெல்லும் தொழில் மற்றும் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை அனுப்பிவைப்பது முதன்மையானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் சான்றிதழை இல்லாதொழித்தது மட்டுமன்றி அதனுடன் தொடர்பான அனைத்தும் மண்ணைக் கவ்வியுள்ளனவென்றும், பாதுகாப்பு அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பொலிஸாருக்கு ஏனைய விடயங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்ற அத்தேரர், ஹலால் சான்றிதழுடன் கூடிய பொருட்களைச் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு எவ்வாறேனும் மூன்று ஆண்டுகளேனும் தேவைப்படும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டாலும்,
அந்தக் காலப் பிரிவானது நடைமுறையில் சாத்தியமாகாது எனவும், இதனைப் பற்றிப் பூரண விளக்கத்தை பொலிஸாரில் ஒரு பகுதியினருக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
(கேஎப்)



0 comments
Write Down Your Responses